என் மலர்
உலகம்
- கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் மெரினா மஷேடி வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
- ரிக்கி கோலே ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எல்சால்வடார்:
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சவால் விடும் வகையில் திருநங்கைகளும் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அழகி போட்டி வரலாற்றில் முதன் முறையாக 2 திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.
72-வது உலக அழகி போட்டி இந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவர்களுக்கு போட்டியாக 2 திருநங்கைகளும் களம் இறங்கி உள்ளனர். அதில் ஒருவரது பெயர் மெரினா மஷேடி. 23 வயதான இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் இவர் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
மற்றொரு திருநங்கை பெயர் ரிக்கி கோலே. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஆவார். அவர் ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.
உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளும் 2 திருநங்கைகளில் யாராவது ஒருவர் வெற்றி பெற்று மகுடம் சூட்டினால் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை என்ற சாதனையை படைக்கலாம்.
இது தொடர்பாக ரிக்கி கோலே கூறும் போது, சிறுவயதில் இருந்து நான் என் பாதையில் வந்த அனைத்தையும் வென்றேன். எனக்கு எனது குடும்பத்தினர் நல்ல ஊக்கம் அளித்து வருகிறார்கள். அவர்கள் ஆதரவால் தான் இது போன்ற சாதனைகளை செய்ய முடிகிறது. தற்போது என்னை பாருங்கள். இங்கே நான் வலிமையான, தன்னம்பிக்கையுடன் உங்கள் முன்பு ஒரு திருநங்கையாக நிற்கிறேன் என்று தெரிவித்தார்.
- காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
- இஸ்ரேல், பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றார்.
வாஷிங்டன்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது.
காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் மும்முனை தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு இஸ்ரேல் பிரதமருடன் பேச்சு நடத்தினார்.
இந்நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இஸ்ரேல் போர் தொடர்பாக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
இஸ்ரேல் போரில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும். இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. காசாவில் உள்ள அப்பாவி மக்கள் குடிதண்ணீர், மருந்து இல்லாமல் தவிப்பது தெரிய வந்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு இஸ்ரேல் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். உடனடியாக காசா மக்களுக்கு குடிதண்ணீரை வழங்கும்படி இஸ்ரேலுக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
ஆயுதம் ஏந்திப் போராடும் ஹமாஸ் படையினரை முழுமையாக ஒடுக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஹமாஸ் படையினர் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். அதற்காக காசாவை ஆக்கிரமித்து அந்தப் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று இஸ்ரேல் நினைப்பது சரியல்ல.
இஸ்ரேலில் தரைவழி தாக்குதல் மிகப்பெரிய தவறாக முடிந்துவிடும். அந்த தவறை இஸ்ரேல் செய்யாது என்று நம்புகிறேன். காசா பகுதி முழுக்க முழுக்க பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும். அதில் அமெரிக்கா தெளிவான கொள்கை முடிவுடன் இருக்கிறது.
காசாவில் உள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்கள் விரும்பினால் அருகில் உள்ள நாடுகளுக்கு இடம்பெயர உதவி செய்யவேண்டும். காசா வடக்கு பகுதி மக்கள் எகிப்து நோக்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.
அவர்களை எகிப்து நாடு அரவணைத்து உதவவேண்டும். இதற்காக நாங்கள் எகிப்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். காசாவில் உள்ள பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஏற்பட்டுள்ள போரை தொடர்ந்து அமெரிக்கா அந்தப் பகுதிக்கு மேலும் ஒரு கப்பலை அனுப்பி இருக்கிறது. இந்தப் போரில் இதுவரை 30 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.
என்றாலும் இந்தப் போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட விரும்பவில்லை. அதற்கான காரணமும் இல்லை. இஸ்ரேலுக்கு கூடுதல் உதவிகள் செய்ய அமெரிக்காவில் கோரிக்கை எழுந்துள்ளது. அதுபற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
- பிரதமர் நேதன்யாகு காசாவில் ராணுவ முகாமிற்கு நேரில் சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை சந்தித்தார்.
- காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
டெல் அவிவ்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல்மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது.
இந்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் தாக்குதலில் மாயமானோர் மற்றும் ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினார்.
- எவ்வித நிபந்தனை இன்றி ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.
- காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் விரைவில் கிடைக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும்.
நியூயார்க்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில்,மத்திய கிழக்கில் நாம் படுகுழியின் விளிம்பில் இருப்பதால், எனக்கு இரண்டு மனிதாபிமான வேண்டுகோள்கள் உள்ளன. எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும், காசாவில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் விரைவில் கிடைக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது.
- காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது.
ஜெருசலேம்:
இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த போர் தாக்குதலால் மக்கள் தங்களின் வீடு, உடமைகளைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இதனிடையே போர் தொடங்கிய உடன் காசா பகுதிக்கான குடிநீர், உணவு பொருட்கள், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் ராணுவம் நிறுத்திவிட்டது. இதன்காரணமாக காசா பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி பரிதவித்து வந்தனர்.
இந்நிலையில் தெற்கு காசா பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காசாவுக்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திய இஸ்ரேலின் முடிவுக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
- ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
- மக்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 7ம் தேதி முதல் தொடங்கியது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த போர் தாக்குதலால் மக்கள் தங்களின் வீடு, உடமைகளைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், காசாவில் மோதலின் முதல் ஏழு நாட்களில் இதுவுரை 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஐ.நாவின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலியட் டூமா கூறுகையில்," காசாவில் நடந்த போரின் முதல் ஏழு நாட்களில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மக்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
- இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
- லெபனான் உடனான வடக்கு எல்லையில் இருந்து 4 கி.மீ., வரையிலான பகுதியை இஸ்ரேல் சீல் வைத்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் இன்று 9வது நாளாக நீடித்து வருகிறது.
கடந்த 7-ம்தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாமுனை மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இரு தரப்பிலும் இதுவரை அப்பாவி பொதுமக்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்டது. இதையடுத்து போர் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. எல்லையில் 3 லட்சம் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராக்கெட் தாக்குதல் குறித்து சைரன் ஒலிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
காசா பகுதியில் இருந்து இஸ்ரேலின் தெற்கு மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா, இஸ்ரேலிய வடக்கு எல்லைக் கிராமத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
லெபனான் உடனான வடக்கு எல்லையில் இருந்து 4 கி.மீ., வரையிலான பகுதியை இஸ்ரேல் சீல் வைத்துள்ளது.
- போர் 9-வது நாளாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
- வீரர்களுக்கு தங்கள் உணவகங்களில் தள்ளுபடியையும் அறிவித்திருக்கிறது
தன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்திய ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், பாலஸ்தீன காசா பகுதியில் அந்த அமைப்பினரை தேடி தேடி வேட்டையாடி வருகிறது. காசாவில் வசிக்கும் லட்சக்கணக்கான பொதுமக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.
போர் 9-வது நாளாக தொடர்ந்து நடைபெறும் நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் துணை நிற்கின்றன. ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், கத்தார் உள்ளிட்ட பல அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்காவை மையமாக கொண்ட மெக்டொனால்ட்'ஸ் (McDonald's) எனும் பன்னாட்டு துரித தொடர் உணவக நிறுவனம், இஸ்ரேல் ராணுவ படைகளின் (Israeli Defence Forces) வீரர்களுக்கு இலவசமாக உணவு வழங்க போவதாக அறிவித்திருக்கிறது.
தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அந்த நிறுவனத்தின் இஸ்ரேல் நாட்டு அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
நேற்று 4000 பேருக்கான இலவச உணவை மருத்துவமனைகளுக்கும், ராணுவ முகாம்களுக்கும் வழங்கி விட்டோம். வர போகும் நாட்களில் தினமும் 1000க்கும் மேலானவர்களுக்கான உணவை வழங்க இருக்கிறோம். உணவை அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும், போர் களத்திலும் வழங்க இருக்கிறோம். இவற்றை தவிர இஸ்ரேலி போர் வீரர்களுக்கு எங்கள் உணவகங்களில் தள்ளுபடியும் தந்து கொண்டிருக்கிறோம். இவர்களுக்கு உதவுவதற்காக மேலும் 5 உணவகங்கள் திறக்க இருக்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்டொனால்ட்'ஸ் உணவகத்தின் இந்த முடிவிற்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. லெபனானில் உள்ள உணவகத்தின் மீது ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவானவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
- சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அம்பேத்கரின் நினைவை போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பளவில் அம்பேத்கர் சர்வதேச மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலைக்கு 'சமத்துவத்தின் சிலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிலை 19 அடி உயரம் கொண்டது. இது மிகவும் உயரமான சிலை ஆகும். சிலை திறப்பு விழாவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சிலையை பிரபல சிற்பி ராம் சுதார் வடிவமைத்துள்ளார். இவர் குஜராத் நர்மதா ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ள 'ஒற்றுமையின் சிலை' என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஓ.ஐ.சி. அமைப்பில் 57 அரபு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்
- சமீபத்தில்தான் சவுதி அரேபியா, இஸ்ரேலுடன் சுமூக உறவுக்கான அடித்தளம் அமைத்தது
கடந்த சனிக்கிழமை தொடங்கிய ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் அரபு நாடுகளின் அவசர கூட்டம் கூடுகிறது.
இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (Organisation of Islamic Cooperation) எனும் இந்த அமைப்பு, ஐ.நா. (UN) சபைக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர் நாடுகள் (57 நாடுகள்) உள்ள ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இந்த அமைப்பு, உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் குரலாக தன்னை முன்னிறுத்தி கொண்டுள்ளது. இக்கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை தற்போது ஏற்றிருக்கும் சவுதி அரேபியா, அனைத்து உறுப்பினர் நாடுகளையும் இந்த சந்திப்பிற்காக சவுதி அரேபியாவில் உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறது.
இந்த அமைப்பின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தீவிரமடைந்து வரும் காசா மீதான இஸ்ரேலின் ராணுவ தாக்குதல்களையும் அதனால் அங்கு வசிக்கும் அப்பாவி காசா மக்கள் படும் துன்பங்களை குறித்தும், அவர்களின் சீர்குலைந்து வரும் வாழ்வாதார பிரச்சனைகள் மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து முடிவெடுக்கவும் நமது அமைப்பின் செயற்குழு, உறுப்பினர் நாடுகளின் அமைச்சர் பொறுப்பில் உள்ள தலைவர்களின் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலத்திற்கு பிறகு சவுதி அரேபியா, இஸ்ரேலுடன் ஒரு சுமூக உறவுக்கான முயற்சிகளை சமீபத்தில்தான் மேற்கொண்டு வந்தது. ஆனால், இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் மீது போரை அறிவித்து காசா பகுதியில் தொடர் தாக்குதல் நடத்த தொடங்கியதும், அந்நாட்டுடன் அனைத்து பேச்சுவார்த்தையையும் நிறுத்தி வைத்திருக்கிறது.
- இஸ்ரேல், ஹமாஸ் போரினால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
- ஹமாஸ் அமைப்பின் மூத்த கமாண்டரான மெராத் அபு மெராட் நேற்று கொல்லப்பட்டார்
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 8-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேற்று ஹமாஸ் அமைப்பின் மூத்த கமாண்டர் மெராத் அபு மெராட் தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் அறிவித்தது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் மற்றொரு கமாண்டர், தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் விமானப் படை இன்று தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டது நுக்பா பிரிவின் தளபதியான பில்லால் அல்-கெத்ரா என தெரிவித்துள்ளது.
- காசா மீது இன்று 9-வது நாளாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
- இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, தனது போர் கப்பலை அனுப்பியது.
டெல்அவிவ்:
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் நீண்டகாலமாக நீடித்து வரும் நிலையில் தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப் பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாமுனை மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இரு தரப்பிலும் இதுவரை அப்பாவி பொதுமக்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்டது. இதையடுத்து போர் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. எல்லையில் 3 லட்சம் வீரர் கள் குவிக்கப்பட்டனர். தரைவழி தாக்குதலுக்கு தயாரான நிலையில் வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் மக்கள் உடனே வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியது.
இதையடுத்து வடக்கு காசாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி தெற்கு காசாவுக்கு சென்றனர். இன்னும் ஏராளமானோர் வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் வெளியேறுவதற்காக இஸ்ரேல் விதித்த காலக்கெடு முடிவடைந்ததையடுத்து எந்நேரத்திலும் தரைப்படை புகுந்து காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது போர் தாக்குதல் நடத்தும் சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகிறார்கள்.
நேற்று மக்கள் வெளியேறுவதற்காக குறிப்பிட்ட பகுதியில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் இன்று 2-வது பாதுகாப்பான வழிதடத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. சாலா ஏ-தின் சாலை பகுதிகளில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலின் முப்படைகளும் போருக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலின் தரைப்படை, தரைவழி கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முப்படைகளும் காசாவில் உள்ள எல்லையில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இஸ்ரேல் ராணுவத்தின் உத்தரவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். தாக்குதலுக்கான உத்தரவு கிடைத்ததும் முப்படைகளும் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நிலையில் உள்ளன.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, "வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறியவுடன் இஸ்ரேல் குறிப்பிடத்தக்க ராணுவ நடவடிக்கைகளை தொடங்கும். பொதுமக்கள் வெளியேறுவதில் கவனம் செலுத்த வேண்டியதும் முக்கியமான விஷயம். எனவே நாங்கள் அவர்களுக்கு காலக்கெடுவை மிகவும் தாராளமாக கொடுத்துள்ளோம் என்பதை காசாவில் உள்ளவர்கள் அறிவது மிக முக்கியம். அவர்களுக்கு போதுமான எச்சரிக்கை வழங்கி உள்ளோம்.
அவர்களிடம் நாங்கள் கூறுவது ஒன்றுதான். உங்களது பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். தெற்கு பகுதிக்கு உடனே செல்லுங்கள். உங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஹமாஸ் விரிக்கும் வலையில் விழாதீர்கள்" என்றார்.
இதன் மூலம் வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் வெளியேறியதை உறுதி செய்தவுடன் தாக்குதலை தொடங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. நேற்று முன்தினம் இஸ்ரேல் விதித்திருந்த காலக்கெடு நேற்று இரவுடன் முடிந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி உள்ளனர்.
இதனால் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் முப்படைகளும் தாக்குதலை எந்த நேரத்திலும் தொடங்கலாம். இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் மும்முனையில் இருந்து தாக்குதல் நடத்தியதை விட அதிபயங்கர தாக்குதலை நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
இதற்கு முன்னோட்டமாக நேற்று இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் புகுந்து சிறிய அளவிலான தாக்குதலை நடத்தியது.
ஏற்கனவே இஸ்ரேல் ராணுவத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் ராணுவம் திரும்ப பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போர் முனைக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். எல்லை பகுதிக்கு சென்ற அவர் ராணுவ வீரர்களிடம் கூறும்போது, "வரும் நாட்களில் வர இருக்கும் சம்பவங்களுக்கு நீங்கள் தயாரா? இன்னும் நிறைய சம்பவங்கள் வர போகிறது" என்று ராணுவ வீரர்களிடம் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதலை தொடங்கியதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபற்றி இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதே வேளையில் காசா மீது இன்று 9-வது நாளாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, தனது போர் கப்பலை அனுப்பியது. இந்த நிலையில் 2-வது விமானம் தாங்கி கப்பலை மத்திய தரைக்கடலுக்கு அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, கிழக்கு மத்திய தரை கடல் பகுதிக்கு 2-வது போர் கப்பலை அனுப்ப பென்டகன் உத்தரவிட்டு உள்ளது.
அமெரிக்க போர்க்கப்பல்கள் காசாவில் சண்டையிடுவதற்கோ அல்லது இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் பங்கு பெறுவதற்கோ அல்ல ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் நடவடிக்கைகளை தடுப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு போர் விமானங்கள் மற்றும் தரை வழி தாக்குதல் ஜெட் விமானங்களை அனுப்புவதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசியில் பேசினார். அதே போல் பாலஸ்தீனத்தின் மேற்குகரை அதிபர் அப்பாசுடனும் பேசினார். அப்போது, காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்தார். மேலும் பொதுமக்களை காப்பதற்கான உதவிகள் அளிக்கப்படும் என்றும் கூறினார்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த உள்ள நிலையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சவூதி அரேபியாவின் அழைப்பின் பேரில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. காசா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிகரித்து வரும் ராணுவ நடவடிக்கை மற்றும் மோசமடைந்து வரும் நிலைமைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்துகிறார்கள்.
வடக்கு காசாவில் இருந்து மக்கள் பெரிய அளவில் இடம் பெயர்வது மிகவும் தீவிரமான மனிதாபிமான ரீதியிலான பாதிப்புக்கு வழி வகுக்கும் என்று ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு கூறும்போது, "வடக்கு காசாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து நோய்வாய்ப்பட்ட மற்றும் காயம் அடைந்தவர்களை வெளியேற்றுவது அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதற்கு சமம். நோயாளிகள், சுகாதார பணியாளர்களை கட்டாயமாக வெளியேற்றுவது மனிதாபிமான மற்றும் பொது சுகாதார பேரழிவை மேலும் மோசமாக்கும் என்று தெரிவித்துள்ளது.






