என் மலர்
அமெரிக்கா
- இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக தகவல்.
- கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக் உள்ளிட்டோர் பங்கேற்பு.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், ஏஎம்டி சிஇஓ லிசா சு, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடியை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். பின்னர், இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக பிரதமரிடம் பகிர்ந்து கொண்டோம் என சுந்தர் பிச்சை கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், " அமெரிக்காவிற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின்போது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக நாங்கள் பிரதமருடன் பகிர்ந்து கொண்டோம். குஜராத்தின் கிப்ட் நகரில் எங்களின் உலகளாவிய ஃபின்டெக் (fintech) செயல்பாட்டு மையத்தை திறப்பதை நாங்கள் அறிவிக்கிறோம்.
டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு அவரது காலத்தை விட முன்னோடியாக இருந்தது. இதனை மற்ற நாடுகள் செய்ய விரும்பும் ஒரு வரைபடமாக நான் இப்போது பார்க்கிறேன்" என்றார்.
- கடந்த சில ஆண்டுகளில், ஏஐ- செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
- வெள்ளை மாளிகையில் இருநாட்டு வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பின் போது பைடன் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசை வழங்கினார்.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், ஏஎம்டி சிஇஓ லிசா சு, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் சிறப்பு டி- சர்ட் ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த டி-சர்ட்டில் ஏஐ (AI-செயற்கை நுண்ணறிவு) பற்றிய மேற்கோள் அச்சிடப்பட்டிருந்தது.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, AIக்கு புதிய வரைமுறையை வழங்கினார். அப்போது அவர், " 'எதிர்காலம் AI - அமெரிக்கா & இந்தியா'. கடந்த சில ஆண்டுகளில், AI- செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில், மற்றொரு AI- அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இன்னும் முக்கியமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது" என்றார்.
வெள்ளை மாளிகையில் இருநாட்டு வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பின் போது பைடன் பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
AI is the future, be it Artificial Intelligence or America-India! Our nations are stronger together, our planet is better when we work in collaboration. pic.twitter.com/wTEPJ5mcbo
— Narendra Modi (@narendramodi) June 23, 2023
- நியூயார்க் நகரின் லோயர் மன்ஹாட்டனில் உள்ள ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர் கட்டிடமும் ஜொலித்தது.
- நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடமும் பிரதமர் மோடியை வரவேற்க மூவர்ணக் கொடிகளால் அலங்கரித்தது.
அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அரசு முறைப்பயணமா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று மூன்றாவது நாளாக அமெரிக்க பயணத்தில் உள்ளார்.
இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்கப் பயணத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக அமெரிக்காவின் முக்கிய இடங்களில் மூவர்ணக் கொடி வண்ணங்களில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மற்றும் கனடா நாட்டின் அந்தரியோ நகரின் எல்லையில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக மூவர்ணக் கொடி வண்ண விளக்குகளால் ஜொலிக்கவிடப்பட்டுள்ளது.
நியூயார்க் நகர நீர்வீழ்ச்சியில் மட்டுமின்றி கனடா பகுதியிலிருந்தும் நயாகரா நீர்வீழ்ச்சியின் புகைப்படங்களை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் பகிர்ந்துள்ளது.
இதேபோல், நியூயார்க் நகரின் லோயர் மன்ஹாட்டனில் உள்ள ஒன் வேர்ல்ட் டிரேட் சென்டர் கட்டிடத்திலும் மூவர்ணக் கொடியின் வண்ணம் விளக்குகளால் ஜொலிக்கவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடமும் பிரதமர் மோடியை வரவேற்க மூவர்ணக் கொடியின் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.
இவை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவின் சாட்சியம் என்றும் இதற்கு ஏற்பாடு செய்த இந்திய பாரம்பரிய மற்றும் கலை கவுன்சிலுக்கு தூதரக ஜெனரல் டுவீட் மூலம் நன்றி தெரிவித்துள்ளது.
- இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி
- இந்தியாவும் பதிலடி வரி விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது
2018-ம் வருடம் அமெரிக்கா தேசிய பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு இந்தியாவிலிருந்து அங்கு இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், எஃகு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்திருந்தது.
இதற்கு பதிலடியளிக்கும் விதமாக இந்தியா 28 அமெரிக்க பொருட்களின் மீது கூடுதல் வரி விதித்திருந்தது. இதில் பாதாம், ஆப்பிள், மற்றும் பட்டாணி உள்ளிட்ட பொருட்களும் அடங்கும்.
அமெரிக்காவில் மோடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் அமெரிக்க அதிபர் பைடனுடன் பல முக்கிய விஷயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
பைடனுனான பேச்சுவார்த்தையினால், தற்போது இந்த வரிகளை இந்திய அரசு நீக்கியுள்ளது. இன்னும் 90 நாட்களில் இது முடிவுக்கு வரும்.
இதை மகிழ்ச்சியோடு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஏற்றுமதியாளர்களும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
செனட்டர் மரியா கேன்ட்வெல், "இன்று வாஷிங்டனின் உலகப்புகழ் பெற்ற ஆப்பிள்களுக்கும், 1400-க்கும் மேற்பட்ட ஆப்பிள் உற்பத்தியாளர்களுக்கும் மிக நல்ல நாள் என்றும் வாஷிங்டனின் விவசாயப் பொருளாதாரத்திற்கு இந்த செய்தி மிகப்பெரிய உந்துதலாக இருக்கும்" எனவும் கூறினார்.
காங்கிரஸ் பெண் உறுப்பினர் சுஸன் டெல்பென், "ஏற்கனவே இருந்த வரியமைப்பு இந்தியாவுடன் அமெரிக்கா வியாபாரம் செய்வதை மிகவும் கட்டுப்படுத்தியது. தற்போது இவை நீக்கப்பட்டதினால், 'வியாழக்கிழமை ஒப்பந்தம்' ஒரு மிகப்பெரிய வெற்றி என்று நான் பார்க்கிறேன்" என கூறினார்.
வாஷிங்டன் ஆப்பிள் கமிஷன் தலைவர் டாட் ஃப்ரைஹோவர், "இதன் மூலம் வாஷிங்டனின் ஆப்பிள் உற்பத்தி துறையினரால் இந்தியாவில் உள்ள பிற நாட்டு ஏற்றுமதியாளர்களுடன் சுலபமாக போட்டியிட முடியும். வாஷிங்டனின் உலகத்தரம் வாய்ந்த ஆப்பிள்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்க இதன் உற்பத்தியாளர்கள் கடுமையாக உழைத்தனர். இப்பொழுது இந்த வரி நீக்கத்தால் இழந்திருந்த சந்தையை மீண்டும் அடைய முடியும்" என தெரிவித்தார்.
வடமேற்கு தோட்டக்கலை கவுன்ஸில், வாஷிங்டன் ஆப்பிள் ஆணையம் மற்றும் உள்ளூர் விவசாயிகள் அனைவரும் இந்த நகர்வை பாராட்டியுள்ளனர்.
வாஷிங்டனின் விவசாய துறைக்கான இயக்குனர் டெரக் சாண்டிஸன், "இது மிகப்பெரிய வெற்றி. வாஷிங்டனின் விவசாயத்துறைக்கும், குறிப்பாக வாஷிங்டனின் ஆப்பிள் உற்பத்தி துறைக்கும் மிக நல்ல செய்தியாகும்" என கூறினார்.
இதுகுறித்து வடமேற்கு தோட்டக்கலை கவுன்ஸில் தலைவர் மார்க் பவர்ஸ், "இந்தியாவுடன் மீண்டும் வியாபாரம் செய்ய அமெரிக்க விவசாயிகள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்றும் இது ஆப்பிள்களுக்கான வெற்றி என தெரிவித்தார்.
2017-ல் 120 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் ஆப்பிள் ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்ற நிலையில், இந்தியாவின் பதிலடி வரியால் அது ஒரு மில்லியனாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
- எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்.
- உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
வாஷிங்டன்:
பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ளார். 2-வது நாளான நேற்று அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் காத்திருந்து பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜோ பைடன், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்கள் விரிவாக விவாதித்தனர். இந்த சந்திப்பின் போது இருநாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்க பாராளுமன்றத்துக்கு சென்றார். அவரை அமெரிக்க எம்.பி.க்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். அவர்கள் வரவேற்பை மோடி முகத்தில் புன்னகை தவழ ஏற்றுக்கொண்டார்.
பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
140 கோடி இந்தியர்களின் சார்பில் இந்த அவையில் பேச வாய்ப்பு கிடைத்து உள்ளது மிகப்பெரிய கவுரவம் ஆகும். அதுவும் இந்த அவையில் 2-வது முறையாக உரையாற்றுவது எனக்கு பெருமையாக உள்ளது.
இந்திய-அமெரிக்க மரபணு மற்றும் ரத்தத்தில் ஜனநாயகம் சேர்ந்தே உள்ளது. இந்த ஜனநாயகம் தான் மக்களை ஒன்றிணைக்கிறது. இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ரீதியிலான சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். இரு நாடுகளுக்கும் முதன்மையானது ஜனநாயகம். இதன் அடிப்படையில் தான் அரசியலமைப்பு உள்ளது.
இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையிலான பாகுபாடு என்ற பேச்சுக்கே இட மில்லை. சுற்றுச்சூழல் மட்டுமின்றி உலகை பாதுகாக்க பாடுபடுகிறோம். இது இந்தியா-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் ஆகும்.
உலகிலேயே அதிக பெண் விஞ்ஞானிகள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. பழங்குடி இனத்தை சேர்ந்தவர் தான் இந்திய குடியரசு தலைவராக உள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டமைப்பு 85 கோடி மக்களுக்கு கிடைத்து உள்ளது. அனைத்து வகையான தொழில் நுட்பங்களையும் இந்திய மக்கள் சிறப்பான முறையில் கையாண்டு வருகின்றனர். பெண்களின் கல்வி அறிவு நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்.
இந்தியா வளர்ந்தால் தான் உலகம் வளரும். இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. விரைவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வரும். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு ஏற்பட இரு நாடுகளும் முன்னுரிமை அளித்து வருகிறது. மனித குலத்தின் மிகப்பெரிய எதிரி பயங்கரவாதம் தான்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம். பயங்கரவாதத்தை ஒழிக்க 2 நாடுகளும் தோளோடு தோள் சேர்ந்து தீவிரமாக உழைத்து வருகிறது. இன்று இந்தியாவும், அமெரிக்காவும் விண்வெளியிலும், கடலிலும், அறிவியல், கலை மற்றும் ஸ்டாட்அப், வர்த்தகம், விவசாயம் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் இணைந்து செயல்படுகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் முக்கிய வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. மனித துன்பங்களை தடுக்க நாம் அனைவரும் முடிந்ததை செய்ய வேண்டும்.
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வர நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பாராளுமன்றத்தில் மோடியின் பேச்சை எம்.பி.க்கள் ஆர்வத்துடனும், கரவொலி எழுப்பியும் உற்சாகத்துடன் கேட்டனர்.
- ஜனநாயகத்திற்காக நாங்கள் வாழும்போது பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை
- எங்கள் அரசியலமைப்பு சட்டத்தில் ஜனநாயகமே உள்ளது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனுடன் இணைந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர்.
முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து இந்தியா என்ன செய்யப்போகிறது என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி:-
நீங்கள் கேட்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் உணர்விலும், ரத்தத்திலும் ஜனநாயகம் கலந்திருக்கிறது. எங்கள் சுவாசத்திலும் ஜனநாயகம் கலந்திருக்கிறது. எங்கள் அரசியலமைப்பு சட்டத்தில் ஜனநாயகமே உள்ளது.
ஜனநாயகத்திற்காக நாங்கள் வாழும்போது பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மனித உரிமைகளும், மனிதத்திற்கான மதிப்பும் இல்லையென்றால் ஜனநாயகம் அங்கு இருக்க முடியாது. அனைத்து சிறுபான்மையினருக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து வளங்களும், வசதிகளும் சாதி மத பேதமுமின்றி எளிதாக கிடைக்கிறது.
இவ்வாறு அவர் பதிலளித்திருக்கிறார்.
இந்தியாவில் சிறுபான்மையினர் அடக்குமுறைக்கு ஆளாவதாக கூறி, அமெரிக்காவின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மோடியின் நாடாளுமன்ற கூட்டமர்வு உரையை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த கேள்வியும் பதிலும் முக்கியத்துவம் பெறுகிறது.
2014-ம் வருடம் பிரதமர் பதவி ஏற்றதிலிருந்து இதுவரை மோடி எந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்றில் வெற்றி பெற வாழ்த்து
- அமெரிக்க இளைஞர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடுகின்றனர்
வெள்ளை மாளிகையில் அமெரிக்க நேரப்படி நேற்றிரவு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையும் கலந்து கொண்டார்.
இந்த விருந்து நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி பேசியதாகவது:-
அமெரிக்காவில் பேஸ்பால் பிரபலமாக இருக்கும் நிலையில், கிரிக்கெட்டும் பிரபலமாகி வருகிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் இடம்பெறும் முயற்சியில் அமெரிக்க கிரிக்கெட் அணி தகுதிச்சுற்றில் விளையாடி வருகிறது. வெற்றிபெற எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களும் இந்தியர்கள்- அமெரிக்கர்கள் ஒருவரை ஒருவரை சிறந்த முறையில் அறிந்து கொள்கிறார்கள். இந்திய குழந்தைகள் ஸ்பைடர்மேன் ஆடை அணிந்து ஹாலோவீன் கொண்டாடுகின்றனர். அமெரிக்க இளைஞர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். அமெரிக்க வாழ் இந்தியர்கள் நீண்ட தூரம் பயணித்து அமெரிக்காவின் மரியாதைக்குறிய இடத்தை பிடித்துள்ளனர். பொருளாதரம் உள்ளிட்டவைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
இருநாட்டு மக்களுடன் விருந்தில் கலந்து கொள்வது இந்த நேரத்தை சிறப்பானதாக்கியுள்ளது. இங்கு வந்துள்ளவர்கள் மிகவும் மதிப்பிற்குரிய சொத்துக்கள். குவாட் மாநாட்டின்போது ஜப்பானில் சந்தித்தபோது, நீங்கள் சந்திக்கும் பிரச்சினை பற்றி தெரிவித்தீர்கள். அந்த பிரச்சினையை நீங்கள் தீர்த்து இருப்பீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த விருந்தில் கலந்து கொள்ள விரும்பிய அனைவரும், பொருத்தமானவர்கள் என்று நம்புகிறேன்.
இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதேபோல் முதன் பெண்மணி ஜில் பைடனுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய வருகையில் கவனம் செலுத்தி, பயணம் வெற்றிபெற முக்கிய பங்கு வகித்தார்கள். நேற்று (இந்திய நேரப்படி நேற்றுமுன்தினம்) எனக்காக நீங்கள் வெள்ளை மாளிகை கதவை திறந்தீர்கள்'' என்றார்.
இன்றிரவு இந்தியா, அமெரிக்கா இடையேயான சிறந்த நட்புறவைக் கொண்டாடுகிறோம் என விருந்து நிகழ்ச்சி குறித்து அமெரிக்கா தெரிவித்தது.
- பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய பின் விருந்து நடைபெற்றது
- முகேஷ் அம்பானி, சுந்தர்பிச்சை உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகை சென்ற அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன்- அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், இருநாட்டு தலைவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். அதன்பின் பிரதமர் மோடிக்கு விருந்து வைத்தனர்.
அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை (நேற்று) வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடி, ஜோ பைடன் உடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதன்பின், பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினர்.
அதன்பின் ஜோ பைடன்- அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்து அளித்தனர். இதில் முன்னணி தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். ஜோ பைடன் பேத்தி தனது கணவருடன் கலந்து கொண்டார்.
முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி, கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- டெக்சாஸில் கடந்த புதன்கிழமை குறைந்தது நான்கு சூறாவளிகள் பதிவாகியுள்ளன.
- மழை மற்றும் பலத்த காற்று மாநிலத்தின் சில நகரங்களையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
தெற்கு அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அண்டை நகரமான லுபாக் தீயணைப்பு சேவை தனது டுவிட்டர் பக்கத்தில், "மட்டாடர் நகரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் சூறாவளியை கொண்டு வந்துள்ளது. இதில் சிக்கி நான்கு பேர் இறந்துள்ளனர் மற்றும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளது.
வடக்கு டெக்சாஸில் உள்ள மோட்லி கவுண்டியின் முக்கிய நகரமாக கருதப்படும் மட்டாடர் நகரில் 600 மக்கள் தொகை கொண்டுள்ளது. மட்டாடர் மேற்கு பகுதியில் சூறாவளியால் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
டெக்சாஸில் கடந்த புதன்கிழமை குறைந்தது நான்கு சூறாவளிகள் பதிவாகியுள்ளன. மழை மற்றும் பலத்த காற்று மாநிலத்தின் சில நகரங்களையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
- ஜனநாயகம் இருநாட்டு மக்களையும் இணைக்கும் பாலமாக உள்ளது.
- இந்திய ராணுவத்தில் பெண்கள் முக்கிய பதவிகளை அலங்கரிக்கின்றனர்.
அரசுமுறை பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி நேற்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நுழைவாயிலில் காத்திருந்து அதிபர் ஜோ பைடன் கைகுலுக்கி அழைத்து சென்றார். இதேபோல் துணை அதிபர் கமலா ஹாரிசும் பிரதமர் மோடியுடன் கைகுலுக்கி அவரை வரவேற்றார். வரவேற்பு நிகழ்ச்சியின்போது இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
பின்னர், வெள்ளை மாளிகை வளாகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அமெரிக்கவாழ் இந்தியர்களால் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது என்றார். மேலும், அமெரிக்கவாழ் இந்தியர்கள், அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவுக்கு பாலமாக திகழ்வதாகவும் கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவதை பெருமையா கருதுகிறேன்.
வேறுபாடுகளை களைந்து நாட்டுக்காக ஒன்றிணைகிறோம்.
இந்தயா மிகப்பெரிய ஜனநாயக நாடு. சமத்துவம், கண்ணியத்தை ஜனநாயகம் அங்கீகரிக்கிறது.
ஜனநாயகம் இருநாட்டு மக்களையும் இணைக்கும் பாலமாக உள்ளது. ஜனநாயகம், பன்முகத்தன்மையை ஒவ்வொரு இந்தியரும் உணர்ந்துள்ளார்கள்.
உலகில் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா விரைவில் 3வது இடத்திற்கு முன்னேறும்.
உள்கட்டமைப்பில் இந்தியா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா வளர்ந்தால் ஒட்டுமொத்த உலகமும் வளரும்.
நவீன இந்தியாவில் பெண்களால் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும். பழங்குடியினத்தில் இருந்து வந்த பெண்தான் இந்தியாவின் குடியரசுத் தலைவர்.
இந்திய ராணுவத்தில் பெண்கள் முக்கிய பதவிகளை அலங்கரிக்கின்றனர். சர்வதேச அளவில் அதிக பெண் விமானிகளை இந்தியா கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் கட்டமைப்பு மூலம் விவசாயிகளுக்கு உதவித்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்தியாவின் கலாசாரம் சுற்றுச்சூழலுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
உலகம் என்பது ஒரே குடும்பம். அதில் ஒவ்வொருவரும் பயனடைய வேண்டும்.
உலக நாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடின.
ராணுவ ஒத்துழைப்பில் அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரும் நாடு.
ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இலக்கோடு உலக நாடுகள் செயல்பட வேண்டும்.
அமெரிக்கா, இந்தியா இடையேயான உறவில் புதிய அத்தியாயத்திற்கான கதவுகள் திறந்துள்ளன.
பருவநிலை மாற்றம், பட்டினி, நோயை போக்க இருநாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
உக்ரைன்- ரஷியா போரிடுவதற்கான காலகட்டம் இதுவல்ல. இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான செயல்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.
உலகம் மாறிவிட்டது, அதற்கேற்ப நமக்குள்ளும் மாற்றம் வர வேண்டும். உலகளவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதை கொரோனா காலகட்டம் நமக்கு உணர்த்தியது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுவது இது 2-வது முறை. மோடி கடந்த 2014-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறையாக உரையாற்றினார். அதன்பின் தற்போது 2-வது முறையாக அவர் அமெரிக்காவில உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நுழைவாயிலில் காத்திருந்து அதிபர் ஜோ பைடன் கைகுலுக்கி அழைத்து சென்றார்.
- வரவேற்பு நிகழ்ச்சியின்போது இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
அரசுமுறை பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி இன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நுழைவாயிலில் காத்திருந்து அதிபர் ஜோ பைடன் கைகுலுக்கி அழைத்து சென்றார். இதேபோல் துணை அதிபர் கமலா ஹாரிசும் பிரதமர் மோடியுடன் கைகுலுக்கி அவரை வரவேற்றார். வரவேற்பு நிகழ்ச்சியின்போது இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
அதிபர் ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் மோடி இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இருநாட்டு நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பேச்சுவார்த்தை அமைய உள்ளது. இந்த சந்திப்பின்போது பொருளாதாரம், பாதுகாப்பு, விண்வெளி, தொழில் நுட்ப வளர்ச்சி, இருநாட்டு வணிகம் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார்கள். மேலும் ராணுவம், வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
- டுவிட்டருக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனும் புதிய செயலியை கொண்டுவர முயற்சி
- சுவாரஸ்யமான உரையாடலில் மஸ்க் சண்டைக்கு இழுத்தார்
மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையில் இயங்கி வரும் முகநூல் எனப்படும் பேஸ்புக் (Facebook) மற்றும் எலான் மஸ்க் தலைமையில் இயங்கி வரும் நுண்வலைப்பதிவு நிறுவனமான டுவிட்டர் (Twitter) ஆகியவை அமெரிக்காவில் இயங்கி வருகிறது.
இதன் நிறுவனர்களுக்கிடையே அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் நடைபெறுவதுண்டு.
சமீபத்தில் டுவிட்டருக்கு போட்டியாக முகநூல் நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. வளர்ச்சி நிலையில் இருக்கும் இந்த முயற்சி "பி92 (P92)" என பெயரிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இம்முயற்சியை மஸ்க் ரசிக்கவில்லை. முகநூல் நிறுவனருக்கு எதிராக பல கிண்டலான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
இதை உற்றுக் கவனித்து வந்த டுவிட்டர் ஆதரவாளர் ஒருவர், ''ஜூக்கர்பெர்க், ஜூ ஜிட்சூ எனப்படும் தற்காப்புக்கலை அறிந்தவர். சமீபத்தில் ஒரு போட்டியில் வென்றவர்" எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று மஸ்க்கை எச்சரித்தார்.
இதை ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொண்ட எலான் மஸ்க் ''நேருக்கு நேர் ஒரு கூண்டுச் சண்டையை விரும்புவதாகவும், அதற்கு அவர் தயாரா?'' என மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு அழைப்பும் விடுத்திருக்கிறார்.
இதற்கு பதிலளித்த மார்க் ஜூக்கர்பெர்க், "இடத்தை தெரிவிக்கவும்" என எதிர்கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இவர்கள் இருவருக்கிடையேயான இந்த உரையாடல்கள், சமூக வலைத்தளங்களில் பயனாளிகளின் பல சுவாரஸ்யமான கருத்துக்களுக்கு வழி வகுத்திருக்கிறது.






