என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூஜை செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும்.
    அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஐஸ்வர்யம், சுகம், பொன், பொருளையும் தருவார். காரணம் அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அஷ்டலட்சுமிகள் அருள் புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூஜை செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும்.

    ஸ்ரீ பைரவருக்கு பவுர்ணமிக்குப் பின்வரும் தேய்பிறை அஷ்டமி யில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
    கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

    ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும்.

    சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும். தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை, பசு நெய் ஆகும். இவற்றைத் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும்.
    இன்று (30-ந்தேதி) வெள்ளிக்கிழமை கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இன்று விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் கஷ்டங்கள் பறந்தோடும்.
    இன்று (30-ந்தேதி) வெள்ளிக்கிழமை கால பைரவாஷ்டமி தினமாகும். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இதனை ருத்ராஷ்டமி, தேவாஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்வார்கள். இது தேவர்களே பைரவரை பூஜிக்கின்ற நாள்.

    சிவாலயங்களில் நீங்கள் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள். சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.

    ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும்.
    அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள். வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்... மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் “பைரவா... காப்பாற்று’’ என்று அழைத்துப் பாருங்கள், காகம் விரட்டும் போது கோழி தன் குஞ்சுகளை எப்படி தன் இறக்கைக்குள் வைத்து காப்பாற்றுகிறதோ, அப்படி ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவார்.

    பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால். நவக்கிரக தோஷங்கள் விலகி, தீவினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை குனியா வாழ்க்கையை நிச்சயம் வாழ்வீர்கள். 8 மற்றும் 64 என்ற எண்ணிக்கையில் பல கோலங்களில் பைரவர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். பைரவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது மிக, மிக பிடிக்கும்.

    தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, சந்தன மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், தேன், அவல் பாயசம் மற்றும் பழ வகைகளை படைத்து பைரவரை வழிபட்டால் நாம் விரும்பியதை எல்லாம் பைரவர் தருவார். தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.

    செல்வத்தை நமக்கு வாரி வழங்கும் அஷ்ட லட்சுமிகள், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு தங்களது செல்வ வள சக்தியை மேம்படுத்தி கொள்கிறார்கள். எனவே நாமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் மங்காத செல்வ வளத்தை பெறலாம் என்பது ஐதீகமாகும்.

    தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வு சிறக்கும்.

    படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில் களை செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்கு திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.

    இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகை படைக்கிறார். பின்னர் காலபைரவராக உலகை காக்கின்றார். எந்தவித பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே கூட போதும். சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவார்.

    தேய்பிறை அஷ்டமி தினத்தன்று செய்யப்படும் பைரவர் வழிபாடு மிகச்சிறந்த நற்பலன்களைத் தரும். தைமாதம் முதல் துவங்கி ஒவ்வொரு செவ்வாய், சனிக்கிழமையும் பைரவரை வணங்கி பஞ்சதீபம் ஏற்றி, காலபைரவ அஷ்டகம் படித்து பூஜை செய்து வந்தால், எதிரிகள் அழிந்து கடன்கள் தீர்ந்து யம பயம் மட்டுமல்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம்.

    செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமையில் வரும் பரணி, ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திரம் இணைந்த நாள் பைரவருக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு செல்லும் போது 18 வழிபாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    1. பதினெட்டு படி நெருங்கியதும், படிக்கு வலதுபுறம் சுவரில் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். உடன் நமது மனதில் ஐயனிடம் பிரார்த்திப்பதை மனதில் வேண்டிக்கொண்டு 18 படிகளையும் தொட்டு வணங்கிக்கொண்டே 18 படி ஏற வேண்டும்.

    2. தீபஸ்தம்பம் (கொடிமரத்தை) வணங்கி பின் நிதானமாக வரிசையில் நின்று அகிலாண்ட கோடி நாயகன் ஐயன் ஐயப்பனை திவ்ய தரிசனம் செய்து மனமுருக வேண்ட வேண்டும். நமது குறைகளை கூறி நிவர்த்திக்க வேண்ட வேண்டும்.

    3. சன்னிதானத்தின் மேலேயுள்ள கன்னிமூல கணபதியை வலம் வந்து கபற்பூரம் ஏற்றி வணங்க வேண்டும்.

    4. வேண்டுதல் இருந்தால் மணி கட்ட வேண்டும்.

    5. கணபதி கோவிலுக்கு அருகில் உள்ள நாகராஜா (ஸ்ரீசண்முக சுவாமி சன்னதியை) வணங்கி பன்னீர் சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் போன்றவற்றை வைத்து சுவாமியை வணங்க வேண்டும்.

    6. சன்னிதானத்தில் இருந்தே நடைமேடை வழியாக மஞ்சமாதா கோவில் அடைந்து முதலில் கருப்ப சாமியை வணங்கி, அவல், நெல் போரி, வெல்லம், பழம், தேங்காய், வறுத்த பொரி காணிக்கை இங்கு வைக்க வேண்டும். கருப்பசுவாமிக்கு திராட்சை பழம், கற்கண்டு, கற்பூரம் காணிக்கை வைத்து வணங்க வேண்டும்.

    7. சர்ப்ப தோஷம் சத்ரு தோஷம் ஏற்படாமல் இருக்க அங்குள்ள புள்ளுவன்களிடம் அமர்ந்து பாட்டு படிக்க வேண்டும்.

    8. மணிமண்டபம் சுற்றி வந்து வணங்க வேண்டும்.

    9. அடுத்து நாகராஜா,, நாகயட்சி ஆகிய தெய்வங்களுக்கு கற்பூரம் கொளுத்தி வணங்க வேண்டும்.

    10. நவக்கிரகங்களை 9 முறை சுற்றி வந்து கற்பூரம் கொளுத்தி வணங்க வேண்டும்.

    11. மலை தெய்வங்களை (காட்டு தேவதைகளை) மஞ்சள் பொடி தூவி வணங்கி வலம் வர வேண்டும்.

    12. மஞ்சமாதா எழுந்தருளியுள்ள கோவிலை முழுத் தேங்காயை கீழே உருட்டி கோவிலை வலம் வர வேண்டும். இந்த மாளிகைப்புரத்தம்மா சன்னதியில் அம்மனுக்கு பட்டு துண்டு, மஞ்சள் பொடி, குங்குமம், வெற்றிலை பாக்கு வைத்து வணங்க வேண்டும். வணங்கிய பின் அம்மனை தொழுதபடியே முதுகை கோவில் பின் பக்கம் பார்த்த நிலையில் படி இறங்கி தங்குமிடம் செல்ல வேண்டும்.

    13. வாபர் கோவிலில் சென்று நெல் மிளகு ஊதுபத்தி வைத்து வணங்க வேண்டும்.

    14. அவரவர் இருமுடி கட்டுப் பிரித்து குருசாமி மூலம் நெய் தேங்காய் உடைத்து மஞ்சமாதா கோவிலுக்கு அருகில் கிடைக்கும் நெய் அபிஷேக சீட்டு பெற்று ஐயன் பூதநாதனுக்கு நம் நெய்யை அபிஷேகம் செய்து தரும் நெய்யை பெற்று வர வேண்டும். டப்பாவில் நெய்யை அடைத்துக் கொள்ள வேண்டும்.

    15. அரவணப்பாயாசம் அப்பம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

    16. திரும்ப செல்லும் போது (அனுமதித்தால் 18 படி ஐயப்பனை பார்த்தபடி இறங்கலாம்). 18 படிக்கு அருகில் சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

    17. ஓமகுண்டத்தில் ஒரு தேங்காய் மூடி போட வேண்டும்.

    18. பம்பை திரும்ப வேண்டும்.
    நாமும் சஷ்டிவிரதத்தினை நோற்றுக் கலியுகவரதனும், கண்கண்ட தெய்வமுமாகிய கந்தசுவாமியாரின் திருவருளினால் பூரணமான ஆனந்த வாழ்வுபெற முயலுவோமாக.
    கந்தனுக்கு கந்த விரதமாகிய கந்தஷஷ்டி விரதமனுஷ்டிப்போர்; பெறும் பேற்றை “ஏழையர், வதுவை வேண்டினேற்ற கன்னியரைச் சேர்வர் வாழு” நன் மகவு வேண்டின் மக்களைப்பெறுவரென்றும், பாழிவாய் மணிச்செஞ் சூட்டுப் பஃறலை யனந்தன் றாங்கு மாழிசூழுலகமெல்லாம் வேண்டினு மடைவர் மாதோ”
    இதன் பொருள் ஏழைகள், விவாகஞ் செய்ய விரும்பினால் இயைந்த கன்னியர்களைமணஞ்செய்வர், நீடுழி வாழ்கின்ற நல்லபுதல்வரை விரும்பினால் எந்நாளும் அவரைப் பெறுவர். பருத்தவாயையும் இரத்தினம் பொருந்திய சிவந்த சுடிகையையுமுடைய பலதலைகள் பொருந்திய ஆதிசேடன் சுமக்கின்ற கடல்சூழ்ந்த உலகத்தையெல்லாம் பெறுவர்.

    பலன் விழையாது நோக்கிற் பாவம் தொழிந்து சிந்தை நலமுற முமுட்சு வாகிக் குருவினால்ஞானம் பெற்றுப் புலன்வழிச் செலவு நீக்கிப் போதபூ ரணவானந்த வலைகடல் வடிவாங் கந்தனடியிணை நீழல் சேர்வார் (இதன்பொருள்:- யாதொரு பலனையும் விரும்பாது விரதம் அனுட்டிப்போர் பாவம் நீங்கி சித்தசுத்தியுடையவர்களாய் இயல்பாய் முத்தி விருப்பம் எழப்பெற்று, பின்ஞான சற்குருவையடைந்து, ஐம்புலப் பகைவராதியோரை வென்று, பூரண ஞானானந்தசொருபராகும் முருகப் பெருமானின் திருவடி நிழலில் பிறப்பிறப்பு நீங்கிப் பேரானந்தப் பெருவாழ்வு பெறுவர் என்பதாம்). எனவே நாமும் இவ்விரதத்தினை நோற்றுக் கலியுகவரதனும், கண்கண்ட தெய்வமுமாகிய கந்தசுவாமியாரின் திருவருளினால் பூரணமான ஆனந்த வாழ்வுபெற முயலுவோமாக.
    ஜாதகத்தில் தோஷம், பிரச்சனை இருப்பவர்கள் ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து குறையை தீர்த்து கொள்ளலாம்.
    ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து பக்தர்கள் குறையை நீக்கலாம். அவை,

    1. திருமணத் தடையை நீக்குதல்

    2. வழக்குகளில் வெற்றி பெறுதல்

    3. குடும்பச் சிக்கல்களை நீக்கும் என்றும் அனைத்திற்கும் தனித்தனி மந்திரங்கள் இருக்கின்றன.

    1. ராகுகால அஷ்டமி பூஜை செய்தால் - குறைவற்ற வாழ்வைப் பெறலாம்.

    2. ராகுகால மங்களவார பூஜை (செவ்வாய்) செய்பவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கும்.

    3. சுக்கரவார பூஜை (வெள்ளி) பூஜை செய்து வழிபட்டால் - நல்ல புகழைத் தருதல், எதிர் பார்ப்பில் வெற்றி கூடுதல் கிட்டும்.

    4. மாங்கல்ய பல ராகு பூஜை (வெள்ளிக்கிழமை) செய்தால் - திருமண நாணின் பலம் கூடும்.

    5. சிவாஸ்தான ராகுகால சாந்தி பூஜை (திங்கட்கிழமையில் மட்டும் செய்ய வேண்டும்) - சுபகாரியத் தடங்கல் மனோவியாகூலம், சிவ தோசம், சாபம் முதலியவை நீங்கும்.

    6. சர்ப்பதோச நிவாரணம் பூஜை செய்தால் - பாம்பு தோசம் நீங்கும்.

    7. வியாபார லாப ராகு கால பூஜை செய்தால் - வியாபாரத் தொடக் கத்தில் செய்யப்படுதல்.
    மகாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதத்திற்கு புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அந்த புராணக்கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பவுர்ணமி திதிக்கு பிறகு 11-ம் நாளில் வரும் திதி ஏகாதசி ஆகும். ஒரு முறை முரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்த அசுரனை அழிக்க மகாவிஷ்ணு போரிட்டார். இந்தப் போர் 1000 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது.

    ஒரு கட்டத்தில் இருவருமே களைப்படைந்தனர். மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமம் என்ற இடத்தில் ஒரு குகையில் ஓய்வெடுத்தார். ஓய்வெடுக்கும் வேளையில் மகாவிஷ்ணுவை கொல்ல வந்தான் முரன்.

    அப்போது விஷ்ணுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்ட சக்தி, பெண்ணாக உருவெடுத்து, முரனை அழித்தது. கண்விழித்த மகாவிஷ்ணு அந்த சக்திக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டதாக புராணக் கதை ஒன்று சொல்கிறது. மேலும் ‘ஏகாதசியில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை நான் அளிப்பேன்’ என்றும் மகாவிஷ்ணு அருள்புரிந்தார்.

    மன்னர் அம்பரிஷ், தீவிர விஷ்ணு பக்தர். அவர் நெடுங்காலமாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து வந்தார். ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்தால் அம்பரிஷ் மன்னனின் உயிருக்கு ஆபத்து வந்தது. ஆனால் அவன் செய்த ஏகாதசி விரத பலனால், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் துர்வாசரை கொல்ல துரத்தியது. பயந்து போன துர்வாச முனிவர், அம்பரிஷ் மன்னனை சரணடைந்ததுடன், அவனுக்கு அளித்த சாபத்தையும் நீக்கினார். ஏகாதசி விரதத்தின் பலன் அப்படிப்பட்டது.
    கார்த்திகை மாதம் வரும் கார்த்திகைத் திருநாளைக் விரதம் இருந்து கொண்டாடினால், எந்த நாளும் இனிய நாளாக மாறும். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் முன்னேற்றம் கூடும்.
    ‘வழிக்குத் துணை வேலும் மயிலும்! நம் மொழிக்குத் துணை முருகா என்னும் நாமம்’ என்று முன்னோர்கள் கூறி வைத்திருக்கின்றனர். எனவே கந்தன் புகழ்பாடி, கார்த்திகை மாதம் வரும் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடினால், எந்த நாளும் இனிய நாளாக மாறும். திருக்கார்த்திகை நாளில் முருகனை வழிபட்டால் முன்னேற்றம் கூடும்.

    ‘வந்த வினையும், வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே’ என்றும், ‘கந்தன் பேரை எந்த நாளும் சொல்லிப்பாருங்க! நம் கவலையெல்லாம் தீரும் இது உண்மைதானுங்க!’ என்றும் கவிஞர்கள் பாடி வைத்துள்ளார்கள். அந்த அடிப்படையில் ஐப்பசி மாதம் சூரனை சம்ஹாரம் செய்து வெற்றிகண்ட வடிவேலனை, கார்த்திகை மாதம் கைகூப்பித் தொழுதால் நேர்த்தியான வாழ்க்கை நமக்கு அமையும்.

    ஐப்பசி மாதக் கந்த சஷ்டியில் சூரனை வெற்றி கண்ட வேலன், வெற்றிக்களிப்போடு இருக்கும் மாதம் கார்த்திகை ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏனென்றால் அதை தான் நாம் ‘திருக்கார்த்திகை’ என்ற அடைமொழியுடன் அழைக்கின்றோம். ‘பெரிய கார்த்திகை’ என்று கூட சிலர் அழைப்பார்கள். கார்த்திகை நட்சத்திரத்தின் பெயரும், மாதத்தின் பெயரும் ஒன்றாக அமைவது இந்த மாதத்தில் மட்டும் தான்.

    திருக்கார்த்திகை நாளன்று முருகப்பெரு மானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதோடு, விரதமும் இருந்து வழிபட்டால் அந்த முத்துக் குமரன் முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான். அப்படிப்பட்ட இனிய திருக்கார்த்திகை திருநாள், கார்த்திகை மாதம் 7-ந் தேதி (23-11-2018) வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அதற்கு முதல் நாள் பரணி தீபமாகும். பாவங்கள் போக்கும் பரணிதீப வழிபாட்டினையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

    ‘பரணி தரணி ஆளும்’ என்பார்கள். எனவே பரணி நட்சத்திரமன்று நாம் முருகப்பெருமானை வழிபட்டால் தரணி ஆளக்கூடிய யோகம் கிடைக்கும். அதாவது புகழ், கீர்த்தி, செல்வாக்கு, பட்டம், பதவி ஆகிய அனைத்தும் வந்து சேரும். பிறருக்கு மனதால் கூட தீங்கு நினைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக் கிறார்கள். கலியுகத்தில் பாவங்கள் அதிகரிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. நாம் செய்த பாவங்கள் எல்லாவற்றுக்கும் பரிகாரமாகத் தான் ஆலயங்களுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றோம்.

    அந்த வகையில் தீபம் ஏற்றுவதன் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும் நாள் தான் திருக்கார்த்திகை. முதல் நாள் வரும் பரணி நட்சத்திரமன்று, 22-ந் தேதி (வியாழக் கிழமை) மாலையில் நம் இல்லங்களில் விளக்கேற்றி வைத்தால் உன்னதமான வாழ்க்கை அமையும். மறுநாள் ஆலயம் சென்று முருகப்பெருமான் சன்னிதியில் வழிபடவேண்டும். கவச பாராயணம் பாடுவது நல்லது. வீட்டில் நல்லெண்ணெயிலும், ஆறுமுகப்பெருமான் சன்னிதியில் இலுப்பை எண்ணெயிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மரபு.

    வீட்டில் விளக்கேற்றும் பொழுது, படிக்கு மூன்று விளக்கு ஏற்ற வேண்டும். ‘ஒளி கொடுத்தால் வழி கிடைக்கும்’ என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். திருக்கார்த்திகையன்று பூஜை அறையில் முழுமுதற் கடவுள் விநாயகப் பெரு மானின் படத்தோடு, அவரது தம்பியான முருகப்பெரு மானின் படத்தையும் வைத்து மாலை சூட்ட வேண்டும்.

    பஞ்சமுக விளக்கேற்றி, அதில் ஐந்து வகையான எண்ணெய் ஊற்றி, கந்தனுக்கு பிடித்த கந்தரப்பத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும். பிறகு கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்றவற்றைப் பாராயணம் செய்து முருகப்பெருமானை வழிபட்டால் இனிய வாழ்க்கை அமையும். இரவு வரை விரதமிருந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.

    கார்த்திகைத் திருநாளில் அன்னதானம் செய்தால், ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகம் நடைபெறும். காக்கைக்கும் உணவளிக்க வேண்டும். ஜோதி வடிவான இறைவனை நினைத்து சிவாலயங்கள் தோறும் சொக்கப் பனை கொளுத்தி வழிபாடு செய்வார்கள். அதிலுள்ள கம்பு அனலில் எரிந்து முடிந்ததும், அதை எடுத்து வந்து வீட்டில் வைத்தால் செடிகள் வளரும். தோட்டத்தில் காய்கனிகள் அதிகம் காய்க்கும்.

    இந்த விரதத்தின் மூலமாகத்தான் அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அருளைப் பெற்றார். இழப்புகளை ஈடுசெய்யும் இந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்க்கையில் வளம் பெறலாம். கந்தனை வழிபட்டால் சிந்தனைகள் வெற்றி பெறும்.

    -‘பரிகாரச்செம்மல்’ சிவல்புரி சிங்காரம்
    எப்படிப்பட்ட பாவத்தையும் கைசிக ஏகாதசி விரதம் தொலைக்கும் என்பது ஐதீகம். கைசிக ஏகாதசியின் பெருமையை விளக்கும் கதையை அறிந்து கொள்ளலாம்.
    மக்கள் உழைப்பதும், பிழைப்பதும் ஏதோ ஒன்றைப் பெறுவதற்காகத்தான். ஆனால் பெறுவதே தருவதற்குத்தான் என்பதை உணர்த்தியவன் நம்பாடுவான் என்னும் எளிய பக்தன். பெருமாளைப் பாடுவதே தனது பாக்கியமாகக் கருதியவன் நம்பாடுவான். வீணையும் கையுமாக அவன் பாடுவதைக் கேட்க காதுமடல் சாய்த்துக் காத்திருப்பார் பெருமாள்.

    இது நடந்த இடம் திருக்குருங்குடி என்ற திருத்தலம். அன்று கார்த்திகை வளர்பிறை ஏகாதசி. பிரபோதின ஏகாதசி என்று சொல்வார்கள். விரதமிருந்து பெருமாளைப் பாடக் கிளம்பினார் நம்பாடுவான். வழியில் ஒரு பிரம்ம ராட்சசன் எனக்கு இன்று நீ உணவாக வேண்டும் என்று பிடித்துக்கொண்டான்.

    நம்பாடுவான் சொன்னான், “ என் உடல் உனக்கு உணவாகும் என்றால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும். ஆனால் நான் போய்ப் பெருமாளைப் பாடிவிட்டு வந்து விடுகிறேன். அதன்பின் என்னை உணவாகக் கொள்ளலாம்”.

    பிரம்ம ராட்சசன் மறுத்துக் கூறினான், “ நீ மனிதன். மனிதர்கள் பெரும்பாலும் சொன்ன சொல்லை மறந்துவிடுவார்கள். உன்னை எப்படி நம்புவது? “ என்று அப்போது நம்பாடுவான், தான் திரும்பி வராவிட்டால் அடையப்போகும் நரகங்களைச் சொல்லி, பயங்கரமான சத்தியங்களைச் செய்கிறான். பிரம்ம ராட்சசன் விட்டு விட்டான்.

    நம்பாடுவான் மகிழ்ச்சியோடு பெருமாள் சந்நிதிக்குச் சென்று பாடுகிறான். அன்று மிக மிக உருக்கமாக ஒரு பண் பாடுகிறான். அது கைசிகப் பண். பாடிவிட்டு திரும்ப வரும்போது பிரம்ம ராட்சசனுக்கு அதுவரை இருந்த பசி இல்லை.எனவே நம்பாடுவானை உண்ணவில்லை. தன்னை சாபவிமோசனம் செய்ய வேண்டுகிறான். தான் பாடின கைசிகப் பண்ணின் புண்ணிய பலத்தைத் தந்து பிரம்ம ராட்சனனின் சாபத்தை நீக்குகிறான் நம்பாடுவான்.

    கைசிகப் பண் பாடிய ஏகாதசி கைசிக ஏகாதசி. இந்தக் கதை வராகப் புராணத்தில் உள்ளது. திருக்குறுங்குடியில் இது இப்போதும் நாடகமாக நிகழ்த்தப் பெறுகிறது. மற்ற திவ்யதேசங்களில் பெருமாள் கோயிலில் கைசிக மகாத்மியம் படிக்கப்படுகிறது.
    ஒருவருடைய வாழ்வில் பெருமைகள் வந்து சேர வேண்டுமானால் பிள்ளையாரை விரதம் இருந்து வழிபடவேண்டும். அப்படிப்பட்ட விநாயகருக்கு சஷ்டியும், சதயமும் கூடுகின்ற நேரத்தில் ‘பிள்ளையார் நோன்பு’ என்றுகொண்டாடுவர்.
    எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன் ‘மூல முதற்கடவுள்’ என்றும், ‘ஆனைமுகன்’ என்றும் போற்றப்படும், விநாயகரை வழிபட்டுத் தொடங்குவது தான் மரபு. வெற்றிகளை வரவழைத்துக் கொடுக்கக் கூடியவர். மஞ்சளிலே பிடித்தாலும், சாணத்தில் பிடித்தாலும், இருக்கும் இடத்திலேயே எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆற்றல் மிகுதெய்வம் விநாயகர். தடைகளை அகற்றி தக்க நேரத்தில் செயல்களை முடித்துக் கொடுப்பவரும் அவரே. ஒருவருடைய வாழ்வில் பெருமைகள் வந்து சேர வேண்டுமானால் பிள்ளையாரை வழிபடவேண்டும்.

    விநாயகப் பெருமான் நமக்கு அருட்செல்வத்தையும், பொருட்செல்வத்தையும் அள்ளி வழங்குபவர். அவர் சன்னிதியில் குட்டுப் போட்டுக்கொண்டு, காதுகளை இழுத்து, உக்கி போடுவது உடற்பயிற்சியாகவும் அமைகின்றது. தோப்புகரணம் என்று சொல்லப்படும் இந்த செய்கையால், மூளைக்குச் செல்லும் ரத்தம் பம்ப் செய்யப்பட்டு மூளை சுறுசுறுப்படைந்து, சிந்தனை விருத்தியை நமக்கு வழங்குகின்றது.

    கணங்களுக்கெல்லாம் அதிபதியாக இருப்பதால், அவரை ‘கணபதி’ என்றழைக்கின்றோம். இருபத்தேழு நட்சத்திரங்களையும், மனித கணம், தேவ கணம், ராட்சச கணம் என்று பிரித்து வைத்திருக்கின்றார்கள். எந்தக் கணத்தை எந்தக் கணத்தோடு சேர்த்தால் ஒற்றுமையோடு இருக்கும் என்பதை வலியுறுத்தவே, கல்யாண நேரத்தில் ‘கணப்பொருத்தம்’ பார்க்கின்றனர். கணப்பொருத்தம் தான் குணப்பொருத்தமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    இந்தக் கணப்பொருத்தம் சரியாகப் பொருந்தாமல், வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திப்பவர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்கள் யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு ஆலயங்களைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள கணபதியை கைகூப்பித் தொழுது பரிகாரங்களைச் செய்தால் கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும்.

    பிள்ளையார் சுழி போட்டு நாம் காரியத்தைத் தொடங்குவது வழக்கம். அப்பொழுதுதான் நல்ல விதமாக காரியங்கள் முடிவடையும். விக்னங்களை அகற்றுவதால் ‘விக்னேஷ்வரர்’ என்றும் போற்றப்படுகின்றார். அப்படிப்பட்ட விநாயகருக்கு சஷ்டியும், சதயமும் கூடுகின்ற நேரத்தில் ‘பிள்ளையார் நோன்பு’ என்றுகொண்டாடுவர். இந்த நோன்பை செட்டிநாடு பகுதிகளில் அதிகமாக பார்க்க முடியும். பொதுவாக இந்த நந்நாளில் எல்லோருமே அருகில் உள்ள ஆலயத்தில் பிள்ளையாரை வழிபட்டு வந்தால் நினைத்தது நிறைவேறும். நிம்மதி பெருகும். அந்தப் பிள்ளையார் நோன்பை முறையாகக் கொண்டாடினால் வாரிசு வரம் கிடைக்கும். புகழ், கீர்த்தி உண்டாகும். செல்வம் நிலைக்கும். செல்வாக்கு மேலோங்கும். இந்தத் திருநாள் கார்த்திகை மாதம் 27-ம் நாள் (13.12.2018) வியாழக்கிழமை வருகின்றது.

    குறிப்பாக திருக்கார்த்திகையில் இருந்து இருபத்தியோராவது நாள், அதாவது தேய்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரை தொடர்ந்து இருப்பத்தி ஒருநாட்கள் முன்காலத்தில் விரதம் இருந்திருக்கிறார்கள். நாளொன்றுக்கு ஒரு நூல் திரி, விநாயகர் முன்னிலையில் எடுத்து வைப்பார்கள். இருபத்தியோராவது நாளில், பச்சரிசி மாவும், வெல்லமும் கலந்து நெய் ஊற்றிப் பிசைந்து, பிள்ளையார் போல் பிடித்து வைத்து அதில் 21 நாட்கள் சேர்ந்த திரியை விளக்கில் இட்டு ஏற்றி, பிள்ளையார் முன்காட்டிவிட்டு அதைச் சாப்பிடுவர்.

    அன்றைய தினம் பிள்ளையார் பாடல் பாடுவதோடு, கருப்பட்டியில் பணியாரம் செய்வதும், சுண்டல், அவல், பொரி, கடலை நைவேத்தியம் படைத்து, நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதும் உகந்தது. விநாயகப்பெருமானை மனமுருகி சதயத்தன்று நாம் வழிபட்டால் இதயம் மகிழும் விதத்தில் வாழ்க்கை அமையும்.

    இந்தப் பிள்ளையார் நோன்பைக் கொண்டாடும் பொழுது, நடு வீட்டுக் கோலம் போடுவது வழக்கம். விநாயகருக்கு அருகம்புல், மற்றும் மல்லிகை மாலை அணிவிக்கலாம். விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய கலக்கங்கள் அகன்று நல்ல திருப்பங்கள் வாழ்வில் உருவாகும்.

    ‘அருகம்புல்லையள்ளி ஆனைமுகன் உனக்களிக்கப்
    பெருகும் பொன்னையள்ளிப் பெருமையுடன் தருபவன்நீ!
    உருகி மனமுருகி உனைத்தொழுது போற்றுகின்றோம்!
    அருகில் வந்தெம்மை ஆதரிப்பாய் கற்பகமே!’
    என்று கவிஞர் பெருமக்கள் விநாயகரை வர்ணித்துள்ளனர்.

    அத்தகு பெருமை கொண்ட கற்பகப் பிள்ளையார் கை நிறையக் கனதனம் தருபவர். சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் எழுந்தருளி அற்புதப் பலன்களை அள்ளி வழங்கும் அவரை, ஒருமுறையேனும் நேரில் சென்று வழிபட்டு உன்னதப் பலனைப் பெறுவோம். ஆவணி மாத சதுர்த்தி ஆனைமுகனுக்கு உகந்த திருநாளாகும். அந்த நாளில் மோதகத்தை அவருக்கு நைவேத்தியமாக வழங்கி வழிபட்டால் நாம் சாதகமான பலன்களை வரவழைத்துக் கொள்ள முடியும்.
    இன்று (17-ந்தேதி) கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு காலை கடல் மற்றும் ஆறுகளில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்..
    சபரிமலையில் நடை பெறும் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதி விரதமிருந்து மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

    இன்று (17-ந்தேதி) கார்த்திகை மாதம் பிறக்கிறது. அன்று காலை கடல் மற்றும் ஆறுகளில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். அன்று காலையில் கோவில்களில் சுவாமியே சரணம் ஐயப்ப என்ற பக்தி கோ‌ஷம் எதிரொலிக்கும்.

    சபரிமலை செல்லும் பக்தர்கள், கன்னிசாமிகளுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். அப்போது பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோ‌ஷம் எழுப்பினர். வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்து மாலை அணிந்தனர்.

    இன்று காலை ஏராளமான ஐயப்பப் பக்தர்கள் மாலை அணிந்தனர். 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளார்கள். நீலம், கருப்பு நிற உடை அணிந்து அவர்கள் வலம் வந்தனர். கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து இன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு கோவில்களில் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தி கோ‌ஷம் எதிரொலித்தது.

    மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் புனித நீராடி விட்டு கோவில்களில் சாமி தரிசனம் செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் கோவில்களிலேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.

    சபரிமலைக்கு முதல் முறையாக மாலை அணிந்து செல்பவர்கள் கன்னி சாமிகள் ஆவார்கள். கன்னிசாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனர். இதை யடுத்து நாகர்கோவில், கன்னியாகுமரியில் உள்ள கடைகளில் ஏராளமான பக்தர்கள் கருப்பு, நீல நிற ஆடைகளை வாங்குவதற்கு குவிந்திருந்தனர். மேலும் தாங்கள் அணிவிக்கும் மாலைகளையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
    ஐயப்பனுக்கு ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு ஐயப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
    17-11-2018 மாலை அணியும் நாள்

    சபரிமலை ஐயப்பன் கோவில் சுயம்புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.

    சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.

    சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் ஐயப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

    ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு ஐயப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

    மகிஷியை வதம் செய்த மணிகண்டன் அவன் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு. இதை நினைவு கூரும் வகையில் அழுதை நதியில் மூழ்கி குளிக்கும் போது எடுக்கும் கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.

    நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ``தத்துவமசி'' எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், ``நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்'' என்று பொருள்.

    ஐயப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.

    சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

    ஐயப்பனுக்கு நடைபெறும் மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு அவர் வளர்ந்த பந்தளம் நகரில் உள்ள பந்தளராஜா அரண்மனையில் இருந்து திருஆபரணம் கொண்டு செல்லப்படும்.

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திரு ஆபரணம் பந்தளராஜாவின் வம்சத்தைச் சேர்ந்த மூத்த குடும்ப உறுப்பினர் தலைமையில் கொண்டு செல்லப்படும். திருவாதிரைநாள் ராகவவர்ம ராஜா அரசரின் தூதராக இருந்து திருஆபரண ஊர்வலத்தை தலைமையேற்றுச் செல்கிறார்.

    பந்தளம் கோவிலில் இருந்து திருஆபரணம் ஊர்வலம் புறப்படும்போது வானத்தில் அன்று மட்டும் ஒரு கழுகு தோன்றும். திருஆபரணம் கொண்டு செல்லப்படும் ஊர்வலப் பாதையில் வானில் அக்கழுகு தொடர்ந்து பறந்து வருவது இன்று வரை நடந்துவரும் ஓர் அதிசயமாகும்.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் கைகூடாமல் தாமதம் ஆகும் பெண்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
    செவ்வாய் தோஷத்தால் திருமணம் கைகூடாமல் தாமதம் ஆகும் பெண்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். செவ்வாய் தோஷத்தால் திருமணம் கைகூடாமல் தாமதம் ஆகும் பெண்கள் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

    செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு பல வழிபாடுகள் இருந்தாலும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வழிபாடு சிறப்பானது. லட்சுமி நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்து படத்துக்கு முன்னால் தீபம் ஏற்றி பூஜை பொருட்கள் உபயோகித்து ஸ்ரீநரசிம்மரை வழிபட வேண்டும், நிவேதனமாக பானகம் வைக்க வேண்டும். (நீர்+ ஏலம் + எலுமிச்சை +துளசி+ வெல்லம் = இதன் கலவையே பானகம் ஆகும்). பூஜையை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் (அல்லது) செவ்வாய் ஹோரையில் செய்யவும். பிரதோஷ காலத்தில் அவசியம் செய்ய வேண்டும்.

    சுவாதி நட்சத்திரம் வரும் நாளிலும் இந்த பூஜையை செய்யலாம். பூஜை முடிவில் பக்கத்தில் நரசிம்மர் ஆலயம் இருந்தால் அங்கு சென்று நரசிம்மரை வணங்கி விரதத்தை நிறைவு செய்யவும். நரசிம்மர் ஆலயத்தில் நெய் தீபம் 9 வாரம் போட்டுவருவது மிகவும் நல்லது. செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளை படைக்கலாம். 
    ×