என் மலர்
பிரிட்டன்
- ஆன்மீக தலைவரான மொராரி பாபு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராம கதை உபன்யாசம் செய்து வருகிறார்.
- இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 12-ல் தொடங்கியது. வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.
லண்டன்:
ஆன்மீக தலைவரான மொராரி பாபு பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று ராம கதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், இந்திய சுதந்திர தினமான நேற்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
நான் இங்கு பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்.
என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழிநடத்துகிறது.
பிரதமராக இருப்பது மிகப்பெரிய கவுரவம், ஆனால் அது எளிதான பணி அல்ல. எடுக்க கடினமான முடிவுகள் உள்ளன. நம் நம்பிக்கை எனக்கு தைரியத்தையும், வலிமையையும், நம் நாட்டிற்கு என்னால் முடிந்ததைச் செய்ய உறுதியையும் அளிக்கிறது.
ராமாயணம், பகவத் கீதை மற்றும் அனுமான் சாலிசா ஆகியவற்றை நினைவு கூர்ந்து இன்று இங்கிருந்து புறப்படுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி உழைக்கவும் ராமர் எப்போதும் ஓர் உத்வேகமான நபராக இருப்பார் என தெரிவித்தார்.
பிரதமர் ரிஷி சுனக் தனது உரையை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் ஜெய் ராம் என கூறியது குறிப்பிடத்தக்க்கது.
- அணிக்காக விளையாட பென் ஸ்டோக்ஸிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
- பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார்.
இந்நிலையில், விரைவில் வரவுள்ள உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாட வருமாறு பென் ஸ்டோக்ஸிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது
இதைதொடர்ந்து, பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அதை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து ஒருநாள் அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
- நாணயம் மன்னர் சார்லசின் அதிகாரப்பூர்வ உருவப்படம் பொறித்து புழக்கத்தில் வந்துள்ள 2-வது நாணயமாகும்.
லண்டன்:
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா கடந்த மே மாதம் 6-ந்தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கோலாகலமாக நடந்தது.
மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளதாக அதனை அதிகாரப்பூர்வமாக தயாரித்த தி ராயல் மின்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் வங்கி கிளைகளில் இந்த சிறப்பு நாணயங்களை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக இந்த நாணயம் புழக்கத்தில் வந்தது. இந்த நாணயம் மன்னர் சார்லசின் அதிகாரப்பூர்வ உருவப்படம் பொறித்து புழக்கத்தில் வந்துள்ள 2-வது நாணயமாகும்.
- அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
- டி20 உலகக் கோப்பை வெற்றியாளராக இங்கிலாந்துடனான எனது கடைசி போட்டியிலிருந்து வெளியேறுவது சரியான முடிவாகும்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தவர். மேலும் ஜோஸ் பட்லருடன் இணைந்து அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார்.
ஹேல்ஸ் கடைசியாக கடந்த நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்காக விளையாடினார். மூன்று வருடங்களுக்கு பிறகு அலெக்ஸ் போட்டிக்கு திரும்ப அழைக்கப்பட்டார்.
இந்நிலையில், அலெக்ஸ் தனது 11 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
ஓய்வு குறித்து ஹேல்ஸ் கூறியதாவது:-
அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடியது ஒரு பாக்கியம். இப்போது அந்த பயணத்தைப் பற்றி சிந்தித்து பார்க்கிறேன். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நான் பெற்ற வாழ்க்கை மற்றும் இங்கிலாந்தின் அணியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக இருந்த தருணங்கள் உண்மையில் திருப்தி அளிக்கிறது.
ஆடுகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் செய்த பல நினைவுகள் உள்ளன. ஆனால் டிரெண்ட் பிரிட்ஜில் அந்த இரண்டு ஒரு நாள் சர்வதேச உலக சாதனை ரன்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். மேலும் இங்கிலாந்தில் நடந்த அந்த இரண்டு ஆட்டங்களிலும் மூன்று புள்ளிகளை எட்ட முடிந்தது.
டி20 உலகக் கோப்பை வெற்றியாளராக இங்கிலாந்துடனான எனது கடைசி போட்டியிலிருந்து வெளியேறுவது சரியான முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
லண்டன்:
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் இங்கிலாந்து கருங்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட் டார். இதற்கு அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பசுமை பாதுகாப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரதமர் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் புதிய திட்டத்தை எதிர்த்து வடக்கு யார்க் ஷையர் மாகாணத்தில் உள்ள பிரதமர் ரிஷி சுனக் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முற்றுகையிட்டனர். பின்னர் அவரது வீட்டை பெரிய கறுப்பு துணியால் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயம் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் குடும்பத்தினர் வீட்டில் இல்லை. அவர் தற்போது குடும்பத்தினருடன் கலிபோர்னியா சென்றுள்ளார்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. பிரதமர் வீட்டில் பலத்த பாதுகாப்பை மீறி அவர்கள் எப்படி சென்றனர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆஷஸ் தொடரில் தாமதமாக பந்து வீசியதால் இங்கிலாந்து அணி 19 புள்ளிகளை இழந்துள்ளது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளை இழந்துள்ளது.
லண்டன்:
சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றிகளைப் பெற்றதால், அத்தொடர் சமனில் முடிந்தது.
இந்நிலையில், ஆஷஸ் தொடரில் மெதுவாக ஓவர்கள் வீசியதாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு அபராதத் தொகை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அபராதப் புள்ளிகளை ஐசிசி விதித்துள்ளது.
இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி தாமதமாக பந்து வீசியதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் டெஸ்டில் 2 ஓவர்களையும், இரண்டாவது டெஸ்டில் 9 ஓவர்களையும், மூன்றாவது டெஸ்டில் 3 ஓவர்களையும், ஐந்தாவது டெஸ்டில் 5 ஓவர்களையும் இங்கிலாந்து குறைவாக வீசியது. இதற்காக ஒரு ஓவருக்கு ஒரு அபராதப் புள்ளி வீதம் அந்த அணிக்கு 19 அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆஷஸ் தொடரில் 2 வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 28 புள்ளிகளை இங்கிலாந்து பெற்றது. 19 அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டதால் வெறும் 9 புள்ளிகளை மட்டுமே பெற்ற இங்கிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு இறங்கியது.
இதேபோல், 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. 10 ஓவர்கள் குறைவாக வீசியதால் அந்த அணிக்கு 10 அபராதப் புள்ளிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 3-வது இடத்தில் உள்ளது.
மேலும், தாமதமாக வீசிய ஒவ்வொரு ஓவருக்கும் ஆட்ட ஊதியத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு நான்காவது டெஸ்ட்டுக்கான ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட்டுகளுக்கு ஐசிசி முறையே 10, 45, 15 மற்றும் 25 சதவீதத் தொகை அபராதம் விதித்துள்ளது.
- 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா வெற்றிபெற 384 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- ஆனால் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 334 ரன்களில் ஆல் அவுட்டானது.
லண்டன்:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 41 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
12 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜோ ரூட் 91 ரன்னும், ஜானி பேர்ஸ்டோவ் 78 ரன்னும், சாக் கிராவ்லே 73 ரன்னும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை ஆடியது. நான்காம் நாள்முடிவில் ஆஸ்திரேலியா 38 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 58 ரன்னும், உஸ்மான் கவாஜா 69 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா இறங்கியது.
அணியின் எண்ணிக்கை 140 ஆக இருந்தபோது வார்னர் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து உஸ்மான் கவாஜா 72 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ரன்னில் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார். அவருக்கு டிராவிஸ் ஹெட் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஹெட் 43 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி 28 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து போராடி வெற்றி பெற்றது. இதையடுத்து ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மொயீன் அலி 3 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராடு 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஸ்டூவர்ட் விடைபெறுகிறார்.
- இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்.
இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இவர், ஆஷஸ் டெஸ்டின் 5வது மற்றும கடைசி போட்டியில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், ஆஷஸ் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஓய்வு பெறவுள்ளதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.
இதன்மூலம், 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஸ்டூவர்ட் விடைபெறுகிறார்.
தனது ஓய்வு குறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறியதவாது:-
இது ஒரு அற்புதமான பயணம். நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜ் அணிந்திருப்பது ஒரு பெரிய பாக்கியம்.
மேலும், நான் எப்போதும் போல் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். தற்போதைய ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான தொடராக இருந்தது.
இத்தொடரில் ஒரு பகுதியாக நானும் இருந்ததில் மகிழ்ச்சி. ஆஷஸ் தொடர் மிகவும் சுவாரஸ்யமாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தது.
சில வாரங்களாகவே ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். எனக்கு ஆஷஸ் தொடர் மீது தீராக்காதல்.
அதனால்தான் எனது கடைசி போட்டி ஆஷசில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.
நேற்று இரவு ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரிடம் எனது ஓய்வு முடிவை கூறினேன்.
உண்மையைச் சொல்வதானால், இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்று 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஓய்வு அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்டிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அணிவகுத்து நின்றனர்.
அப்போது, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் தனது நீண்ட கால பந்துவீச்சு கூட்டாளியான ஆண்டர்சனையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.
அவர்கள் களத்தில் இறங்கியபோது, பிராட் ஆண்டர்சனை ஒரு பக்கமாக அணைத்து, மரியாதையின் போது அவரையும் அழைத்துச் சென்றார்.
ஆண்டர்சன் எல்லைக் கோட்டிற்குப் பின்னால் நின்று பிராட் தனது தருணத்தை ரசிக்க வைத்தார்.
- முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்கள் எடுத்தது.
லண்டன்:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 41 ரன்னில் அவுட்டானார். முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
ஹாரி புரூக் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 85 ரன்னில் ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் 36 ரன்னும், மொயீன் அலி 34 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பிராட், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
12 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ ரூட் அதிகபட்சமாக 91 ரன்களை குவித்தார்.
ஜானி பேர்ஸ்டோ 78 ரன்னும், சாக் கிராவ்லே 73 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து, பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் தலா 42 ரன்கள் எடுத்தனர். 3ம் நாள் முடிவில், இங்கிலாந்து அணி 80 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 389 ரன்களை எடுத்திருந்தது. இதனால் இங்கிலாந்து அணி 377 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில் இங்கிலாந்து 395 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.
- ஜோ ரூட் இந்தத் தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார்.
- டெஸ்டில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கர் (19 முறை) சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டத்திலும், இங்கிலாந்து 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து பேட்டிங் செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 295 ரன்னும் எடுத்தன.
இதனால் 12 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 3ம் நாள் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 389 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை இங்கிலாந்து 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 5 ரன்னும், 2வது இன்னிங்சில் 91 ரன்னும் எடுத்தார். அவர் இந்த தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார். இந்த ரன் குவிப்பின் மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். அதாவது, டெஸ்ட் தொடரில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் (19 முறை) சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இதற்கு அடுத்த இடங்களில் ராகுல் டிராவிட் (18 முறை), பிரையன் லாரா (18), ரிக்கி பாண்டிங் (17), அலெஸ்டர் குக் : 17 முறை
- இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
- இங்கிலாந்து அணி 80 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இதனால் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 54.4 ஓவரில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஹேசில்வுட், மர்பி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. இதில், ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, நேற்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 103.1 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், 3ம் நாள் ஆட்டமான இன்று இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
இதில், முதலில் களமிறங்கிய சாக் கிராவ்லே அரை சதம் அடித்து 73 ரன்களை குவித்தார். தொடர்ந்து, பென் டக்கெட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் அதிகபட்சமாக 91 ரன்களை குவித்தார்.
ஹாரி ப்ரூக் 7 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 78 ரன்களும், கிரிஸ் வோக்ஸ் ஒரு ரன்னும், மொயின் அலி 29 ரன்களும், மார்க்வுட் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியாக, ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
3ம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி 80 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்களை குவித்தது.
இதன்மூலம், இங்கிலாந்து அணி 377 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
- இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் 2 விக்கெட் கைப்பற்றினார்.
- ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 30 போட்டிகளில் 157 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.
லண்டன்:
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 283 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 293 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் 2 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அவர் ஆஷஸ் தொடரில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
அவர் ஆஷஸ் தொடரில் 40 போட்டிகளில் விளையாடி 151 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் வார்னே 36 போட்டிகளில் 195 விக்கெட்டும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 30 போட்டிகளில் 157 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.






