என் மலர்
அமெரிக்கா
- பிரதமர் மோடியுடனும், இந்தியாவிடமும் எனக்கு நல்ல உறவு இருந்தது என முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
- நானும் பிரதமர் மோடியும் நல்ல நண்பர்களாக இருந்தோம் என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவுக்கு என்னை விட சிறந்த நண்பன் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். பிரதமர் மோடியுடனும், இந்தியாவிடமும் எனக்கு நல்ல உறவு இருந்தது. நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம்.
பிரதமர் மோடி மிகச்சிறந்த நபர். அவர் சிறப்பாக பணிகளை செய்து வருகிறார். அவருக்கு கிடைத்திருக்கும் பொறுப்பு எளிதானது கிடையாது. ஒருவொருக்கொருவர் நீண்ட காலமாக அறிந்து இருக்கிறோம்.
நான் மீண்டும் அதிபர் பதவிக்கு வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். தேர்தல்களிலும் நான் முன்னிலை வகிக்கிறேன். விரைவில் இது குறித்து நான் முடிவு எடுப்பேன் என தெரிவித்தார்.
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவாரா என்ற விவாதங்கள் எழுந்துவரும் சூழலில், அவரது பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- தான் நடத்திய தாக்குதலை பேஸ்- புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்ததும் தெரிய வந்தது.
- தாக்குதல் நடத்தியவர் டென்னசி மாகாண எல்லை வழியாக ஆர்கன்சாசுக்கு தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. டென்னசி மாகாணம் மெம்பிஸ் பகுதியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
அந்த வாலிபர் ஒரு கடைக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார். இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதில் சிலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். ஆனால் அதற்குள் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் தான் வந்த வாகனத்தை மற்றொரு கார்மீது மோதினார். பின்னர் அந்த காரில் ஏறி தப்பி சென்றார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த சிலரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதற்கிடையே தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடினர். விசாரணையில் அவர் 19 வயதான எசேக்கியேல் கெல்லி என்பதும், அவர் தான் நடத்திய தாக்குதலை பேஸ்- புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டு பொது மக்களை உஷார்ப்படுத்தினர். சந்தேகப்படும் நபர் தப்பி சென்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருவதால் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தாக்குதல் நடத்தியவர் டென்னசி மாகாண எல்லை வழியாக ஆர்கன்சாசுக்கு தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய எசேக்கியேல் கெல்லியை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
- மந்திரி பியூஸ் கோயல் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
- உலகிலேயே 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ :
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் அவர் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த நிதி ஆண்டில் இந்தியாவின் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 675 பில்லியன் டாலரை எட்டியது. 2030-ம் ஆண்டுக்குள், இதை 2 டிரில்லியன் டாலராக (ரூ.160 லட்சம் கோடி) உயர்த்த விரும்புகிறோம்.
உலகிலேயே 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு கொண்டாடுவதற்குள் இந்திய பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக (ரூ.2,400 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சில அதிரடி திட்டங்கள் நன்றாக செயல்பட்டால், பொருளாதாரம் 45 டிரில்லியன் டாலர் வரை (ரூ.3 ஆயிரத்து 600 லட்சம் கோடி) உயரக்கூடும்.
கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு போட்ட அடித்தளத்தால் பொருளாதாரம் வேகமாக உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது.
- அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரூத்பேடர் கின்ஸ்பர்க்கின் சட்ட எழுத்தராக பணியாற்றினார்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிபதியாக அமெரிக்க வாழ் இந்தியரான அருண் சுப்பிரமணியனை அதிபர் ஜோபைடன் பரிந்துரைத்துள்ளார்.
இது தொடர்பான நீதித்துறை நியமனங்கள் வெள்ளை மாளிகையால் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது.
இந்த நியமனம் செனட் சபையால் உறுதி செய்யப்பட்டால் நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் பணியாற்றும் முதல் தெற்காசிய நீதிபதி அருண் சுப்பிரமணியன் என்ற சிறப்பை பெறுவார்.
2006 முதல் 2007-ம் ஆண்டு வரை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரூத்பேடர் கின்ஸ்பர்க்கின் சட்ட எழுத்தராக பணியாற்றினார்.
அமெரிக்க மாவட்ட நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள அருண் சுப்பிரமணியனுக்கு தேசிய ஆசிய பசிபிக் அமெரிக்க பார் அசோசியேஷன் வாழ்த்து தெரிவித்துள்ளது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
- மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அரினா சபலென்கா, அமெரிக்காவின் டேனியல் கொலின்சுடன் மோதினார். இதில் சபலென்கா 3-6, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், செக் குடியரசைச் சேர்ந்த பிளிஸ்கோவா, பெலாரசைச் சேர்ந்த விக்டோரியா அசரென்காவுடன் மோதினார். இதில் பிளிஸ்கோவா அபாரமாக விளையாடி 7-5, 6-7, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டார்.
- எம்மி விருது பெறும் 2-வது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒபாமா தனது 2 ஆடியோவை தொகுத்து வழங்கியதற்காக ஏற்கனவே கிராமி விருதுகளை பெற்றுள்ளார்.
வாஷிங்டன் :
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் இணைந்து 'ஹையர் கிரவுண்ட்' என்கிற பெயரில் இணைய தொடர் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் 'அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்' என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்தது. இதில் உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காக்களின் சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.
மொத்தம் 5 பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த தொடரை ஒபாமாவே தொகுத்து வழங்கியுள்ளார். இந்த தொடர் கடந்த ஏப்ரல் மாதம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்ந நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த தொகுப்பாளருக்கான விருது ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. எம்மி விருது பெறும் 2-வது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிவைட் டி.எய்சன்ஹோவர் கடந்த 1956-ம் ஆண்டு சிறப்பு எம்மி விருதை பெற்றார். ஒபாமா தனது 2 ஆடியோவை தொகுத்து வழங்கியதற்காக ஏற்கனவே கிராமி விருதுகளை பெற்றுள்ளார். மிச்செல்லும், தனது ஆடியோ புத்தகத்தை வாசித்ததற்காக கடந்த 2020-ல் கிராமி விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் பெரேட்டினி வெற்றி பெற்றார்.
- போகினோவை வீழ்த்திய பெரேட்டினி காலிறுதிக்குள் நுழைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி, ஸ்பெயினின் அலெஜாண்டிரியோ டேவிடோவிச் போகினோ ஆகியோர் மோதினர்.
முதல் செட்டில் தோல்வி அடைந்த பெரேட்டினி அடுத்த 2 செட்களை தனதாக்கினார். நான்காவது செட்டை மீண்டும் போகினோ கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை பெரேட்டினி வென்றார்.
இறுதியில், 3-6, 7-6, 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் போகினோவை வென்ற பெரெட்டினி காலிறுதிக்கு முன்னேறினார்.
- விமானத்தை திருடிய நபரிடம் பைலட் உரிமம் இல்லை.
- பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததாக வழக்குப் பதிவு.
டுபேலா:
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்தார். விமானத்தில் சுற்றியபடி இருந்த அந்த 29 வயது இளைஞருடன் டுபேலா நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அந்த நபர் விமானத்தை டுபெலோவிற்கு வடகிழக்கே 60 மைல் தொலைவில் உள்ள ஆஷ்லாந்து வயல் வெளியில் தரையிறக்கினார். விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். போலீஸ் காவலில் வைக்கப்பட்ட அந்த நபர் கோரி பேட்டர்சன் என அடையாளம் காணப்பட்டார். அவரிடம் பைலட் உரிமம் இல்லை என்பதும், 10 ஆண்டுகளாக டுபெலோ நகர விமான நிலையத்தில் அவர் லைன்மேனாக இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
விமானங்களுக்கு எரிபொருள் நிரம்பும் பணியிலும் ஈடுபட்டு வந்த பேட்டர்சன், 9 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தை திருடி அதை வைத்து மிரட்டல் விடுத்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து திருட்டு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆரம்ப அச்சுறுத்தலுக்குப் பிறகு, அவர் தன்னையோ அல்லது வேறு யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்றும் டுபேலா நகர போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில் மிசிசிப்பி மாகாண ஆளுநர் ரீவ்ஸ் தமது ட்விட்டர் பதிவில் நிலைமை சீரடைந்து விட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
- ராக்கெட்டில் இருந்து எரிபொருள் கசிவதை பொறியாளர்கள் கண்டறிந்தனர்.
- கடந்த 29-ம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது.
வாஷிங்டன்:
மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போதைய நிலவின் சூழல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓரியன் விண்கலத்துடன் ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
கடந்த 29-ம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் இந்த ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ராக்கெட் புறப்படுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது.
பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று இரவு 11.47 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்து இருந்தது. இந்நிலையில் ராக்கெட்டில் இருந்து எரிபொருள் கசிவை நாசா பொறியாளர்கள் கண்டறிந்தனர். அதி குளிர் திரவ ஹைட்ரஜன் உள்ளே செலுத்தப்பட்டதால் ராக்கெட்டின் அடிப்பகுதிக்கு அருகில் கசிவு கண்டறியப்பட்டது.
ராக்கெட்டின் நான்கு முக்கிய எஞ்சின்களில் ஒன்று மிகவும் சூடாக இருப்பதை சென்சார் காட்டியதும் ராக்கெட்டை ஏவும் முயற்சி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ராக்கெட் ஏவும் முயற்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக 2வது முறையாக நாசா அறிவித்துள்ளது.
- அமெரிக்காவின் மிசிசிபியில் வால்மார்ட் அங்காடி செயல்பட்டு வருகிறது.
- வால்மார்ட்டை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தின் டுபேலா நகரில் பிரபல வால்மார்ட் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி ஒருவர் விடுத்த மிரட்டல் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மிரட்டல் விடுத்தபடி விமானத்தில் சுற்றி வரும் 29 வயது இளைஞருடன் டுபேலா நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக வால்மார்ட் அங்காடியில் இருந்து வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
முதல் கட்ட விசாரணையில், விமானத்தில் பறந்தபடி சுற்றி வரும் இளைஞர் விமானத்தை திருடிச்சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து, நிலைமை சீராகும் வரை வால்மார்ட் அங்காடியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- ஆண்டி முர்ரேவை வீழ்த்திய இத்தாலி வீரர் பெரெட்டினி 4-ம் சுற்றுக்குள் நுழைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினி ஆகியோர் மோதினர்.
முதல் 2 செட்களில் தோல்வி அடைந்த ஆண்டி முர்ரே மூன்றாவது செட்டை தனதாக்கினார். நான்காவது செட்டை பெரெட்டினி வென்றார்.
இறுதியில், 6-4, 6-4, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் ஆண்ட் முர்ரேவை வென்ற பெரெட்டினி நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.
- ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
- கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்றிரவு 11.47 மணிக்கு ராக்கெட் அனுப்பப்படுகிறது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, ஆர்டெமிஸ் 1 திட்டத்தை செயல்படுத்த
இந்த திட்டத்தின் முதல்படியாக நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக, ஓரியன் விண்கலத்தை எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 29-ம் தேதி மாலையில் ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனை முயற்சியாக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை அமெரிக்கா இன்று விண்ணில் ஏவுகிறது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்றிரவு 11.47 மணிக்கு ராக்கெட் அனுப்பப்படுகிறது.
ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து ஓரியன் விண்கலத்துடன் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இன்று ஏவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






