என் மலர்tooltip icon

    சீனா

    • 3 விற்பனை மேலாளர்களுக்கு தலா சுமார் ரூ.6 கோடி போனசாக வழங்கப்பட்டது.
    • மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் தலா சுமார் ரூ.1.20 கோடி வழங்கப்பட்டது.

    பீஜிங் :

    கொரோனா நெருக்கடி மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை கொத்து, கொத்தாக பணி நீக்கம் செய்து, ஊதியத்தையும் குறைத்து வருகின்றன.

    இந்த சூழலில் சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனசையும் கொடுத்து, சம்பள உயர்வையும் வழங்கியிருக்கும் நிகழ்வு பலரையும் வியப்பில் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

    சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் 'ஹெனன் மைன்' என்ற நிறுவனம்தான் தனது ஊழியர்களை சிறப்பாக கவனித்திருக்கிறது. கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

    கொரோனா நெருக்கடியால் சீனாவின் பொருளாதாரம் சரிந்து வரும் அதே வேளையில் ஹெனன் மைன் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில் அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான் (சுமார் ரூ.11 ஆயிரத்து 86 கோடி) ஆக இருந்தது.

    இதனால் மகிழ்ச்சியில் திளைத்துப்போன நிறுவனம் தனது ஊழியர்களையும் மகிழ்விக்க முடிவு செய்து, அதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

    நிகழ்ச்சியில் 61 மில்லியன் யுவான் (சுமார் ரூ.73 கோடியே 81 லட்சம்) மதிப்புடைய பணக்கட்டுகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டது. அதில் இருந்து நிறுவனத்தின் உயர்வுக்கு சிறப்பாக பணியாற்றிய 3 விற்பனை மேலாளர்களுக்கு தலா 5 மில்லியன் யுவான் (சுமார் ரூ.6 கோடி) போனசாக வழங்கப்பட்டது. மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் தலா 1 மில்லியன் யுவான் (சுமார் ரூ.1.20 கோடி) வழங்கப்பட்டது.

    இது தவிர நிகழ்ச்சியில் பணம் எண்ணும் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.18 லட்சம் வரை பரிசும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மலைபோல் பணக்கட்டுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், ஊழியர்கள் 2 பேர் கை நிறைய பணக்கட்டுகளை அள்ளி செல்லும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    • ஒரே குழந்தை கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு அரசு தளர்த்தியது.
    • 3 குழந்தைகளைப் பெறவும் அந்த நாடு அனுமதி வழங்கியது.

    பீஜிங் :

    சீனாவில் சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் அங்கு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது.

    எனவே நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அங்கு பல ஆண்டுகளாக அமலில் இருந்த ஒரே குழந்தை கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு அரசு தளர்த்தியது. மேலும், கடந்த ஆண்டு முதல் தம்பதிகள் 3 குழந்தைகளைப் பெறவும் அந்த நாடு அனுமதி வழங்கியது. இருந்தபோதிலும் சீனாவில் பிறப்பு விகிதம் வீழ்ச்சியைதான் கண்டு வருகிறது.

    இந்த நிலையில் சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள மாகாண அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் குழந்தைப் பெற்று கொள்வதில் திருமணமான தம்பதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் சலுகைகள், மானியங்கள் போன்றவை இனி திருமணமாகாத தம்பதிகளுக்கும் கிடைக்கும்.

    இந்த புதிய விதிமுறைகள் வருகிற 15-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும், திருமணமானவர்கள் மற்றும் ஆகாதவர்கள் எவ்வளவு குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் கூறினர். மாகாணத்தில் சமீப ஆண்டுகளில் திருமணம் மற்றும் பிறப்பு விகிதங்கள் மிகவும் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    சிச்சுவான், சீனாவின் 5-வது அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் என்பதும், மக்கள்தொகையில் 21% க்கும் அதிகமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற அடிப்படையில் சீனாவில் இந்த மாகாணம் 7-வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவானது.
    • வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

    பீஜிங் :

    சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 7.49 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவானது. சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    சின்ஜியாங்கில் உள்ள விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்த பயணிகள் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் பயந்து அங்கிருந்து வெளியே ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, காயமோ அல்லது பெரிய அளவில் பொருள் சோதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.

    கடந்த 2008-ம் ஆண்டு சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிச்சுவான் மாகாணத்தை 7.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதும் இதில் சுமார் 90,000 பேர் பலியானதும் நினைவுகூரத்தக்கது.

    • சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியது.
    • ஆஸ்பத்திரிகள் அனைத்திலும் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர்.

    பீஜிங்:

    சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 வைரஸ் காரணமாக அந்நாட்டில் நோய் தொற்று மீண்டும் எழுச்சி பெற்றது.

    அங்கு தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியானது.

    ஆஸ்பத்திரிகள் அனைத்திலும் நோயாளிகள் நிரம்பி வழிந்தனர். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்பாக சீன அரசு சரியான தகவல்களை வெளியிடவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் சீனாவில் 80 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசின் மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் ஆ ஜூன்யூ கூறும்போது, நடப்பு சந்திர புத்தாண்டு விடுமுறை காலத்தில் மக்கள் நடமாட்டம் தொற்று நோயை பரப்பலாம். சில பகுதிகளில் தொற்று நோய் அதிகரிக்கலாம்.

    ஆனால் 2-வது கொரோனா அலை அடுத்த காலத்தில் வருவதற்கான சாத்தியமில்லை. ஏனென்றால் 80 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 2அல்லது 3 மாதங்களில் மீண்டும் அதிக அளவில் கொரோனா பரவல் வருவதற்கான சாத்தியக் கூறுங்கள் தொலைவில் உள்ளன என்றார்.

    இதற்கிடையே ஜனவரி மாத நிலவரப்படி சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் ஆஸ்பத்திரியில் உயிரிழந்துள்ளனர் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நிபுணர்கள் கூறும் போது, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக கணக்கிடப்படுகிறது. ஏனென்றால் வீட்டில் இறந்தவர்களை தவிர்த்து உள்ளனர். மேலும் பல டாக்டர்கள், கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடுவதில்லை என்றனர்.

    • எல்லை நிலைமை குறித்து அவர், சீனப்படையினருடன் கலந்துரையாடினார்.
    • எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

    பீஜிங் :

    இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினர் கொடிய ஆயுதங்களுடன் வந்து, இந்தியப் படைவீரர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்தியப் படை வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தது நாடெங்கும் பெரும்கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது.

    இந்த மோதலின்போது சீனப்படையினர் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த மோதலைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் இரு தரப்பும் படைகளையும், தளவாடங்களையும் குவித்ததால் பதற்றம் தொடர்ந்தது. பதற்றத்தைத் தணிப்பதற்கு இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதுவரை 17 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. இதன் பலனாக மோதல் புள்ளிகளில் சிலவற்றில் இருந்து இரு தரப்பும் படைகளை விலக்கின. ஆனாலும் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. சீனப்படையினர் அங்கு அத்துமீறி கட்டமைப்புகளை ஏற்படுத்த முயற்சிப்பதும், அவர்களை இந்தியப்படையினர் துரத்தியடிப்பதும் தொடர்கதையாக நீளுகிறது. இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில், சீன அதிபர் ஜின்பிங், பீஜிங்கில் உள்ள சீன ராணுவ தலைமையகத்தில் இருந்தவாறு, கிழக்கு லடாக்கில் இந்திய, சீன எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தனது நாட்டுப்படையினரின் போர் தயார் நிலையை நேற்று காணொலிக்காட்சி வழியாக திடீரென ஆய்வு செய்தார். அப்போது எல்லை நிலைமை குறித்து அவர், சீனப்படையினருடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் கடந்த சில ஆண்டுகளாக அந்தப் பகுதி தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதைச் சுட்டிக்காட்டி, இது சீன ராணுவத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து சீனப்படையினரிடம் விசாரித்தார். இதற்கு சீனப் படைவீரர் ஒருவர் பதில் அளிக்கையில், "நாங்கள் தற்போது 24 மணி நேரமும் எல்லையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என தெரிவித்தார்.

    அவர்களது அன்றாட பணி நிலைமை பற்றி ஜின்பிங் கேட்டதோடு, விருந்தோம்பல் தன்மையற்ற நிலப்பரப்பில் சாப்பாட்டுக்கு புதிய காய்கறிகள் கிடைக்கின்றனவா என பரிவுடன் விசாரித்து அறிந்தார்.

    இதையொட்டி சீன அரசு தரப்பு ஊடகம் கூறுகையில், "எல்லையில் உள்ள படைவீரர்களிடம் அவர்கள் மேற்கொண்டு வருகிற ரோந்துப்பணிகள், நிர்வாகப்பணிகள் பற்றி அதிபர் ஜின்பிங் கேட்டறிந்தார். சீனப்படை வீரர்கள் எல்லைப் பாதுகாப்பின் மாதிரிகள் என பாராட்டியதுடன், அவர்கள் தொடர்ந்து தங்களது முயற்சிகளில் ஈடுபடவும், புதிய பங்களிப்புகளை வழங்கவும் ஊக்கம் அளித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திபெத் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.
    • அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பீஜிங்:

    சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த புதன்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

    நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

    சம்பவ இடத்துக்கு மீட்பு படையினரும், அவசரகால வாகனங்களும் விரைந்தனர். அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

    இந்நிலையில், பனிச்சரிவில் இருந்து நேற்று சில சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திபெத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • தகவலறிந்து அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    பீஜிங்:

    சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.

    நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

    இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. மேலும் இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல்கள் புதன்கிழமை இரவில் தெரிய வந்தது.

    சம்பவ இடத்துக்கு 131 மீட்பு படையினரும், 28 அவசரகால வாகனங்களும் விரைந்துள்ளனர். அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    • 2022-ம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
    • இந்த தகவலை சீனாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ளது.

    பீஜிங் :

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், உலக பொருளாதார வளர்ச்சியை பதம் பார்த்தது.

    இதில் உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடான சீனாவும் தப்பவில்லை.

    அங்கு கடந்த 2022-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீத அளவுக்கு சுருங்கிப்போய் விட்டது.

    இது கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்டுள்ள 2-வது மோசமான பொருளாதார வளர்ச்சி ஆகும்.

    2022-ம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி ஆகும்.)

    இது அதிகாரப்பூர்வமான இலக்கான 5.5 சதவீதத்திற்கு குறைவு ஆகும்.

    இந்த தகவலை சீனாவின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ளது.

    சீனாவின் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான சரிவைக் கண்டிருப்பதற்கு காரணம், அங்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் கொண்டு வந்த கடுமையான கட்டுப்பாடுகளும், பொதுமுடக்கமும்தான்.

    சீனாவில் 1974-ம் ஆண்டு மிகக்குறைந்த அளவாக 2.3 சதவீத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    • 2021ல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
    • முதல் குழந்தையைப் பெற்ற தம்பதியினருக்கு 3,000 யுவான் வழங்கப்படுகிறது.

    உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. பல ஆண்டுகளாக மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்து வரும் சீனாவில் முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

    1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீன தேசத்தில் அதன் வயதை காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.

    2022ம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை சுமார் 1,411,750,000 ஆக இருந்தது என்று பெய்ஜிங்கின் தேசிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இறுதியின் மக்கள் தொகையைவிட 850,000 குறைந்துள்ளது.

    இதேபோல், பிறப்பு எண்ணிக்கை 9.56 மில்லியன் ஆகவும், இறப்பு எண்ணிக்கை 10.41 மில்லியன் ஆகவும் இருந்தது.

    சீனாவின் மக்கள்தொகை கடைசியாக 1960ல் குறைந்தது. 1980ம் ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக விதிக்கப்பட்ட கடுமையான "ஒரு குழந்தை கொள்கையை" சீனா 2016 ல் முடித்துக் கொண்டது. 2021ல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்தது. ஆனால் சீன அரசு மக்கள்தொகை சரிவை மாற்றியமைக்க தவறிவிட்டது.

    குழந்தை பிறப்பு விகிதம் மந்தநிலையில் இருக்க வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணியிடத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உயர்கல்வியை நாடுவது உள்ளிட்ட காரணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜியுஜியன் பெங் கூறுகையில், " பல தசாப்தங்களாக ஒரு குழந்தை கொள்கையின் காரணமாக சீன மக்களும் சிறிய குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பிறப்பை ஊக்குவிக்க சீன அரசாங்கம் பயனுள்ள கொள்கைகளைக் கண்டறிய வேண்டும். இல்லையெனில், கருவுறுதல் இன்னும் குறைய வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

    மேலும், தம்பதிவகள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை சீனா அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முதல் குழந்தையைப் பெற்ற தம்பதியினருக்கு 3,000 யுவான் வழங்கப்படுகிறது. இது அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு 10,000 யுவான்களாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் கிழக்கில், ஜினான் நகரம் ஜனவரி 1 முதல் இரண்டாவது குழந்தையைப் பெற்ற தம்பதிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 600 யுவான் செலுத்தி வருகிறது.

    • பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 11-ந்தேதி 90 கோடியை கடந்துவிட்டதாக தகவல்
    • கொரோனா வைரசால் நேரடியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதில் 5,503 இறப்புகள் பதிவாகி உள்ளன

    பீஜிங்:

    சீனாவில் கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதையடுத்து மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதை சீன அரசு மறுத்தது. கொரோனாவுக்கு பலியானவர்கள் குறித்த எண்ணிக்கையை சீனா மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 11-ந்தேதி 90 கோடியை கடந்துவிட்டதாகவும் நாட்டில் 64 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பீகிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சீனாவில் கடந்த 35 நாட்களில் மட்டும் கொரோனா தொடர்பான பாதிப்புகளால் சுமார் 60000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வரை சீனாவில் 59,938 கொரோனா தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையத்திற்கு உட்பட்ட மருத்துவ நிர்வாக அலுவலக தலைவர் ஜியோ யாஹுய் செய்தியாளர் சந்திப்பில் கூறி உள்ளார். கொரோனா வைரசால் நேரடியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டதில் 5,503 இறப்புகளும், கொரோனாவுடன் இணைந்த அடிப்படை நோய்களால் 54,435 இறப்புகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 11-ந்தேதி 90 கோடியை கடந்து விட்டது.
    • நாட்டில் 64 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாக பீகிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதை சீன அரசு மறுத்தது.

    இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 11-ந்தேதி 90 கோடியை கடந்து விட்டதாகவும் நாட்டில் 64 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பீகிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீனாவின் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைவிட 48.9% அதிகமாகும்.
    • 2019ம் ஆண்டு அளவுகளில் இது 26.2% மட்டுமே இருந்தது.

    கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்ததை அடுத்து, சீனா தளர்வுகளை அறிவித்தது. சீனாவிற்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்தது.

    இந்நிலையில், சீனாவில் ஜனவரி 8ம் தேதியில் இருந்து 12ம் தேதிக்கு இடையில் மட்டும் தினமும் சுமார் 4,90,000 பயணிகள் பயணம் செய்துள்ளதாக அந்நாட்டின் குடியேற்றப் பணியகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இது சீனாவின் கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைவிட 48.9% அதிகமாகும். ஆனால் 2019ம் ஆண்டு அளவுகளில் இது 26.2% மட்டுமே இருந்தது.

    அதாவது 4,90,000 எண்ணிக்கையில், 2,50,000 பயணிகள் சீனாவிற்குள் நுழைந்ததாகவும், 2,40,000 பயணிகள் சீனாவில் இருந்து வெளியேறியதாகவும் அதிகாரி கூறினார்.

    ×