search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "china population"

    • திருமண பதிவில் முந்தைய ஆண்டை விட சுமார் 800,000 பதிவுகள் குறைந்துள்ளது.
    • சில மாகாணங்கள் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறையை அளித்து நீட்டித்து வருகின்றன.

    சீனா ஏற்கனவே மக்கள் தொகையில் வீழ்ச்சயிடைந்த நிலையில், தற்போது திருமண பதிவின் எண்ணிக்கையிலும் சரிவை கண்டுள்ளது.

    குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டில் திருமண பதிவுகள் குறைந்துள்ளதாக சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவு ஒரு நிலையான சரிவைக் கண்டு வருவதாகவும், கொரோனா காலத்தினால் திருமணத்தின் மொத்த எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு வெறும் 6.83 மில்லியன் தம்பதிகள் தங்கள் திருமணப் பதிவை செய்துள்ளனர். இதுவே, சிவில் விவகார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தரவுப்படி, முந்தைய ஆண்டை விட சுமார் 800,000 பதிவுகள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

    கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் ஊரடங்கில் பல வாரங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலோ அல்லது வளாகத்திலோ அடைபட்டு கிடந்தனர். தொற்றுநோய் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியதால் திருமணங்கள், குழந்தை பிறப்பு விகிதம் மற்றும் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.

    2022-ம் ஆண்டில், ஆறு சதாப்தங்களில் இல்லாத அளவில் கடந்த 2022ம் ஆண்டில் முதல் முறையாக சீனாவின் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்தது. சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகளாகக் குறைந்துள்ளது, இது 2021ல் 7.52 ஆக இருந்தது.

    மக்கள் தொகையை அதிகரிக்க ஏற்கனவே, திருமணத்தை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், கடந்த மாதம் 20க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை தொடங்குவதாக சீனா கூறியது.

    சில மாகாணங்கள் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய திருமண விடுமுறைஅளித்து நீட்டித்து வருகின்றன.

    • 2021ல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
    • முதல் குழந்தையைப் பெற்ற தம்பதியினருக்கு 3,000 யுவான் வழங்கப்படுகிறது.

    உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. பல ஆண்டுகளாக மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்து வரும் சீனாவில் முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

    1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீன தேசத்தில் அதன் வயதை காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.

    2022ம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை சுமார் 1,411,750,000 ஆக இருந்தது என்று பெய்ஜிங்கின் தேசிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இறுதியின் மக்கள் தொகையைவிட 850,000 குறைந்துள்ளது.

    இதேபோல், பிறப்பு எண்ணிக்கை 9.56 மில்லியன் ஆகவும், இறப்பு எண்ணிக்கை 10.41 மில்லியன் ஆகவும் இருந்தது.

    சீனாவின் மக்கள்தொகை கடைசியாக 1960ல் குறைந்தது. 1980ம் ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக விதிக்கப்பட்ட கடுமையான "ஒரு குழந்தை கொள்கையை" சீனா 2016 ல் முடித்துக் கொண்டது. 2021ல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்தது. ஆனால் சீன அரசு மக்கள்தொகை சரிவை மாற்றியமைக்க தவறிவிட்டது.

    குழந்தை பிறப்பு விகிதம் மந்தநிலையில் இருக்க வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணியிடத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உயர்கல்வியை நாடுவது உள்ளிட்ட காரணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜியுஜியன் பெங் கூறுகையில், " பல தசாப்தங்களாக ஒரு குழந்தை கொள்கையின் காரணமாக சீன மக்களும் சிறிய குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பிறப்பை ஊக்குவிக்க சீன அரசாங்கம் பயனுள்ள கொள்கைகளைக் கண்டறிய வேண்டும். இல்லையெனில், கருவுறுதல் இன்னும் குறைய வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

    மேலும், தம்பதிவகள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை சீனா அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முதல் குழந்தையைப் பெற்ற தம்பதியினருக்கு 3,000 யுவான் வழங்கப்படுகிறது. இது அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு 10,000 யுவான்களாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் கிழக்கில், ஜினான் நகரம் ஜனவரி 1 முதல் இரண்டாவது குழந்தையைப் பெற்ற தம்பதிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 600 யுவான் செலுத்தி வருகிறது.

    ×