என் மலர்
உக்ரைன்
- உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.
- ரஷிய ராணுவத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் ரஷிய ராணுவத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை உக்ரைன் போரில் 20 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலியாகி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
80 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித்தொடர்பாளர் ஜான் கெர்பி கூறும்போது கடந்த 5 மாதத்தில் ரஷிய வீரர்கள் 20 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக கணித்துள்ளோம். பக்முத் வழியாக டான்பாஸ் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தும் ரஷியாவின் முயற்சி தோல்வி அடைந்தது ரஷ்யாவால் முக்கியத்துவம் வாய்ந்த எந்த பகுதியையும் கைப்பற்ற முடியவில்லை என்றார்.
- 2 ஏவுகணைகள் உமான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை தாக்கின.
- ரஷியாவின் 11 ஏவுகணைளை உக்ரைன் விமானப்படை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.
உமான்:
உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை தொடங்கி தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சில முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ரஷியா, தொடர்ந்து முன்னேறி வருகிறது. அடிக்கடி நீண்ட தூர ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்துகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. சமாதான பேச்சுவார்த்தைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாததால், ஓராண்டைக் கடந்தும் சண்டை நீடிக்கிறது.
இந்நிலையில் உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷியா இன்று அடுத்தடுத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 2 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 2 ஏவுகணைகள் உமான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை தாக்கின. இதில் 17 பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். மற்றொரு பகுதியில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 17 பேர் காயமடைந்துள்ளனர். 3 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு தலைநகர் கீவ் மீது முதல் முறையாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கீவ் மீது பறந்த 11 ஏவுகணைகள் மற்றும் 2 ஆளில்லா விமானங்களை உக்ரைன் விமானப்படை இடைமறித்ததாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- லுஹான்ஸ்க் பிராந்தியம் சென்ற புதின் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
- வாழ்த்து தெரிவித்த புதின், அவர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை கடந்த பிறகும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் ரஷியாவின் பல பகுதிகள் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.
அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஷியா ஆகிய 4 பிராந்தியங்களை ரஷிய தன்னுடன் இணைத்து கொண்டது. சட்டவிரோதமான செயல் என கூறி ரஷியாவின் இந்த நடவடிக்கையை உலக நாடுகள் நிராகரித்தன.
இந்த நிலையில் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுஹான்ஸ்க் மற்றும் கெர்சன் பிராந்தியங்களுக்கு நேற்று ரஷிய அதிபர் புதின் திடீர் பயணமாக சென்றார்.
ஹெலிகாப்டர் மூலம் கெர்சன் பிராந்தியத்துக்கு சென்ற புதின் அங்குள்ள ராணுவ தலைமையகத்துக்கு சென்று, மூத்த ராணுவ அதிகாரிகளை சந்தித்து களநிலவரம் குறித்து கேட்டறிந்தார். அதை தொடர்ந்து, லுஹான்ஸ்க் பிராந்தியம் சென்ற புதின் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
இரண்டு இடங்களிலும், ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த புதின், அவர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.
- உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் நீடித்தபடி இருக்கிறது.
- 80 சதவீதம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் நீடித்தபடி இருக்கிறது. குறிப்பாக கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள ஸ்லோவியன்ஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் மீது ரஷிய படையினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் அக்கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இத்தாக்குதலில் குழந்தை உள்பட 8 பேர் பலியானார்கள். 21 பேர் காயம் அடைந்தனர். இதற்கிடையே டொனெட்ஸ்த் பிராந்தியத்தில் உள்ள முக்கிய பகுதியான பக்முத்தை கைப்பற்ற ரஷிய படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்பகுதியில் 80 சதவீதம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
- உக்ரைனுக்கு சொந்தமான ராணுவ உபகரணங்களை அழித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
- லைமன், பக்முத் ஆகிய பகுதிகளில் ரஷ்யப்படைகளின் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க பீரங்கியை தாக்கி அழித்ததாக, ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், அமெரிக்காவுக்கு சொந்தமான 'எம் - செவன் செவன் செவன்' ரக பீரங்கி உட்பட, உக்ரைனுக்கு சொந்தமான ராணுவ உபகரணங்களை அழித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேபோல உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைமன், பக்முத் ஆகிய பகுதிகளில் ரஷ்யப்படைகளின் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
- உக்ரைன் குழந்தைகள் கடத்தப்படவில்லை என்றும் அவர்களது சொந்த பாதுகாப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ரஷியா தெரிவித்தது.
- குழந்தைகள் மீட்பு பணியை சேவ் உக்ரைன் மனிதாபிமான அமைப்பு செய்து வருகிறது.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனில் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின.
போரின் போது ரஷிய படைகள் பிடித்த பகுதிகளில் இருந்த மக்கள் ரஷியா மற்றும் கிரிமியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஏராளமான குழந்தைகள் அவர்களது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டனர்.
சுமார் 19,500 குழந்தைகள் ரஷியா அல்லது ரஷியா ஆக்கிரமிப்பு கிரிமியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் குழந்தைகள் கடத்தப்படவில்லை என்றும் அவர்களது சொந்த பாதுகாப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ரஷியா தெரிவித்தது.
ரஷியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட உக்ரைனின் சிறுவர்-சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக உக்ரைனை சேர்ந்த 31 சிறுவர்-சிறுமிகள் மீண்டும் பெற்றோருடன் இணைந்தனர்.
இவர்கள் கார்கில் மற்றும் கெர்சன் பகுதிகளில் இருந்து ரஷியாவுக்கு அழைத்து செல்லப்பட்டு இருந்தனர். 31 பேரும், உக்ரைன்-பெலாரஸ் எல்லை வழியாக சொந்த நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது தங்கள் பெற்றோரை கட்டியணைத்து அழுதனர்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் கூறும்போது, நாங்கள் தத்தெடுக்கப்படுவோம். எங்களுக்கு பாதுகாவலர்கள் கிடைப்பார்கள் என்று ரஷிய அதிகாரிகள் கூறினார்கள். இங்கு நீண்ட காலம் இருப்போம் என்று அவர்கள் சொன்ன போது அழ ஆரம்பித்தோம்.
நாங்கள் தங்க வைக்கப்பட்ட முகாம்களில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் இருந்தன. அவைகளுடன்தான் நாங்கள் இருந்தோம் என்றனர். குழந்தைகள் மீட்பு பணியை சேவ் உக்ரைன் மனிதாபிமான அமைப்பு செய்து வருகிறது.
- போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டறிய செயலி ஒன்றை உக்ரைன் அரசு அறிமுகப்படுத்தியது.
- ரஷியாவுக்கு கடத்தப்பட்ட 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர்
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 13 மாதங்களைக் கடந்துள்ளது. இந்தப் போரின்போது உக்ரைனில் இருந்து பல ஆயிரக்கணக்கான குழந்தைகளை ரஷியா தங்களது நாட்டுக்கு கடத்தியதாகவும், அதில் 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர் எனவும் ரஷியா மீது உக்ரைன் குற்றம் சாட்டியது.
இதனை மறுத்த ரஷியா போரில் இருந்து பாதுகாப்பதற்காகவே குழந்தைகளை அழைத்துச் சென்றதாக கூறியது.
இதற்கிடையே குழந்தைகளை கடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், போரில் காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடித்து பெற்றோரிடம் சேர்ப்பதற்காக `ரீயூனைட் உக்ரைன்' என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி போரால் பிரிந்த குடும்பங்களை இணைக்க உதவிகரமாக இருக்கும் என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
- உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
- கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 210 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் அதிகரித்தபடியே உள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது. கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தை நோக்கி முன்னேறி வந்த உக்ரைன் ராணுவ வீரர்களை குறி வைத்து ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர்.
கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 210 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் துருக்கியிடம் பெறப்பட்ட கவச வாகனங்கள் உள்பட உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான ஏராளமான ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உக்ரைன் உடனடியாக எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் 2 லட்சம் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுடனான போரின் போது ரஷிய வீரர்கள் ஆயுதங்களை மோசமாக கையாண்டதாலும் தங்களை தாங்களே காயப்படுத்திக் கொண்டதாலும் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷிய வீரர்கள் அதிகப்படியான மது அருந்தியதாலும் உயிரிழப்பு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர சாலை விபத்துகள், தாழ் வெப்ப நிலை போன்றவைகளாலும் உக்ரைன் வீரர்களின் தாக்குதலாலும் பலர் உயிரிழந் திருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியா தனது ராணுவ வீரர்களின் இறப்பு குறித்து ஆரம்பத்தில் இருந்தே சரியான புள்ளிவிவர கணக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் போர் தொடங்கி 400 நாள் நிறைவடைந்துள்ளது.
- ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம் என உக்ரைன் அதிபர் சபதமிட்டார்.
கீவ்:
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்துள்ளது. ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.
இதற்கிடையே, உக்ரைன் போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோவில் தோன்றி பேசியதாவது:
இந்தப் போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெறும். நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம். அதற்கான தகவலை சேகரித்து வருகிறோம். முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு எதிரான எங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் 400 நாட்களாக தொடர்ந்து வருகின்றன. நாங்கள் ஒரு பெரிய பாதையில் நடந்து வந்துள்ளோம்.
உக்ரைனுக்காக போரிட்ட மற்றும் போரிட்டு வரும், நாடு மற்றும் நாட்டு மக்களை கவனத்துடன் பாதுகாத்த மற்றும் பாதுகாத்து வரும், உதவி செய்து மற்றும் தொடர்ந்து எங்களது பாதுகாப்பு தளவாடங்களுக்கு உதவி வரும், உக்ரைனின் மீட்சியை வலுப்படுத்தியவர்களுக்கும், வலுப்படுத்தி வருபவர்களும் அனைவரும் ஒன்றிணைவோம்.
உக்ரைன் பயங்கர நாட்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பி வந்துள்ளோம். இந்த வார்த்தைகளுக்கு பின்னால், பெரிய முயற்சிகள் இருந்துள்ளன.
கீவ், செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகள், எங்களுடைய கார்கிவ் பகுதிக்கு மீண்டும் நாங்கள் திரும்பி வந்துள்ளது, கெர்சன் நகருக்கு திரும்பி வந்தது, பாக்முத் மற்றும் தொன்பாஸ் நிலங்களை பாதுகாத்தது, என்பது உக்ரைனியர்களின் வீரம். இதனை இந்த உலகம் மறக்காது என தெரிவித்துள்ளார்.
- ரஷியாவின் இந்த நடவடிக்கையானது உள்நாட்டின் ஸ்திரமின்மையை நோக்கிய நகர்வு என உக்ரைன் கருத்து
- பெலாரஸ் அரசு, ரஷிய படைகளை தனது நாட்டில் இருந்து உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்க அனுமதி அளித்தது
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைன் முக்கிய பகுதிகளை கைப்பற்றி ரஷியா, தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்துகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருவதால் போர் நீடிக்கிறது.
இந்நிலையில் ரஷிய அதிபர் புதின், நட்பு நாடான பெலாரசில் முக்கியமான அணு ஆயுதங்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நானும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் ஒப்புக்கொண்டோம் என்றும் புதின் தெரிவித்தார்.
இதையடுத்து, பெலாரசை அணு ஆயுதப் பணயக் கைதியாக ரஷியா வைத்திருப்பதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் டேனிலோவ் குற்றம்சாட்டி உள்ளார். ரஷியாவின் இந்த நடவடிக்கையானது உள்நாட்டின் ஸ்திரமின்மையை நோக்கிய ஒரு நகர்வு என்றும், புதினின் அறிவிப்பு பெலாரஸ் மக்களிடையே ரஷியா மீதான எதிர்மறையான கருத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் அவர் கூறினார்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெலாரஸ் அரசு, ரஷிய படைகளை தனது நாட்டில் இருந்து உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தகக்து.
- ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய போர் தொடுத்து வருகிறது.
- இருநாட்டு ராணுவத்துக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது.
கீவ் :
ஓர் ஆண்டுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷிய போர் தொடுத்து வருகிறது. அதே வேளையில் நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் ஓர் ஆண்டாக ரஷிய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகிறது.
ரஷிய படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள பக்முத் நகரை கைப்பற்ற தீவிரம்காட்டி வரும் நிலையில் அங்கு இருநாட்டு ராணுவத்துக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது.
இதனிடையே ரஷியாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் எதிர் தாக்குதலை நடத்த உக்ரைன் தயாராகி வருவதாகவும், அதற்கு பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் ஆயுதங்கள் பற்றாக்குறையால் ரஷியாவுக்கு எதிராக எதிர் தாக்குதலை தொடங்க முடியவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எங்களால் இன்னும் தாக்குதலை தொடங்க முடியவில்லை. பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் இல்லாமல் எங்கள் துணிச்சலான வீரர்களை முன் வரிசைக்கு அனுப்ப முடியாது" என கூறினார்.
மேலும் நட்பு நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை பெற காத்திருப்பதாகவும், நாட்டின் கிழக்கு பகுதியில் நிலைமை சாதகமாக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
- தலைநகர் கீவ்வின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அக்கட்டிடம் இடிந்தது.
- சபோரிஜுயாவில் குடியிருப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு ஆண்டை கடந்து நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷிய படைகள் டிரோன் தாக்குதலை நடத்தியது.
தலைநகர் கீவ்வின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அக்கட்டிடம் இடிந்தது. இதில் 3 பேர் பலியானார்கள். அதேபோல் ரிஷிசிவ் நகரில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் நடந்த டிரோன் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர்.
சபோரிஜுயாவில் குடியிருப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதற்கிடையே தாக்குதலுக்கு பயன் படுத்தப்பட்ட 21 டிரோன்களில் 16-யை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்தது. ரஷியா சென்றிருந்த சீன அதிபர் ஜின்பிங் அங்கிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






