என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
    • ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    இதற்கிடையே, அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நவம்பர் 5-ம் தேதியை (அதிபர் தேர்தல்) நினைவில் வைத்து கொள்ளுங்கள். அது நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தக்களறி ஏற்படும் என தெரிவித்தார்.

    மெக்சிகோவில் கார்களை தயாரித்து அமெரிக்கர்களுக்கு விற்கும் சீனத் திட்டத்தை விமர்சித்தபோது அவர் இவ்வாறு கூறினார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தக் கார்களை அவர்களால் விற்க முடியாது. நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அது ஒட்டுமொத்த ரத்தக்களறியாக இருக்கும் என்றார்.

    இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறுகையில், அவர் மற்றொரு ஜனவரி 6-ம் தேதியை விரும்புகிறார். அமெரிக்க மக்கள் இந்த நவம்பரில் அவருக்கு மற்றொரு தேர்தல் தோல்வியைக் கொடுக்கப் போகிறார்கள். ஏனெனில் மக்கள் அவரது பயங்கரவாதம், வன்முறை மீதான அவரது பாசம் மற்றும் பழிவாங்கும் தாகம் ஆகியவற்றை நிராகரித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

    • வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மேலும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றார்.
    • தகவலறிந்ததும் போலீசார், தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க நடவடிக்கையில் இறங்கினர்.

    அமெரிக்காவின் வடக்கு பிலடெல்பியா புறநகர் பகுதியான லெவிட்டவுனில் உள்ள ஒரு வீட்டுக்கு முன் துப்பாக்கியுடன் புகுந்த வாலிபர், அங்கிருந்த 55 வயது பெண் மற்றும் 13 வயது சிறுமி ஆகிய 2 பேரை சுட்டுக்கொன்றார்.பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் மேலும் ஒரு பெண்ணை சுட்டுக் கொன்றார்.

    இது குறித்து தகவலறிந்ததும் போலீசார், தப்பி ஓடிய வாலிபரை பிடிக்க நடவடிக்கையில் இறங்கினர். இதில் நியூ ஜெர்சி நகரில் பதுங்கியிருந்த அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஆண்ட்ரே கார்டன் (வயது 26) என்பதும் அவர் தனது வளர்ப்புத்தாய் மற்றும் சகோதரியை சுட்டுக் கொன்றதும் தெரிய வந்தது.

    டிராண்டன் பகுதியில் கார் ஒன்றை திருடிய ஆண்ட்ரே கார்டன், அதில் லெவிட்டவுன் பகுதிக்கு சென்று தனது உறவினர்களை சுட்டுக் கொன்றுள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் இறுதிக்கு முன்னேறினார்.
    • மெத்வதேவ் அமெரிக்க வீரர் டாமியை தோற்கடித்தார்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 1-6 என முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர், 7-6 (7-3), 6-2 என்ற செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதியில் மெத்வதேவ் கார்லோஸ் அல்காரசுடன் மோத உள்ளார்.

    • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில், மியாமி ஓபன் போட்டியில் இருந்து விலகுவதாக நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் அறிவித்தார்.

    இதுதொடர்பாக, ஜோகோவிச் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வணக்கம் மியாமி. துரதிர்ஷ்டவசமாக இந்த ஆண்டு நான் மியாமி ஓப்பனில் விளையாட மாட்டேன். எனது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் எனது தனிப்பட்ட மற்றும் தொழில் அட்டவணையை நான் சமநிலைப்படுத்துகிறேன். உலகில் உள்ள சில சிறந்த மற்றும் மிகவும் ஆர்வமுள்ள ரசிகர்களை நான் அனுபவிக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • கார்லோஸ், ஜானிக் சின்னர் ஆகியோர் அரையிறுதியில் மோதினர்.
    • இதில் கார்லோஸ் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் கார்லோஸ் 1-6 என முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது .

    • இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை மார்டா கோஸ்டியூகுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, அமெரிக்காவின் கோகோ கோப்புடன் மோதினார். இதில் சக்காரி

    6-4, 6-7 (5-7) 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக், மரியா சக்காரி ஆகியோர் மோதுகின்றனர்.

    • இந்த ஆண்டு இந்தியாவில் நிதித்துறை ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் அதிகரிக்கும்.
    • சிங்கப்பூர், ஹாங்காங்கில் 4 சதவீதம் மட்டுமே சம்பள அதிகரிப்பு இருக்கும் என்கிறது ஆய்வு.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்த புளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் அமைப்பு தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், புளூம்பெர்க் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சிங்கப்பூர், ஹாங்காங் நிதித்துறை ஊழியர்களைவிடக் கூடுதலான சம்பள உயர்வு கிடைக்கும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சீனப் பொருளாதாரம் மந்தமாகியுள்ள நிலையில், நிறுவனங்கள் இந்தியப் பொருளியல் வளர்ச்சியைச் சாதகமாக்கிக்கொள்ள முனைந்திருப்பதை அது சுட்டிக்காட்டுகிறது.

    இந்த ஆண்டு இந்தியாவில் நிதித்துறை ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் அதிகரிக்கும். ஆனால் சிங்கப்பூர், ஹாங்காங்கில் 4 சதவீதம் மட்டுமே சம்பள அதிகரிப்பு இருக்கும் என்கிறது.

    சிங்கப்பூர், ஹாங்காங் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் முதலீட்டாளர்கள் அதிகப் பொருள்களை வாங்குகின்றனர்.

    இந்திய நிதித்துறை ஊழியர்களுக்கான சராசரி அடிப்படைச் சம்பளம் ஹாங்காங் ஊழியர்களைவிட 4.5 சதவீதம் அதிகம். சிங்கப்பூர் ஊழியர்களைவிட அது 7.7 சதவீதம் அதிகம் என கூறுகிறது.

    உயர் பதவிகளுக்கான ஊழியர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாலும் தொழில்நுட்பம், தொழிலில் ஏற்படக்கூடிய இடையூறுகளை மதிப்பிடுதல் போன்ற பிரிவுகளில் திறனாளர் பற்றாக்குறையாலும் இந்தியாவில் சம்பளம் தொடர்ந்து உயரும் என தெரிவித்துள்ளது.

    • ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • கார்லோஸ், ஜானிக் சின்னர் ஆகியோர் காலிறுதியில் வென்றனர்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே

    மோதினார். இதில் மெத்வதேவ் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார். இதில் கார்லோஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் நாட்டின் ஜிரி லெஹெகாவுடன் மோதினார். இதில் சின்னர் 6-3, 6-3 என கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் சின்னரும், கார்லோசும் மோத உள்ளனர்.

    • இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
    • அனைத்து சமூகங்களுக்கும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்

    இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, "குடியுரிமை திருத்த சட்டத்தின் அறிவிப்பைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம்.

    இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்" என்றார்.

    பா.ஜனதா அரசால் கடந்த 2019-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிஏஏ மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். 4 வருடங்கள், 3 மாதங்கள் கழித்து கடந்த வாரம் இந்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆதாயத்திற்காக பா.ஜனதா தற்போது அமல்படுத்தியுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

    தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய 3 மாநிலங்கள் இந்த இதை செயல்படுத்தமாட்டோம் என அறிவித்துள்ளது.

    ஆனால் சிஏஏ முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. விண்ணப்பிக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை. ஒருபோதும் சிஏஏ திரும்ப பெறப்படாது என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    • ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
    • மெத்வதேவ் பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவை தோற்கடித்தார்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில், இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், இங்கிலாந்தின் பென் ஷெல்டனுடன் மோதினார். இதில் சின்னர் 7-6 (7-4), 6-1 என கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் மெத்வதேவ், ஹோல்ஜர் ரூனேவும் மோத உள்ளனர்.

    • இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த போட்டியில் அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    கலிபோர்னியா:

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்தியன் வெல்ஸ் பகுதியில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் எம்மா நவாரோவுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 3-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் எம்மாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் எம்மா நவாரோ, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதுகிறார்.

    • 2020-ல் டொனால்டு டிரம்ப் டிக்டிக் செயலிக்கு தடை விதிக்க முயற்சி மேற்கொண்டார்.
    • தற்போது 352 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியுள்ளது.

    உலக அளவில் பொழுது போக்கிற்கான செயலில்களில் பெரும்பாலானவை சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனங்களின் செயலிகள் ஆகும். அதில் ஒன்றுதான் டிக்டிக் செயலி. இந்த செயலின் தலைமை நிறுவனம் பைட்டான்ஸ் (ByteDance). இந்த நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு செயலிகளும் பயனர்களின் சம்மதம் இல்லாமலேயே முறைகேடாக தரவுகளை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நடைமுறை சாத்தியமான உளவு நடவடிக்கை என சில நாடுகள் குற்றம்சாட்டின. மேலும் இது நாட்டிற்கு அச்சுறுத்தல் எனவும் தெரிவித்தன.

    இதனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் கடந்த 2020-ல் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தன. அமெரிக்காவின் சில மாநிலங்கள் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தன. மேலும், அமெரிக்கா முழுவதும் இந்த செயலியை தடைவிதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது.

    அப்போது அமெரிக்கா சார்பில் டிக்டாக் செயலியை சீன நிறுவனம் விற்பனை செய்தால் அமெரிக்காவில் செயல்பட தடையில்லை எனத் தெரிவித்தது. ஆனால் குற்றச்சாட்டுகளை டிக்டாக் செயலியின் தலைமை நிறுவனம் மறுத்து வந்தது.

    அதன்பின் டிக்டாக் செயலி தடை குறித்து மிகப்பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தது. ஆனால் சமீப காலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் டிக்டாக் தடை குறித்து மீண்டும் பேச ஆரம்பித்தனர். இதனால் பாராளுமன்றத்தில் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கான மசோதா கொண்டு வர திட்டமிடப்பட்டது.

    அதன்படி நேற்று மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 352 பேர் வாக்களித்தனர். 65 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இந்த மசோதா சென்ட் சபையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றப்பட்டு அதிபரின் கையெழுத்திற்கான வெள்ளை அனுப்பப்படும். அதிபர் கையெழுத்திட்டதும் டிக்டாக் செயலி தடை செய்யப்படும்.

    டிக்டாக் செயலின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) டிக்டாக் செயலில் இருந்து விலக வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் என அந்த மசோதா குறிப்பிடுகிறது. டிக்டாக் செயலி அமெரிக்காவில் தொடந்து செயல்பட வேண்டுமென்றால் பைட்டான்ஸ் அதனை விற்பனை செய்ய வேண்டும்.

    இதற்கு முன்னதாக 2020-ல் டொனால்டு டிரம்ப் இந்த செயலிக்கு தடைவிதிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் நீதிமன்றம் தலையீடு காரணமாக அது வெற்றி பெற முடியாமல் போனது.

    ×