என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்கலைக்கழகத்தின் ஹோம்ஸ் ஹால் அருகே பார்சல் ஒன்று வெடித்து சிதறியது.
    • அருங்காட்சியகம் அருகே மர்ம பார்சல் ஒன்று கண்டறியப்பட்டது.

    அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது. பல்கலைக்கழகத்தின் ஹோம்ஸ் ஹால் அருகே பார்சல் ஒன்று வெடித்து சிதறியது.

    இதனால் குண்டு வெடித்ததாக பெரும் பரபரப்பு நிலவியது. வெடி சத்தம் கேட்டு மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். மர்ம பொருள் வெடித்ததில் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார்.

    உடனே பல்கலைக்கழகத்துக்கு எப்.பி.ஐ அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். வெடித்து சிதறிய மர்ம பொருளை ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே அப்பகுதியில் உள்ள அருங்காட்சியகம் அருகே மர்ம பார்சல் ஒன்று கண்டறியப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் உண்மையில் குண்டு வெடித்ததா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்துள்ளது என பில் கேட்ஸ் பாராட்டினார்.
    • பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

    வாஷிங்டன்:

    நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    டிஜிட்டல் பணம் செலுத்துதல், சுகாதாரம், தடுப்பூசி இயக்கம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.

    இந்தியாவில் பல விஷயங்கள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரித்திருப்பது, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதில் முதலீடு செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பில் கேட்ஸ் தெரிவித்தார். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பதில் இந்தியாவின் முயற்சிகளைப் பில் கேட்ஸ் பாராட்டினார்.

    • ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை வருகிற 23-ந் தேதி விண்ணில் ஏவ நாசா முடிவு செய்ய இருந்தது.
    • என்ஜின் எரிபொருள் கசிவுகள் சரி செய்யப்பட்டுள்ள நிலையில் ராக்கெட்டின் நிலைத்தன்மையை சோதிக்க டேங்கிங் ஆபரேசன் நடத்தப்படுகிறது.

    நிலவுக்கு மனிதனை மீண்டும் அனுப்ப அமெரிக்க விண்வெளி கழகமான நாசா திட்டமிட்டு உள்ளது. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்ட்டெமிஸ் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.

    இதன் முதற்கட்டமாக ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட், நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட உள்ளது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகே ஒரியன் விண்கலத்தை பறக்க வைக்க நாசா திட்டமிட்டு உள்ளது.

    ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை கடந்த மாதம் 29-ந் தேதி கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் கடந்த 3-ந் தேதி ராக்கெட்டை ஏவும் பணிகள் நடந்துவந்த நிலையில் எரிபொருள் கசிவு காரணமாக விண்ணில் ஏவுவது தள்ளி வைக்கப்பட்டதாக நாசா தெரிவித்தது.

    இதற்கிடையே ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை வருகிற 23-ந் தேதி விண்ணில் ஏவ நாசா முடிவு செய்ய இருந்தது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ராக்கெட் ஏவுதல் 3-வது முறையாக தாமதமாகி உள்ளது. வருகிற 23-ந் தேதி ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட வாய்ப்பு இல்லை என்றும் 27-ந் தேதியை இலக்காக கொண்டுள்ளோம் என்றும் நாசா அறிவித்துள்ளது.

    70 நிமிடங்களுக்குள் ராக்கெட் ஏவுதல் நடத் தப்பட வேண்டும் என்று நாசா கட்டுப்பாடு விதித்து உள்ளது.

    தற்போது என்ஜின் எரிபொருள் கசிவுகள் சரி செய்யப்பட்டுள்ள நிலையில் ராக்கெட்டின் நிலைத்தன்மையை சோதிக்க டேங்கிங் ஆபரேசன் நடத்தப்படுகிறது.

    • அமெரிக்க ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டம் நடைபெற்றது.
    • இதில் நார்வேயின் காஸ்பர் ரூட்டை ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வீழ்த்தினார்.

    நியூயார்க்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில், கார்லோஸ் 6-4, 2-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • அமெரிக்காவில் இரட்டை கோபுரம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது.
    • இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பயங்கரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதி தகர்த்தனர். மேலும், ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் பென்சில்வேனியாவிலும் கொடூர தாக்குதல் நடத்தினர்.

    இந்நிலையில், இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பென்டகனில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஜோ பைடனும், பென்சில்வேனியாவில் அவரது மனைவியும் கலந்து கொண்டனர்.

    இந்த தாக்குதலின் நினைவாக நியூயார்க்கில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது கணவருடன் அஞ்சலி செலுத்தினார்.

    • 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேர், இறுதி ஆட்டத்தில் ஸ்வியாடெக்கை சந்தித்தார்.
    • இதில் ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன்பட்டம் வென்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான துனிசியாவைச் சேர்ந்த ஒன்ஸ் ஜபேர், போலந்தின் இகா ஸ்வ்யாடெக்கை எதிர்கொண்டார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    • இன்று நடந்த அரையிறுதியில் கார்லோஸ் அல்காரஸ், டியாபோ உடன் மோதினார்.
    • இதில் அல்காரஸ் டியாபோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ உடன் மோதினார்.

    இந்த போட்டியில் 6-7, 6-3, 6-3, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் டியாபோவை வீழ்த்தி வெற்றி பெற்ற கார்லோஸ் அல்காரஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கார்லோஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் மோத உள்ளார்.

    • ஜோ பைடன் லண்டன் புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா வெள்ளை மாளிகை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • ராணி எலிசபெத் இறுதி சடங்கு குறித்து இங்கிலாந்து உறுதியான தகவலை தெரிவித்ததும் ஜோ பைடன் லண்டன் சென்று இறுதி சடங்கில் பங்கேற்க உள்ளார்.

    வாஷிங்டன்:

    இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவு உலக மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இங்கிலாந்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    ராணி எலிசபெத் உடல் பால்மொரஸ் பண்ணை வீட்டில் இருந்து பக்கிம்காம் அரண்மனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. 10 நாட்களுக்குபிறகு அவரது இறுதி சடங்குகள் நடைபெறுகிறது. வருகிற 19-ந்தேதி வெஸ்ட் மின்ஸ்ட் அபே தேவாலய கல்லறையில் ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    இறுதி சடங்கில் பல உலக தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்த இறுதி சடங்கில் பங்கேற்க போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவரிடம் நிருபர்கள் கேட்ட போது, இறுதி சடங்கில் நான் பங்கேற்பேன். நான் இன்னும் அரசர் சார்லசிடம் பேசவில்லை என்று தெரிவித்தார்.

    ஜோ பைடன் லண்டன் புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அமெரிக்கா வெள்ளை மாளிகை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ராணி எலிசபெத் இறுதி சடங்கு குறித்து இங்கிலாந்து உறுதியான தகவலை தெரிவித்ததும் ஜோ பைடன் லண்டன் சென்று இறுதி சடங்கில் பங்கேற்க உள்ளார்.

    • அரையிறுதி ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், ரஷிய வீரரை எதிர்கொண்டார்.
    • இதில் ரூட் 7-6, 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.

    இதில், நார்வேயின் காஸ்பர் ரூட், ரஷிய வீரர் கரென் கச்சனோவுடன் மோதினார். இந்த போட்டியில் முதல் இரு செட்களை ரூட் கைப்பற்றினார்.

    மூன்றாவது செட்டை கச்சனோவ் வென்றார். நான்காவது சுற்றை ரூட் மீண்டும் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், காஸ்பர் ரூட் 7-6, 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் கச்சனோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • 5-ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபேர், அரையிறுதி ஆட்டத்தில் கார்சியாவை சந்தித்தார்.
    • இதில் ஜபேர் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அமெரிக்க ஓபனில் இறுதிக்கு நுழைந்தார்.

    நியூயார்க்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 5-ம் நிலை வீராங்கனையான துனிசியாவைச் சேர்ந்த ஒன்ஸ் ஜபேர், பிரான்சின் கரோலின் கார்சியாவை எதிர்கொண்டார்.

    இதில் ஜபேர் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

    • காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் டியாபோ, ரஷியாவின் ரூப்லெவ் உடன் மோதினார்.
    • இதில் டியாபோ 7-6 (7-3), 7-6 (7-0), 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.

    இதில், ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்கியோஸ், ரஷிய வீரர் கரென் கச்சனோவுடன் மோதினார். இந்த போட்டியில் கச்சனோவ், 7-5, 4-6, 7-5, 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் கிர்கியோசை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோ, ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் உடன் மோதினார். இதில் டியாபோ 7-6 (7-3), 7-6 (7-0), 6-4 என்ற செட் கணக்கில் ரூப்லெவ்வை வீழ்த்தி வெற்று பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு காலிறுதியில், ஸ்பெயினின் அல்காரஸ் கார்பியா, இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார். இதில் கார்பியா 6-3, 6-7, 6-7, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதியில் நுழைந்தார்.

    மேலும் ஒரு காலிறுதியில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டியோ பெரெட்டினி, நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் மோதினர். இதில் பெரெட்டினியை 6-1, 6-4, 7-6 என்ற நேர் செட்களில் வென்று ரூட் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • பிரதமர் மோடியுடனும், இந்தியாவிடமும் எனக்கு நல்ல உறவு இருந்தது என முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
    • நானும் பிரதமர் மோடியும் நல்ல நண்பர்களாக இருந்தோம் என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவுக்கு என்னை விட சிறந்த நண்பன் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். பிரதமர் மோடியுடனும், இந்தியாவிடமும் எனக்கு நல்ல உறவு இருந்தது. நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம்.

    பிரதமர் மோடி மிகச்சிறந்த நபர். அவர் சிறப்பாக பணிகளை செய்து வருகிறார். அவருக்கு கிடைத்திருக்கும் பொறுப்பு எளிதானது கிடையாது. ஒருவொருக்கொருவர் நீண்ட காலமாக அறிந்து இருக்கிறோம்.

    நான் மீண்டும் அதிபர் பதவிக்கு வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். தேர்தல்களிலும் நான் முன்னிலை வகிக்கிறேன். விரைவில் இது குறித்து நான் முடிவு எடுப்பேன் என தெரிவித்தார்.

    2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவாரா என்ற விவாதங்கள் எழுந்துவரும் சூழலில், அவரது பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ×