என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    தொடர் தோல்வி எதிரொலி: டாப் 10 இடத்தை இழந்தார் மெத்வதேவ்
    X

    தொடர் தோல்வி எதிரொலி: டாப் 10 இடத்தை இழந்தார் மெத்வதேவ்

    • ரஷியாவின் டேனில் மெத்வதேவ் டாப் 10 இடத்தை இழந்துள்ளார்.
    • தற்போதைய தரவரிசைப் பட்டியலில் மெத்வதேவ் 11-வது இடத்தில் உள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தத் தொடரின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெளியேறினார்.

    இந்நிலையில், ஏடிபி தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், கடந்த 2023-ம் ஆண்டுக்கு பிறகு டாப் 10 இடத்தை முதன்முறையாக இழந்துள்ளார் ரஷியாவின் டேனில் மெத்வதேவ்.

    தற்போதைய தரவரிசைப் பட்டியலில் மெத்வதேவ் 11-வது இடத்தில் உள்ளார்.

    இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 2வது இடத்திலும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 3வது இடத்திலும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5வது இடத்திலும் உள்ளனர்.

    கடந்த ஆண்டில் நடைபெற்ற எந்த ஒரு டென்னிஸ் தொடரிலும் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×