என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜூலியன் கேஷ், ஹென்றி பேட்டன் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-4, 6-7 (5-7), 7-6 (10-6) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- திருட்டு குற்றச்சாட்டிற்காக காவல் அதிகாரி காரை மறித்தார்
- கர்ப்பிணியான டாகியா, ஏற்கெனவே 2 குழந்தைகளுக்கு தாய்
அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் ஆகஸ்ட் 24 அன்று கருப்பர் இனத்தை சேர்ந்த 21 வயது டாகியா யங் எனும் கர்ப்பிணி, தனது கருப்பு நிற செடான் ரக காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் ஏற்கெனவே 2 குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு குற்ற விசாரணைக்காக அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டி இருந்ததால் அவர் சென்று கொண்டிருந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். டாகியா காரை நிறுத்தியதும் அவரை காரிலிருந்து இறங்குமாறு கூறினர். ஆனால், இதற்கு டாகியா உடன்பட மறுத்தார்.
அதற்கு ஒரு காவல் அதிகாரி, "நீங்கள் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறீர்கள். இங்கிருந்து தயவு செய்து போகாதீர்கள்" என உத்தரவிட்டார். மீண்டும் மறுத்த டாகியா காரை ஓட்ட முயன்றார்.
உடனே ஒரு காவல் அதிகாரி அவரது காருக்கு முன்னே சென்று, ஒரு துப்பாக்கியை காட்டி டாகியாவை அச்சுறுத்தினார். அதனையும் அலட்சியபடுத்திய, டாகியா காரை ஓட்ட தொடங்கினார். கார் வேகமெடுத்ததால், ஒரு காவல் அதிகாரி அவரை நோக்கி சுட்டார். இதில் தறிகெட்டு ஓடிய அந்த கார் ஒரு சுவற்றின் மீது மோதி நின்றது.
அவரை வெளியே கொண்டு வரும் முயற்சியாக காரின் கதவை ஒரு அதிகாரி திறக்க முயன்றும் அது முடியாததால், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். அப்போது டாகியா மற்றும் அவரது கருவில் இருந்த சிசுவும் காரிலேயே உயிரிழந்து விட்டது.
இதனையடுத்து, ஏற்கெனவே 2 குழந்தைகளுக்கு தாயாகவும் மற்றும் 2 மாதங்களில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆக இருந்த ஒரு கர்ப்பிணியை கொன்ற குற்றச்சாட்டில் அந்த அதிகாரிகள் ஊதியத்துடன் கூடிய நிர்வாக விடுப்பில் பணியிலிருந்து அனுப்பப்பட்டனர். ஓஹியோ மாநில குற்ற விசாரணை துறை இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, ஓஹியோ காவல்துறை இந்த நிகழ்ச்சியை படம் பிடித்திருந்த ஒரு காவலரின் கவச உடையில் தைக்கப்பட்ட வீடியோ கேமிராவின் காட்சிகளை வெளியிட்டது. இது சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
கருப்பர் இன மக்கள் மீது அமெரிக்க காவல்துறை அண்மை காலங்களில் குற்ற நடவடிக்கைகளின் போது மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாக இணையத்தில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- மானிஸ் கடைசியாக 1990 பிப்ரவரியில் சிகை திருத்தும் நிலையம் சென்றார்
- அர்கன் எண்ணெயை கொண்ட கண்டிஷனரை பயன்படுத்தி வந்தார்
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தின் நாக்ஸ்வில் பகுதியை சேர்ந்தவர் 58 வயதான டேமி மானிஸ்.
1980களிலும் 1990களிலும் தலையின் முன்புறத்திலும், பக்கவாட்டிலும், உச்சியிலும் குறைவாகவும், பின்புறத்தில் மட்டும் அதிக நீளமாகவும் இருக்கும் ஒரு வகை சிகை வளர்ப்பு முறை பிரபலமாக இருந்தது. அப்போதைய நடிகர்களில் பேட்ரிக் ஸ்வேஸ், இசைத் துறையை சேர்ந்த பில்லி ரே சைரஸ் உட்பட பல பிரபலங்கள் இந்த சிகை முறையை மேலும் பிரபலப்படுத்தினர்.
1985-இல் வெளியான "வாய்சஸ் கேரி" எனும் இசை ஆல்பத்தின் டில் டியூஸ்டே பாடல் வீடியோவை கண்டு "முல்லெட்" என அழைக்கப்படும் இந்த சிகை வடிவத்தின் மீது மானிஸ் ஆர்வம் கொண்டார். தானும் இதே போன்று சிகையை நீளமாக வளர்த்து கொள்ள வேண்டும் என விரும்பினார்.
இதன் காரணமாக 1990 பிப்ரவரி மாதம், அவர் கடைசியாக ஒரு முறை சிகை திருத்தும் நிலையத்திற்கு சென்று இதற்கேற்றவாறு சில மாற்றங்களை செய்து கொண்டார். அதற்கு பிறகு அவர் தனது சிகையின் அளவை வெட்டி கொள்ளவோ, திருத்தி கொள்ளவோ இல்லை. தற்போது இவரது சிகையின் நீளம் 5 அடி 8 அங்குலம் (172.7 சென்டிமீட்டர்).
உலகில் நிகழ்த்தப்படும் அனைத்துவிதமான சாதனைகளையும் பதிவு செய்யும் கின்னஸ் உலக சாதனை பதிவேட்டிற்கு மானிஸ் தனது சிகையின் நீளம் தெரியும்விதமாக ஒரு வீடியோவை அனுப்பினார். இதனையடுத்து, கின்னஸ் அமைப்பு, உலகிலேயே முல்லெட் வகை சிகைகளில் மிக நீளமான சிகை உள்ளவராக மானிஸை அதிகாரபூரமாக அறிவித்தது. 2024 கின்னஸ் புத்தகத்தில் இது வெளியிடப்படும்.
இத்தகைய நீளத்திற்கு காரணம், வழிவழியாக தான் வந்த குடும்ப மரபுகளின் அடிப்படை என்றும், தென்மேற்கு மொரோக்கோ நாட்டின் காடுகளில் உள்ள அர்கன் மர எண்ணெயை மூலப்பொருளாக கொண்ட ஒரு கண்டிஷனரை மட்டுமே தான் உபயோகிப்பதாகவும் மானிஸ் தெரிவித்தார்.
உலகெங்கிலும் பெரும்பான்மையான பெண்கள், தங்கள் சிகையின் நீளம் அதிகரித்து கொள்ள பல்வேறு வழிமுறைகளை தேடும் நிலையில், மானிசின் புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
- நேஷனல் நைட் அவுட் நிகழ்ச்சியில் மக்களும், காவல் அதிகாரிகளும் பங்கேற்பார்கள்
- ஆதாரங்களை தடுக்கும் வகையில் காரிலிருந்த கண்காணிப்பு கேமிராக்களை உடைத்தார்
அமெரிக்காவில் சட்டம் மற்றும் ஒழுங்கை காக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறைக்கும், மக்களுக்குமிடையே ஒரு ஆரோக்கியமான உறவுநிலை நிகழ, "நேஷனல் நைட் அவுட்" (National Night Out) எனப்படும் சமுதாய கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில் காவல்துறையை சேர்ந்தவர்களும், மக்களும் இணைந்து பங்கு பெறுவார்கள்.
ஆகஸ்ட் ௧ம் தேதி அன்று, அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் மனலாபன் குடியிருப்பு பகுதியில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இப்பகுதி காவல்துறையை சேர்ந்தவர் 46 வயதான கெவின் ரூடிட்ஸ்கி (Kevin Ruditsky).
கெவின் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் ஒரு 16-வயது சிறுமியை சந்தித்தார். அச்சிறுமியின் மீது ஆசையை வளர்த்து கொண்ட கெவின், அச்சிறுமியின் வசிப்பிடத்தையும், தொலைபேசி எண்ணையும் கண்டுபிடித்தார். அச்சிறுமியின் தொலைபேசி எண்ணிற்கு ஆபாச புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்தார்.
பிறகு ஒரு நாள் அச்சிறுமியின் வீட்டின் வாசலிலேயே காத்திருந்து அச்சிறுமி வெளியில் வந்ததும் அவரை தனது காவல்துறை காரிலேயே மெதுவாக பின் தொடர்ந்தார். அவர் அருகே சென்று அந்த சிறுமியை தனது காரில் ஏற்றி, அவள் கைகளில் விலங்கிட்டார். செயலற்று இருந்த அந்த சிறுமியை முத்தமிட முயன்றார்.
இக்காட்சிகள் தனது காரில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி விடுவதை தடுக்கும் நோக்கத்தில், அந்த கேமிராக்களை உடைத்தார்.
அவரிடமிருந்து எப்படியோ தப்பிய சிறுமி, தனக்கு வேண்டியவர்களிடம் இதை தெரிவித்ததின் பேரில் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடந்தது. விசாரணையில், கெவின் செய்த குற்றம் ஊர்ஜிதமானதும் அவர் மீது தகுந்த பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
பணியிலிருந்தும் கெவின் ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
"மக்களின் நம்பிக்கையை பெற ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு காவல்துறை அதிகாரியே இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டது எந்த விதத்திலும் சகித்து கொள்ள முடியாத செயல்" என இது குறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வாடிக்கையாளர்கள் விரைவாக எடுத்து செல்ல வசதியாக அலமாரிகளில் வைக்கப்பட்டிருந்தன
- திருட்டினால ஏற்படும் பொருளாதார இழப்பு காலாண்டு வருமானத்தை பாதிக்கிறது
அமெரிக்காவில் வசிப்பவர்கள் தாங்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை வாங்குவதற்காக பல்பொருள் அங்காடிகளையே சார்ந்திருக்கின்றனர். அந்நாட்டில் பல பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் பல தனியார் நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் மிக பெரிய பரப்பளவில் அனைத்து வகையான பொருட்களும் அங்கேயே கிடைக்கும் வகையில் அங்காடிகளை உருவாக்கி வர்த்தகம் செய்து வருகிறார்கள்.
இவற்றில் வால்மார்ட், பெஸ்ட் பை, டார்கெட், மேஸீஸ் போன்ற பல்பொருள் அங்காடிகளும், மருந்து பொருட்களுக்கான அங்காடிகளான சிவிஎஸ் மற்றும் வால்க்ரீன்ஸ் போன்றவையும் மிகவும் பிரபலமானவை.
இத்தகைய அங்காடிகளில் மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை விரைவாக தேர்ந்தெடுத்து உடனடியாக பணம் செலுத்தி எடுத்து செல்ல வசதியாக பல திறந்த அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், சமீப காலமாக இது போன்ற அங்காடிகளில் கொள்ளைகளும், திருட்டுகளும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. முகமூடி அணிந்து, பயங்கர ஆயுதங்களுடன் வந்து பணியாளர்களை மிரட்டி பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடிப்பதும், கடைக்குள் பொருட்களை வாங்குவது போல் வந்து கண்காணிப்பு கேமிராவின் பார்வையிலிருந்து மறைந்து சிறு சிறு விலை குறைவான பொருட்களை திருடுவதும் அங்கு அதிகரித்து வருகிறது.
இதனால் அனைத்து அங்காடிகளிலும் திறந்தவாறு அலமாரிகளில் பொருட்களை வைக்கும் முறையை மாற்றி, அவற்றை கண்ணாடி அலமாரிகளில் வைத்து அவற்றிற்கு பூட்டும் போட தொடங்கி விட்டனர்.
இத்தகைய சில்லறை வணிக திருட்டுகளும், திட்டமிட்ட பெரும் கொள்ளைகளும் இந்த பல்பொருள் அங்காடிகளின் வருடாந்திர காலாண்டு வருமானங்களில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளதால் இத்தகைய முடிவை எடுக்க நேர்ந்ததாக அங்காடி மேலாளர்கள் கூறுகின்றனர்.
2021ல் வால்க்ரீன்ஸ் சங்கிலித்தொடர் மருந்தக அமைப்பு, அமெரிக்காவின் ஸான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள 5 கடைகளை, சில்லறை திருட்டு அதிகரிப்பால் ஏற்பட்ட இழப்பை சமாளிக்க முடியாமல் மூடி விட்டது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மிக பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே அங்காடிகளில் பெரும் கொள்ளைகள் நடப்பது வாடிக்கையாகி வருவது பலரை வியக்க வைத்தாலும், நலிந்து வரும் உலக பொருளாதாரமும், வேலையின்மையும் அதிகரிக்கும் போது இது இன்னமும் அபாயகரமாக அதிகரிக்கலாம் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினின் அல்காரஸ் ஆகியோர் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.
நியூயார்க்:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த திங்கட்கிழமை தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 38-ம் நிலை வீரரான சக நாட்டை சேர்ந்த லாஸ்லோ ஜெரியை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்களை இழந்த ஜோகோவிச், அதன்பிறகு தனது அனுபவ ஆட்டத்தின் துணையுடன் சரிவில் இருந்து அபாரமாக மீண்டதுடன் வெற்றியையும் தன்பக்கம் திருப்பினார்.
சுமார் 3 மணி 45 நிமிடம் நீடித்த இந்தப் போராட்டத்தில் ஜோகோவிச் 4-6, 4-6, 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் லாஸ்லோ ஜெரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டான் ஈவான்சுடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-2, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, ரோமானியாவின் சொரானா சிர்ஸ்டியுடன் மோதினார்.
இதில் சிர்ஸ்டி முதல் செட்டை வென்றார். 2வது செட்டை ரிபாகினா போராடி கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சிர்ஸ்டி வென்றார்.
இறுதியில், சிர்ஸ்டி 6-3, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இதன்மூலம் எலீனா ரிபாகினா இத்தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஜி-20 மாநாடு நடத்த பிரமாண்ட மாநாட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
- இந்திய பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோபைடன் இரு தரப்பு சந்திப்பில் பங்கேற்கிறார்.
வாஷிங்டன்:
ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 9 மற்றும் 10-ந்தேதி இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.
ஜி-20 மாநாடு நடத்த பிரமாண்ட மாநாட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பங்கேற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்டு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் வருகிற 7-ந் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஜி-20 மாநாட்டுக்கு முன்பாக 8-ந்தேதி ஜோபைடன் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிபர் ஜோபைடன் 7-ந் தேதி இந்தியாவுக்கு வருகிறார். 8-ந்தேதி இந்திய பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோபைடன் இரு தரப்பு சந்திப்பில் பங்கேற்கிறார்.
9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார். அதில் அதிபர் ஜோபைடன், மற்ற உறுப்பு நாட்டு தலைவர்கள், தூய்மையான எரிசக்தி மாற்றம், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவது உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளை சமாளிப்பதற்காக கூட்டு முயற்சிகள் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.
ஜோபைடன்-மோடியின் இரு தரப்பு பேச்சு வார்த்தையில் இரு நாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் அந்நாட்டின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, ரஷியாவின் ரோமன் சபியுலின் - கஜகஸ்தானின் ஆண்ட்ரூ கொலுபேவ் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற நேர்செட்டில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
- கருப்பு ஆடை, முகமூடி, கையுறை அணிந்து துப்பாக்கியுடன் மிரட்டினர்
- ஹாப்ஸ் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
அமெரிக்காவில் 4 கிழக்கு கடற்கரை மாநிலங்களில் ஒரு வருட காலமாக இந்திய மற்றும் பிற ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களின் நகைக் கடைகளை குறிவைத்து பயங்கர ஆயுதங்களை கொண்ட ஒரு கூட்டம் கொள்ளையடித்து வந்தது.
இந்த கடைகளில் பெரும்பாலும் கடையை நடத்துபவரின் குடும்பத்தினரே ஊழியர்களாக பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கும்பலால் குறி வைக்கப்பட்ட 9 தெற்காசிய நகைக் கடைகளில், 4 கடைகள் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது.
ஜனவரி 7, 2022-இல் இருந்து ஜனவரி 27, 2023 வரையிலான மாதங்களில் நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, வர்ஜீனியா மற்றும் புளோரிடாவில் ஆசிய அமெரிக்கர்களுக்கு சொந்தமான நகை கடைகளில் இந்த கும்பல் கொள்ளைகளில் ஈடுபட்டது.
பெரும்பாலும் சிறு வணிகர்களை குறி வைத்து, பல்லாயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தனர்.
கருப்பு ஆடையுடன் கையுறைகள் மற்றும் முகமூடிகள் அணிந்து மாறுவேடமிட்ட இந்த கும்பல், துப்பாக்கி ஏந்தியபடி கொள்ளையடித்து, கொள்ளைக்கு பிறகு தப்பி ஓட எப்பொதும் திருடப்பட்ட வாகனங்களையே பயன்படுத்தியது.
முகமூடியணிந்து திடீரென கடைக்குள்ளே நுழைந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி, கடை பணியாளர்களை மிரள செய்து கைகளில் கிடைக்கும் பணத்தையும், நகைகளையும் எடுத்து கொண்டு வேகமாக ஓடி விடுவதை வழக்கமாக கொண்டிருந்தது.
பல மாநிலங்களில் குற்றங்கள் நடந்ததால், பல மாநில அதிகாரிகளும் ஒன்றுபட்டு கூட்டு நடவடிக்கையின் மூலம் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
நீண்ட விசாரணைக்கு பின், பல தடயங்களை வைத்து, இக்குற்றத்தில் ஈடுபட்டதாக 16 உறுப்பினர்கள் கொண்ட ஒரு கொள்ளை கூட்டத்தை கைது செய்தனர். இக்குற்றத்தில் சம்பந்தபட்டவர்களில் ஒருவர் வீட்டில் இருந்து பல துப்பாக்கிகளும், சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான ரொக்கமும் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது 19 குற்றச்சாட்டுகளுடன், ஹாப்ஸ் சட்டம் எனப்படும் "மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகத்தில் தலையிட சதி செய்தல்" எனும் பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக 20 வருடங்களுக்கும் மேலான சிறை தண்டனை கிடைக்கும் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். முகமூடி அணிந்து, அச்சுறுத்தி, பெரும் பணமதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த கும்பலை ஒருங்கிணைந்து தேடி, வெற்றிகரமாக கண்டுபிடித்த காவல்துறையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
- ஜியார்ஜியா இந்துக்கள், பல வகையில் அம்மாநில வளர்ச்சிக்கு உதவியுள்ளனர்
- இந்து மத பங்களிப்புகளை கவர்னர் கெம்ப் நினைவு கூர்ந்தார்
அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் ஜியார்ஜியா. இதன் தலைநகரம் அட்லான்டா.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி இம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து மத விரோத சிந்தனைகளையும், செயல்களையும் கண்டிக்கும் விதமாகவும், "இந்துஃபோபியா" எனப்படும் இந்து மதத்தை குறித்து பொய்யாக அச்சுறுத்தும் வகையில் பரப்பப்படும் பிரசாரத்திற்கு எதிராகவும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர். அமெரிக்க வரலாற்றிலேயே இத்தகைய ஒரு இந்து மதத்திற்கு ஆதரவான கண்டனம் எழுப்பப்படுவது இதுதான் முதல்முறை.
அத்தீர்மானம் கொண்டு வந்த போது யோகா, தியானம், ஆயுர்வேதம், இந்து மத உணவுமுறை, கர்னாடக இசை மற்றும் கலை உட்பட பல வழிகளில் அமெரிக்கர்களின் கலாச்சாரத்தையும், லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை முறையையும் மேம்படுத்திய இந்து மதத்தின் பரந்த பங்களிப்புகளுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குடியரசு கட்சியை சேர்ந்த ஜியார்ஜியா ஆளுனர் பிரையன் போர்டர் கெம்ப் (59), சில தினங்களுக்கு முன் ஒரு பிரகடனம் செய்துள்ளார்.
இப்பிரகடனத்தில் ஆளுனர் கூறியிருப்பதாவது:
"ஜியார்ஜியாவில் உள்ள அமெரிக்க வாழ் இந்து சமூகத்தினர், ஜியார்ஜியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளனர். இதன் மூலம் இங்கு வாழும் குடிமக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அக்டோபர் மாதம் இனி "இந்து பாரம்பரிய மாதம்" என ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். இந்து கலாச்சாரத்தையும், பலதரப்பட்ட இந்து மத ஆன்மிக வழிமுறைகளை அனைவரும் கவனிக்கும் விதத்தில் இந்த கொண்டாட்டங்கள் அமையும்," என்று கெம்ப் தெரிவித்துள்ளார்.
கோனா என அழைக்கப்படும் வட அமெரிக்காவின் இந்துக்களுக்கான கூட்டமைப்பு, ஆளுனரின் இந்த முடிவை வரவேற்று அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறது.
ஆனால், கலிபோர்னியா மாநிலத்தில் அண்மையில் கொண்டு வரப்பட்ட சாதிகளுக்கு எதிரான மசோதாவிற்கு அதிருப்தி தெரிவித்துள்ள இந்த அமைப்பு, "கலிபோர்னியா எங்களை (இந்துக்களை)" குறி வைக்கும் நிலையில், ஜியார்ஜியா எங்களுக்கு அங்கீகாரம் தந்திருக்கும் இந்த செயல் மகிழ்ச்சியளிக்கிறது" என தனது எக்ஸ் (டுவிட்டர்) கணக்கில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில்தான் இந்தியர்களின் முக்கிய பண்டிகைகளான நவராத்திரி, தீபாவளி ஆகியவை கொண்டாடப்படுகிறது என்பதால் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவில் சுமார் 30 லட்சம் இந்துக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிரம்ப் சிறப்பான தோற்றமுடையவர் என பைடன் தெரிவித்தார்
- திறமையற்றவர் ஜோ பைடன் என டிரம்ப் தாக்கினார்
அமெரிக்காவின் 45-வது அதிபராக 2017-இல் இருந்து 2021 வரை பதவியில் இருந்தவர் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77).
அமெரிக்காவில் 2024-இல் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களமிறங்க துடிக்கும் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் சமீப காலமாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் சிறை சென்று சில மணி நேரங்களில் பிணையில் வெளி வந்தார் டொனால்ட் டிரம்ப். அப்போது சிறைச்சாலை விதிமுறைகளின்படி "மக் ஷாட்" எனப்படும் புகைப்படம் எடுக்கப்பட்டார்.
அந்த புகைப்படங்களை டிரம்ப் தனது சொந்த வலைதளத்தில் அனைவரின் பார்வைக்கும் வெளியிட்டிருந்தார்.
இந்த புகைப்படம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போது, "நான் அதனை தொலைக்காட்சியில் பார்த்தேன். டிரம்ப் சிறப்பான தோற்றமுடையவர்" என டிரம்பை கேலி செய்யும் விதமாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டிரம்ப், பைடனை விமர்சித்து பேசும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், "கெட்ட எண்ணம் படைத்தவர் ஜோ பைடன். அவர் திறமையற்றவர் மட்டுமல்ல, சீரான மனநிலையை இழந்தவர் என நான் நம்புகிறேன். நாட்டு மக்களை அச்சுறுத்தும் விதமாக நாட்டின் எல்லைகளை அனைவருக்கும் திறந்து வைத்திருக்கிறார். நீதித்துறையையும், மத்திய புலனாய்வு துறையையும் அவர் சரியாக கையாளவில்லை. மனநிலையை இழந்தவராக நாட்டை நரகத்தை நோக்கி நகர்த்தி, ஒரு காரணமும் இல்லாமல் அமெரிக்க மக்கள் மீது 3-வது உலகப்போரை திணித்து விடுவார்" என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
பல்வேறு நீதிமன்ற வழக்குகளை சந்தித்து வரும் டிரம்பிற்கும், பைடனுக்குமான கருத்து மோதல்கள், தேர்தல் நெருங்க நெருங்க எந்த நிலையை எட்டும் என அரசியல் வல்லுனர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.






