என் மலர்
டென்னிஸ்
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், நெதர்லாந்து வீரர் போடிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அலகாரஸ் 7-6 (7-3), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, இத்தாலியின் லாரன்சோ சொனேகா உடன் மோதினார்.
இதில் ரூனே 7-6 (7-4), 6-4 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-4, 6-1 என வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ரோட்டர்டாம்:
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ், பிரான்ஸ் வீரர் ஹரோல்ட் மேயாட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நம்பர் 2 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சுவிட்சர்லாந்தின் ஸ்டன் வாவ்ரிங்கா உடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 6-7 (8-10) என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-4, 6-1 என வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.
புதுடெல்லி:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் வெற்றி பெற்று, 2-0 என முன்னிலை பெற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ரித்விக் சவுத்ரி போலிப்பல்லி ஜோடி, டோகோ ஜோடியை 6-2, 6-1 என எளிதில் வீழ்த்தியது. இந்தப் போட்டி 57 நிமிடங்களில் முடிவடைந்தது. இதன்மூலம் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் இன்று தொடங்கியது.
- இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.
புதுடெல்லி:
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் புதுடெல்லியில் இன்று தொடங்கியது. இதில் இந்தியா, டோகோ அணிகள் மோதி வருகின்றன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் முதல் சுற்றில் 6-2, 6-1 என வென்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 6-0, 6-2 என வென்றார்.
இதன்மூலம் டோகோ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய மேடிசன் கீஸ் 7 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
- அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) 8,135 புள்ளியுடன் அதே 2-வது வரிசையில் உள்ளார்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் சமீபத்தில் முடிவடைந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னரும் (இத்தாலி), பெண்கள் ஒற்றையர் பிரிவில் மேடிசன் கீசும் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர்.
இந்த நிலையில் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை தக்க வைத்த சின்னர் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். அவர் 11,830 புள்ளிகள் பெற்று உள்ளார். அவரிடம் இறுதிப் போட்டியில் தோற்ற அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி) 8,135 புள்ளியுடன் அதே 2-வது வரிசையில் உள்ளார்.
கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 7010 புள்ளியுடன் 3-வது இடத்திலும், டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா) 4-வது இடத்திலும், கேஸ்பர் ரூட் (நார்வே) 5-வது இடத்திலும், அதிக கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்ற சாதனையாளராக ஜோகோவிச் (செர்பியா) 6-வது இடத்திலும், மெட்வதேவ் (ரஷியா) 7-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா (பெலாரஸ்) 8,956 புள்ளியுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். அவர் ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் தோற்றாலும் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை கைப்பற்றிய மேடிசன் கீஸ் 7 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். இகா ஸ்வியாடெக் (போலந்து) 8,770 புள்ளியுடன் 2-வது இடத்திலும் , கோகோ கவூப் (அமெரிக்கா) 6,538 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
பாலினி (இத்தாலி), ரைபகினா (கஜகஸ்தான்), பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் முறையே 4 முதல் 6-வது இடத்தில் உள்ளனர்.
- சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை ஜின்யு வாங் வெற்றி பெற்றார்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் சீன வீராங்கனை ஜின்யு வாங், கனடா வீராங்கனை ரிபேகா மரினோ உடன் மோதினார்.
இதில் ஜின்யு வாங் 6-4, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
அடுத்த சுற்றில் ஜின்யு வாங் ஆஸ்திரேலிய வீராங்கனை மாயா ஜாயிண்டை சந்திக்க உள்ளார்.
- மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
- இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீசும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான செக் நாட்டின் கேடரினா சினியாகோவா-அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட் ஜோடி, லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ-தைவானின் ஹ்சீஹ் சு ஜோடியுடன் மோதியது.
இதில் சினியாகோவா ஜோடி 6-2, 6-7 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
- வலி தாங்க முடியாமல் சிரமப்பட்ட ஜோகோவிச் ஆட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
- ஜோகோவிச் விளையாடிருந்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று 100 வது சாம்பியன் பட்டம் வென்றிருப்பார்.
நேற்று முன் தினம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் அரையிறுதியில் இருந்து ஜோகோவிச் காயத்தால் பாதியில் வெளியேறினார்.
99 முறை சாம்பியன் பட்டமும் 24 முறை கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் நேற்றைய முதல் அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மோதினர்.

முன்னதான காலிறுதிப் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட ஜோகோவிச் தடுமாற்றத்துடன் முதல் செட்டை எதிர்கொண்டார். பெரும் போராட்டத்துக்கு பின் முதல் செட்டில் 7-6 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்வெரெவ் கைப்பற்றினார்.
ஆனால் அதன்பின் வலி தாங்க முடியாமல் சிரமப்பட்ட ஜோகோவிச் ஆட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
ஸ்வெரெவுக்கு கைகொடுத்து வாழ்த்தி விட்டு அவர் அரங்கை விட்டு அகன்றார். இதனால், ஸ்வெரெவ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 99 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் கொஞ்சம் சிரமப்பட்டு விளையாடிருந்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று 100 வது சாம்பியன் பட்டம் வென்றிருப்பார்.

மேலும் 25வது முறை கிராண்ட் சிலாம் பட்டம் வென்று ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை மார்க்கரெட் கோர்ட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பையும் அவர் நழுவவிட்டார் என பலர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
எனவே அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் தனது எம்ஆர்ஐ ஸ்கேன் -ஐ ஜோகோவிச் பகிர்ந்துள்ளார். மேலும் கேலியாக, காயங்களை கண்டறியும் நிபுணர்கள்[விமர்சிப்பவர்கள்] வசம் இந்த ஸ்கேன் ஐ விட்டுவிடுகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- இறுதிபோட்டியில் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தினார்.
- அரையிறுதிப் போட்டியில் நம்பர் 2 வீராங்கனையை வீழ்த்தினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், பெலாரசின் அரினா சபலென்கா மோதினர்.
இதில் சபலென்காவை வீழ்த்திய மேடிசன் கீஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்காவை வீழ்த்தினார். அரையிறுதிப் போட்டியில் நம்பர் 2 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீராங்கனைகளை வீழ்த்திய முதல் வீராங்கனை மேடிசன் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் செட்டை மேடிசனும் 2-வது செட்டை சபலென்காவும் கைப்பற்றினர்.
- முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை மேடிசன் வென்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா (பெலருசியா) மேடிசன் கீஸ் (போலந்து) ஆகியோர் மோதின.
இதில் முதல் செட்டை மேடிசனும் 2-வது செட்டை சபலென்காவும் கைப்பற்றினர். யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பாக சென்றது. இதில் மேடிசன் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இதனால் 3-6, 6-2, 5-7 என்ற செட் கணக்கில் மேடிசன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை மேடிசன் வென்றுள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சிட்னி:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஒலிவியா கடெகி ஜோடி, சக நாட்டின் கிம்பர்லி-ஜான் பாட்ரிக் ஜோடியுடன் மோதியது.
இதில் ஜான் பியர்ஸ்-ஒலிவியா ஜோடி 6-3, 4-6, 10-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
- சின்னெர் 7-2, 6-2,6-2 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
- 26-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) சின்னெர் ஆகியோர் மோதவுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) - பென் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் சின்னெர் 7-2, 6-2,6-2 என்ற செட் கணக்கில் பென் ஷெல்டனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 26-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) சின்னெர் ஆகியோர் மோதவுள்ளனர்.






