என் மலர்
உலகம்
- இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
- வேறு எந்த நாட்டின் ராணுவம் இங்கே இருந்தாலும் எனது நிலைப்பாடு இதுவே தான் என்று அவர் தெரிவித்தார்.
மாலே:
மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் முகமது முய்சு வெற்றி பெற்றார். இந்திய ஆதரவாளரான இப்ராகிம் முகமது தோல்வி அடைந்தார். சீன ஆதரவாளரான முகமது முய்சு, தனது பிரசாரத்தின் போது, மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் முழுவதும் வெளியேற நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார். தேர்தலில் வென்று அதிபரானதும், மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்திய படைகள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மீண்டும் திட்ட வட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. வேறு எந்த நாட்டின் ராணுவம் இங்கே இருந்தாலும் எனது நிலைப்பாடு இதுவே தான் என்று அவர் தெரிவித்தார். சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ள ரேடார் நிலையங்களையும் கண்காணிப்பு விமானங்களையும் பராமரித்து வருகின்றனர். மேலும் இந்தியப் போர்க் கப்பல்கள் மாலத்தீவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ரோந்து செல்ல உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- மாணவியை சின்னையா தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
- சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக அறிவித்தார்.
சிங்கப்பூர்:
இந்தியாவை சேர்ந்த சின்னையா (வயது 26) என்பவர் சிங்கப்பூரில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம், பல்கலைக்கழக மாணவியை கற்பழித்த வழக்கில் சின்னையா கைது செய்யப்பட்டார்.
அந்த மாணவி, சம்பவத்தன்று இரவு பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்ற போது, அவரை சின்னையா வனப்பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் மாணவியை அவர் கடுமையாக தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
மாணவியின் முகம் மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருந்தன. அவர் தனது காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து போலீசார் அங்கு வந்து மாணவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் மாணவியை சின்னையா தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
சின்னையாவுக்கு 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக அறிவித்தார். சின்னையாவின் மனநிலையை பற்றி பல மனநல மதிப்பீடுகள் தேவைப்பட்டதால் இவ்வழக்கு விசாரணைக்கு நான்கு ஆண்டுகள் ஆனது என்று கோர்ட்டு தெரிவித்தது.
- காசா மீதான தரைவழி தாக்குதலை மெல்ல மெல்ல விரிவுப்படுத்தி வருகிறது இஸ்ரேல்
- தரைவழி தாக்குதலில் முழுப்படைகளுடன் இஸ்ரேல் ராணுவத்தை எதிர்கொள்வோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக வான்தாக்குதலுடன், தரைவழி தாக்குதலை மெல்ல மெல்ல விரிவுப்படுத்தி வருகிறது. இன்னும் சில நாட்களில் முழுமையாக தரைவழி தாக்குதலில் இஸ்ரேல் குதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலை எதிர்கொள்ள முழுப்படைகளுடன் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அமைப்புகளுடன் சேர்ந்து முழுப்படையுடன் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அதன் ஊடுருவலை முறியடிப்போம்.
நேதன்யாகு மற்றும் தோற்கடிக்கப்பட்ட அவருடைய ராணுவமும் எந்தவொரு ராணுவ வெற்றியையும் அடைய முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
நேற்று இஸ்ரேல் துருப்புகளுடன் காசாவின் வடகிழக்கு நகரான பெய்ட் ஹனௌன் மற்றும் அல்-புரெய்ஜின் மத்திய பகுதியில் சண்டையிட்டோம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இதனால் வரும் நாட்களில் காசா பகுதி மிகப்பெரிய சேதத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- சீனாவின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் வூ சூன்யூ.
- சீனாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நகரங்களை பூட்டி கோடிக்கணக்கான மக்களை வீடுகளுக்குள் அடைத்து வைக்கும் கடும் ஊரடங்கு நடவடிக்கைக்கு வித்திட்டவர் வூ சூன்யூ தான்.
பீஜிங்:
சீனாவின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் வூ சூன்யூ. அந்த நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தலைமை தொற்றுநோய் நிபுணராக இருந்து வந்தார். சீனாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க நகரங்களை பூட்டி கோடிக்கணக்கான மக்களை வீடுகளுக்குள் அடைத்து வைக்கும் கடும் ஊரடங்கு நடவடிக்கைக்கு வித்திட்டவர் இவர் தான்.
இந்த நிலையில் நேற்று இவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. அவரது இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை
- ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது
- காசா மற்றும் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது
ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் காசா மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றன.
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7-ந்தேதி கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியதால், அரபு நாடுகள் உள்ளிட்டவை இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக களம் இறங்க முடியவில்லை. இதனால் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது.
காசாவில் சுமார் 20 லட்சம் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பாலஸ்தீன மக்களும் இந்த போரால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
இந்த தீர்மானத்தில், அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகளால் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கா ஆதரவுடன் கனடா, தீர்மானத்தில் மாற்றம் கொண்டு முயற்சித்தது. அது நிராகரிக்கப்பட்டது.
இறுதியாக 193 உறுப்பினர்களை கொண்ட சபையில், தீர்மானத்திற்கு ஆதரவாக 120 பேர் வாக்களித்தனர். 14 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 45 பேர் கலந்து கொள்ளவில்லை.
இந்த தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது
- சுமார் 20 லட்சம் மக்கள் காசாவில் தவித்து வருகிறார்கள்
ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வான்தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக சில தினங்களாக பீரங்கிகள் மூலமாக காசாவில் சிறுசிறு தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலால் காசாவில் உள்ள சுமார் 20 லட்சம் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு, மருத்துவ உதவிப்பொருட்கள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், காசாவில் பணியாற்றி வந்த உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள் (Staff), சுகாதார பணியாளர்கள், மனிதாபிமான உதவிகள் செய்யும் பார்ட்னர்கள் ஆகியோர் உடனான தொடர்பை இழந்துவிட்டோம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
காசாவில் உள்ள அனைத்து மக்களையும் உடனடியாக பாதுகாக்க வேண்டும். முழு மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் யுனிசெப் தலைவர் ரஸல், "எங்களுடன் பணிபுரியம் சக அதிகாரிகள் உடனான தொடர்பை இழந்து விட்டோம். அவர்கள் பாதுகாப்பு விசயம் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
- 7 பேர் படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு.
- குண்டு வெடிப்பு சம்பவத்தின் வீடியோ வெளியானது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷியைட் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்று மாலை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், 7 பேர் படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
காபூல் காவல்துறையின் தலைமை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரன், "காயமடைந்தவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும், குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும்" கூறினார்.
குண்டு வெடிப்பு சம்பவத்தின் வீடியோ வெளியானது. அதில், ஒரு கட்டிடத்தின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறுவதையும், உள்ளே தீப்பிழம்புகள் எரிவகையும் காட்டியது. சாலை முழுவதும் உடைந்த கண்ணாடி மற்றும் பிற குப்பைகள் சிதறிக்கிடப்பதை காண்பித்தன.
- இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் காசா எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின.
- அமெரிக்க ராணுவ வீரர்கள் 900 பேர் மத்திய கிழக்கு பகுதிக்கு சென்றடைந்துள்ளனர்.
டெல்அவிவ்:
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசா பகுதி மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
காசாவுக்குள் தரை வழித் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளது. காசா எல்லையில் ராணுவ டாங்கிகள் அணிவகுத்து நிற்கின்றன. 3 லட்சம் வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ டாங்கிகள் காசா எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தின. ஹமாஸ் அமைப்பின் கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திவிட்டு மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பின. ஹமாசின் 250 நிலைகளை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஹமாஸ் அமைப்பினர் பலர் கொல்லப்பட்டதாகவும் தாக்குதல் நடத்திவிட்டு பீரங்கிகள் மீண்டும் இஸ்ரேல் எல்லைக்குள் திரும்பி விட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இது தரைவழி தாக்குதலுக்கான ஒத்திகை என்றும் இஸ்ரேல் தெரிவித்தது. இதனால் விரைவில் தரைவழித் தாக்குதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் காசாவுக்குள் புகுந்து பீரங்கி தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகார் கூறும் போது, ஹமாசுக்கு எதிரான இஸ்ரேலின் அடுத்த கட்ட போருக்கு தயாராவதற்காக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், வரும் நாட்களில் காசாவில் பீரங்கி தாக்குதல்களை தொடரும்.
ஹமாஸ் அமைப்பினரை கொல்வதும், முழுப்படையெடுப்புக்கு அடித்தளமிடுவதும், வெடிக்கும் சாதனங்கள், உளவுத் தளங்களை நடுநிலையாக்குவதும் இஸ்ரேல் தரைப்படை நடவடிக்கைகளின் நோக்கமாகும்.
வான் மற்றும் கடலில் இருந்து காசா மீது தாக்குதல் தொடர்ந்து வருகிறது. மூத்த ஹமாஸ் தளபதிகளை கொல்வதிலும், ஹமாஸ் உள்கட்டமைப்பை அழிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது என்றார்.
இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோசவ் கல்லன்ட் கூறும்போது, ஹமாசுக்கு எதிரான போரில் அடுத்த கட்டங்களுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. நிலைமைகள் சரியாக இருக்கும் போது தரைவழி தாக்குதல் தொடங்கும் என்றார்.
காசா மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் 21-வது நாளாக தொடர்கிறது. நேற்று இரவு காசா மீது குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கிடையே காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்று அடைய இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இப்போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான் உள்ளது.
இந்த நிலையில் கிழக்கு சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய குழுக்களின் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஈரானின் புரட்சிகர காவலர் படையின் இரண்டு இடங்களை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே அமெரிக்க ராணுவ வீரர்கள் 900 பேர் மத்திய கிழக்கு பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். ஏற்கனவே அமெரிக்கா தனது இரண்டு போர்க் கப்பல்களை மத்திய தரை கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சீனாவின் தலைமைப் பொருளாதார அதிகாரியாக பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.
- சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக் குரிய தலைவர்களில் ஒருவராக லீ கெகியாங் இருந்தார்.
சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் (வயது 68). 2013-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பிரதமராக இருந்தார். இந்த நிலையில் கெகியாங், மாரடைப்பால் உயிரிழந்தார். ஷாங்காய் நகரில் வசித்து வந்த அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
பொருளாதார வல்லுநரான இவர், பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். சீனாவின் தலைமைப் பொருளாதார அதிகாரியாக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். 1955-ம் ஆண்டு அன்ஹுய் மாகாணத்தில் பிறந்த லீ கெகியாங், ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகத் தொடங்கி அரசியலில் நுழைந்தார். அவர் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். கம்யூனிஸ்ட் இளைஞர் கழகத்தில் ஈடுபட்டார். அவர் 1994-ல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் மாகாண பதவிகள் மற்றும் அமைச்சகங்களில் பணியாற்றிய பிறகு 2007-ல் கட்சியின் மத்திய குழுவில் சேர்ந்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக் குரிய தலைவர்களில் ஒருவராக லீ கெகியாங் இருந்தார்.
- மாணவனுக்கு நிர்வாண படங்களை அனுப்பியதை ஒப்புக் கொண்டார்.
- சிறுவர்களுக்கு ஆபாச தகவல்களை அளித்தல் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிக்கி லின் லாப்லின் (வயது23). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இவர், 16 வயது மாணவனுக்கு தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி உள்ளார். மேலும் மாணவனின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டு உள்ளார். இவ்விவகாரம் பள்ளி முழுவதும் பரவியது.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் அந்த மாணவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியை தனக்கு அவரது நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பியதாகவும், ஆசிரியையிடம் தனது நிர்வாண படங்களை பரிமாறி கொண்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ஆசிரியையிடம் விசாரணை நடத்திய போது மாணவனுக்கு நிர்வாண படங்களை அனுப்பியதை ஒப்புக் கொண்டார். மேலும் அந்த மாணவன் மைனர் என்பது தனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஆசிரியையை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு முயற்சி, குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருத்தல், சாட்சியை சேதப்படுத்துதல், சிறுவர்களுக்கு ஆபாச தகவல்களை அளித்தல் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
- ஹமாசின் துணை உதவியாளர் இப்ராகிம் ஜெதேவாவும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பட்டாலியன் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவாக கருதப்படுகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கமாண்டர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவின் 2 தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாசின் டார்ஜ் தபா பட்டாலியனின் கமாண்டர் ரபத் அப்பாஸ், போர் மற்றும் நிர்வாக உதவி தளபதி தரேக் மரூப் ஆகியோர் போர் விமான தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றும் ஹமாசின் துணை உதவியாளர் இப்ராகிம் ஜெதேவாவும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாலியன் ஹமாசின் மிக முக்கியமான படை பிரிவாக கருதப்படுகிறது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- கடந்த 10 நாட்களுக்கு முன் அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல்
- ஜோ பைடன் எச்சரித்திருந்த நிலையில், தற்போது பதில் தாக்குதல் நடத்தியுள்ளது
மத்திய கிழக்கு கடற்பகுதி, ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய படைக்குழு அமெரிக்க துருப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த வகையில் கடந்த 17-ந்தேதி அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 21 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் குணமடைந்து தற்போது பணிக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கு பதிலடியாக அமெரிக்கா, கிழக்கு சிரியாவில் உள்ள இரண்டு இடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த துல்லியமான தாக்குதல், கடந்த 17-ந்தேதிக்கு பதிலடி என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போருக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
"தற்பாதுகாப்புக்காக குறுகியதாக வடிவமைக்கப்பட்ட இந்த தாக்குதல்கள், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க துருப்புகளை பாதுகாப்பது மட்டுமே நோக்கமாக இருந்தன" என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.






