search icon
என் மலர்tooltip icon

    சிங்கப்பூர்

    • பல்வேறு சட்டவிரோத செயல்களிலும் அந்த கும்பல் ஈடுபட்டு வந்தது.
    • சிங்கப்பூரில் நடந்த மிகப்பெரிய பண மோசடி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு கும்பல் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவைகள் மூலம் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்து சொத்துக்கள் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு சட்டவிரோத செயல்களிலும் அந்த கும்பல் ஈடுபட்டு வந்தது.

    இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். சிங்கப்பூர் முழுவதும் ஆர்ச்சார்ட் ரோடு முதல் சென்டோ தீவு வரை 9 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 400 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின் போது பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கட்டுக்கட்டான பணம், மற்றும் தங்ககட்டிகள், தங்க நகைகள்,விலை உயர்ந்த சொகுசுகார்கள் கைப்பைகளில் இருந்த பல்வேறு மாடல்களில் கைக்கடிகாரங்கள் சிக்கியது.

    94 சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 734.32 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 6,100 கோடி) மதிப்பிலான பங்களாக்கள், 50 சொகுசு கார்கள், கட்டுக்கட்டாக பணம், நகைகள், கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக சிங்கப்பூர் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக சீனா, கம்போடியா, சைப்ரஸ் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 31 வயது முதல் 40 வயதுக்குட்டவர்கள் ஆவார்கள். இந்த சோதனையின் போது பங்களா ஒன்றில் பதுங்கி இருந்த ஒருவர் 2-வது மாடி பால்கனியில் இருந்து குதித்து சாக்கடையில் பதுங்கி இருந்தார், அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    சைபீரியா நாட்டை சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் தப்பி ஓட முயன்ற போது காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது பங்களாவில் இருந்து 118 மில்லியன் டாலர் மதிப்பிலான 13 சொத்து ஆவணங்கள், 5 வாகனங்கள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவார். இது தொடர்பாக 12 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த கும்பலை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் ஒரு நெட்வொர்க் அமைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.இந்த கும்பலை சேர்ந்த மற்றவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சிங்கப்பூரில் நடந்த மிகப்பெரிய பண மோசடி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிங்கப்பூரில் சில குற்றச்சாட்டுகள் உறுதியானால் பிரம்படி தண்டனை வழங்கப்படுவது வழக்கம்
    • கலையரசன் ஏற்கெனவே 16 வருடங்கள் தண்டனை பெற்றவர்

    சிங்கப்பூரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கம்.

    சமீபத்தில் பல மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி போதை மருந்து கடத்தல் வழக்கில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சில குற்றச்சாட்டுகள் உறுதியானால் இங்கு பிரம்படி வழங்குவதும் வழக்கம்.

    ஒரு குற்றத்திற்கு தண்டனை பெற்று அதனை அனுபவித்த பிறகும் மீண்டும் அதே குற்றத்தை ஒருவர் புரிந்தால் அவர் மீது சிங்கப்பூரில் கடுமையான தண்டனைகள் கிடைக்கும். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு இத்தகைய கடுமையான தண்டனைகள் தற்போது வழங்கப்பட்டிருக்கிறது.

    சிங்கப்பூரில் வசித்த மார்க் கலைவாணன் கலையரசன் (44) என்பவர் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக 16 வருடங்கள் சிறை தண்டனை பெற்றவர். 2017-ம் வருடம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    சில நாட்களிலேயே, சிறையிலிருந்து வெளியே வந்த கலையரசன் ஒரு அபார்ட்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு ஃப்ளாட்டில் அத்துமீறி நுழைந்தார். அந்த வீட்டில் ஒரு பணிப்பெண் துணிகளை மடித்துக்கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

    போதையில் இருந்த கலையரசன், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார். அப்பெண்ணின் கூக்குரலால் பிடிக்கப்பட்ட மார்க், கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர் கொண்டார்.

    இதன்படி, கலையரசன் சமூகத்தில் உள்ள பிறருக்கு தீங்கு விளைவிக்க கூடியவர் என வாதிடப்பட்டு அவருக்கு 18 வருடம் தடுப்பு காவல் சிறை தண்டனை (Preventive Detention) வழங்கப்பட்டது. இத்துடன் சிங்கப்பூரின் தண்டனை சட்டத்தின்படி 12 பிரம்படிகளும் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சமுதாயத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இத்தகைய கடுமையான தண்டனைகள் அவசியம் என அந்நாட்டு அரசாங்கம் பலமுறை கூறி வந்திருக்கிறது.

    • கப்பலில் இருந்து குதித்த பெண்ணின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • கப்பிலில் இருந்து விழுந்ததற்காக காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்தியாவைச் சேர்ந்த ரீத்தா சஹானி (64) என்ற பெண், தனது கணவர் ஜாகேஷ் சஹாஜனியுடன் 'ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்' பயணக் கப்பலில் பயணம் மேற்கொண்டனர்.

    இந்நிலையில், சிக்கப்பூர் செல்லும் வழியில் இந்த கப்பலில் இருந்து ரீத்தா சஹானி குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து ரீத்தா சஹானியின் மகன் கூறுகையில், "கப்பலில் இருந்து தனது தாய் குதித்துவிட்டதாக கூறினர். முன்னதாக, இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டது. ஆனால், அது அவர்தான் என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. எனது தந்தையையும் கப்பலில் இருந்து இறக்கிவிட்டனர்.

    இந்நிலையில், இடைவிடாத முயற்சிகளுக்குப் பிறகு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்து, அது தனது தாய் தான் என்றும் அவர் இறந்துவிட்டார் என்றும் தெரியவந்தது. அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தனக்கு உதவிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் அலுவலகம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    மேலும், கப்பிலில் இருந்து இந்தியப் பெண் விழுந்ததற்காக காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இருபது ஆண்டுகளுக்கு பிறகு முதல் முதலாக ஒரு பெண்ணுக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை நிறைவேறப் போகிறது.
    • உலகின் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் சிங்கப்பூரில் உள்ளது.

    போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சிங்கப்பூர் இவ்வாரம் 2 குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது. அதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெண்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படாத நிலையில் தற்போது முதல் முதலாக ஒரு பெண்ணுக்கும் சிங்கப்பூரில் தண்டனை நிறைவேறப் போகிறது.

    50 கிராம் ஹெராயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 56 வயது நபர் ஒருவர் சிங்கப்பூரின் சாங்கி சிறையில் நாளை தூக்கிலிடப்பட உள்ளார் என்றும் அதே போன்று 30 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக 2018ல் மரண தண்டனை வழங்கப்பட்ட சாரிதேவி ஜமானி எனும் 45 வயது பெண் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது என மனித உரிமைகள் அமைப்பான டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் (TJC) தெரிவித்துள்ளது.

    2004ல் சிங்கப்பூரில் 36 வயதான சிகையலங்கார நிபுணர் யென் மே வோன், போதை பொருள் கடத்தல் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டதற்குப் பிறகு, அந்நாட்டில் தூக்கிலிடப்பட்ட முதல் பெண்மணியாக சாரிதேவி இருப்பார் என்று TJC அமைப்பை சேர்ந்த கோகிலா அண்ணாமலை கூறினார்.

    கொலை மற்றும் சில வகையான கடத்தல் உள்ளிட்ட சில குற்றங்களுக்கு சிங்கப்பூர் மரண தண்டனை விதிக்கிறது.

    உலகின் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்புச் சட்டங்கள் சிங்கப்பூரில் உள்ளது. 500 கிராமுக்கு மேல் கஞ்சா மற்றும் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தினால் அது கடுங்குற்றமாக கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

    கோவிட்-19 தொற்றுநோய்களின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வழிமுறையை, 2-வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 13 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

    மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல், நாளை நடைபெறவிருக்கும் மரணதண்டனையை நிறுத்துமாறு சிங்கப்பூர் அரசாங்கத்தை கோரியுள்ளது.

    "உலகெங்கிலும் உள்ள நாடுகள் மரண தண்டனையை நீக்கி, போதை பொருள் கடத்தல் குற்றங்களில் கொள்கை சீர்திருத்தங்களை கொண்டு வந்திருந்தாலும், சிங்கப்பூர் எதையும் செய்யவில்லை," என்று அம்னெஸ்டி அமைப்பின் மரணதண்டனைக்கான வல்லுனர் சியாரா சாங்கியோர்ஜியோ தெரிவித்தார்.

    மரண தண்டனை என்பது குற்றத்தைத் தடுக்கும் பயனுள்ள வழிமுறை என்று வலியுறுத்தும் சிங்கப்பூர் இவ்விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மறுக்கிறது.

    • சபாநாயகர் மற்றும் எம்.பி.யின் ராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.
    • டான் சுவான் ஜின் எழுதிய ராஜினாமா கடிதத்தில் தனது குடும்பத்தில் கவனம் செலுத்த அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் எம்.பி.யும் ராஜினாமா செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவர்கள் பதவி விலகி உள்ளனர். சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும் செங்லி ஹுய் எம்.பி. ஆகியோரின் ராஜினாமாவை பிரதமர் லீ சியென் லூங் ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பாக பிரதமர் கூறும்போது, மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் எம்.பி.யின் ராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தகாத உறவில் இருந்தனர்.

    அதை கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்த சொன்ன பிறகும் அது தொடர்ந்தது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் கூறினேன். ஆனால் அது தொடர்ந்தபடியே இருந்தது. இதனால் அவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன் என்றார். டான் சுவான் ஜின் எழுதிய ராஜினாமா கடிதத்தில் தனது குடும்பத்தில் கவனம் செலுத்த அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    • 10 முதல் 29 வயதுடையோர் அதிக அளவில் தற்கொலை
    • உலகளவில் வருடத்திற்கு 7 லட்சம் பேர் தற்கொலை

    உலகின் சுத்தமான நகரங்களில் ஒன்றான சிங்கப்பூரில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாத வகையில், தற்கொலை செய்து கொள்வோரின் விகிதம் சென்ற ஆண்டு 26% அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    தற்கொலை தடுப்பு அமைப்பான சமாரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் (Samaritans of Singapore) 2022-ம் ஆண்டில் அங்கு 476 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு முந்தைய வருட எண்ணிக்கையான 378-ஐ விட இது அதிகம் என்றும் தெரிவிக்கிறது. மேலும் கவலையளிக்கும் விதமாக, இந்த பட்டியலில் 10-29 மற்றும் 70-79 வயதுடையோர் அதிகம் இருப்பதாக அது தெரிவிக்கிறது.

    இதன் தலைவர் கேஸ்பர் டேன், "தற்கொலை என்பது மனநலம் தொடர்பான சவால்கள், சமூக அழுத்தங்கள், மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிக்கலான பிரச்சினை" என கூறியிருக்கிறார்.

    மனநல ஆலோசகர் ஜாரெட் நெக் இது குறித்து கூறும்போது, "இளைஞர்களும், வயதானவர்களும் மிகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது. சமூகத்தால் புறம் தள்ளப்படுவதும், தனிமைப்படுத்தப்படுதலுமே இதற்கு முக்கிய காரணம். இதற்கு தீர்வு காண்பது மிக அவசியம்," என்று தெரிவிக்கிறார்.

    உலகிலேயே கருவுறுதலும், குழந்தை பிறப்பு சதவிகிதமும் குறைவாக உள்ள ஒரு நாடுகளில், சிங்கப்பூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக சுகாதார அமைப்பின்படி, தினசரி 7 லட்சம் பேருக்கு மேல் ஒவ்வொரு வருடமும் உலகில் தற்கொலை செய்து கொள்வதாகவும், 15-29 வயதுப்பிரிவில் இறப்போரில் தற்கொலையே 4-வது காரணமாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. இப்போது 4 அணிகளாக பிரிந்து கிடக்கிறது.
    • அன்றைய பா.ஜ.க.வுக்கும், இன்றைய பா.ஜ.க.வுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

    சிங்கப்பூர் :

    சிங்கப்பூரில் உள்ள தமிழ் நாளிதழுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அ.தி.மு.க. இப்போது 4 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. அவர்களது பலவீனத்தை நாங்கள் அரசியல் செய்வதில்லை. எங்களது கொள்கைகளையும், தொண்டர் பலத்தையும் நம்பியே எப்போதும் இருப்போம். கருணாநிதி காலத்தில் நிகழ்ந்ததைப்போல, பா.ஜ.க. உடன் தி.மு.க. கூட்டணி சேர வாய்ப்பு இல்லை. வாஜ்பாய் தலைமையிலான அன்றைய பா.ஜ.க.வுக்கும், இன்றைய பா.ஜ.க.வுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

    அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு பெருமைப்படத்தக்க வகையில் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியதுபோல, இந்த முறையும் அதற்கான திட்டம் உண்டு. அதற்கான சூழல் அமையும்போது உரிய அறிவிப்பு வெளியாகும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலுக்கு தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தமிழினத்தின் பெருமையை மீட்கும் அரசாக திமுக அரசு உள்ளது என முதலமைச்சர் பேச்சு

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார். மேலும், சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலுக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன். சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பதுபோல் உணர்கிறேன். சிங்கப்பூர் நாணயத்திலும் தமிழ் உள்ளது. சிங்கப்பூர் வாழ் தமிழர்களை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிங்கப்பூர்- தமிழ்நாடு இடையேயான தொடர்பு ஆயிரம் ஆண்டுக்கும் மேலானது.

    தமிழால் இணைந்துள்ள நம்மை சாதி மதத்தால் பிரிக்க முடியாது. தமிழினத்தின் பெருமையை மீட்கும் அரசாக திமுக அரசு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை எடுத்துரைத்து முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்தார்.
    • சென்னையில் ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது.

    சிங்கப்பூர்:

    தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    சென்னையில் இருந்து நேற்று சிங்கப்பூர் சென்றடைந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார். சிங்கப்பூர் விமான நிலையத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர்கள், பல்வேறு தமிழ் அமைப்பினர், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், அரசு உயர் அதிகாரிகள் மலர் கொத்து, புத்தகங்கள், பொன்னாடைகள் வழங்கி வரவேற்றனர்.

    சிங்கப்பூர் சென்றடைந்த மு.க.ஸ்டாலின் இன்று காலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர்களையும், முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளையும் சென்று சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான வாய்ப்புகளை எடுத்துரைத்து முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்தார். 

    இன்று மாலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது உலகத் தரத்திலான திறமைகள், போதுமான உள்கட்டமைப்பு, ஸ்திரமான கொள்கை ஆகியவற்றுடன் விருப்பமான முதலீட்டு தளமாக தமிழ்நாடு திகழ்வதாக கூறியதுடன், தமிழகத்தில் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

    இதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 தேதிகளில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். 

    இந்த மாநாட்டில் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த மாநாட்டின்போது தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), பேம் டிஎன், டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த நிறுவனங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்தன. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
    • அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்ட நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தங்கராஜூ சுப்பையா என்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டாா். இவா் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மறுத்தாா்.

    இதனிடையே இரு போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன் இவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அவா்கள் வழியாக ஒரு கிலோ போதைப் பொருளை கடத்த திட்டமிட்டதாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதையடுத்து, உயா் நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2018ல் தீா்ப்பு அளித்தது.

    தங்கராஜூவுக்கு தூக்கு தண்டனை வருகிற 26ம் தேதி (இன்று) நிறைவேற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு அரசு தரப்பில் அனுப்பப்பட்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்புக்கு சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தங்கராஜுசுப்பையா இன்று தூக்கிலிடப்பட்டிருக்கிறார். இந்த தகவலை அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " சிங்கப்பூரைச் சேர்ந்த தங்கராஜூ சுப்பையா (46), இன்று சாங்கி சிறை வளாகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" என்று கூறினார்.

    போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனையாகும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்ட நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
    • 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    கோலாலம்பூர்:

    தங்கராஜூ சுப்பையா என்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டாா்.

    இவா் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மறுத்தாா். இதனிடையே இரு போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன் இவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

    அவா்கள் வழியாக ஒரு கிலோ போதைப் பொருளை கடத்த திட்டமிட்டதாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, உயா்நீதி மன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2018-ல் தீா்ப்பு அளித்தது.

    இந்நிலையில், தங்கராஜூவுக்கு தூக்கு தண்டனை வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) நிறைவேற்றப்பட உள்ளதாக அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு அரசு தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனையாகும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்ட நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

    • மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர அரசு முடிவு செய்துள்ளது.
    • தங்கராஜு சுப்பையா (வயது 46) என்பவருக்கு வருகிற 26-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

    சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை அரசு மறுபரிசீலனை செய்து வந்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் அங்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் தொடர அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி போதைப்பொருள் கடத்த முயன்றதாக கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2018-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட தங்கராஜு சுப்பையா (வயது 46) என்பவருக்கு வருகிற 26-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

    சிங்கப்பூர் அரசின் இந்த முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தங்கராஜுவை தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்ற இறுதிவரை போராட உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ×