என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.
    நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனியின் ஆதிக்கத்தை பொருத்துதான் ஒருவரின் ஆயுள் காலத்தை நிர்ணயிக்க முடியும். ஆனால், அந்த கிரகத்தையும் கட்டுப்படுத்துபவர் பெருமாள். சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட உகந்த நாட்கள்.

    சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து குளித்து முடித்த பின்னர் நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமோ நாராயணாய என்று உச்சரித்து விரதத்தை ஆரம்பிக்கலாம். அன்றைய தினம் முழுவதும் உணவு அருந்தாமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது அவசியம். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்துவிட்டு பெருமாளை வணங்கிய பின்பு எப்போதும் போல உணவுகளை உண்ணலாம்.

    அருகில் கோவில் இல்லாதவர்கள் வீட்டிலேயே பெருமாளின் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

    ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ந்து விரதம் கடைபிடித்து வந்தால் சனி பகவானின் முழு அருளும் கிடைக்கப்பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை வழங்குவார். 

    புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.

    இப்படி விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். ஜாதகத்தில் சனியினால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ள, சனிக்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும்.
    ஏகாதசி விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களையும் அருள்வதுடன் முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன் ! என்று அருளினார் பகவான் கிருஷ்ணர்.
    ஒவ்வொரு ஏகாதசி விரதமும், ஒவ்வொரு விதமான பலன்களைத் தர வல்லது. ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்களை அளிப்பதோடு மட்டுமில்லாமல் ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும்.

    மனிதர்களின் வாழ்நாளை நான்கு நிலைகளாக பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று பிரிப்பது இந்து மதத்தின் மரபு. இவர்கள் கண்டிப்பாக ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

    ஏகாதசி திதி தோன்றியது மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியன்று தான். அதனால்தான் இதற்கு உத்பான அல்லது உற்பத்தி ஏகாதசி என்று பெயர். அன்றிலிருந்து தான் இந்த ஏகாதசி ஆரம்பமாகி உள்ளது.

    உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசி தான் முதலில் வரும் என்பதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்னதாக வரலாம்.

    வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத்தாழ்வு இருப்பதாக கருதக் கூடாது.

    திங்கள், சனிப் பிரதோஷங்கள் சிறப்பு கொண்டிருப்பது போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நட்சத்திரங்களில் வரும்
    ஏகாதசிகள் அதிக சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
    நாளை ஆனி மாத தேய்பிறை அஷ்டமி தினம் பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அந்த தினத்தில் நாம் பைரவரை எப்படி வழிபடுவது என்பதையும், அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் வடிவமான பைரவரின் வழிபாட்டுக்குரிய ஒரு சிறந்த தினமாக கருதப்படுகிறது. நாளை சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாகும். அதிலும் இந்த தேய்பிறை அஷ்டமி வெள்ளிக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாகும்.

    நாளை அதிகாலையில் குளித்து வீட்டில் விளக்கேற்றி பைரவரை நினைத்து வழிபாடு நடத்த வேண்டும். மாலையில் சிவன் கோவிலில் உள்ள  காலபைரவர் சந்நிதிக்கு சென்று செவ்வரளி மாலை சாற்றி, சர்க்கரை பொங்கல், கேசரி போன்ற இனிப்பு உணவுகளை நைவேத்தியம் செய்து படைக்க வேண்டும். பின்னர் ஐந்து தீபங்கள்(தனித்தனியாக ஐந்து வகையான எண்ணெய்கள் ஊற்றி) ஏற்றி சொர்ணாகர்ஷண பைரவருக்குரிய மந்திரங்களை துதித்து வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.

    மேற்கண்ட முறையில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியன்று சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடுபவர்களுக்கு வறுமை மற்றும் பகைவர்களின் தொல்லை நீங்கும். மேலும் வியாபாரத்தில் முன்னேற்றம், தன லாபம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
    விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். அது உடலை சீராக்க ஏற்படுத்தப்பட்ட ஆயுதம். இந்து சமயத்தில் உள்ள சில விரதங்களை பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
    விரதம்’ என்பதற்கு ‘உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல்’ என்று பொருள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மதங்களும், விரதம் என்ற ஒன்றை குறிப்பிட்ட காலத்தில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. ஏனெனில் விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். அது உடலை சீராக்க ஏற்படுத்தப்பட்ட ஆயுதம். இந்து சமயத்தில் உள்ள சில விரதங்களை பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.

    சோமவாரம்: கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். வழிபட வேண்டிய தெய்வம், சிவபெருமான்.

    விரதமுறை:- பகல் முழுவதும் விரதம் இருந்து விரதத்தை முடித்து இரவு மட்டும் உணவருந்த வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் காலையில் பால், பழம் சாப்பிடலாம். இந்த நாளில் கணவன்- மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வழிபட்டு வரலாம்.

    பலன்:- திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை அமையும். திருமணமானவர் களுக்கு வாழ்க்கை சிறப்பாக அமையும்.

    பிரதோஷம்: தேய்பிறை மற்றும் வளர்பிறையில் வரும் திரயோதசி நாளில் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். வழிபட வேண்டிய தெய்வங்கள், சிவபெருமான் மற்றும் நந்தியம்பெருமான்.

    விரதமுறை:- சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷத்தை முதலாவதாகக் கொண்டு வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாக பிரதோஷ விரதம் உள்ளது. இந்த விரத நாளில் பகல் உணவை தவிர்க்க வேண்டும். மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து உணவருந்த வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான காலகட்டத்தில் உணவருந்துதல், உறங்குவது, எண்ணெய் தேய்ப்பது செய்யக்கூடாது.

    பலன்:- கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை போன்றவற்றில் இருந்தும், பாவங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

    சித்ரா பவுர்ணமி: சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் நாளில் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். வழிபாட்டிற்குரிய தெய்வமாக சித்ரகுப்தர் இருக்கிறார்.

    விரதமுறை:- இந்நாளில், காலை வேளையில் பிதுர் தர்ப்பணம் செய்து, அன்று முழுவதும் உணவருந்துவதை தவிர்த்து, இரவில் மட்டும் சாப்பிட வேண்டும்.

    பலன்:- மறைந்த முன்னோர்களின் ஆன்மாக் களுக்கு பாவங்கள் நீங்கி, அவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவார்கள்.

    இடப விரதம்:வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதியில் கடைப்பிடிக்கப்படும் விரதம் இதுவாகும். இந்த விரதநாளில், ரிஷப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அதோடு நந்தியம்பெருமானையும் பூஜிக்க வேண்டும்.

    விரதமுறை:- பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம்.

    பலன்:- குடும்பம் பாதுகாப்பாக இருப்பதை உணர்வீர்கள்.

    கல்யாணசுந்தர விரதம்: பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திர நாளும், பவுர்ணமியும் இணையும் நாளே ‘பங்குனி உத்திரம்.’ இந்த நாளில் சிவபெருமானின் திருமண வடிவமாக கருதப்படும் கல்யாண சுந்தரமூர்த்தியை வழிபட வேண்டும்.

    விரதமுறை:- பகல் முழுவதும் இறைவனை நினைத்தும் விரதம் இருந்து, இரவில் சாப்பிடலாம்.

    பலன்:- நல்ல வாழ்க்கைத்துணை அமைவதற்கு, இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

    சூல விரதம்: தை மாதத்தில் வரும் அமாவாசை அன்று, இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதுவும் சிவபெருமானை நினைத்து வழிபட வேண்டிய விரதங்களில் ஒன்றுதான். அதுவும் சூலத்துடன் இருக்கும் சிவபெருமானின் படங்களை வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.

    விரதமுறை:- இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    பலன்:- விளையாட்டில் திறமை அதிகரிக்கும்.
    எந்த ஒரு காரியத்தையும் பிள்ளையார் வழிபாட்டுக்குப் பிறகே செய்யவேண்டும் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும். அதற்கேற்ப பிள்ளையார் வழிபாடு என்பது எளிமையான நடைமுறைகளை கொண்டுள்ளது.
    மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து விரதம் இருந்து வழிபட்டு வந்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.

    குங்குமத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும்.

    புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால், விவசாயம் செழிக்கும்.

    வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், உடலின் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.

    உப்பு கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து விரதம் இருந்து வழிபட்டால், எதிரிகளின் தொல்லை நீங்கும்.

    வெள்ளை எருக்கம் இலையில் பிள்ளையார் உருவத்தை வரைந்து வைத்து வணங்கினால், பில்லி மற்றும் சூனியம் போன்ற தீவினைகள் அகலும்.

    விபூதி கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கி வந்தால், வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் தீரும்.

    சந்தனத்தால் பிள்ளையார் செய்து வைத்து விரதம் இருந்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

    சாணத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.

    வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

    வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
    அனுமனுக்கு உகந்த மூல நட்சத்திர தினத்தில், அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். உங்களின் எல்லாக் காரியங்களிலும் பக்கபலமாக இருந்து காத்தருள்வார் ராமபக்தன்.
    மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தியோ வெற்றிலை மாலை அணிவித்தோ துளசி மாலை வழங்கியோ வழிபடுங்கள். உங்கள் எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார் அனுமன். என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    அனுமனுக்கு உகந்த நட்சத்திரம் மூலம். அவரின் ஜன்ம நட்சத்திரம் இது. மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திர நாளில் விரதம் இருந்து அனுமனை வழிபடுவது ரொம்பவே சிறப்பானது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வணங்கி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அதேபோல் அவருக்கு உரிய மூல நட்சத்திர நாளில், விரதம் இருந்து அனுமன் கோயிலுக்குச் சென்று அவரை வழிபட்டால், எதிர்ப்பையெல்லாம் தவிடுபொடியாக்குவார். இன்னல்கள் மொத்தமும் விலகிவிடும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    நாமக்கல், சென்னை நங்கநல்லூர், திருச்சி கல்லுக்குழி, நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் ஆலயங்களில் மூல நட்சத்திர சிறப்பு வழிபாடு, விசேஷ அலங்காரங்கள், பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.

    அனுமனுக்கு உகந்த மூல நட்சத்திர தினத்தில், அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். வெற்றிலை மாலை கட்டி எடுத்துச் சென்று வழங்குங்கள். கொஞ்சம் வெண்ணெய் வழங்கி சார்த்துங்கள். அப்படியே இயலாதோருக்கு புளியோதரை அல்லது தயிர்சாதம் அன்னதானமாக வழங்குங்கள். உங்களின் எல்லாக் காரியங்களிலும் பக்கபலமாக இருந்து காத்தருள்வார் ராமபக்தன்.
    ஆனி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்ற அற்புதமான பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    ஆனி மாதத்தில் பவுர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும் நாள் ஆனி தேய்பிறை சதுர்த்தி அல்லது மாத சங்கடஹர சதுர்த்தி தினம் எனப்படுகிறது. விநாயகர் வழிபாடு மற்றும் விரதத்திற்குரிய மிக சிறந்த தினமாக இந்த ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி கருதப்படுகிறது. இந்த தினத்தில் விநாயகப்பெருமானை விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சிறப்பான நன்மைகள் ஏற்படும்.

    ஆனி தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வீட்டிலேயே வழிபாடு செய்யலாம். மாலையில் வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு மாலை அணிவித்து நைவேத்தியம் செய்து படைத்து விநாயகருக்கு உகந்த ஸ்லோகங்களை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். இரவு வானில் பிறையை பார்த்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    ஆனி மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் திருமணம் ஆகாமல் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்து வாங்குவது போன்ற முயற்சிகளில் உள்ள தடைகள் நீங்கி, வெற்றி உண்டாகும். நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வர வழிவகை செய்யும். ஆனி மாதம் மிதுன ராசியில் பிறப்பதால் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு புதன் கிரக தோஷங்கள் நீங்கும்.
    சஞ்சலமான மனதுடன் தவித்துக் கொண்டிருப்பவர்கள், சஷ்டியில் விரதம் இருந்து முருகக் கடவுளைப் பிரார்த்தனை செய்தாலே, மனதில் தெளிவு பிறக்கும் என்பது நம்பிக்கை.
    மாதந்தோறும் சஷ்டி திதியில் விரதம் இருந்து முருக வழிபாடு செய்யச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள். அதேபோல் மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து கந்தனை வணங்குவது இன்னும் பலம் சேர்க்கும்.
     
    அதேபோல், செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்குவதற்கும் வழிபடுவதற்குமான அற்புதமான நாட்கள்.

    இந்த நாட்களில், முருகப்பெருமானுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் காலையில் குளித்துவிட்டு, விரதம் தொடங்குவார்கள். மாலையில் முருகப் பெருமானை வழிபட்ட பிறகு விரதத்தை முடிப்பார்கள்.

    சஞ்சலமான மனதுடன் தவித்துக் கொண்டிருப்பவர்கள், சஷ்டியில் முருகக் கடவுளைப் பிரார்த்தனை செய்தாலே, மனதில் தெளிவு பிறக்கும் என்பது நம்பிக்கை.

    விரதம் இருக்கிறோமோ இல்லையோ, சஷ்டியில் கந்தக் கடவுளை வணங்கினாலோ, வழிபட்டாலோ, தரிசித்தாலோ, ஒரு ஊதுபத்தி ஏற்றி, ஒற்றைப்பூ வைத்து நமஸ்கரித்தாலோ நம் எண்ணங்கள் அனைத்தும் செயலாகும் என்பது சான்றோர் வாக்கு.

    சஷ்டி தினமான இன்று வீட்டில் உள்ள முருகப் பெருமானின் படத்தை சுத்தப்படுத்தி, சந்தனம் குங்குமம் இடுங்கள். ஒரு பத்துநிமிடம் அமர்ந்து கண்மூடி வேண்டிக்கொள்ளுங்கள். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். துஷ்ட சக்திகள் அனைத்தும் விலகச் செய்வார் மால்மருகன். கந்தப்புராணம் படியுங்கள். வேதனைகளையெல்லாம் போக்கி அருள்வார் வேலவன்.

    இந்தநாளில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் சூட்டுங்கள். வீட்டுக் கவலையோ உடல் கவலையோ இனியில்லை. அவன் பார்த்துக்கொள்வான். முடிந்தால், எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். தடைப்பட்ட திருமணம், மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவான் வள்ளிமணாளன்.
    திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன.
    திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம்  ஏகாதசிவிரதம் ஆகும். ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் . இந்த திதியை புண்யகாலம் என்பர் . இதில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் ; வாழ்விற்கு பின் மோட்சமும் கிடைக்கும்.

    ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது.

    இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.

    வைகுண்ட ஏகாதசி  விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று “பாரணை ” என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.
    வைகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது.

    இதனால் மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும். விரதத்தை முடித்த உடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக் கூடாது. உபவாசத்தின் போது சுருங்கிப்போன குடலை இயங்கச் செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.

    இனி 25 ஏகாதசிகளை பார்ப்போம்

    சித்திரை - வளர்பிறை ஏகாதசி - காமதா ஏகாதசி

    சித்திரை - தேய்பிறை ஏகாதசி - பாப மோசனிகா ஏகாதசி

    வைகாசி - வளர்பிறை ஏகாதசி - மோகினி ஏகாதசி

    வைகாசி - தேய்பிறை ஏகாதசி - வருதினி ஏகாதசி

    ஆனி - வளர்பிறை ஏகாதசி - நிர்ஜல ஏகாதசி

    ஆனி - தேய்பிறை ஏகாதசி - அபரா ஏகாதசி

    ஆடி - வளர்பிறை ஏகாதசி - விஷ்ணு சயன ஏகாதசி

    ஆடி - தேய்பிறை ஏகாதசி - யோகினி ஏகாதசி

    ஆவணி - வளர்பிறை ஏகாதசி - புத்திரத ஏகாதசி

    ஆவணி - தேய்பிறை ஏகாதசி - காமிகா ஏகாதசி

    புரட்டாசி - வளர்பிறை ஏகாதசி - பரிவர்த்தன ஏகாதசி

    புரட்டாசி - தேய்பிறை ஏகாதசி - அஜ ஏகாதசி

    ஐப்பசி - வளர்பிறை ஏகாதசி - பாபாங்குசா ஏகாதசி

    ஐப்பசி - தேய்பிறை ஏகாதசி - இந்திரா ஏகாதசி

    கார்த்திகை - வளர்பிறை ஏகாதசி - பிரபோதின ஏகாதசி

    கார்த்திகை - தேய்பிறை ஏகாதசி - ரமா ஏகாதசி

    மார்கழி - வளர்பிறை ஏகாதசி - வைகுண்ட ஏகாதசி

    மார்கழி - தேய்பிறை ஏகாதசி - உற்பத்தி ஏகாதசி

    தை - வளர்பிறை ஏகாதசி - பீஷ்ம, புத்திர ஏகாதசி

    தை - தேய்பிறை ஏகாதசி - சபலா ஏகாதசி

    மாசி - வளர்பிறை ஏகாதசி - ஜெய ஏகாதசி

    மாசி - தேய்பிறை ஏகாதசி - ஷட்திலா ஏகாதசி

    பங்குனி - வளர்பிறை ஏகாதசி - ஆமலகி ஏகாதசி.

    பங்குனி - தேய்பிறை ஏகாதசி - விஜயா ஏகாதசி.

    - அதிக ஏகாதசி - கமலா ஏகாதசி
    விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.
    விரதங்கள் நம்மை ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு உட்படுத்த ஏற்படுத்தப்பட்டது. ஆனால், எந்த விரதத்தை, எந்த தெய்வத்திற்காக, எதற்காக அனுஷ்டிக்க வேண்டும் என்று தெரியாமல் செய்தால் எந்த பலனும் ஏற்படாது. விரதங்களும் அவற்றின் பலன்களைப் பற்றியும் காணலாம்.

    சோமவார விரதம்

    கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் சோமவார விரதம் சிவபெருமானைக் குறித்து அனுஷ்டிப்பதாகும். காலையில் உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல், இரவு மட்டும் சாப்பிட வேண்டும். அப்படி முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம். தகுந்த வாழ்க்கை துணை வேண்டுபவர்களும், திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை கிடைக்கவும் இந்த விரதம் இருப்பர்.

    பிரதோஷம்

    தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகளில் பிரதோஷவிரதம் சிவபெருமான், நந்திதேவரின் அருள் வேண்டி இருப்பது.

    சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கும் போது, சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து இந்த விரதத்தை ஆரம்பிக்கலாம். வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டிய இந்த விரதத்தின் போது, பகலில் எதையும் சாப்பிடாமல், மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று பிரதோஷ வழிபாடு முடிந்த பிறகு, சாப்பிட வேண்டும். இந்த விரதம் இருப்பதினால் கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், ஆகியவை நீங்கும்.

    சித்ரா பவுர்ணமி விரதம்

    சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில், சித்திரகுப்தருக்காக இருப்பது.காலையில் பிதுர் தர்ப்பணம் செய்து விட்டு, இரவில் மட்டும் சாப்பிட வேண்டும்.இதனால் மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்தலாம் .

    தை அமாவாசை விரதம்

    சிவபெருமானுக்காக இருக்கப்படும் தை அமாவாசையில், காலையில் சாப்பிடாமல் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதால், முன்னோர்களுக்கு முக்தி கிடைப்பதுடன், குடும்பமும் அபிவிருத்தி அடையும்.

    கந்தசஷ்டி விரதம்

    ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் சேவற்கொடியோன் சுப்பிரமணியருக்காக இருக்கப்படும் விரதம். முதல் 5 நாட்கள் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு, கடைசிநாள் முழுமையாக பட்டினி இருந்து, மாலை சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம்.

    மங்களவார விரதம்

    தை மாதம் முதல் செவ்வாயில் துவங்கி ஆயுள்முழுவதும் செவ்வாய் கிழமைகளில் பைரவர் மற்றும் வீரபத்திரருக்காக அனுஷ்டிக்கும் விரதம்.பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு இருக்கும் இந்த விரதத்தால், பயணத்தின்போது பாதுகாப்பு, பயம் நீங்கும்.

    தைப்பூச விரதம்

    தை மாத பூச நட்சத்திரத்தில் சிவபெருமானுக்காக இருக்கப்படும் விரதம். காலையில் மட்டும் சாப்பிடாமல் இருக்ககூடிய இந்த விரதத்தால், திருமண யோகம் கூடி வரும்.

    கேதார விரதம்

    புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7 நாட்கள் தான் விரததிற்குரிய நாட்கள். இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும் விரதம் இருக்கலாம்.

    ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொண்டு, கேதாரநாதருக்காக முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் இருந்தால்,தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர் என்பது நம்பிக்கை .

    கிருத்திகை விரதம்

    கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சுப்பிரமணியருக்காக அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால், 16 வகையான செல்வத்தைப் பெறலாம்.

    நவராத்திரி விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை மகாசக்தி பார்வதிதேவியை ,முதல் 8 நாள் பழ உணவு சாப்பிட்டு, 9ம் நாளான மகாநவமி அன்று முழுமையாக சாப்பிடாமல் விரதம் இருந்தால், கல்வி, செல்வம், ஆற்றல் ஆகியவற்றை அடையலாம்.

    இந்த விரதங்கள் புண்ணியங்களை பெற்றுத்தருவதுடன் நமது உடல் மற்றும் மனதையும் மேம்படுத்துகிறது.
    ஆனி மாத வளர்பிறை பிரதோஷ தினமான இன்று நாம் சிவபெருமானை வழிபட்டால் என்னென்ன பலன்களை பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    விசேஷங்கள் நிறைந்த ஆனி மாதத்தில் வருகிற அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற்கொள்ளவும் ஏற்றதாக இருக்கிறது. மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் சுப காரியங்கள் விரும்பி செய்யப்படுகின்ற மாதமான ஆனி மாதத்தில் வருகின்ற இந்த ஆனி வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி வணங்கி வழிபடுபவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தும் கிடைக்கப்பெறுவர்.

    ஆனி மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் மட்டும் சாப்பிட்டும் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் இன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் வீட்டின் பூஜையறையில் சிவபெருமான் படத்திற்கு பூஜை செய்து, நைவேத்தியம் படைத்து விரதத்தை நிறைவு செய்யலாம்.

    வீட்டில் இறைவனை வழிபட்ட பின்பு, உங்களால் முடிந்தால் யாசகர்களுக்கு கீரை சாதம், பழச்சாறு போன்றவற்றை தானம் வழங்கலாம். இம்முறையில் ஆனி வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குபவர்களுக்கு நீண்ட நாள் வியாதிகள் அனைத்தும் நீங்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் கணவனும் – மனைவியும் சேர்ந்து வாழும் சூழல் உருவாகும். கர்ம வினைகளும், பூர்வ ஜென்ம பாவ வினைகளும் நீங்கும்.
    ஆனி மாத வளர்பிறை ஏகாதசி தினத்தில் எப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
    மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி  பெருமாள் வழிபாட்டிற்கான சிறப்புமிக்க தினங்களாக கருதப்படுகின்றன. ஒரு வருட காலத்தில் வருகின்ற மற்ற ஏகாதசி தினங்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஆனி மாத ஏகாதசி  விரதம் அனுஷ்டிப்பதால் வாழ்வில் உயரிய நிலையை அடையலாம். இந்த ஏகாதசி திதியில் நீர் கூட அருந்தாமல் உபவாசம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுபவர்கள், அவர்கள் மறைந்த பிறகு மோட்ச நிலை உறுதியாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீர் அருந்தாமல் இந்த ஆனி வளர்பிறை ஏகாதசி  விரதம் மேற்கொள்வதால் இந்த ஆனி வளர்பிறை ஏகாதசி நிர்ஜல ஏகாதசி எனவும் அழைக்கின்றனர்.

    இன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நல்ல திடகாத்திரமான உடல்நிலை கொண்டவர்கள் நீர் கூட அருந்தாமல் நிர்ஜல ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது விரும்பிய பலனை தரவல்லதாகும்.

    நிர்ஜல ஏகாதசி தினத்தன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்க நாணயங்களை தானம் செய்த புண்ணியப் பலன்களை பெறுகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளன. நிர்ஜல ஏகாதசியின் பெருமையை கேட்பவர்கள் கூட இறப்பிற்குப் பின் பெருமாள் அருளும் வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று கூறப்படுகிறது.
    ×