என் மலர்
பாகிஸ்தான்
- டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
- காயத்தால் அவதிப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி உலக கோப்பை அணிக்கு திரும்பியுள்ளார்.
கராச்சி:
7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் துணை கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்காமல் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சஹீன் ஷா அப்ரிடி உலக கோப்பை அணிக்கு திரும்பியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் விவரம் வருமாறு:
பாபர் அசாம் (கேப்டன்) , ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிப் அலி, ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, ஷான் மசூத், யுஸ்மான் காதர்.
காத்திருப்பு வீரர்கள் - பகர் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி
- இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக 2019-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
- பயங்கரவாதி நஞ்கர்ஹர் மாகாணத்திலோ அல்லது குனார் மாகாணத்திலோ பதுங்கி இருக்கலாம்.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் கடந்த 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போலி ஆவணங்கள் மூலம் காஷ்மீரின் ஸ்ரீநகருக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1999-ம் ஆண்டு இந்தியாவின் பயணிகள் விமானத்தை கடத்தி சென்ற பயங்கரவாதிகள், சிறையில் இருந்த மசூத் அசார் உள்பட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க நிபந்தனைகள் விதித்தனர்.
இதையடுத்து மசூத் அசார் உள்பட 3 பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் 2001-ம் ஆண்டு இந்திய பாராளுமன்றம் மீது தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார். இந்தியா, சர்வதேச நாடுகள் அழுத்தத்தால் மசூர் அசாரை பாகிஸ்தான் அரசு வீட்டு காவலில் வைத்தது.
ஆனால் அவரை லாகூர் கோர்ட்டு விடுவித்தது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக 2019-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி யது. ஆனால் மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை. குடும்பத்துடன் காணாமல் போய் விட்டார். அவரை தேடி வருகிறோம் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்த நிலையில் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும், அவரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.
ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச் சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருக்கிறார் என்று நம்புகிறோம். அவர் நஞ்கர்ஹர் மாகாணத்திலோ அல்லது குனார் மாகாணத்திலோ பதுங்கி இருக்கலாம். அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து கைது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் கூறும்போது, "உலகளாவிய பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்பு குழுவின் ஆணைக்கு இணங்கவும், அந்த அமைப்பின் சாம்பல் நிற பட்டியலில் இருந்து வெளியேறவும் பாகிஸ்தானின் முயற்சியாக இது இருக்கலாம்" என்றனர்.
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
- மோசமான வானிலையால் இம்ரான்கான் பயணித்த விமானம் தரையிறக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் தனி விமானத்தில் புறப்பட்டார்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு திரும்பியது. இஸ்லாமாபாத்தில் இருந்து சாலை மார்க்கமாகப் பயணித்து குஜ்ரன்வாலா சென்ற இம்ரான்கான், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
இதுதொடர்பாக விளக்கமளித்த இம்ரான்கான் கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வானி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறங்கியதாக வெளியான தகவல் தவறானது. மோசமான வானிலையால் இம்ரான்கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இம்ரான்கானின் பிரதமர் பதவி ஏப்ரல் மாதம் 10-ந்தேதி பறிக்கப்பட்டது.
- இம்ரான்கானுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து இம்ரான்கானின் பிரதமர் பதவி கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி பறிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்களை நடத்தி பேசி வருகிறார். நாட்டின் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 20-ந் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரு பெண் நீதிபதியையும், போலீஸ் துறையையும் மிரட்டியதாக இஸ்லாமாபாத் மாஜிஸ்திரேட்டு அலி ஜாவத் புகார் செய்தார்.
அதன் பேரில் அவருக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அவருக்கு இஸ்லாமாபாத் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு நாளை (12-ந் தேதி) வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. அதன் பின்னர் என்ன ஆகும் என தெரியவில்லை.
இது தொடர்பான ஒரு விசாரணைக்கு அவர் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராக வந்தபோது அங்கு போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், கோர்ட்டில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிருப்தி தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-
அதிகாரிகள் யாருக்கு பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. என்னை சிறையில் அடைத்தால் நான் இன்னும் ஆபத்தானவன் ஆகி விடுவேன்.
பெண் நீதிபதி தொடர்பாக கோர்ட்டில் எனது கருத்து பற்றி எடுத்துக்கூறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு சூழல் உள்ளது.
நாடு நாளுக்கு நாள் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்.பின் அறிக்கை இதைத்தான் காட்டுகிறது. அவர்கள் என்ன விரும்பினாலும் செய்யட்டும். ஆனால் நாட்டின் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டுமானால் அதற்கு புதிதாக தேர்தல் நடத்துவதுதான் தீர்வு ஆகும். நான் என் பதவிக்காலத்தில் எனது எதிரிகள் யாரையும் பலி கடா ஆக்கவில்லை. சில வழக்குகள் தவறாக கையாளப்பட்டிருக்கலாம். ஆனால் பின்னர்தான் அதுபற்றி எனக்கு தெரிய வந்தது.
சில முக்கியமான நபர்களுடன் நான் பின்வாசல் வழியாக தொடர்பில் இருப்பதாக ஊகங்கள் கூறுவது தவறு. நவாஸ் ஷெரீப்புடன் தொடர்பில் இருந்த அதிகாரியை சந்தித்தீர்களா என கேட்கிறீர்கள். அப்படியெல்லாம் எதுவும் நடைபெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- குண்டுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 போலீஸ்காரர்கள் சிசிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
- போலீஸ்காரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கராச்சி:
பாகிஸ்தான் டேங்க் மாவட்டம் தில் இமாம் பகுதியில் போலியோ தடுப்பு முகாம் நடந்தது.
இதையொட்டி மருத்துவ குழுவினர் நடமாடும் வாகனம் மூலம் வீடு, வீடாக சென்று போலீஸ் பாதுகாப்புடன் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த மர்ம மனிதர்கள் திடீரென கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதனை எதிர்பாராத போலீசார் பதிலுக்கு மர்ம கும்பல் மீது திருப்பி சுட்டனர்.
சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 4 போலீஸ்காரர்கள் குண்டு பாய்ந்து இறந்தனர். 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். போலீசாரை சுட்டுக்கொன்ற மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அவர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என தெரியவில்லை.
குண்டுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 போலீஸ்காரர்கள் சிசிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழு ஐ.நா அமைப்பைத் திரட்ட அனைத்தையும் செய்வேன்.
- பருவநிலை மாற்றத்தை தடுக்க, பாகிஸ்தான் குறைந்த பங்களிப்பதை வழங்கியுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் தொடர்பான இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த ஜூன்மாதம் முதல் இதுவரை 1,391 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய வெள்ள மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புடன் சென்று ஆய்வு செய்த குட்டரெஸ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தான் அரசை பாராட்டு தெரிவித்தார்.
பாகிஸ்தானின் தற்போதைய நிலைமை குறித்து சர்வதேச சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்நாட்டிற்கு ஆதரவாக முழு ஐ.நா அமைப்பைத் திரட்டவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் அவர் உறுதியளித்தார். பருவநிலை மாற்றத்தை தடுக்க பாகிஸ்தான் போன்ற நாடுகள் குறைந்த பங்களிப்பதையே வழங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக அந்த நாடுகள் அதன் விளைவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இயற்கை பேரழிவு தவறான இலக்கை தாக்கியுள்ளது, பருவநிலை மாற்றத்திற்கு பொறுப்பானவர்கள்தான் இந்த வகையான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வளர்ந்த நாடுகள் காற்று மாசு அளவை வெகுவாகக் குறைக்க வேண்டும்,வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சவாலை எதிர்கொள்ள பாகிஸ்தானுக்கு ஆதரவை வழங்குவது சர்வதேச சமூகத்தின் கடமை என்றும் அவர் தெரிவித்தார்.
- பாகிஸ்தானில் பெய்த கனமழைக்கு இதுவரை 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
- கனமழை, வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட ஐ.நா. பொதுச்செயலாளர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
லாகூர்:
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலைமாற்ற மந்திரி தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் அது தொடர்பான இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 1,391 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ள பகுதிகளை பார்வையிட ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அந்நாட்டுக்குச் சென்றுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்குகிறார். மேலும், உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- பாகிஸ்தானில் மழை வெள்ளத்துக்கு மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது.
- இதில் 441 குழந்தைகள் அடங்குவர். வெள்ள மீட்புப் பணிகளில் ராணுவம், கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாகிஸ்தானில் பலத்த மழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பருவமழை கொட்டி வருகிறது. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். 3.3 கோடி மக்கள் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் மழை வெள்ளத்துக்கு மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது. இதில் 441 குழந்தைகள் அடங்குவர். வெள்ள மீட்புப் பணிகளில் ராணுவம், கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
- பாகிஸ்தானை புரட்டி போட்டுள்ளபேய் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
- இதுவரை மழைக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 1,208 ஆக உயர்ந்து இருக்கிறது. இதில் குழந்தைகளும் அடங்குவர். 4,896 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கராச்சி:
பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை கொட்டி வருகிறது. கடந்த ஜுலை மாதம் தொடங்கிய பருவமழை இன்னும் அங்கு ஓய்ந்தபாடில்லை. இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது
தொடர் மழையால் பாகிஸ்தானில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல நகரங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
10 லட்சத்து 57 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி கிடப்பதால் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
அவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். ஏராளமான மக்கள் தங்குமிடம், உணவு, குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானை புரட்டி போட்டுள்ள இந்த பேய் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை மழைக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 1,208 ஆக உயர்ந்து இருக்கிறது. இதில் குழந்தைகளும் அடங்குவர். 4,896 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 7 லட்சத்து 33 ஆயிரத்து 488 கால்நடைகள் பலியாகி உள்ளது.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். பலரை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
சுமார் 2 லட்சம் வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமாகி விட்டது. 5,063 கிலோ மீட்டர்தூரம் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் 3-ல் ஒரு பங்கு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தாங்கமுடியாத துயரத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டாலும் வெள்ளம் காரணமாக பல இடங்களுக்கு அவர்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா, சீனா, கத்தார், துருக்கி, உஸ்பெகிஸ்தான் உள்பட பல நாடுகள் உதவி வருகிறது. அமெரிக்கா 30 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கப்போவதாக அறிவித்து உள்ளது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க நட்பு நாடுகள் முன்வர வேண்டும் என பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- பாகிஸ்தானில் மழை-வெள்ளத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
- கராச்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.500-க்கும் (இந்திய மதிப்பில் ரூ.176) ஒரு கிலோ வெங்காயம் ரூ.400-க்கும் (இந்திய மதிப்பில் ரூ.143) விற்கப்படுகிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தென்மேற்கு பருவமழையையொட்டி பலத்த மழை பெய்தது. கடந்த 30 ஆண்டுகள் இல்லாத வகையில் மழை கொட்டியது. பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.
கடந்த 3 மாதங்களாக மழை பெய்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 110 மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மழை-வெள்ளத்தால் சுமார் 3 கோடிக்கு மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மழை, வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1061 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபட்டு வந்த நிலையில் முதல் முறையாக கடற்படையும் களம் இறக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மந்திரி ஷெர்ரி ரஹ்மான் கூறும்போது, "பாகிஸ்தானில் இயற்கை பேரழிவு ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்கள், கடலின் ஒரு பகுதிகளாக காட்சி அளிக்கின்றன.
ஹெலிகாப்டரில் இருந்து உணவு பொருட்களை வீசுவதற்கு கூட இடங்கள் காணப்படவில்லை" என்றார்.
மழையால் இதுவரை ரூ.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மழை-வெள்ளத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
கராச்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.500-க்கும் (இந்திய மதிப்பில் ரூ.176) ஒரு கிலோ வெங்காயம் ரூ.400-க்கும் (இந்திய மதிப்பில் ரூ.143) விற்கப்படுகிறது.
இதற்கிடையே இந்தியாவில் இருந்து தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து காய்கறி இறக்குமதி செய்யப்படுவதால் வரத்து குறைவாக உள்ளது.
- பாகிஸ்தானில் கடந்த 3 மாதமாக கனமழை பெய்து வருகிறது.
- பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் தேசிய அவசர நிலையை பிறப்பித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த 3 மாதமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணம், கைபர் பக்துன்க்வா , பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் தான் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை வெள்ள பாதிப்பால் பாகிஸ்தானில் தேசிய அவசர நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி 6.80 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழை, வெள்ளத்தால் நாடு முழுவதும் சுமார் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.
பாகிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை 900க்கும் அதிகமானோர் பலியானதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்திருந்தது.
நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் மேலும் 45 பேர் பலியாகினர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 982 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 113 பேருக்கு பலத்த காயங்களும், 1,456 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக ராணுவத்தை களமிறக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
- பாகிஸ்தானில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- நிர்வாக வசதிக்காக தேசிய அவசர நிலையை பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பருவமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 937 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை தெரிவித்துள்ளது.
பருவமழை மற்றும் வெள்ளத்திற்கு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் பதிவாகியுள்ளன. ஒரு கோடி மக்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணம், கைபர் பக்துன்க்வா , பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்கள் தான் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை வெள்ள பாதிப்பால் பாகிஸ்தானில் தேசிய அவசர நிலையை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள ஏதுவாக நிர்வாக வசதிக்காக அவசர நிலையை பாகிஸ்தான் அரசு பிறப்பித்துள்ளது.






