search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வேண்டும்- அதிபர் மீண்டும் திட்டவட்டம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வேண்டும்- அதிபர் மீண்டும் திட்டவட்டம்

    • இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
    • வேறு எந்த நாட்டின் ராணுவம் இங்கே இருந்தாலும் எனது நிலைப்பாடு இதுவே தான் என்று அவர் தெரிவித்தார்.

    மாலே:

    மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் முகமது முய்சு வெற்றி பெற்றார். இந்திய ஆதரவாளரான இப்ராகிம் முகமது தோல்வி அடைந்தார். சீன ஆதரவாளரான முகமது முய்சு, தனது பிரசாரத்தின் போது, மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் முழுவதும் வெளியேற நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார். தேர்தலில் வென்று அதிபரானதும், மாலத்தீவில் இருந்து இந்திய படைகள் வெளியேற வேண்டும் என்று முகமது முய்சு தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்திய படைகள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மீண்டும் திட்ட வட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, இந்திய ராணுவம் மாலத்தீவில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. வேறு எந்த நாட்டின் ராணுவம் இங்கே இருந்தாலும் எனது நிலைப்பாடு இதுவே தான் என்று அவர் தெரிவித்தார். சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ள ரேடார் நிலையங்களையும் கண்காணிப்பு விமானங்களையும் பராமரித்து வருகின்றனர். மேலும் இந்தியப் போர்க் கப்பல்கள் மாலத்தீவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ரோந்து செல்ல உதவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×