என் மலர்tooltip icon

    உலகம்

    ராணுவத்துக்கு ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி ஒதுக்கிய சீனா: இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்
    X

    ராணுவத்துக்கு ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி ஒதுக்கிய சீனா: இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்

    • ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து சீனா தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.
    • அமெரிக்காவில் இந்த ஆண்டு ராணுவத்துக்கு சுமார் ரூ.66 லட்சத்து 67 ஆயிரத்து 760 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பீஜிங் :

    20 லட்சம் வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய ராணுவமாக சீன ராணுவம் விளங்கி வருகிறது. மேலும் உலகிலேயே ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா 2-வது இடத்தில் உள்ளது.

    அமெரிக்காவை எப்படியும் முந்திவிட வேண்டும் என்கிற முனைப்பில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்துக்கான பட்ஜெட்டை சீனா உயர்த்தி வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டு சீனா தனது ராணுவ பட்ஜெட்டை 7.1 சதவீதமாக உயர்த்தியது. அதன்படி ராணுவத்துக்கு 1.45 டிரில்லியன் யுவான் (சுமார் ரூ.17 லட்சத்து 15 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்த ஆண்டும் சீனா ராணுவ பட்ஜெட்டை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு ராணுவத்துக்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

    அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரைவு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 1.55 டிரில்லியன் யுவான் (சுமார் ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி) ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.

    அதே சமயம் ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து சீனா தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டு ராணுவத்துக்கு 816 பில்லியன் டாலர் (சுமார் ரூ.66 லட்சத்து 67 ஆயிரத்து 760 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீன ராணுவத்தின் தற்போதைய பட்ஜெட் இந்திய ராணுவ பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் 2023-24-ம் ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட் ரூ.5.94 லட்சம் கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு லடாக் மற்றும் அருணாசலபிரதேசத்தில் இந்தியாவுடனான மோதல் மற்றும் அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×