என் மலர்
சீனா
- சீனா பாராளுமன்றத்தில் நடந்த 14வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 2,952 உறுப்பினர்கள் மீண்டும் ஜின்பிங்கை அதிபராக தேர்வு செய்துள்ளனர்.
- கொரோனா காலகட்டத்தின்போது கட்டுப்பாடுகள் விதித்ததில் பொதுமக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்தார்.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கடந்த 2012ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஜின்பிங் அதிபராக தேர்ந்தெடுக்கபட்டார். அதன்பிறகு 2வது முறையாக அவர் அதிபராக பதவி வகித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக 3வது தடவையாக மீண்டும் அவர் சீன அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். சீனா கம்யூனிஸ்டு கட்சி விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இதுவரை இல்லாத அளவில் கடந்த அக்டோபர் மாதம் மூன்றாம் முறையாக ஜின்பிங் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அனைத்து உயர் மட்ட குழுவினரும் சேர்ந்து அவரை தேர்ந்தெடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று சீனா பாராளுமன்றத்தில் நடந்த 14வது தேசிய மக்கள் மாநாட்டில் சுமார் 2,952 உறுப்பினர்கள் மீண்டும் ஜின்பிங்கை அதிபராக தேர்வு செய்துள்ளனர். எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டு உள்ளார். மேலும் அவர் சீன ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ளார்.
சீன வரலாற்றில் இதுவரை யாரும் தொடர்ந்து 3 முறை அதிபராக பதவி வகிக்கவில்லை. அந்த சாதனையை ஜின்பிங் பெற்று இருக்கிறார். இன்னும் 5 ஆண்டு காலம் அவர் சீன அதிபராக பதவி வகிப்பார். தற்போது 69 வயதாகும் அவர் கொரோனா காலகட்டத்தின்போது கட்டுப்பாடுகள் விதித்ததில் பொதுமக்களின் எதிர்ப்புகளை சம்பாதித்தார். அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தது. ஆனால் அதையெல்லாம் மறந்து இப்போது ஜின்பிங் மீண்டும் சீன அதிபராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சீனா மீதான விரோத கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் தவறான பாதையில் தொடர்ந்து வேகமாக சென்றால் மோதல் ஏற்படுவது நிச்சயம்.
- தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அமெரிக்கா அவமதிக்கிறது.
அமெரிக்கா- சீனா இடையிலான உறவு சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் கீரியும், பாம்புவுமாக சண்டையிட்டு வருகின்றன.
குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகளும் மோதலை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்தநிலையில் சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற கின் காங், முதல் முறையாக சீன பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அமெரிக்காவுடனான பிரச்சினை குறித்து அவர் பேசியதாவது:-
அமெரிக்காவின் சீனக் கொள்கை பகுத்தறிவு மற்றும் ஒலி பாதையில் இருந்து முற்றிலும் விலகியிருக்கிறது. சீனா மீதான விரோத கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் தவறான பாதையில் தொடர்ந்து வேகமாக சென்றால் மோதல் ஏற்படுவது நிச்சயம்.
அமெரிக்காவின் இந்த பொறுப்பற்ற செயல் இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களையும், மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும்.
தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அமெரிக்கா அவமதிக்கிறது. தைவான் பிரச்சினையில் அமெரிக்கா சிவப்பு கோட்டை தாண்ட கூடாது. தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா, சீனாவை ரஷியாவிற்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆபாச ரீதியான வீடியோக்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை.
- பேஷன் நிறுவனங்கள் பெண்களின் உள்ளாடைகளை விளம்பரப்படுத்த ஆண் மாடல்களை பணியமர்த்தி வருகின்றன.
சீனாவில் ஆபாசமான விஷயங்களை இணையத்தில் வெளியிடுவதை தடை செய்யும் சட்டம் அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக,
சீனாவில் பெண் மாடல்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்கபட்டுள்ளது.
ஆபாச ரீதியான வீடியோக்கள் பரவுவதை தடுக்க பெண் மாடல்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தடை எதிரொலியால், பேஷன் நிறுவனங்கள் பெண்களுக்கு பதிலாக ஆண் மாடல்களை நடிக்க வைக்கும் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பெண்களின் உள்ளாடைகளை விளம்பரப்படுத்த ஆண் மாடல்களை பணியமர்த்தி வருகின்றன.
சீன அரசு விதித்த தடையால், வேறு வழியின்றி பெண்களுக்கு பதிலாக ஆண்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். வீடியோக்களில், ஆண் மாடல்கள் பல விதமான பெண்களின் உள்ளாடைகளை அணிந்து விளம்பரம் செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து சீனா தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.
- அமெரிக்காவில் இந்த ஆண்டு ராணுவத்துக்கு சுமார் ரூ.66 லட்சத்து 67 ஆயிரத்து 760 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பீஜிங் :
20 லட்சம் வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய ராணுவமாக சீன ராணுவம் விளங்கி வருகிறது. மேலும் உலகிலேயே ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2-வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவை எப்படியும் முந்திவிட வேண்டும் என்கிற முனைப்பில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்துக்கான பட்ஜெட்டை சீனா உயர்த்தி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு சீனா தனது ராணுவ பட்ஜெட்டை 7.1 சதவீதமாக உயர்த்தியது. அதன்படி ராணுவத்துக்கு 1.45 டிரில்லியன் யுவான் (சுமார் ரூ.17 லட்சத்து 15 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் சீனா ராணுவ பட்ஜெட்டை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு ராணுவத்துக்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரைவு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 1.55 டிரில்லியன் யுவான் (சுமார் ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி) ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.
அதே சமயம் ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து சீனா தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டு ராணுவத்துக்கு 816 பில்லியன் டாலர் (சுமார் ரூ.66 லட்சத்து 67 ஆயிரத்து 760 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீன ராணுவத்தின் தற்போதைய பட்ஜெட் இந்திய ராணுவ பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் 2023-24-ம் ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட் ரூ.5.94 லட்சம் கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் மற்றும் அருணாசலபிரதேசத்தில் இந்தியாவுடனான மோதல் மற்றும் அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருவது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்திற்குள் சீனா ராணுவத்துக்கு சொந்தமான 25 போர் விமானங்கள் தைவான் வான்வெளி பகுதியில் அத்துமீறி நுழைந்து உள்ளது.
பீஜிங்:
உள்நாட்டு போருக்கு பின் கடந்த 1949-ம் ஆண்டு சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. இருந்தபோதிலும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருவது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அவ்வப்போது சீனா, தைவான் எல்லைக்குள் போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி அச்சுறுத்தி வருகிறது. மேலும் தைவான் மீது படையெடுக்க போவதாக சீனா மிரட்டல் விடுத்து வருவதால் கடந்த சில மாதங்களாக இரு நாட்டு எல்லையில் பதற்றமான நிலை உருவாகி இருக்கிறது.
இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இன்று தைவானை நோக்கி 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை சீனா அனுப்பி உள்ளதாக தைவான் கூறி உள்ளது. இது தொடர்பாக தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 24 மணி நேரத்திற்குள் சீனா ராணுவத்துக்கு சொந்தமான 25 போர் விமானங்கள் தைவான் வான்வெளி பகுதியில் அத்துமீறி நுழைந்து உள்ளது. 3 போர் கப்பல்களும் தைவானின் கடல்பரப்பில் ஊடுருவி இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவானும் எல்லைப்பகுதியில் போர் விமானங்களையும் போர் கப்பல்களையும் அனுப்பி உஷார்படுத்தி உள்ளது. இதன் காரணமாக சீனா-தைவான் எல்லைப் பகுதியில் எந்த நேரமும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சர்வதேச பொருளாதாரத்தில் காணப்படும் முக்கிய சவால்களில் ஜி-20 நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது.
இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி-20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு உள்ளனர்.
பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. இதில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் இந்தியா செலுத்தி வரும் செல்வாக்கு பற்றியும் அவர் பேச கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, சர்வதேச பொருளாதாரத்தில் காணப்படும் முக்கிய சவால்களில் ஜி-20 நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு பொது இலக்கை நோக்கிய பன்னாட்டு ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற தயார் நிலையில் சீனா உள்ளது என தெரிவித்து உள்ளார்.
இதனால், இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் சீன வெளியுறவு மந்திரி குவின் கேங் பங்கேற்பார் என இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
- சீனா புதிய ஆப் ஒன்றை கண்டுபிடித்து உள்ளது.
- செல்போனில் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பீஜீங்:
சீனாவின் கண்டுபிடிப்புகள் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.
அந்த வகையில் இப்போது சீனா புதிய ஆப் ஒன்றை கண்டுபிடித்து உள்ளது. இந்த செயலி மூலம் தொலை தூரத்தில் இருப்போருக்கு நிஜத்தில் கொடுப்பது போல் முத்தம் கொடுக்க முடியும்.
இதற்காக செல்போனில் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்த ஆப் மூலம் தொலை தூரத்தில் இருக்கும் காதலி, அல்லது காதலனை தொடர்பு கொள்ள வேண்டும்.
அவரும் இணைப்பில் வந்ததும் இருவரும் நிஜத்தில் முத்தம் கொடுப்பது போல முத்தம் கொடுத்து கொள்ளலாம்.
இந்த செயலிக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதே நேரம் இதற்கு இளம்ஜோடிகள் பலரும் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.
- உளவு பலூன் தான் எனக்கூறி அதன் சிதறிய பாகங்களை சேகரித்து அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது.
- சீனா பலூன் பற்றிய தகவல்களை பகிர அமெரிக்கா மறுத்து விட்டதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
பீஜிங்:
அமெரிக்க வான்வெளி பகுதியில் பறந்த சீனாவின் உளவு பலூனை சுடுமாறு அந்நாட்டு அதிபர் ஜோபை டன் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 4-ந்தேதி தெற்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் அமெரிக்கா போர் விமானம் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது உளவு பலூன் அல்ல என சீனா மறுப்பு தெரிவித்தது. ஆனால் அது உளவு பலூன் தான் எனக்கூறி அதன் சிதறிய பாகங்களை சேகரித்து அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது. இது பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது.
இது குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அமெரிக்காவிடம் சீனா கோரிக்கை விடுத்தது. இதை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் சீனா பலூன் பற்றிய தகவல்களை பகிர அமெரிக்கா மறுத்து விட்டதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அதன் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறும் போது பலூனை சுட்டதில் இருந்து அதனை பகுப்பாய்வு செய்வது வரை முற்றிலும் தன்னிச்சையாகவும், மறைமுகமாகவும் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இது பற்றி எந்த விளக்கத்தையும் அந்த நாடு பகிரவில்லை என்று தெரிவித்து உள்ளார்.
- பள்ளிக்கூடங்கள் இந்த வார தொடக்கத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன.
- ஷாங்காய் ஆரம்பப் பள்ளி வகுப்பில் நேரில் கற்பிப்பதை நிறுத்தி உள்ளனர்.
பீஜிங் :
சீனாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019-ம் ஆண்டு டிசம்பரில் தோன்றி உலக நாடுகளைப் பதம் பார்த்தது. பல நாடுகள் அந்தத் தொற்றை கட்டுப்படுத்தினாலும், சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக உருமாறிய கொரோனா தாக்கம் அங்கு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பிற வைரஸ் நோய்கள் பரவலைத் தடுப்பதற்காக பல நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் இந்த வார தொடக்கத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன.
கடந்த வார இறுதியில் இ-காமர்ஸ் மையமான ஹாங்ஜோவில் ஒரே வகுப்பறையில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது, இதனால் உள்ளூர் கல்வி அதிகாரிகள் திங்கட்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு வகுப்புகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினர். அங்கு முதல் முறையாக மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போன்று தொழில் நகரமான ஷாங்காயில் ஒரே நேரத்தில் 4 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பலருக்கு இதே போன்ற அறிகுறிகள் தோன்றியதை அடுத்து, ஷாங்காய் ஆரம்பப் பள்ளி வகுப்பில் நேரில் கற்பிப்பதை நிறுத்தி உள்ளனர். ஜேஜியாங் மாகாணம், சீன தலைநகர் பீஜிங் மற்றும் அருகிலுள்ள நகரமான தியான்ஜின் முழுவதும் உள்ள மற்ற பள்ளிகளிலும் காய்ச்சல் பாதிப்புகள் காரணமாக வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
- சீனாவில் குறைந்தபட்ச ஊதியத்துடன் கூடிய திருமண விடுப்பு மூன்று நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.
- திருமண விடுமுறையை நீட்டிப்பதன் மூலம் கருவுறுதல் விகிதம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு, சீனாவில் 1,000 பேருக்கு 6.77 பிறப்புகள் என்ற மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை பதிவு செய்தது. இதனால், மக்கள் தொகையை அதிகரிக்க சீனா பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.
இந்நிலையில், திருமணத்தை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் சீனாவில் உள்ள சில மாகாணங்கள் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
முன்னதாக, சீனாவில் குறைந்தபட்ச ஊதியத்துடன் கூடிய திருமண விடுப்பு மூன்று நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மூன்று நாட்கள் விடுப்பு 30 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, வடமேற்கு மாகாணமான கன்சு மற்றும் நிலக்கரி உற்பத்தி செய்யும் மாகாணமான ஷாங்க்சி ஆகியவை 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குகின்றன.
இதுகுறித்து, தென்மேற்கு நிதி மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தின் சமூக மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் யாங் ஹையாங் கூறுகையில், "திருமண விடுமுறையை நீட்டிப்பதன் மூலம் கருவுறுதல் விகிதம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. திருமண விடுப்பு நீட்டிப்பு முக்கியமாக சில மாகாணங்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது" என்றார்.
- திருமணத்தின்போது சில இளம் பெண்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
- அவர்கள் அனைவரும் மணமகனின் முன்னாள் காதலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெய்ஜிங்:
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்கு கடந்த 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது. மண்டபத்தில் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்த திருமணத்தின்போது சில இளம் பெண்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் கையில் பேனர் ஒன்றை வைத்து இருந்தனர். அவர்கள் அனைவரும் சென்னின் முன்னாள் காதலிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மண்டபத்திற்கு வெளியே அவர்கள் பேனரை பிடித்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் ஆர்வத்துடன் பார்த்து என்ன நடந்தது என விசாரித்தனர்.
முன்னாள் காதலிகளுடன் சென்னும் அவரது வருங்கால மனைவியும் தகராறில் ஈடுபட்டனர். இருப்பினும், முன்னாள் காதலிகளை பிரிந்ததற்கான காரணங்களை சென் வெளியிடவில்லை. தான் செய்ததற்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்து சென் கூறுகையில், பெண்களின் எதிர்ப்பால் தான் கோபப்படவில்லை. கடந்த காலத்தில் தான் ஒரு கெட்ட காதலனாக இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். நான் இளமையாக இருந்தபோது முதிர்ச்சி இல்லாமல் இருந்தேன், பல பெண்களை காயப்படுத்தினேன். உங்கள் காதலியை ஏமாற்றுவதை விட நீங்கள் உண்மையாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
- அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது.
- அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் உளவு பலூன் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பீஜிங்:
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது.
அந்த பலூனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டு விடலாம் என்று கருதி அந்த முடிவை கைவிட்டனர்.
ஏற்கனவே அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் உளவு பலூன் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமெரிக்க வான்பரப்புக்குள் பறந்தது உளவு பலூன் அல்ல என்றும், அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல் என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு விவகார அமைச்சகம் கூறியதாவது:-
அமெரிக்கா மீது பறந்து கொண்டிருக்கும் பலூன் எங்களுடையதுதான். அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல். அது ராணுவ பயன்பாட்டுக்கானதல்ல. பொதுமக்கள் பயன்பாட்டுக்கானதாகும். மேற்கில் இருந்து வீசிய காற்று மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையால், ஆகாய கப்பல் திசை மாறி சென்று விட்டது. அது அமெரிக்க வான் பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுபற்றி அமெரிக்க தரப்புடன் தொடர்பு கொண்டு விளக்குவோம் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வான் பரப்பில் பறந்தது ஆகாய கப்பல்தான் என்று சீனா அளித்துள்ள விளக்கத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஏற்க மறுத்து விட்டது.
இதுகுறித்து பென்டகனின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பேட் டைரடர் கூறும்போது, "சீன அரசின் விளக்கம் பற்றி அறிந்தோம். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஒரு உளவு பலூன் என்பது எங்களுக்கு தெரியும். அது அமெரிக்க வான்வெளி மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபற்றி சீன அரசிடம் தூதரக ரீதியிலும் மற்றும் பல்வேறு மட்டங்களிலும் நேரடியாகவே தெரிவித்து விட்டோம்" என்றார்.






