என் மலர்
அமெரிக்கா
- பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருந்து அளித்தார்
- மோடி சைவம் என்பதால் விதவிதமான சைவ உணவுகள் பரிமாறப்பட்டன
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசு முறை பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வெள்ளை மாளிகை சென்ற அவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்- அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்து அளித்தனர்.
அவருக்கான விருந்தில் இடம் பெறும் பிரத்யேக உணவு வகைகள்:-
முதல் பரிமாற்றம்:
உப்பு நீரில் பதப்படுத்தப்பட்ட தினை (marinated millet)
வறுக்கப்பட்ட சோளவிதை சாலட் (grilled corn kernel salad)
அழுத்தப்பட்ட தர்பூசணி (compressed watermelon)
இனிப்பு கலந்த வெண்ணெய்பழ சாஸ் (tangy avocado sauce)
இரண்டாவது பரிமாற்றம்:
ஸ்டஃப்ட் போர்டோபெல்லோ காளான் (stuffed portobello mushroom)
குங்குமப்பூ சேர்க்கப்பட்ட பாலேட்டு ரிஸோட்டோ (creamy saffron-infused risotto)
சுமாக் கலந்த வறுக்கப்பட்ட கடல் பாஸ் (sumac roasted sea bass)
லெமன்-டில் தயிர் சாஸ் (lemon-dill yogurt sauce)
இணை பரிமாற்றங்கள்:
மிருதுவாக்கப்பட்ட தினை கேக் (crisped millet cakes)
கோடைக்கால குளிர்பானம் (summer squashes)
இந்திய மற்றும் அமெரிக்க சமையற்கலைகளின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த உணவு வகைகளை தலைமை சமையல் கலைஞர் நினா கர்டிஸ், வெள்ளை மாளிகை தலைமை சமையல் கலைஞர் க்ரிஸ் கோமெர்ஃபோர்ட், வெள்ளை மாளிகை தலைமை சமையல் கலைஞர் சுஸி மாரிஸன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
முன்னதாக பேசிய அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன், மோடி சைவ உணவு வகைகளை மட்டுமே உண்பவர் எனபதால், தாவரங்களைக் கொண்டு சமைப்பதில் வல்லுனரான நினா கர்டிஸ் அவர்களை வெள்ளை மாளிகை உணவு கலைஞர்களுடன் இணைந்து சிறப்பாக தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், இருப்பினும் மற்ற விருந்தினர்கள் விரும்பினால் உண்பதற்காக மீன் சார்ந்த உணவு வகைகள் விருந்தில் இடம் பெறுகிறது எனவும் தெரிவித்தார்.
- அமெரிக்க பத்திரிக்கையாளரின் ஒரு கேள்வி, இந்திய பத்திரிக்கையாளரின் ஒரு கேள்வி என கேள்விகள் இடம்பெறும்.
- ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இணைந்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதாக வெள்ளை மாளிகை உறுதி செய்திருக்கிறது.
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித்தொடர்பாளரான ஜான் கிர்பி, "தனது சுற்றுப்பயணத்தின் இறுதியில் மோடி ஒரு பத்திரிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. அதை நாங்களும், மோடி அவர்களும் அவசியமானதாக நினைக்கிறோம். இது பெரிய விஷயம். செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க பத்திரிக்கையாளரின் ஒரு கேள்வி, இந்திய பத்திரிக்கையாளரின் ஒரு கேள்வி என அடுத்தடுத்து கேள்விகள் இடம்பெறும். குறைந்த அளவிலான கேள்விகளே இடம்பெறும்" என தெரிவித்தார்.
அமெரிக்காவில், இது போன்ற பத்திரிக்கையாளர் சந்திப்புகளில், இரு நாட்டு அதிபர்களிடமும் கேள்வி கேட்பதற்காக இரு நாட்டு பத்திரிக்கையாளர்களையும் அமெரிக்க அதிகாரிகள் தேர்வு செய்வார்கள். அவர்கள் ஒரு வரையறுக்கப்பட்ட முறையில் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுவார்கள்.
மோடி 2014ம் வருடம் பதவிக்கு வந்ததிலிருந்து இதுவரை ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது நாட்டுக்கு வருமாறு அரசாங்க அழைப்பை அமெரிக்கா தனது நெருக்கமான நாடுகளின் ஒரு சில தலைவர்களுக்கு மட்டுமே விடுக்கும். இந்த அரிய அழைப்பு இப்போது மோடிக்கு கிடைத்து, அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி இன்று மாலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டமர்வில் உரையாற்றவிருக்கிறார்.
- எச்-1பி விசாவை புதுப்பிக்க வெளிநாட்டினருக்கு சிரமம் இருந்து வருகிறது
- புது நடைமுறையில் இந்தியர்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள்
அமெரிக்காவில் ஹெச்-1பி (H1B) எனப்படும் விசாவை புதுப்பிக்க வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்கள், அந்நாட்டை விட்டு வெளியே சென்றுதான் புதுப்பிக்க வேண்டியுள்ளது. 2004-ல் இருந்து இது நடைமுறையில் உள்ளது.
ஹெச்-1பி விசா எனப்படுவது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டு பணியாளர்களை (இந்தியா உட்பட), பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியில் அமர்த்தி கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதியாகும். ஆனால், இது குடியுரிமைக்கான அனுமதி அல்ல.
எனவே ஒவ்வொரு 3 ஆண்டு-கால முடிவிலும் இந்த விசாவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்காக பயனாளர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் புதுப்பிக்கப்பட்ட தேதியை "ஸ்டாம்பிங்" (stamping) செய்து கொள்ள வேண்டும். தற்போதுள்ள நடைமுறையில் இந்த "ஸ்டாம்பிங்" பதிவை அமெரிக்காவிற்குள்ளேயே செய்து கொள்ள அந்நாடு அனுமதிப்பதில்லை.
இதனால் பயனாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு சென்று புதுப்பித்து அதன் பிறகே மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முடிந்தது. இந்த பயணங்களினால் பயனாளர்களுக்கு நேர விரையமும், பொருட்செலவும் ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து அமெரிக்காவிலுள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் குறிப்பாக மென்பொருள் துறையை சேர்ந்தவர்கள் அவ்வப்போது முறையிட்டு வந்தனர்.
அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், விசா புதுப்பிக்கும் முறையில் ஒரு பெரிய மாற்றத்திற்கான அறிவிப்பு விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, இனி இந்தியர்களும், மற்ற வெளிநாட்டவர்களும் அமெரிக்காவிற்குள்ளேயே தங்கள் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற வகையில் ஒரு மாற்றம் கொண்டு வரவிருப்பதாகவும், அதனை குறித்து அறிவிப்பு இந்த வாரம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
எனினும், இத்திட்டம் உடனடியாக நாடு முழுவதும் கொண்டு வரப்படாமல், "பைலட் பிராஜக்ட் முறை" எனப்படும் சிறிய அளவில் முதலில் ஒரு சில பயனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு, அதில் உள்ள குறைகள் கண்டறிந்து சரி செய்யப்பட்டதும், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இந்த செய்தி வெளியாகியுள்ளது.
- வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் வரவேற்று விருந்து அளித்தார்
- ராணுவம், வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று ஜோ பைடனுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இருநாட்டு நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமைய உள்ளது.
இந்த சந்திப்பின்போது பொருளாதாரம், பாதுகாப்பு, தொழில் நுட்ப வளர்ச்சி, இருநாட்டு வணிகம் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார்கள். மேலும் ராணுவம், வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
அமெரிக்க நாட்டின் ஜெனரல் எலக்ட்ரிக் (ஜிஇ) நிறுவனத்துடன் ஜெட் விமான என்ஜின்கள் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நடந்தால் இந்தியாவின் ஆயுதத்துறையில் ஒரு புதிய சகாப்தம் ஏற்படும். இந்த ஒப்பந்தம் இந்தியாவில் எப்.ஏ. 414 ஐ.என்.எஸ் என்ஜின்களை உற்பத்தி செய்ய உதவும்.
இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தேஜாஸ் மார்க்-2 போர் விமானங்களில் இந்த என்ஜின்கள் பொருத்தப்படும்.
இதனால் உள்நாட்டு ஆயுதங்களின் வளர்ச்சி பல தசாப்தங்களை உருவாக்கும். ஜெட் என்ஜின் மிகவும் சிக்கலான எந்திரம். இது 30 ஆயிரம் நிலையான மற்றும் நகரும் பாகங்களைக் கொண்டுள்ளது. இவற்றைத் தயாரிக்க சிறப்பு உலோகங்கள் தேவை.
அதற்கு மேம்பட்ட தேடல் செய்யப்பட வேண்டும். மேலும் துல்லியமும் திறமையும் வார்ப்பு, எந்திரம் தேவை. முதலீடும் அதிகம் தேவை.
விமானம் காற்று, சுரங்கப்பாதைகளில் விரிவாக சோதிக்கப்பட வேண்டும். இந்த சோதனைகள் ஆயிரக்கணக்கான மணிநேரங்களுக்கு நீடிக்க வேண்டும். அப்போதுதான் பயன்பாட்டுக்கு கொண்டவர முடியும் என தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் அவர் 2-வது முறையாக பேச உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமராக மோடி கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறையாக உரையாற்றினார். அதன்பின் தற்போது 2-வது முறையாக அவர் அமெரிக்காவில உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சிங்கப்பூரில் செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
உலகம் முழுவதும் இறைச்சியை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப இறைச்சிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
அதேவேளையில் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே பல்வேறு நாடுகளில் மாட்டு இறைச்சியை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து செயற்கை இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. செயற்கை இறைச்சிக்கு அனுமதி அளிக்கக்கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் இரண்டு நிறுவனங்கள் விண்ணப்பித்தன.
இந்நிலையில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி விற்பனைக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோழி உயிரணுக்களில் இருந்து நேரடியாக வளர்க்கப்படும் இறைச்சியை விற்க அப்சைடு புட்ஸ், குட்மீட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதன்மூலம் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை நுகர்வோருக்கு வழங்க அனுமதிக்கும் 2-வது நாடு அமெரிக்கா ஆகும். ஏற்கனவே சிங்கப்பூரில் செயற்கை கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஈட் ஜஸ்ட் நிறுவனம், சிங்கப்பூ ரில் செற்கை இறைச்சியை விற்கிறது. விலங்குகள் தசையில் இருந்து எடுக்கப்படும் செல்களை வைத்து ஆய்வுக் கூடங்களில் வளர்க்கப்படும் இந்த வகை இறைச்சியானது வளர்ப்பு இறைச்சி என்று வகைப்படுத்தப்படுகிறது.
கோழியின் செல்களை பிரித்தெடுத்து அவற்றுடன் சில சத்துப் பொருள்களை கலந்து ஆய்வகத்தில் செயற்கை இறைச்சி உருவாக்கப்படுகிறது.
இது தொடர்பாக அப்சைடு புட்ஸ் நிறுவன தலைவர் உமா லவேட்டில் கூறும்போது, "அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு ஒப்புதல் அளித்து இருப்பது இறைச்சியை நமது மேஜையில் சேர்க்கும் விதத்தை மாற்றும். இது மிகவும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு மாபெரும் படியாகும். வாழ்க்கையை பாதுகாக்கும் ஒன்று" என்றார்.
- அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேசினார்.
- இருதரப்பு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு பலப்படும் என நம்பிக்கை தெரிந்தது.
கலிபோர்னியா :
கடும் இழுபறிக்கு நடுவே அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தனது சீன பயணத்தின்போது நேரில் சந்தித்து பேசினார். இதன்மூலம் இருதரப்பு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு பலப்படும் என நம்பிக்கை தெரிந்தது. இந்தநிலையில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தனியார் அமைப்பு சார்பில் தேர்தலுக்கான நிதிதிரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களிடையே மேடையில் பேசினார்.
அப்போது தனது உரையின்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வதிகாரி என ஜோ பைடன் குறிப்பிட்டார். நவீன பலூனை அமெரிக்காவுக்குள் அனுப்பி அதன் செயல்பாடுகளை சீனா கண்காணித்ததாக அமெரிக்க ராணுவம் குற்றஞ்சாட்டியது. அதனை ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்தியதாகவும் அது தெரிவித்தது. இதனை மறுத்த சீன அரசு வானிலையை ஆய்வு செய்வதற்காகவே அந்த பலூனை பயன்படுத்தியதாகவும் அது வழிதப்பி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக கூறியது. இந்தநிலையில் "நம் ராணுவத்தை கொண்டு சீனாவின் சதிதிட்டத்தை தகர்த்த விவகாரம் ஜி ஜின்பிங்கை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கும்" மேலும் "சர்வாதிகாரிகளுக்கு இது பெரிய அடிதான்" என்று அவர் ஜின்பிங்கை தாக்கி பேசினார்.
- கடல் சமிக்ஞைகளை கண்டுபிடிக்கும் மிதவைகளும் ஆங்காங்கே போடப்பட்டன.
- 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாக உள்ளது.
வாஷிங்டன் :
கடந்த 1912-ம் ஆண்டு, இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரமாண்ட 'டைட்டானிக்' கப்பல், தனது முதல் பயணத்திலேயே சோகத்தை சந்தித்தது.
வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையில் மோதிய அந்தக் கப்பல், ஜல சமாதி ஆனது. அதில், கப்பலில் பயணித்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
கனடா நாட்டின் நியூபவுண்ட்லாந்து தீவில் இருந்து 595 கி.மீ. தொலைவில், 13 ஆயிரம் அடி ஆழத்தில் அட்லாண்டிக்கின் மடியில் டைட்டானிக் கப்பலின் மிச்சங்கள் கிடக்கின்றன.
'டைட்டானிக்' விபத்து நடந்து நூறாண்டுகள் கடந்த பின்பும் அதுகுறித்த அதீத ஆர்வம் உலக மக்களுக்கு உள்ளது. அதனால்தான், இந்த கப்பல் விபத்து அடிப்படையில் 1997-ல் வெளியான 'டைட்டானிக்' படம், உலகெங்கும் ஓடோ ஓடென்று ஓடி வசூலைக் குவித்தது.
'டைட்டானிக்' மோகத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்கா வாஷிங்டனை சேர்ந்த 'ஓசன்கேட் எக்ஸ்படீசன்ஸ்' என்ற நிறுவனம், டைட்டானிக் மிச்சங்களை காண்பதற்கான ஆழ்கடல் சுற்றுலாவை கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது.
அதற்காக வெறும் 22 அடி நீளமே உள்ள சிறிய நீர்மூழ்கி கலத்தை இந்த நிறுவனம் உருவாக்கியது. உறுதியான டைட்டானியம் மற்றும் கார்பன் இழைகளால் ஆன, 'டைட்டன்' என்ற இந்த நீர்மூழ்கியில், 5 பேர் மட்டுமே பயணிக்க முடியும். டைட்டானிக் கப்பல் மிச்சங்கள் கிடக்கும் பகுதிக்கு ஒரு கப்பலில் அழைத்துச் செல்லப்படுபவர்கள், அங்கிருந்து 'டைட்டன்' நீர்மூழ்கியில் 'டைட்டானிக்' கப்பலை நோக்கி ஆழ்கடல் பயணத்தை மேற்கொள்வார்கள். டைட்டானிக்கை நெருங்கி, நீர்மூழ்கியின் காட்சி வழி மூலம் அதை பார்த்து ரசிப்பார்கள்.
இந்த முறை நீர்மூழ்கியில் 5 கோடீசுவரர்கள் சென்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-
இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபரும், ஆழ்கடல் நீர்மூழ்கு சாகச வீரருமான ஹமிஷ் ஹார்டிங் (வயது 58), பிரான்ஸ் நாட்டு கடற்படை முன்னாள் மாலுமியும், கடலியல் நிபுணருமான பால் ஹென்றி நர்கியோல் (77), 'டைட்டானிக்' ஆழ்கடல் சுற்றுலாவை நடத்தும் ஓஷன்கேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டாக்டன் ரஷ் (61), பாகிஸ்தானின் பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஷசாதா தாவூத் (48), அவருடைய மகன் சுலைமான் தாவூத் (19).
'போலார் பிரின்ஸ்' என்ற கப்பலில் இருந்து, 'டைட்டன்' நீர்மூழ்கி மூலம் இவர்கள் 5 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு கடலுக்குள் இறக்கிவிடப்பட்டனர். மாலைக்குள் இவர்கள் மீண்டும் கப்பலுக்குத் திரும்பிவிட வேண்டும் என்பதுதான் திட்டம்.
ஆனால் நீர்மூழ்கி, ஆழ்கடல் பயணத்தை தொடங்கிய ஒன்றே முக்கால் மணி நேரத்தில், 'போலார் பிரின்ஸ்' கப்பலுடன் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
அதைத் தொடர்ந்து பரபரப்பு பற்றிக் கொண்டது. அமெரிக்கா, கனடாவின் கடலோர காவல் படை கப்பல்கள், விமானங்களுடன், வணிக கப்பல்களும் குறிப்பிட்ட பகுதியை சூழ்ந்து தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கின. கடல் சமிக்ஞைகளை கண்டுபிடிக்கும் மிதவைகளும் ஆங்காங்கே போடப்பட்டன
ஆனால் 'டைட்டன்' நீர்மூழ்கியில் இருந்து எந்த தகவலும் இல்லை. இது கடலுக்குள் இறங்கியபோது, 96 மணி நேரத்துக்கான ஆக்சிஜன் 'சப்ளை'யைத்தான் கொண்டிருந்தது. அது குறைந்துகொண்டே வரும் நிலையில், நேரத்துடன் போட்டி போட்டு நீர்மூழ்கியை கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியில் மீட்புப் படையினர் உள்ளனர். ஆனால், கடலுக்குள் சுமார் 4 கிலோமீட்டர் ஆழத்தில் தேடுதல், மீட்பில் ஈடுபடுவது என்பது எளிதான காரியம் அல்ல. அங்கு கற்பனைக்கு அப்பாற்பட்ட அழுத்தத்துடன், காரிருளும் சூழ்ந்திருக்கும்.
இந்நிலையில் நேற்று ஒரு நல்ல செய்தியாக, கடலுக்கு அடியில் இருந்து சில சப்தங்களை தாங்கள் கண்டு பிடித்துள்ளதாக கனடா மீட்புப்படை விமானம் ஒன்று கூறியுள்ளது. அது, 'டைட்டன்' நீர்மூழ்கியில் இருந்துதான் வருகிறதா என உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் மீட்பு முயற்சியில் இது லேசான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பற்றிக்கொண்டு, அமெரிக்கா, கனடா மீட்புப் படையினர், தேடுதலில் மும்முரமாகியுள்ளனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட 'ஓசன்கேட்' நிறுவனம், போதுமான பாதுகாப்பு பரிசோதனைகளை செய்யாததுதான் விபத்துக்கு காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் கடல் நடவடிக்கைகளுக்கான இயக்குனராக பணிபுரிந்த டேவிட் லோக்ரிட்ஜ், திருப்திகரமான வெள்ளோட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளாமல், அதிக அழுத்தம் உள்ள ஆழ்கடல் பகுதிக்கு ஆட்களை அழைத்துச் செல்வது ஆபத்தாக முடியலாம் என்று கடந்த 2018-ம் ஆண்டே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
இனிமேல், இதுபோன்ற ஆழ்கடல் பயண பாதுகாப்பில் குறிப்பிட்ட நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தும், அமெரிக்க அரசும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் என்பது நிச்சயம்.
ஆனால் இப்போதைக்கு, 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாக உள்ளது.
- வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை வரவேற்றார் ஜோ பைடன்
- இரு தலைவர்களும் கட்டித்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்களை சந்தித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
நேற்று ஐ.நா. தலைமையகத்தில் நடந்த உலக யோகா தின நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று மற்றவர்களுடன் யோகா செய்தார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்றார். ஆண்ட்ரூஸ் விமான நிலையத்தில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. அங்கிருந்து பிரதமர் மோடி காரில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு சென்றார். காரில் இருந்து இறங்கிய அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் கைகுலுக்கி வரவேற்றனர். மோடியை வரவேற்கும் வகையில் இந்திய தேசிய பறவையான மயில் மற்றும் தாமரை மலர்களால் வெள்ளை மாளிகை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் ஜோ பைடன் அளித்த விருந்தில் மோடி கலந்து கொண்டார். இதில் சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர். இளம் நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை ஜோ பைடனும், மோடியும் கண்டு களித்தனர்.
இதைத்தொடர்ந்து ஜோ பைடனும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினார்கள். இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் வெள்ளை மாளிகையில் எனக்கு விருந்து அளித்த அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் ஆகியோருக்கு நன்றி. இருவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினேன் என்று தெரிவித்து உள்ளார்.
வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடி சந்தன கட்டையால் செய்யப்பட்ட கலைவண்ணம் மிக்க பெட்டியை ஜோ பைடனுக்கு பரிசாக வழங்கினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தலைசிறந்த கைவினைஞரின் கைவினைப்பொருளால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக சந்தனப் பெட்டியாகும். மைசூரில் இருந்து பெறப்பட்ட சந்தனமரத்தால் உருவாக்கப்பட்ட அந்த பெட்டியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வடிவங்கள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
அந்த பெட்டியில் வெள்ளியினால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மற்றும் எண்ணெய் விளக்கு போன்றவை இடம் பிடித்திருந்தன. கொல்கத்தாவில் உள்ள ஐந்தாம் தலைமுறை வெள்ளித் தொழிலாளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த கைவினைஞர்களால் கைவினைப்பொருளாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 95 சதவீதம் தூய்மையான வெள்ளி நாணயமும் இடம் பெற்றிருந்தது.
ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு 7.5 காரட் க்ரீன் டைமண்ட்-ஐ பரிசாக வழங்கினார்.
அதேபோல் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பழமையான கேமரா ஒன்றை பரிசளித்தார். அதோடு வனவிலங்கு புகைப்பட புத்தகம், கைகளால் உருவாக்கப்பட்ட பழங்காலத்து அமெரிக்க புத்தக பெட்டியையும் வழங்கினார்.
- இரு நாடுகளின் பொருளாதாரம் வலுவாக இருக்க, இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்கால இளைஞர்களுக்காக முதலீடு செய்ய வேண்டும்.
- இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை நிலையான மற்றும் உள்ளடக்கிய உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக இருக்கும்.
அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் நேற்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். மேலும், இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து, பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டனுக்கு புறப்பட்டார். பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ரூஸ் என்ற விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு மற்றும் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரது வருகையை குறிக்கும் வகையில் இரு நாட்டு தேசிய கீதங்கள் விமானப்படை தளத்தில் இசைக்கப்பட்டன. அங்கு பிரதமர் மோடி இரண்டு சிறு குழந்தைகளிடமிருந்து ஒரு பூங்கொத்தை பெற்றார்.
இதைதொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனை பிரதமர் மோடி சந்தித்தார். இருவரும் வர்ஜீனியாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளைக்குச் சென்றனர். அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'எதிர்காலத்திற்கான திறன்' என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, "ஒருபுறம் அமெரிக்காவில் உயர்தர கல்வி நிறுவனங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. மறுபுறம், இந்தியா உலகின் மிகப்பெரிய இளைஞர் தொழிற்சாலையைக் கொண்டுள்ளது. அதனால்தான், இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை நிலையான மற்றும் உள்ளடக்கிய உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.
பின்னர் ஜில் பைடன் பேசியதாவது:-
இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிணைப்பின் அடிப்படைக் கல் கல்வி. நாடுகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கற்று வளர்கின்றன. தாங்கள் ஆக விரும்பும் மக்களைக் கண்டறிந்து, ஒன்றாக சிறந்த உலகத்தை உருவாக்குகின்றன. ஒன்றாக உழைத்தால், நமது நாடுகள் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான, வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
இரு நாடுகளின் பொருளாதாரம் வலுவாக இருக்க, இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்கால இளைஞர்களுக்காக முதலீடு செய்ய வேண்டும்.
பல ஆண்டுகளாக உறவுகளை வலுப்படுத்திய பிறகு, உலகளாவிய சவால்களை நாங்கள் கூட்டாகச் சமாளிப்பதால், அமெரிக்க- இந்திய கூட்டாண்மை ஆழமானது மற்றும் மதிப்புமிக்கது.
அனைத்து இந்தியர்களும், குறிப்பாக பெண்கள் கல்வியைத் தொடரவும், அவர்களுக்குத் தேவையான திறன்களைப் பெறவும் வாய்ப்பு இருப்பதை உறுதிசெய்ய நீங்கள் (மோடி) உழைக்கிறீர்கள்.
நவீன பணியாளர்கள், எங்கள் பள்ளிகள் மற்றும் வணிகங்கள் இங்குள்ள மாணவர்களுக்காக உருவாக்கி வரும் சில புதுமையான திட்டங்களை உங்களுக்குக் காண்பிப்பது உற்சாகமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இரு நாட்டு தேசிய கீதங்கள் விமானப்படை தளத்தில் இசைக்கப்பட்டன.
- வாஷிங்டன் டிசியில், பிரதமர் ஜோபைடனுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துகிறார்.
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்குசென்றுள்ளார். சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் நேற்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். மேலும், இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து, பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டனுக்கு புறப்பட்டார். பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ரூஸ் என்ற விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு மற்றும் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரது வருகையை குறிக்கும் வகையில் இரு நாட்டு தேசிய கீதங்கள் விமானப்படை தளத்தில் இசைக்கப்பட்டன. அங்கு பிரதமர் மோடி இரண்டு சிறு குழந்தைகளிடமிருந்து ஒரு பூங்கொத்தை பெற்றார்.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது டுவிட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியின் உத்தியோகபூர்வ அரசு பயணம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் டிசியில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான நிலையத்தில் காலடி எடுத்து வைக்கும் போது அவருக்கு சம்பிரதாய வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. வாஷிங்டன் டிசியில், பிரதமர் ஜோபைடனுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துகிறார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றுவார்" என்று பதிவிட்டுள்ளார்.
- புல்வெளியில் அமர்ந்து அனைவரும் யோகாசனம் செய்து பிரமிக்க வைத்தனர்.
- ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றிருப்பதாக பிரதமர் மோடி பேசினார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் இன்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.
மேடையில் யோகா கலைஞர்கள் யோகாசனங்களை செய்ய, புல்வெளியில் அமர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் யோகாசனம் செய்து பிரமிக்க வைத்தனர்.
இந்த யோகாசன நிகழ்ச்சியானது, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதிக நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி என்ற உலக சாதனையை படைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறிய மோடி, ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் இன்று இங்கே வந்திருப்பதை பார்க்க முடிகிறது, என்றார்.
- யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்றும் சீரான வாழ்க்கையை தரக்கூடியது என்றும் மோடி தெரிவித்தார்.
- விஞ்ஞானிகளும் அறிவியல் ரீதியாக யோகா உடலுக்கு நன்மை தரக்கூடியது என கூறி உள்ளனர்.
நியூயார்க்:
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, 9வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.
அவர்களோடு அமர்ந்து யோகாசனம் செய்த பிரதமர் மோடி, பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில், யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்றும் சீரான வாழ்க்கையை தரக்கூடியது என்றும் தெரிவித்தார்.
'யோகா இந்தியாவில் தோன்றிய மிகவும் பழமையான பாரம்பரியம். யோகா என்பது உண்மையில் உலகளாவியது. பதிப்புரிமை,காப்புரிமைகள், ராயல்டி என எதுவும் இல்லாதது. யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை. யோகாவின் சக்தி என்ன என்பதை உலகத்திற்கு தெரிவிப்போம். விஞ்ஞானிகளும் அறிவியல் ரீதியாக யோகா உடலுக்கு நன்மை தரக்கூடியது என கூறி உள்ளனர். யோகாவை தனி நபராகவோ குழுவாகவோ சேர்ந்து செய்யலாம். எங்கள் வளர்ச்சிக்கு எங்களுடன் ஒத்துழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி' எனவும் பிரதமர் மோடி பேசினார்.






