என் மலர்

  நீங்கள் தேடியது "ATP Rankings"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 84-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். #PrajneshGunneswaran #ATPRanking
  பாரிஸ்:

  உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென் னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ரபெல் நடால் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர்.

  இன்டியன்வெல்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் திம் (ஆஸ்திரியா) 4 இடங்கள் முன்னேறி 2-வது முறையாக 4-வது இடத்தை பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் டொமினிக் திம்மிடம் தோல்வி கண்ட ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தையும், ஜப்பான் வீரர் நிஷிகோரி ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஒரு இடம் சரிவை சந்தித்து 7-வது இடத்தையும், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 3 இடம் சறுக்கி 8-வது இடத்தையும் பெற்றனர். அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 9-வது இடத்திலும், கிரீஸ் வீரர் ஸ்டீபனோஸ் சிட்சிபாஸ் 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

  இன்டியன்வெல்ஸ் போட்டியில் 3-வது சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 13 இடங்கள் ஏற்றம் கண்டு 84-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும். முழங்காலில் காயம் அடைந்து தேறி வரும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 36 இடங்கள் சரிந்து 207-வது இடத்தை பெற்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் முதல்முறையாக யுகி பாம்ப்ரி டாப்-200 இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டு இருக்கிறார். இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன் 139-வது இடத்தையும், சகெத் மைனெனி 251-வது இடத்தையும், சசிகுமார் முகுந்த் 268-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

  ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் 2 இடம் முன்னேறி 94-வது இடத்தையும், ரோகன் போபண்ணா 36-வது இடத்தையும், திவிஜ் சரண் 41-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தில் தொடருகிறார். செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தையும், சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்தையும், இன்டியன்வெல்ஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 4 இடம் முன்னேறி 4-வது இடத்தையும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தையும், அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 2 இடம் சரிந்து 6-வது இடத்தையும், செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 2 இடம் சறுக்கி 7-வது இடத்தையும், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் ஒரு இடம் சரிந்து 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சபலெங்கா (பெலாரஸ்) 9-வது இடத்திலும், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

  இன்டியன்வெல்ஸ் பட்டத்தை வென்ற கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு 36 இடம் உயர்வு கண்டு 24-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். பெலின்டா பென்சிச் (சுவிட்சர்லாந்து) 3 இடம் முன்னேறி 20-வது இடத்தை பெற்றுள்ளார். இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 2 இடம் சரிந்து 168-வது இடத்தையும், கர்மான் தாண்டி 7 இடங்கள் முன்னேறி 203-வது இடத்தையும் தனதாக்கினார்கள்.  #PrajneshGunneswaran #ATPRanking 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்று வெளியிடப்பட்ட ஆண்களுக்கான டென்னிஸ் தரவரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். #Nadal
  டென்னிஸ் தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கான சங்கம் (ATP) இன்று உலக டென்னிஸ் தர வரிசையை வெளியிட்டது. இதில் ஸ்பெயின் வீரரான ரபெல் நடால் 9310 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.

  சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7080 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் 5665 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல் போட்ரோ 5395 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 4655 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

  டிமிட்ரோவ், மரில்ன் சிலிச், டொமினிக் தியெம், ஜான் இஸ்னெர், நோவக் ஜோகோவிச் முறையே 6 முதல் 10-வது இடத்தை பிடித்துள்ளனர்.
  ×