என் மலர்
ராசிபலன்

Today Rasipalan-இன்றைய ராசிபலன் 7.11.2025: இந்த ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு உயரும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். தனவரவு திருப்தி தரும். அனாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் கூடும்.
ரிஷபம்
செல்வாக்கு உயரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மிதுனம்
வருமானம் திருப்தி தரும் நாள். தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
முன்னேற்றம் கூடும் நாள். முயற்சித்த செயலில் வெற்றி ஏற்படும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் உயர எடுத்த புது முயற்சி கைகூடும்.
சிம்மம்
குழப்பங்கள் அகலும் நாள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் சீராக நடைபெறும்.
கன்னி
கோவில் வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
துலாம்
வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். வியாபாரப் போட்டி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
விருச்சிகம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
சகோதர வழியில் சந்தோஷமான தகவல் வந்து சேரும் நாள். வாகன யோகம் உண்டு. வருமானம் இரட்டிப்பாகும். பயணம் பலன் தரும்.
மகரம்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
கும்பம்
தனவரவு திருப்தி தரும் நாள். எண்ணிய காரியம் நிறைவேற அன்னியர் ஆதரவு கிடைக்கும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
மீனம்
எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறையும்.






