என் மலர்
அமெரிக்கா
- சிறையில் பெண் கைதிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
- கலவரம் பற்றி அறிந்ததும் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன்பு குவிந்தனர்.
டெகுசிகல்பா:
மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பா அருகே உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் பெண் கைதிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இரண்டு குழுக்களாக பிரிந்து கைதிகள் மோதிக் கொண்டதில் கலவரம் வெடித்தது. சிறைக்குள் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர். மேலும் பலர் மீது தீ வைத்து எரித்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கைதிகள் ஆவேசத்துடன் மோதிக் கொண்டதால் உடனடியாக கட்டுக்குள் வரவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர். இதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர். மற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டனர். ஏராளமான கைதிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
கலவரம் பற்றி அறிந்ததும் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன்பு குவிந்தனர்.
இது தொடர்பாக ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோ கூறும்போது, "சிறையில் உள்ள மாரா கும்பல், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிந்தே இந்த கலவரத்தை திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர். இதில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
பெண்கள் சிறையில் மாரா கும்பலுக்கும் பாரியோ 18 கும்பலுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. அது கலவரமாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- எந்த நாட்டிலும் அந்த நாட்டின் சட்டத்தை பின்பற்றுவது சிறந்தது
- சட்டத்திற்கு உட்பட்டு கருத்துரிமை தகவலை கொண்டு சேர்க்க சிறப்பாக செயல்படுவோம்
இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது அரசுக்கு எதிராகவும், விவசாய போராட்டத்தை ஆதரித்தும் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜேக் டார்சி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு மத்திய அமைச்சர் பதிலடியும் கொடித்திருந்தார்.
அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, நியூயார்க்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமெரிக்க பிரமுகர்களை சந்தித்தார். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் அதில் ஒருவர்.
தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். மோடியை சந்தித்த பின், டுவிட்டரின் முன்னாள் சிஇஓ-வின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு எலான் மஸ்க் கூறியதாவது:-
எந்த நாட்டிலும் அந்த நாட்டின் சட்டத்தை பின்பற்றுவது நமக்கு சிறந்தது. அதைத்தாண்டி செய்வது இயலாத காரியம். சட்டத்திற்கு உட்பட்டு கருத்துரிமை தகவலை கொண்டு செல்ல சிறப்பாக செயல்படுவோம் என்றார்.
மேலும், ''டெஸ்லா இந்தியா சந்தைக்கு வர வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ''அடுத்த ஆண்டு இந்தியா செல்ல இருக்கிறேன். இந்தியாவில் டெஸ்லா விற்பனைக்கு வரும் என நம்புகிறேன். பிரதமர் மோடியின் ஆதரவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். சில விசயங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை''
இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்தார்.
- பிரதமர் மோடி நியூயார்க்கில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ எலான் மஸ்கை சந்தித்து பேசினார்.
- பிரதமர் மோடி இந்தியா மீது மிகவும் அக்கரை கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று இரவு நியூயார்க் சென்ற பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து நியூயார்க் அரண்மனைக்கு சென்ற பிரதமர் மோடி முக்கிய நபர்களை சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடி நியூயார்க்கில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ எலான் மஸ்கை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எலான் மஸ்க் கூறியதாவது:-
பிரதமர் மோடி இந்தியா மீது மிகவும் அக்கரை கொண்டுள்ளார். தொடர்ந்து முதலீடுகளை கேட்டு வருகிறார். நான் மோடியின் ரசிகன். அவர் உண்மையில் இந்தியாவிற்கு சரியானதைச் செய்ய விரும்புகிறார். அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார். நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார். மேலும் வெளிப்படையாக, அதே நேரத்தில், அது இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்.
பிரதமருடன் இது ஒரு அற்புதமான சந்திப்பு. நான் அவரை மிகவும் விரும்புகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் எங்கள் தொழிற்சாலைக்கு வருகை தந்தார். எனவே, நாங்கள் ஒருவரையொருவர் சிறிது காலமாக அறிந்திருக்கிறோம்.
அடுத்த ஆண்டில் இந்தியா வர திட்டமிட்டுள்ளேன். ஸ்டார் லிங்க் இணைய சேவையை இந்தியாவிலும் கொண்டு வர விரும்புகிறேன். இது இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி சென்றடைய உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புவதற்கு முன் அவர் எகிப்து நாட்டிற்கும் செல்கிறார்.
- பிரதமர் மோடி ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா தின விழாவில் இன்று கலந்து கொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை அமெரிக்காவிற்கு விமானத்தில் புறப்பட்டார்.
மோடி அமெரிக்காவில் 3-நாள் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார்.
இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புவதற்கு முன் அவர் எகிப்து நாட்டிற்கும் செல்கிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் இறங்கிய பிரதமர் மோடிக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சர்வதேச யோகா தினமான இன்று, பிரதமர் மோடி ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா தின விழாவில் கலந்து கொள்கிறார்.
- காயமடைந்த 6 பேரில் ஒரு சிறுவன் குற்றவாளியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- வன்முறைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மில்வாக்கீ மேயர் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் ஜூன் 19ம் தேதியை ஜூன்டீன்த் (Juneteenth) என்ற பெயருடன் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட நாளாக கொண்டாடி வருகின்றனர். ஜோ பைடன் அரசாங்கம், 2021ம் வருடம் முதல் அமெரிக்காவில் உள்ள தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாக இதை கொண்டாட ஒப்புதல் வழங்கியதிலிருந்து, இது நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் இளைஞர்கள் ஆங்காங்கே கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.
அவ்வகையில் நேற்று நடைபெற்ற ஜூன்டீன் கொண்டாட்டத்தின் நிறைவில் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. இதில், சிறுவர், சிறுமிகள் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு மாலை 04:20 மணியளவில் மில்வாக்கி நகரில் கிரேட்டர் பிலடெல்பியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்ததாக நேரில் பார்த்தவர்களும், நேரில் படம் பிடித்த ஒருவரும் உறுதிப்படுத்தினர்.
இது பற்றி மில்வாக்கி காவல்துறை தலைமை அதிகாரி ஜெஃபரி நார்மன் கூறியிருப்பதாவது:
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 6 பேரில் ஒரு சிறுவன் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அவன் குற்றவாளியாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவனிடம் விசாரணை நடத்தப்படுகிறது. துப்பாக்கிச் சூடுக்கான காரணம் தெரியவில்லை. உயிருக்கு ஆபத்தான அளவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 8 வருடங்களாக இந்த நிகழ்ச்சி எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் நடைபெற்று வந்தது. மில்வாக்கீ நகரின் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இந்த வன்முறை ஒழிக்கப்பட வேண்டும். பெற்றோர், பாதுகாவலர்கள், பெரியவர்கள், அனைவரும் கைத்துப்பாக்கி, அபாயகரமான ஆயுதங்கள் ஆகியவற்றை குழந்தைகளின் கைகளுக்கு கிடைக்காமல் பார்த்து கொள்வதற்கு ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜூன்டீன்த் கொண்டாட்டத்தில் நடைபெற்ற வன்முறைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மில்வாக்கீ மேயர் கவாலியர் ஜான்சன் கூறியிருக்கிறார்.
துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் எடுக்கப்படட வீடியோ பேஸ்புக்கில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இரண்டு இளைஞர்கள் நடைபாதையில் சிகிச்சை பெறும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
- பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
- மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் பெற போட்டா போட்டி நடக்கிறது.
வாஷிங்டன் :
பிரதமர் மோடி, 4 நாட்கள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா புறப்படுகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோரது அழைப்பின் பேரில் அவர் செல்கிறார்.
நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தையொட்டி, நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடக்கும் யோகா கொண்டாட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். மற்றவர்களுடன் சேர்ந்து யோகா செய்கிறார்.
22-ந் தேதி, அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரை கவுரவிக்கும் வகையில், ஜோ பைடனும், ஜில் பைடனும் விருந்து அளிக்கிறார்கள்.
ஜோ பைடனுடன் இருதரப்பு உறவுகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதே நாளில், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 23-ந் தேதி, வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினரிடையே மோடி பேசுகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடி வருகையை எதிர்பார்த்து, அமெரிக்காவில் வாழ்த்து கோஷங்கள் எழும்ப தொடங்கி விட்டன. தலைநகர் வாஷிங்டனிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் நூற்றுக்கணக்கான அமெரிக்க இந்தியர்கள், வாஷிங்டனில் உள்ள தேசிய நினைவுச்சின்னம் அருகே குவிந்தனர்.
'மோடி மோடி' என்றும், அமெரிக்க-இந்திய நட்புறவை வலியுறுத்தியும் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். கையில் இந்திய தேசிய கொடிகளையும், மோடி உருவப்படம் பொறித்த பதாகைகளையும் பிடித்திருந்தனர்.
ஆபிரகாம் லிங்கன் நினைவிடம் நோக்கி ஆட்டம் பாட்டத்துடன் பேரணியாக சென்றனர். அங்கு உற்சாகமாக ஆடிப்பாடினர். இந்தியர்களின் ஒற்றுமையை தெரிவிக்கவும், பிரதமர் மோடியை வரவேற்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.
இதுபோல், ஹூஸ்டன் நகரில், புகழ்பெற்ற சுகர்லேண்ட் நினைவு பூங்காவில் ஏராளமான அமெரிக்க இந்தியர்கள், தேசிய கொடியுடன் திரண்டனர். பாஸ்டன், சிகாகோ, அட்லாண்டா, மியாமி, தம்பா, டல்லாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், சாக்ரமென்டோ, சான் பிரான்சிஸ்கோ, கொலம்பஸ், செயின்ட் லூயிஸ் போன்ற 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் அமெரிக்க இந்தியர்கள் ஊர்லவம் சென்றனர்.
நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்திலும், சான் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலத்திலும் இதேபோன்ற ஆர்ப்பரிப்புடன் இந்தியர்கள் குவிந்தனர்.
இதுபோல், பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளை காண்பதற்கான டிக்கெட்டுகளை பெற அமெரிக்க இந்தியர்கள் முட்டி மோதுகிறார்கள். 22-ந் தேதி, வெள்ளை மாளிகையில் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை வளாகத்தில் நுழைய வாழ்நாளில் ஒருமுறையாக கிடைத்துள்ள வாய்ப்பை அனுபவிக்கும் வகையில், அதற்கான டிக்கெட் பெற இந்தியர்களிடையே போட்டா போட்டி நடக்கிறது.
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் மோடி உரையாற்றுவதை காணவும் டிக்கெட் பெற போராடி வருகிறார்கள். செனட் உறுப்பினர்களும், எம்.பி.க்களும் தலா ஒரு டிக்கெட்டை மற்றவருக்கு அளிக்கலாம். அந்த டிக்கெட்டை யாருக்கு தருவது என்று முடிவெடுக்க முடியாமல் அவர்கள் திணறி வருகிறார்கள்.
வாஷிங்டனில் ரொனால்டு ரீகன் மையத்தில் அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே மோடி பேசும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அந்த டிக்கெட்டுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது.
பிரதமருக்கு ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் எந்தெந்த பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்று இதுவரை அறிவிக்கவில்லை. அந்த பட்டியலை ஜில் பைடன் அலுவலகம் வெளியிடவில்லை. இருப்பினும், சுமார் 400 பேர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.
அமெரிக்கவாழ் இந்திய எம்.பி.க்கள் அமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால், ரோ கன்னா, ஸ்ரீ தானேடர் ஆகியோருக்கு விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. முன்னணி அமெரிக்க இந்திய தொழில் அதிபர்கள் சத்யா நாதெள்ளா, சுந்தர் பிச்சை, ராஜ் சுப்பிரமணியம், ஜோ பைடன் நிர்வாகத்தில் பணியாற்றும் இந்தியர்களான நீரா தாண்டன், விவேக் மூர்த்தி, ராகுல் குப்தா ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி வருகையால் அமெரிக்காவில் திருவிழா போன்ற உற்சாகம் களைகட்டுகிறது. இதுகுறித்து ஹூஸ்டனில் உள்ள இந்திய துணை தூதர் அசீம் மகாஜன் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க வருகை குறித்து அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. எம்.பி.க்கள், பெரும் தொழில் அதிபர்கள், இந்திய அமைப்புகள் ஆகியோரிடம் இருந்து தினந்தோறும் எங்களுக்கு வாழ்த்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறியதாவது:-
மோடி நிகழ்ச்சிகளை காண நியூயார்க் மற்றும் வாஷிங்டனுக்கு பறக்க இந்தியர்கள் தயாராகி வருகிறார்கள். 20 நகரங்களில் நடந்த பேரணியும், டிக்கெட்டுகளை பெற நிலவும் ஆர்வமும் அமெரிக்காவில் மோடியின் பிரபலத்தை காட்டுகிறது.
அவர் பிரதமராக பதவி ஏற்ற 9 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த ஆர்வம் குறையவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கூட்டத்தில் இருந்தவர் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்
- இதன்காரணமாக 2-வது நாள் இசைவிழா ரத்து செய்யப்பட்டது
வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் என்ற இடத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் திறந்தவெளி கலையரங்கம் உள்ளது. இங்கு இரண்டு நாட்கள் கொண்ட இசைவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
அதன்படி அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு முதல்நாள் இசைவிழா நடைபெற்று கொண்டிருக்கும்போது, அரங்கத்திற்கு வெளியே உள்ள மைதானத்தில் பலர் கூடியிருந்தனர்.
போலீசார் பாதுகாப்புக்கு நின்றிருந்த போதிலும், ஒரு நபர் துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியபின், அந்த நபர் கூட்டத்தை பயன்படுத்தி தப்பி ஓட முயன்றார்.
ஆனால், போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் காயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற போதிலும் இசைவிழா தொடர்ந்து நடைபெற்றது. மைதானத்தில் இருப்பவர்கள், அந்த இடத்தைவிட்டு வெளியேறுமாறு அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன்பின் எந்த அச்சுறுத்தலும் இல்லை என விழா ஒருங்கிணைப்காளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை இசைவிழா ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
- பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
- அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டு அமர்வில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த உள்ளார்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 24-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு ஜூன் 22-ல் 7,000 இந்திய அமெரிக்கர்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அமெரிக்க முதல் பெண்மணியும் அவர் மனைவியுமான ஜில் பைடன் முன்னிலையில் வழங்கப்படும் வரவேற்பை ஏற்கிறார்.
மேலும், அமெரிக்க பாராளுமன்ற இரு சபைகளின் (பிரதிநிதிகளின் சபை மற்றும் செனட் சபை) கூட்டு அமர்வில் உரை நிகழ்த்தவும் உள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை தாங்கள் மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தி தொடர்புக்கான மேற்பார்வையாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க கொடியுடன், இந்திய கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- போர் நீடித்தால், சித்ரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலும் பல அறிக்கைகள் வெளிவரலாம்.
- சித்ரவதை செய்த நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நியூயார்க்:
ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது 2022ம் வருடம் பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கையை தொடங்கி முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. ரஷியாவுக்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் போரில் கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் போர்க் கைதிகளை ரஷிய படைகள் சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயல் ரஷிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலாக இருக்கலாம் என ஐ.நா. சபை கூறியுள்ளது.
இதுபற்றி ஐ.நா. சபையின் அறிக்கையாளரான அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் கூறியிருப்பதாவது:
உக்ரைனில் உள்ள ரஷியப் படைகள், உக்ரைன் குடிமக்கள் மற்றும் ராணுவ போர்க்கைதிகளை தொடர்ச்சியாக, வேண்டுமென்றே உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக சில அறிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் மூலம் அறிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சித்ரவதை நடவடிக்கைகளில் மின்சார ஷாக் கொடுத்தல், முகத்தை மூடி தாக்குதல் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் ஆகியவை அடங்கும்.
இந்த குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டால், அவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சித்ரவதையின் ஒரு மாதிரியாகவும் இருக்கலாம் என தோன்றுகிறது. இந்த சித்ரவதைகளை பார்க்கும்போது, உயர் அதிகாரிகளிடமிருந்து நேரடி அங்கீகாரம் பெற்று, வேண்டுமென்றே கொள்கை ரீதியாக செய்ததுபோல் தெரிகிறது.
சித்ரவதை ஒரு போர்க்குற்றம் மட்டுமின்றி இந்த நடைமுறை மனிதகுலத்திற்கே எதிரான குற்றமாகும். உயர்ந்த இடத்திலிருந்து வந்த உத்தரவு அல்லது அரசின் கொள்கை வழிகாட்டுதலுக்கு கீழ்ப்படிந்து கைதிகளை சித்ரவதை செய்வதை நியாயப்படுத்த முடியாது. சித்ரவதை செய்த நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுபவர்கள், உக்ரைனுக்குள் ரஷியப் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள தங்குமிடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உள் உறுப்புகள் சேதம் அடைந்துள்ளன. எலும்பு முறிவுகள், பக்கவாதம் மற்றும் நாட்பட்ட நோய்களின் தாக்கம் காணப்படுகிறது. சிலர் பிரமை பிடித்தவர்கள் போன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
போர் இன்னும் நீண்ட காலம் நீடித்தால், சித்ரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலும் பல அறிக்கைகள் வெளிவரலாம்.
பொதுமக்கள் மற்றும் போர்க்கைதிகள் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்படுவதையும் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஐ.நா. மனித உரிமை நிபுணர்களுடன் இணைந்து ரஷியாவிற்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அதில் தங்கள் கவலைகளை தெரிவித்திருப்பதாகவும் அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.
- தொடர்ந்து பெய்த மழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- கொலராடா, அர்சான் சஸ், புளோரிடா உள்ளிட்ட பகுதிகள் சூறாவளி காற்றுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டன.
டெக்சாஸ்:
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கடுமையான சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தது. கட்டிடங்களின் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கியது. ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தது.
தொடர்ந்து பெய்த மழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கொலராடா, அர்சான் சஸ், புளோரிடா உள்ளிட்ட பகுதிகள் இந்த சூறாவளி காற்றுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டன. ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் பலத்த சேதம் அடைந்தது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது. சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 3 பேர் பலியாகி விட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகள் அங்கு முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
- சீனாவைச் சேர்ந்த யுஷெங் டு 3.47 வினாடிகளில் தீர்வு கண்டதே முந்தைய சாதனையாக இருந்தது.
- கிட்டத்தட்ட இந்த புதிர் சம்பந்தமான அனைத்து சாதனைகளும் மேக்ஸ் வசமே உள்ளது.
ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டிடக்கலை பேராசிரியர் எர்னோ ரூபிக் என்பவர் 1974ம் வருடம், "மேஜிக் கியூப்" என்று அழைக்கப்படும் ஒரு புதிர் விளையாட்டை கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் பிரபலமான, மூளைக்கு சவால் விடும் ஒரு விளையாட்டாக பார்க்கப்படுகிறது. பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய கன சதுர கட்டங்களை ஒரு சேர ஒழுங்குபடுத்துவதே இந்த ரூபிக் கியூப் விளையாட்டு. மாறி மாறி உள்ள கனசதுர கட்டங்களை வேகமாக ஒழுங்குபடுத்துவதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, அனைத்து வயதினரும் சாதனைகளை படைத்துவருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 11ம் தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 3x3x3 ரூபிக்ஸ் கியூப் புதிருக்கு மிக வேகமாக தீர்வு கண்டு, "ஸ்பீட்கியூபிங் லெஜண்ட்" என்றழைக்கப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த மேக்ஸ் பார்க் (வயது 21) உலக சாதனை புரிந்தார்.
இந்த வகை ரூபிக்ஸ் கியூபை சீனாவைச் சேர்ந்த யுஷெங் டு என்பவர் கடந்த 2018ம் ஆண்டில் 3.47 வினாடிகளில் தீர்வு கண்டதே உலக சாதனையாக இருந்தது. மேக்ஸ் 3.63 வினாடிகளில் தீர்வு கண்டு இரண்டாம் இடத்தில் இருந்தார். தற்போது தொடர் முயற்சிகளுக்குப் பிறகு மேக்ஸ் 3.13 வினாடிகளில் புதிருக்கு தீர்வு கண்டு முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.
அவர் உலக சாதனையை முறியடித்த நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. அதில் அவரது சக கியூப் தோழர்கள் அவரை உற்சாகப்படுத்துவதைக் காணலாம்.
ஸ்பீட்கியூபிங் போட்டிகளில் மேக்ஸ் பல சாதனைகளை படைத்துள்ளார். கிட்டத்தட்ட இந்த புதிர் சம்பந்தமான அனைத்து சாதனைகளும் அவர் வசமே உள்ளது எனலாம்.
கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலின்படி 4x4x4 கியூப், 5x5x5 கியூப், 6x6x6 கியூப் மற்றும் 7x7x7 கியூப் ஆகியவற்றிற்கான ஒற்றை-தீர்வு மற்றும் சராசரி-தீர்வு உலக சாதனைகளை மேக்ஸ் படைத்திருக்கிறார்.
3x3x3 கியூப் புதிருக்கான சராசரி சாதனையை போலந்து நாட்டின் டைமன் கோலாசின்ஸ்கியுடன் இணைந்து தக்க வைத்திருந்தார். இதற்கு இவர் எடுத்து கொண்ட நேரம் 4.86 வினாடிகள். இந்த சாதனையை 4.69 வினாடிகளில் சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் யிஹெங் வாங் 2023 ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி முறியடித்தார்.
ஆட்டிஸம் எனப்படும் ஒரு விதமான் மன இறுக்க நோயால் பாதிக்கபட்ட மேக்ஸிற்கு, இந்த ஸ்பீட்கியூபிங் ஒரு நல்ல சிகிச்சை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். "ஒரு காலத்தில் மேக்ஸால் தண்ணீர் பாட்டில்களை கூட திறக்க முடியவில்லை. ஆனால் அவர் ரூபிக்ஸ் கியூப்களை தீர்ப்பதில் ஆர்வம் காட்டினார்," என்றும் அவர்கள் கூறினர்.
- 2018 முதல் 2022 வரை உடலுறுப்புகள் திருடப்பட்டுள்ளது
- பிணவறை மேலாளர் ஒத்துழைப்புடன் இந்த மோசடி நடந்துள்ளது
மனித உடலுறுப்புகள் திருடி விற்பனை: ஹார்வர்ட் மருத்துவ கல்லூரி பிணவறை மேலாளர் கைதுஅமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு மருத்துவ கல்லூரியில், பிணவறை மேலாளர் ஒத்துழைப்புடன் நீண்ட காலமாக நடந்து வந்திருக்கும் மனித உடலுறுப்புகள் திருட்டு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்வர்டு மருத்துவ கல்லூரிக்கு தானமாக கொடுக்கப்படும் இறந்தவர்களின் உடல்களிலிருந்து உடலுறுப்புகளை திருடி விற்றதாக 5 பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்றும் அதில் ஒருவர் அந்த கல்லூரி பிணவறை மேலாளர் என்றும் அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பென்சில்வேனியாவின் மத்திய மாவட்டத்திற்கான அமெரிக்க அட்டர்னி அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மே 6-ம் தேதி வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட செட்ரிக் லாட்ஜ் (55), குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களுடன் சேர்ந்து 2018-ம் வருடத்திலிருந்து 2022 வரை உடலுறுப்புகளுக்கான ஒரு கருப்பு சந்தையையே நடத்தி வந்துள்ளார்.
மாசச்சூசெட்ஸ் மாநிலத்தின் போஸ்டனிலுள்ள ஹார்வர்டில் 1995 வேலைக்கு லாட்ஜ் அமர்த்தப்பட்டதாகவும், உடலுறுப்புகளை வாங்க விரும்புபவர்களை பிணவறைக்குள்ளேயே அனுமதித்து உடல்களை பார்வையிட வைத்துள்ளது. பிணவறையில் இருந்து பெற்ற உடலுறுப்புகளை அவர்கள் மறுவிற்பனை செய்து விட்டனர். அர்கன்ஸாஸ் மாவட்டத்தில் இதே விசாரணையில் 6-வதாக ஒரு பெண் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்'' என கூறப்பட்டுள்ளது.
லாட்ஜ் தன் மனைவி டென்னிஸ் (63) உடன் வசித்து வந்த நிலையில், சில உடல் பாகங்களை தன் வீட்டுக்கே கொண்டு சென்று விடுவார் என்றும், அவற்றை வாங்க விரும்பும் சிலருக்கு பாகங்களை தபாலில் அனுப்பிவிடுவார் என தெரிவித்தனர்.
குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் லாட்ஜிற்கும் அவர் மனைவிக்கும் பிரதிநிதிகளாக வாதாட வழக்கறிஞர் உதவி கிடைக்கப்பட்டிருக்கிறதா என தெரியவில்லை. இதுகுறித்து மத்திய புலனாய்வு நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
சதிவேலை மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பொருள் திருட்டு குற்றங்களுக்காக லாட்ஜ் மற்றும் அவர் மனைவியுடன், மாசச்சூசெட்ஸ் மாநிலத்தின் சலேம் பகுதியைச் சேர்ந்த கேத்ரினா மெக்லீன் (44), பென்ஸில்வேனியா மாநிலத்தின் மேற்கு லான் பகுதியைச் சேர்ந்த ஜோஷுவா டேலர் (46), மற்றும் மின்னஸோட்டா மாநிலத்தின் கிழக்கு பெத்தல் பகுதியைச் சேர்ந்த மேத்யூ லம்பி (52) ஆகியோரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாடு முழுவதும் பலருடன் கூட்டாக ஹார்வர்டு மருத்துவ பள்ளியிலிருந்தும், அர்கன்ஸாஸிலுள்ள பிணவறையிலிருந்தும் உடல் உறுப்புகள் வாங்கி விற்பதில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதளங்களின் மூலமாகவும் தொலைபேசி வழியாகவும் லாட்ஜும் அவர் மனைவியும் பிறருக்கு விற்றுள்ளனர்.
இவ்வழக்கிற்காக, நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்திலுள்ள கன்கார்ட் மத்திய நீதிமன்றத்திற்கு முதல்முறையாக வந்த டெனிஸ் லாட்ஜ், கருத்து எதுவும் கூற மறுத்து விட்டார்.
இது குறித்து அமெரிக்க வழக்கறிஞர் ஜெரார்ட் கரம் தெரிவித்துள்ள கருத்து:-
சில குற்றங்கள் நம்மால் புரிந்து கொள்ள முடியாதவை. மனிதர்களின் உடல் பாகங்களை திருடி விற்பது நம்மை மனிதர்களாக்குவது எதுவோ அந்த அடிப்படையையே ஆட்டம் காணச் செய்யும் செயலாகும்.
ஹார்வர்ட் மருத்துவத்துறை டீன் ஜார்ஜ் டேலி, "எங்கள் கல்லூரி வளாகத்தில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றதாக அறிந்து நாங்கள் பெரிதும் அதிர்ந்திருக்கிறோம். எந்தெந்த உடல் நன்கொடையாளர்களின் உடலுறுப்புகள் திருடப்பட்டுள்ளன என கண்டறிய மார்ச் மாதம் இந்த குற்றஞ்சாட்டு எழுந்தவுடன் எங்கள் பதிவுகளில், லாட்ஜ் வளாகத்தில் இருந்த நாட்களையும், தானமளிப்போரின் எஞ்சிய உடல் பாகங்கள் எரியூட்டலுக்காக அனுப்பப்பட்ட நாட்களையும் பற்றிய குறிப்புகளை ஆராய்ந்தோம்" என குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக ஹார்வர்ட் மருத்துவ பள்ளிக்கு தானமாக வழங்கப்படும் உடல்கள், கல்விக்கும், மருத்துவ ஆய்விற்கும் பயன்படுத்தப்டும் என்றும் அவைகளுக்கான தேவை முடிந்ததும், எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் என தெரிகிறது.






