என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாசா ராக்கெட்"

    • இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றுள்ளார்.
    • சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது.

    இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றுள்ளார். இவருடன் 3 விண்வெளி வீரர்கள் சென்றுள்ளனர்.

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஆக்சியம் 4 திட்டம் நேற்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் நேற்று விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

    புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    • ராக்கெட்டில் இருந்து எரிபொருள் கசிவதை பொறியாளர்கள் கண்டறிந்தனர்.
    • கடந்த 29-ம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது.

    வாஷிங்டன்:

    மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போதைய நிலவின் சூழல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓரியன் விண்கலத்துடன் ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

    கடந்த 29-ம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் இந்த ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ராக்கெட் புறப்படுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது.

    பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று இரவு 11.47 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்து இருந்தது. இந்நிலையில் ராக்கெட்டில் இருந்து எரிபொருள் கசிவை நாசா பொறியாளர்கள் கண்டறிந்தனர். அதி குளிர் திரவ ஹைட்ரஜன் உள்ளே செலுத்தப்பட்டதால் ராக்கெட்டின் அடிப்பகுதிக்கு அருகில் கசிவு கண்டறியப்பட்டது.

    ராக்கெட்டின் நான்கு முக்கிய எஞ்சின்களில் ஒன்று மிகவும் சூடாக இருப்பதை சென்சார் காட்டியதும் ராக்கெட்டை ஏவும் முயற்சி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ராக்கெட் ஏவும் முயற்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக 2வது முறையாக நாசா அறிவித்துள்ளது.

    ×