என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • இம்ரான்கான் தலைமையில் கடந்த 20-ம் தேதி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்தப்பட்டது.
    • இம்ரான்கானுக்கு செப்டம்பர் 1-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான்கான், போலீஸ் உயர் அதிகாரிகளையும், நீதிபதியையும் மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து, இம்ரான்கான் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என பாகிஸ்தானில் பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே, கடந்த 22-ம் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட் இம்ரான்கானுக்கு 3 நாள் முன் ஜாமீன் வழங்கியது. அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் இன்றுடன் நிறைவடைவதால் அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை நீட்டித்து இஸ்லாமாபாத் ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி வரை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    • சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் அதிக உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
    • வெள்ளப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் உதவி கேட்டு காத்திருக்கின்றனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து 326 குழந்தைகள் மற்றும் 191 பெண்கள் உட்பட 903 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார். 


    பாகிஸ்தான் முழுவதும் மழை பெய்து வருவதால், பல்வேறு சம்பங்களில் 1,293 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பருவமழை மற்றும் வெள்ளத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தானில் மாகாணங்களில் பதிவாகியுள்ளன. 


    ஒரு கோடி மக்கள் வீடுகளை இழந்து, இடம் பெயர்ந்துள்ளனர். மேலும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மண் வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன, ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளப் பகுதிகளில் சிக்கி உதவிக்காக காத்திருக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார். இது பிரிவினைக்கான நேரம் அல்ல, ஒற்றுமைக்கான நேரம். நாம் சமாளிக்க வேண்டும், மனிதாபிமான நெருக்கடியை ஒரே தேசமாக ஒன்றுபட்டு நின்று வெல்வோம் என்றும் ஷெர்ரி ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

    • இம்ரான்கான் தலைமையில் கடந்த 20-ந்தேதி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்தப்பட்டது.
    • இம்ரான்கான் அடுத்தவாரம் 31-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி இஸ்லாமபாத் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான், ஷபாஷ் செரீப் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    கடந்த 20-ந்தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் பங்கேற்ற இம்ரான்கான் அந்தநாட்டின் தலைமை போலீஸ் அதிகாரி, தேர்தல் ஆணையம் மற்றும் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக அவர் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதற்கிடையில் இம்ரான் கான் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு இஸ்லாமாபாத் கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி அவருக்கு முன்ஜாமீன் கொடுத்ததுடன் அவரை நாளை ( 25-ந்தேதி) வரை கைது செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் இம்ரான் கான் மீது பாகிஸ்தான் அப்பாரா போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இஸ்லாமாபாத்தில் அவர் கட்சி சார்பில் அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாகவும்.அதில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப் பட்டதாகவும் இம்ரான்கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதற்கிடையில் இம்ரான் கான் அடுத்தவாரம் 31-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகும்படி இஸ்லாமபாத் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது. அப்போது அவர் போலீஸ் அதிகாரிமற்றும் பெண் நீதிபதி குறித்து விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இம்ரான்கான் தலைமையில் கடந்த 20-ந்தேதி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்தப்பட்டது.
    • போலீசார் இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது முதல் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு மற்றும் ராணுவத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த சூழலில் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில் கடந்த வாரம் தேச விரோத வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை போலீசார் துன்புறுத்துவதாகவும், உடநலம் பாதித்த அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

    இதனை கண்டித்து இம்ரான்கான் தலைமையில் கடந்த 20-ந்தேதி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்தப்பட்டது. அப்போது பேசிய இம்ரான்கான் அந்நாட்டின் பெண் நீதிபதி, போலீஸ் அதிகாரிகள், தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்டல் விடுத்தார். இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

    இந்தநிலையில் இது தொடர்பாக இஸ்லாமாபாத்தை சேர்ந்த நீதிபதி ஒருவர் இம்ரான்கான் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து இம்ரான்கான் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இதனால் இஸ்லாமாபாத்தில் உள்ள இம்ரான்கான் வீட்டின் முன்பு அவரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.

    இதற்கிடையில் இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க இம்ரான்கான் முன்ஜாமீன் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

    • 2 முறை எப்.ஐ.ஏ அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு.
    • 3-வது முறையும் அவர் ஆஜராக மறுத்தால் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக அதனை விசாரிக்கும் எப்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் பதவி இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தற்போதைய பிரதமர் ஷபாஷ் செரீப் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இஸ்லாமாபாத்தில் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி சார்பில் நடந்த பொது கூட்டத்தில் இம்ரான் கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் அரசை கண்டித்து ஆவேசமாக பேசினார். மேலும் அங்குள்ள தேர்தல் ஆணையம், தலைமை போலீஸ் அதிகாரி, பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

    இதையடுத்து அவரது பேச்சை நேரடியாக டிவியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது. பதிவு செய்யப்பட்ட அவரது உரையை தீவிர கண்காணிப்புக்கு பிறகே ஒளிபரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இம்ரான்கானின் சர்ச்சை பேச்சு பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் மீது பயங்கரவாத தடுப்பு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதன் காரணமாக அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது. இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டு முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து உள்ளனர். பாகிஸ்தான் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

    இம்ரான்கான் ஒரு வேளை கைது செய்யபட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இந்தநிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு இம்ரான்கான் வக்கீல்கள் மூலம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்ய இருக்கிறார். இதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவில்லை.

    ஏற்கனவே இம்ரான்கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப்கட்சி வெளிநாடுகளில் பெற்ற உதவியை குறைத்து காட்டியதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கில் இம்ரான்கான் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீசஸ் அனுப்பப்பட்டது. ஆனால் 2 முறை எப்.ஐ.ஏ அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகததால் அவர் மீ து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    3-வது முறையும் அவர் ஆஜராக மறுத்தால் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக அதனை விசாரிக்கும் எப்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுவும் இம்ரான் கானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

    • இம்ரான்கான் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • இம்ரான்கான் பொதுக்கூட்ட உரையை ஒளிபரப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவரது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்தும் கண்டம் தெரிவித்த இம்ரான், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

    இதையடுதது பொதுக் கூட்டத்தில் நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இம்ரான்கானின் பொதுக் கூட்டப் பேச்சை உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது

    இம்ரான்கான் பேச்சை விமர்சித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, ராணுவம் உள்பட பிற அமைப்புகளை குறி வைக்கும் போக்கின் தொடர்ச்சியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இம்ரான் கானின் வீட்டிற்கு செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை கைது செய்ய ஷாபாஸ் ஷெரிப் அரசு திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். 

    • கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.
    • இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பாதிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அந்நாடுடன் சுமூக உறவை மேம்படுத்த முடியும் என்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது.

    இந்நிலையில், இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    பரஸ்பர நம்பிக்கை, நீதி, சமத்துவம் ஆகிய கொள்கை அடிப்படையில் இந்தியாவுடன் அமைதியான உறவு ஏற்படுவதை பாகிஸ்தான் விரும்புகிறது.

    ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பங்கள் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமைதியான தீர்வு காண விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டும்.

    தெற்கு ஆசியா பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவுவது அவசியமானது என தெரிவித்தார்.

    • எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கடந்த வாரம் அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் நடந்தது.
    • விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் அவர் திடீரென கத்தியால் குத்தப்பட்டார்.

    இஸ்லாமாபாத்:

    பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (75), மீது கடந்த வாரம் அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தினார்.

    இந்த தாக்குதலில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார்.

    இந்நிலையில், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய இம்ரான்கான், இச்சம்பவம் பயங்கரமானது, துயரமானது. சல்மான் ருஷ்டி மீதான கோபம் புரிந்துகொள்ளக் கூடியது. ஆனாலும் இந்த தாக்குதல் நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.

    • பேருந்தின் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்
    • பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்துகளே விபத்தில் சிக்குகின்றன.

    கராச்சி:

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று பயணிகள் பேருந்து ஒன்று எண்ணெய் ஏற்றி வந்த லாரியின் பின்புறம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. முல்தான்-சிக்கூர் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர். பேருந்தின் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சிந்து மாகாணத்தின் கராச்சி சாலையில் ரோஹ்ரி அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

    சிந்து மற்றும் பஞ்சாப் மற்றும் கைபர் பாக்துன்க்வா மாகாணங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்துகளே விபத்தில் சிக்குகின்றன. அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், வாகன உரிமம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சரியாக சோதனை செய்யாதது போன்ற காரணங்களால் விபத்து ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    • நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கியது.
    • நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான அவர் மீது பனாமா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டன.

    கடந்த 2018-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப்புக்கு ஒரு வழக்கில் 7 ஆண்டு ஜெயிலும், மற்றொரு வழக்கில் 11 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே உடல்நல பாதிப்புக் காரணமாக லண்டன் சென்று சிகிச்சை பெற லாகூர் கோர்ட்டில் அனுமதி கேட்டார். அவரது தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு லண்டன் செல்ல அனுமதி அளித்தது.

    இதையடுத்து 2019-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார். அதன் பின் அவர் நாடு திரும்பவில்லை.

    இதற்கிடையே பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாய் ஷெரீப் புதிய பிரதமாக பொறுப்பேற்றார்.

    நவாஸ் ஷெரீப்பின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காலாவதியான பின்பு, அதனை புதுப்பிக்க அப்போது ஆட்சியில் இருந்த இம்ரான் கான் அரசு மறுத்து விட்டது.

    தற்போது நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கியது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அமைச்சர் ஜாவேத் லத்தீப் கூறும்போது, "பாகிஸ்தான் அரசியலில் நவாஸ் ஷெரீப் இல்லாமல் ஒரு சமநிலை சாத்தியமற்றது. அவர் நாடு திரும்ப வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவர் நாடு திரும்பியதும் மீண்டும் சிறைக்கு செல்ல பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நாவஸ்) கட்சி அனுமதிக்காது.

    பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில், பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவார். இம்ரான்கானை எதிர்த்து நிற்க அவர் அவசியம் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

    நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் கூறும்போது, "எனது தந்தை நாடு திரும்ப விரும்புகிறேன். ஆனால் அவர் திரும்புவதற்கு சில சிக்கல்கள் தடையாக உள்ளது" என்றார்.

    இதற்கிடையே நவாஸ் ஷெரீப் மீதான பனாமா பேப்பர்ஸ் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையை நீக்க உதவும் வகையில் சட்ட திருத்தங்களை கொண்டு வர ஷபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார்.

    இதன் மூலம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புவதற்காக நடவடிக்கை மும்முரமாக நடந்து வருகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    • லாகூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இம்ரான்கான் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் வீடியோவை வெளியிட்டு பாராட்டினார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே சமயத்தில்தான் சுதந்திரம் பெற்றது. இருந்தபோதிலும் இந்தியா தனது மக்கள் நலனுக்கான உறுதியான நிலைப்பாட்டுடன் தனக்கெனெ ஒரு சுதந்திரமான வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடிகிறது. ஆனால், ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் இது முடியவில்லை.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி இந்தியாதான், பாகிஸ்தான் கிடையாது. ஆனாலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா கூறியதற்கு இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் என்ன சொன்னார் என்று பாருங்கள் என பேசிய இம்ரான்கான், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கச்சா எண்ணெய் விவகாரம் தொடர்பாக பேசும் வீடியோவை ஒளிபரப்பி காட்டினார்.

    அந்த வீடியோவில் கச்சா எண்ணெய் வாங்குவது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், நீங்கள் யார்? ரஷியாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் எரிவாயு வாங்குகின்றன. மக்களின் தேவைக்காக நாங்கள் வாங்குகிறோம். நாங்கள் சுதந்திரமான நாடு என கூறிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    இதைத்தொடர்ந்து பேசிய இம்ரான்கான், ரஷியாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அமெரிக்காவின் நெருக்கடிக்கு பயந்து வாங்கவில்லை. இங்கு, எரிபொருள் விலை ராக்கெட் வீதியில் உயர்ந்து வருகிறது. மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்படுகின்றனர். இந்த அடிமைத்தனத்தை நான் எதிர்க்கின்றேன் என தெரிவித்தார்.

    • ரபியா என்ற பெண் விலைவாசி உயர்வால் தான் எதிர்கொள்ளும் நிதி பிரச்சினைகளை பற்றி அழுது புலம்பும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
    • குழந்தைக்கு மருந்து வாங்குவதை தவிர்க்க முடியுமா? அரசாங்கம் கிட்டத்தட்ட ஏழை மக்களை கொன்று விட்டது என ரபியா கூறி உள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தானில் பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கராச்சியை சேர்ந்த ரபியா என்ற பெண் விலைவாசி உயர்வால் தான் எதிர்கொள்ளும் நிதி பிரச்சினைகளை பற்றி அழுது புலம்பும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

    ரபியாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு கடந்த 4 மாதங்களாக உடல்நலக்குறைவு இருப்பதாகவும், மருந்துகளின் விலை உயர்வால் சிகிச்சைக்கு அதிக செலவு செய்ய முடியாமல் தவித்துள்ளார்.

    இது தொடர்பாக வீடியோவில் ரபியா பேசும்போது, நான் என்ன செய்ய வேண்டும் ? வீட்டு வாடகை, அதிக மின்சார கட்டணத்தால் என் குழந்தைகளுக்கு பால் மற்றும் மருந்து வாங்க முடியவில்லை. என் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டுமா? அல்லது அவர்களை கொல்ல வேண்டுமா? என கூறி உள்ளார்.

    மேலும் என் குழந்தைக்கு மருந்து வாங்குவதை தவிர்க்க முடியுமா? அரசாங்கம் கிட்டத்தட்ட ஏழை மக்களை கொன்று விட்டது என கூறி உள்ளார்.

    இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், நிதி மந்திரி மிப்தா இஸ்மாயில் இதற்கு பதிலளித்துள்ளார்.

    அவர் கூறும்போது, ஜூன் மாதத்தில் அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்கவில்லை. மேலும் மருந்துகளுக்கும் புதிய வரிகளை விதிக்கவில்லை என்றார்.

    ×