search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prison riot"

    • ஈக்வடார் நாட்டில் சிறை கைதிகள் இடையே கலவரம் ஏற்பட்டது.
    • இந்தக் கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழந்தனர்.

    குவிட்டோ:

    தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது. சிறைச்சாலை வளாகத்திற்குள் கைதிகளுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல்களே பெரும் கலவரமாக உருவெடுத்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதுபோன்ற மோதல்களை தடுக்க சிறைச்சாலைகளில் குழுத் தலைவர்களாக வலம் வரும் நபர்களை வேறு சிறைகளுக்கு மாற்றும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், ஈக்வடாரின் குவாயாகில் நகரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சிறைக்கைதிகள் அதிக அளவில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூக விரோத கும்பல் இருதரப்பாக பிரிந்து இருந்து இந்த சிறையில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். அது எல்லை மீறி அதிகார போட்டியாக உருமாறி மோதல் வெடித்து கலவரமானது.

    கத்தி, கடப்பாரை உள்ளிட்ட கையில் கிடைக்கும் பொருட்களை ஏந்தி ஆக்ரோஷமான முறையில் கைதிகள் இரு கோஷ்டிகளாக பிரிந்து சண்டையிட்டுக் கொண்டனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த கலவரத்தில் 31 சிறை கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் போலீசார் உள்பட நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிலர் தப்பியோடி உள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறையில் பெண் கைதிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
    • கலவரம் பற்றி அறிந்ததும் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன்பு குவிந்தனர்.

    டெகுசிகல்பா:

    மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பா அருகே உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் சிறையில் பெண் கைதிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இரண்டு குழுக்களாக பிரிந்து கைதிகள் மோதிக் கொண்டதில் கலவரம் வெடித்தது. சிறைக்குள் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர். மேலும் பலர் மீது தீ வைத்து எரித்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கைதிகள் ஆவேசத்துடன் மோதிக் கொண்டதால் உடனடியாக கட்டுக்குள் வரவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர். இதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர். மற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டனர். ஏராளமான கைதிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    கலவரம் பற்றி அறிந்ததும் கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன்பு குவிந்தனர்.

    இது தொடர்பாக ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோ கூறும்போது, "சிறையில் உள்ள மாரா கும்பல், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிந்தே இந்த கலவரத்தை திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர். இதில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    பெண்கள் சிறையில் மாரா கும்பலுக்கும் பாரியோ 18 கும்பலுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. அது கலவரமாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    தஜிகிஸ்தான் நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 20 கைதிகள் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #TajikistanPrisonRiot
    துஷான்பே:

    தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த் நகரில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே இன்று திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் கைதிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைதிகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் கைதிகள் கலவரத்தை கைவிடுவதாக இல்லை.



    இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 20 கைதிகள் சுடப்பட்டு பலியாகினர். மேலும் 2 பாதுகாப்பு படையினரும் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    சிறையில் மேலும் கலவரம் பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #TajikistanPrisonRiot
    வெனிசுலா நாட்டின் லாரா மாநிலத்தில் உள்ள சிறைக்குள் இரு கோஷ்டிகளுக்கு இடையில் வெடித்த மோதலில் 11 பேர் உயிரிழந்தனர். #Venezuelaprisonriot

    கரகஸ்:

    வெனிசுலா நாட்டின் லாரா மாநிலத்தில் பெனிக்ஸ் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சிறைச்சாலையில் நேற்று கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கொடுரமாக தாக்கியுள்ளனர். கலவரத்தை தடுக்கும் முயற்சியில் காவலர்கள் ஈடுபட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், இந்த கலவரத்தில் 9 கைதிகள், 2 காவலர்கள் என 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த புதன்கிழமை கரகஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயமடைந்தனர். #Venezuelaprisonriot
    ×