என் மலர்
ஆன்மிகம்
- முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.
- அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம் எனப்படுவார்கள்.
பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ரு வர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீக வர்க்கம் எனப்படுவார்கள்.
இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.
மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.
மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிட கூடாது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.
நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய பித்ருக்களுக்கு, மகாளயபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம். சாஸ்திரப்படி சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு உண்ணக் கூடாது.
தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்ய வேண்டும்.
சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
நமது பித்ருகளிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
- கபில முனிவரின் தவத்தை கலைத்து சண்டைக்கு சென்றனர்.
- பித்ரு வழிபாடு செய்வதற்கு பகீரதனுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
ஆதி காலத்தில் அயோத்தி நாட்டை இசு வாகு குலத்தைச் சேர்ந்த சகரர் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சுமதி, கேசினி என்ற 2 மனைவிகள் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பிறக்கவில்லை. இதனால் சகரர் இறைவனை நோக்கி தவம் இருந்தார். அதன் பயனாக சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்தனர். கேசினிக்கு ஒரே ஒரு குழந்தை பிறந்தது.
இதைத் தொடர்ந்து அரசர் சகரர் நாடு பிடிக்கும் ஆசையில் அசுவமேத யாகம் நடத்தினார். அவர் அனுப்பிய குதிரை திடீரென மாயமாகி விட்டது.
அந்த குதிரையைத் தேடி சுமதியின் 60 ஆயிரம் மகன்களும் புறப்பட்டுச் சென்றனர். ஒரு குகை அருகில் குதிரை நிற்பதைக் கண்டனர். அந்த குகை அருகில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவர்தான் குதிரையை கடத்தி வந்து விட்டதாக தவறாக புரிந்து கொண்டனர்.
கபில முனிவரின் தவத்தை கலைத்து சண்டைக்கு சென்றனர். இதனால் வெகுண்ட கபிலமுனிவர், 60 ஆயிரம் பிள்ளைகளையும் சாம்பலாகப் போகும்படி சாபமிட்டார். உடனே சுமதியின் 60 ஆயிரம் பிள்ளைகளும் சாம்பலாகிப் போனார்கள்.
கேசினியின் ஒரே ஒரு மகன் அரசுரிமைக்கு வந்தான். அவனது மகன் பகீரதன். பகீரதன் அரச பதவிக்கு வந்தபோது பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அப்போது அவனுக்கு தன் மூதாதையர்கள் 60 ஆயிரம் பேர் சாம்பலாகிப் போனதும், அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் எதுவும் செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.
உடனே பகீரதன் தன் முன்னோர்கள் 60 ஆயிரம் பேருக்கும் தர்ப்பணம் கொடுத்து பித்ரு வழிபாடு செய்ய முடிவு செய்தான். இதற்காக காடுகள், மலைகளில் அலைந்து திரிந்து முன்னோர்களின் எலும்பு சாம்பலை சேகரித்தார். ஆனால், பித்ரு வழிபாடு செய்வதற்கு பகீரதனுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. உடனே அவன் சிவபெருமானை நோக்கி தண்ணீருக்காக தவம் இருந்தான்.
அவனது தவ வலிமையை மெச்சிய சிவபெருமான், தன் தலையில் வைத்திருந்த கங்கையை பூமிக்குச் செல்ல உத்தரவிட்டார்.
அதன்படி கங்கை நதியானது, பாகீரதி, அலக்நந்தா, ஜானவி, மந்தாகினி, பிண்டார், பதமா, பிரம்மாபுத்திரா ஆகிய 7 நதிகளாகப் பிரிந்து தரையில் ஓடியது.
கங்கை நதி வங்கக் கடலில் கலக்கும் இடமான சாகர் எனுமிடத்தில் அமர்ந்து பகீரதன் பித்ரு பூஜைகளை செய்தான். புண்ணிய நதியான, புனித நதியான கங்கையின் தண்ணீரால் பகீரதனின் பித்ரு வழிபாடுகள் நிறைவு பெற்றன.
அதன்பிறகு வட மாநிலம் முழுவதும் பாயும் வகையில் கங்கை மாறியது. பகீரதன் அன்று தொடங்கி வைத்த கங்கை நதியின் புனிதத் தன்மை இன்றும் தொடர்கிறது.
கங்கை தண்ணீரை கைகளில் ஏந்தி முன்னோர்களை நினைத்து நீர் விடும்போது பித்ரு பூஜைக்கு தனி மகத்துவமே கிடைத்து விடுகிறது. எனவே வாழ்வில் ஒரு தடவையாவது கங்கையின் புனித தலங்களில் ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று பித்ரு பூஜை செய்ய வேண்டும்.
பித்ரு பூஜைக்காகவே கங்கை பூமிக்கு வந்தது என்பதை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
- சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய குளக்கரை
- வேதாரண்யம் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், மணிகர்ணிகா கங்கை உட்கிணறாக உள்ளது.
பிதுர்பூஜை மேற்கொள்வதற்கு தமிழகத்தில் பல இடங்கள் உள்ளன. கடற்கரையோரங்களில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடலும் கூடும் கன்னியாகுமரி கடற்கரை, பூம்புகார், வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கோடியக்கரை ஆகியவை சிறந்தது என்பர். அதேபோல் காவேரிக் கரையோரத் திருத்தலங்களுக்கு அருகில் உள்ள நதிக்கரையும் போற்றப்படுகிறது.
ஸ்ரீரங்கம் தென் பகுதியில் உள்ள அம்மா மண்டபம் படித் துறை, திருப்பராய்த்துறை, திரிவேணிசங்கமம், திருச்சி ஜீயர்புரத்திற்கு அருகிலுள்ள முக்கொம்பு, திருவையாறு புஷ்யபடித்துறை, மயிலாடுதுறை நந்திக்கட்டம், கும்பகோணம் அருகிலுள்ள அரிசலாறு படித்துறை போன்ற நதிக்கரைகள் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகின்றன. குடந்தை மகாமகக் குளம், சக்கரத் தீர்த்தம் ஆகியவையும் சிறந்தவையாகும்.
புனிதத் தலமான காசியில், கங்கை நதி ஓடிவரும் வழியில்உள்ள மணிகர்ணிகா புட்கரணியும் தலைசிறந்து விளங்குகிறது. மணிகர்ணிகா என்ற இடத்தில் செய்யப்படும் பிதுர்பூஜை பதினாறு தலைமுறைக்கு பித்ரு சாபங்களை நீக்கக்கூடியது.
காசியில்உள்ள மணிகர்ணிகா நீர்நிலைக்குச் செல்ல வசதியில்லாதவர்களுக்கு, தமிழகத்தில் அதற்கு சமமாகக் கருதப்படும் மணிகர்ணிகா கட்டங்கள் உள்ளன. அங்கு முன்னோர்களுக்கான பிதுர்பூஜை செய்யலாம்.
வேதாரண்யம் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், மணிகர்ணிகா கங்கை உட்கிணறாக உள்ளது. ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டு அருள்புரியும் சென்னை திருநீர்மலைக்கு அருகில் மணிகர்ணிகா புட்கரணி தீர்த்தம் உள்ளது. மேலும் திருவெள்ளறை திருத்தலத்தின் புனிதத் தீர்த்தங்களில் ஒன்று மணிகர்ணிகா தீர்த்தம். இந்த இடங்களிலும் பிதுர்பூஜை செய்வதால் நல்ல பலன்கள் கிட்டும்.
சென்னையை அடுத்த திருவள்ளூர் வைத்திய வீரராகவர் ஆலயத் திருக்குளம், கும்பகோணம் நன்னிலம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள திலதைப்பதியில் உள்ள புனித தீர்த்தம், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய குளக்கரை, ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் உள்ள குப்தகங்கை குளக்கரை, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில், சந்திர தீர்த்தம் அருகே உள்ள ஆலமரத்தடி ருத்ரபாதம், சேலம் சுகவனேஸ்வரர் ஆலய நந்தவனத்தின் பின்பகுதியில்உள்ள தீர்த்தக்கட்டம் உள்ளிட்ட பல இடங்களும் சிறப்பு வாய்ந்தன.
புனிதத் தலங்களுக்குச் செல்ல முடியாத வயதானவர்கள், தங்கள் இல்லத்திலேயே வேதவிற்பன்னரை அழைத்து பிதுர்பூஜை செய்யச் சொல்லி பயன்பெறலாம்.
- சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
தண்ணறு மத்தமும் கூவிளமும்
வெண்தலை மாலையும் தாங்கியார்க்கும்
நண்ணல்அ ரியநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும்
புகுந்துடன் ஏத்தப் புனைஇழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
-திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
குளிர்ந்த மணம் வீசும் ஊமத்தம் பூவும், வில்வ இதழும், வெண்மையான கபாலத்தை மாலையாகவும் அணிந்து, யாவருக்கும் வழிபடுவதற்கு அரியவனாய் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! புண்ணியம் செய்தவர்களும், பெருந்தவம் செய்தவர்களும் போற்ற, சிறப்பாக விளங்கும் பெருமானின் பாடலைப் பாடும் ஆலவாயின்கண் விரும்பி தங்குவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- மதுரை கூடலழகப் பெருமாள் புறப்பாடு.
- நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் 5008 வடை அலங்காரம்.
இந்த வார விசேஷங்கள் (16-9-2025 முதல் 22-9-2025 வரை)
16-ந் தேதி (செவ்வாய்)
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.
* குரங்கணி முத்து மாலையம்மன் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
17-ந் தேதி (புதன்)
* சர்வ ஏகாதசி.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* மதுரை கூடலழகப் பெருமாள் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
18-ந் தேதி (வியாழன்)
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
19-ந் தேதி (வெள்ளி)
* பிரதோஷம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
20-ந் தேதி (சனி)
* நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் 5008 வடை அலங்காரம்.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (ஞாயிறு)
* மகாளய அமாவாசை.
* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, ஆண்டாள் திருக்கோலம்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
22-ந் தேதி (திங்கள்)
* நவராத்திரி ஆரம்பம்.
* திருநெல்வேலி காந்திமதியம்மன் லட்சார்ச்சனை ஆரம்பம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
ரிஷபம்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். பொருளாதார முன்னேற்றம் கருதி நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விற்ற சொத்துகளை வாங்கும் யோகமுண்டு.
மிதுனம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். பணப்பற்றாக்குறை அகலும். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடல்நலம் சீராகும்.
கடகம்
சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடி வரும். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.
சிம்மம்
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நலன் கருதி மருத்துவ செலவுகளைச் செய்ய நேரிடும்.
கன்னி
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்துகொள்ள முன்வருவீர்கள்.
துலாம்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புனிதப் பயணங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
விருச்சிகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். விரயங்கள் கூடும்.
தனுசு
சிந்தித்து செயல்படுவதன் மூலம் சிறப்புகள் வந்து சேரும் நாள். வரவை விடச் செலவு கூடும். சகோதர வழியில் பிரச்சனைகள் உருவாகும். பஞ்சாயத்துகள் முடிவடையாது.
மகரம்
பிள்ளைகள் வழியில் நல்ல காரியம் நடைபெறும் நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
கும்பம்
எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் நாள். கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கலாம். அக்கம், பக்கத்தினரின் ஆதரவு உண்டு. சம்பள உயர்வுடன் கூடிய புதிய உத்தியோகம் வரலாம்.
மீனம்
வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அலைபேசி மூலம் சுபச் செய்திகள் வந்து சேரலாம்.
- மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடிக் காட்சி.
- சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-31 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி பின்னிரவு 3.26 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : திருவாதிரை காலை 10.45 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடிக் காட்சி. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை.
ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிந்தனை
ரிஷபம்-நன்மை
மிதுனம்-சிறப்பு
கடகம்-முயற்சி
சிம்மம்-பொறுமை
கன்னி-பொறுப்பு
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-வெற்றி
தனுசு- ஊக்கம்
மகரம்-உறுதி
கும்பம்-நிறைவு
மீனம்-நிம்மதி
- பொது இடங்களில் கூட கடமைக்காக சிலர் அண்ணன் தம்பியாக வந்து நிற்பார்கள்.
- அண்ணன்- தம்பி பாசம் என்பது அளவு எடுத்தது போல ஆகி விட்டது.
உலகம் நவீனமாக மாற, மாற அன்பும், அரவணைப்பும் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் அண்ணன்-தம்பி என்றால் அப்படி ஒரு அன்யோன்யமாக இருப்பார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் அண்ணன்- தம்பி பாசம் என்பது அளவு எடுத்தது போல ஆகி விட்டது. பொது இடங்களில் கூட கடமைக்காக சிலர் அண்ணன் தம்பியாக வந்து நிற்பார்கள். இத்தகைய நிலையில் பெற்றோருக்கு செய்யும் பித்ரு தர்ப்பண, சிரார்த்தங்களை அண்ணன்-தம்பிகள் தனித்தனியாக செய்யலாமா? அல்லது ஒன்றாக நின்றுதான் செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் ஏற்படலாம்.
அண்ணன்-தம்பிகள் தனித்தனியாக சிரார்த்தம், தர்ப்பணம் போன்ற பித்ரு கடமைகளை செய்யலாம். அண்ணன், தம்பிகளில் சிலருக்கு தர்ப்பணம் கொடுக்க வசதி, வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம்.
அப்படிப்பட்டவர்கள் யாராவது ஒரு சகோதரருடன் சேர்ந்து கொண்டு அவர் கொடுக்கும் தர்ப்பண பூஜைகளில் கலந்து கொண்டு பலன் பெறலாம்.
பொதுவாகவே அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருந்தால்தான் பலம். அவர்கள் ஒன்றிணைந்து கொடுக்கும் தர்ப்பணம், சிரார்த்தத்துக்கு சக்தி அதிகம். பிள்ளைகள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக நின்று நம்மை நினைத்து வழிபடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பித்ருக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகும். அந்த மகிழ்ச்சியில் அளவற்ற பலன்களை நமக்கு தந்து அருள்வார்கள்.
- எள்ளைப் பயன்படுத்துவதால் நமது முன்னோரும் தேவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
- தர்ப்பைக்குக் குசம், திருப்புல், தெய்வப்புல் அமிர்த வீர்யம் என்ற பெயர்கள் உண்டு.
உலகத்தில் எத்தனையோ வகை புற்கள் இருக்கின்றன. ஆனால், தர்ப்பை புல்லை மட்டும் வழிபாட்டிற்குப் பயன்படுத்துவது ஏன் என்று அறிதல் வேண்டும். எள் என்னும் கருமை நிற விதை திருமாலின் வியர்வைத் துளியில் இருந்து வெளிவந்த பரிசுத்தமான தானியம் என்பது வேதக்கூற்று.
பித்ருக்களுக்கு செய்யப்படுகிற தர்ப்பன வழிபாட்டில் கருமைநிற எள்ளைப் பயன்படுத்துவதால் நமது முன்னோரும் தேவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
மகாளய பட்சம் வருவதற்கு 15 நாட்கள் முன்னதாகவே ஒரு வீட்டின் பானையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள எள்ளானது பித்ரு வருவதைச் சொல்ல நிமிர்ந்து நிற்பதாக நம்பப்படுகிறது. தர்ப்பை புல் ஆகாயத்தில் தோன்றியது என்று கூறுவர். இதில் ஒரு முனையில் பிரம்மாவும், மறு முனையில் சிவபெருமானும், நடுப்பகுதியில் திருமாலும் வாசம் செய்வதாகக் கூறுவர்.
தர்ப்பைக்குக் குசம், திருப்புல், தெய்வப்புல் அமிர்த வீர்யம் என்ற பெயர்கள் உண்டு. நிலத்தில் வாடாமல் நீரில் அழுகாமல் விதை, செடி, பதியம் இல்லாமல் சுயமாகத் தோன்றுவதே தர்ப்பை. ஆன்மா தோற்றம் போன்று புதிரான தர்ப்பை தானே தோன்றி வளர்வதால் தர்ப்பையில் ஆன்மாவை ஆவாகனம் செய்து வழிபடுவர்.
உஷ்ணம் மிகுந்த தர்ப்பை அமாவாசையிலும் கிரகண காலத்திலும் அதிக வீர்யம் உடையதால் தர்ப்பணம் இட பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் தர்ப்பண பூஜைக்கு இதை பயன்படுத்துவர்.
- நம்மை நாம் தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது.
- பரிஷத் மன்னன் கங்கை நதியின் நடுவில் அரண்மனை கட்டி, பாதுகாப்புடன் இருந்தான்.
நமது முன்னோர்கள் எத்தகைய பாவ, புண்ணியம் செய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த பாவ, புண்ணியங்களும் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாகத்திகழ்கின்றன. ஒரு வேளை நம் முன்னோர்கள் படுபாதக செயல்கள் செய்திருந்தால், அது மறைமுகமாக நம்மை வெகுவாகத் தாக்கக் கூடும்.
இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது.
ஸ்ரீதேவி பாகவதத்தை சிராவணம் செய்தால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகி விடும்.
இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-
திருதராஷ்டிரரின் மகன்களான 100 கவுரவர்களுக்கும் பாண்டு மன்னனின் மகன்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அந்த போரில் பஞ்சபாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து பாண்டவர்களின் வெற்றிக்கு கை கொடுத்தார்.
பாண்டவர்களின் வெற்றியை பொறுக்காத அசுவத்தாமன் அவர்கள் மீது அபாண்ட அஸ்திரத்தை பிரயோகித்தான். அதனால் இரு குலத்தாருக்கும் ஒரே சந்ததியாக இருந்த உபபாண்டவர் கருகி ஓர் பிண்டமாக கீழே விழுந்து விட்டனர். அப்பிண்டத்தை இறைவன் ஸ்ரீகிருஷ்ணன் எழுப்பி பரிஷத் எனும் அரசனாக மாற்றினான். அவன் தன் கர்வத்தினால் தியான நிஷ்டையில் இருந்த ஓர் முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை போட்டான். முனிவர் அவனுக்கு மரண சாபமிட்டார்.
இதனால் பயந்து போன பரிஷத் மன்னன் கங்கை நதியின் நடுவில் அரண்மனை கட்டி, பாதுகாப்புடன் இருந்தான். ஆனால் விதி யாரை விட்டது, எலுமிச்சை பழத்தில் ஒரு புழு உருவில் வந்து பாம்பாக மாறி பரிஷத் மகாரா ஜாவை கொன்றது. இதனால் பரிஷத் மகாராஜாவின் ஒரே மகன் ஜனமேஜயன் கோபம் கொண்டு வெகுண்டெழுந்து சர்ப்ப யாகம் செய்யத் தொடங்கினான்.
ஆனால் யாகம் பாதியில் நின்று விட்டது. 'என் தாத்தாவின் தந்தை யுதிஷ்டிரர் தொடங்கிய யாகம் பாதியில் சிசு பாலனின் இறப்பால் நின்று விட்டது. இப்போது நான் செய்யும் சர்ப்ப யாகமும் பாதியில் நின்று விட்டது. என் தந்தையோ மோட்சத்திற்கு இடமின்றி தவிக்கின்றார். என் குடும்பத்து பாவ தோஷங்களை எப்படி நீக்குவது, என் தந்தையின் ஆத்மாவை எப்படிக் கரையேற்றுவது? என்று தவித்தான்.
அப்போது ஸ்ரீதேவி பாகவதத்தின் மகிமையை குரு மூலம் அறிந்தான். உடனே ஜனமேஜயன் தேவி பாகவத கதையை சிராவணம் செய்தான். இதனால் அவனது முன்னோர்களின் பாவங்கள் நீங்கியது.
சிராவணம் முடித்த பிறகு ஸ்ரீதேவி யக்ஞத்தினை முடித்தான். உடனே 'ஜனமேஜயா, உன் வம்சத்து பாவங்கள் நீங்கி விட்டன' என்று அசரீரி குரல் எழும்பியது. எனவே நம் குடும்பத்தில் எத்தகைய பாவ காரியங்கள் அறிந்தோ, அறியாமலோ நம் முன்னோர்கள் செய்திருந்தாலும் ஸ்ரீதேவி பாகவதம் அவற்றைப் போக்கி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
- தென் இந்தியாவின் மிகபிரமாண்டமான திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசிக்கின்றனர்.
- திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி பிரம்மோற்சவ காலத்தில், ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கருட சேவையை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்து வருகிறது.
21-வது ஆண்டாக, இந்த ஆண்டும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.31 மணிக்கு, சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் ஊர்வலமாக சென்று, வரும் 27-ந்தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு திருமலையில், ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. தென் இந்தியாவின் மிகபிரமாண்டமான திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசிக்கின்றனர்.
22-ந்தேதி நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில், உடுப்பி ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சாமிகள் ஆசியுரை வழங்கி திருக்குடைகள் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம்ஜி, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி, விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச்செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர்.செல்லமுத்து, பொதுச்செயலாளர் எஸ்.சோமசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர்.
அன்றைய தினம் திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று, மாலை 4 மணிக்கு திருக்குடைகள் கவுனி தாண்டுகிறது.
23-ந்தேதி ஐ.சி.எப்., ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வழியாக, வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் சென்றடைந்து, இரவு தங்குகிறது. 24-ந்தேதி பாடி, அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில் சென்றடைந்து இரவு தங்குகிறது.
25-ந்தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வழியாக, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் சென்றடைகிறது. 26-ந்தேதி திருவள்ளூர் மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைகிறது. அங்கு பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்க்கப்படுகின்றன.
பின்னர், 27-ந்தேதி திருமலை செல்லும் திருக்குடைகள், மாலை 3 மணிக்கு மாடவீதி வலம்வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம், ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.
திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது.
இவ்வாறு ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியுள்ளார்.
- அவிதவா நவமி ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி.
- திருச்சேரை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-30 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அஷ்டமி காலை 7.01 மணி வரை பிறகு நவமி பின்னிரவு 3.57 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : மிருகசீரிஷம் காலை 11.15 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்
அவிதவா நவமி ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்தி. மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி உற்சவம் ஆரம்பம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. வடமதுரை ஸ்ரீ சவுந்தரராஜப் பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. நத்தம் வரகுண வல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். திருச்சேரை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-தனம்
மிதுனம்-முயற்சி
கடகம்-ஆதாயம்
சிம்மம்-பரிசு
கன்னி-களிப்பு
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- உதவி
மகரம்-உற்சாகம்
கும்பம்-உவகை
மீனம்-பண்பு






