என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஜோகோவிச் இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் இருந்து வெளியேறினார்.
    • இதன் காரணமாக ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச் (செர்பியா) - அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர்.

    இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் ஸ்வெரேவ் போராடி கைப்பற்றினார். பின்னர், 2-வது செட் ஆட்டம் தொடங்கும் முன்னர் ஜோகோவிச் இடது தொடையில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    • அரையிறுதி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ் போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக் அணிகள் மோதினர்.
    • இதில் முதல் செட்டில் இகா ஸ்வியாடெக்கும் 2-வது செட்டை மேடிசனும் வெற்றி பெற்றனர்

    கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பாலா படோசாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்நிலையில் மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ் போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதினர்.

    இதில் முதல் செட்டில் இகா ஸ்வியாடெக்கும் 2-வது செட்டை மேடிசனும் வெற்றி பெற்றனர். யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பாக சென்றது. 10-8 என்ற கணக்கில் மேடிசன் வீழ்த்தினார்.

    இதனால் 5-7, 6-1, 10-8 என்ற செட் கணக்கில் மேடிசன் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக இவர் முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்காவுடன் மேடிசன் மோதுகிறார்.

    • அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அரினா சபலென்கா- பாலா படோசா ஆகியோர் மோதினார்.
    • இதில் 6-4, 6-2 என்ற கணக்கில் சபலென்கா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) - ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோதினார்.

    இதில் 6-4, 6-2 என்ற கணக்கில் சபலென்கா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ் போலந்தை சேர்ந்த இகா ஸ்வியாடெக் அணிகள் இன்று மோதவுள்ளனர். இதில் வெற்றி பெறும் வீராங்கனை நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்காவுடன் விளையாடுவார்கள்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் வென்றார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதி சுற்றுப் போட்டிகள் இன்று நடந்தன.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீராங்கனையும், போலந்தைச் சேர்ந்தவருமான இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்விடோலினா முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட மேடிசன் கீஸ் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் இகா ஸ்வியாடெக், மேடிசன் கீசுடன் மோதுகிறார்.

    • காலிறுதியில் சின்னர் 6-3, 6-2, 6-1 என நேர்செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் மினாரை எளிதாக தோற்கடித்தார்.
    • அமெிரிக்க வீரர் ஷெல்டன் இத்தாலி வீரரை 6-4, 7-58, 4-6, 7(7)-6(4) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் போட்டி கடந்த 12-ந்தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையருக்கான இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவிவன் ஷெல்டன், இத்தாலியின் லோரென்சோ சோனேகோவை எதிர்கொண்டார்.

    இதில் முதல் செட்டை ஷெல்டன் 6-4 எனவும், 2-வது செட்டை 7-5 எனவும் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டை 4-6 என இழந்தார். 4-வது செட்டில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 4-வது செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 7(7)- 6(4) என ஷெல்டன் கைப்பற்றினார். இதனால் 6-4, 7-58, 4-6, 7(7)-6(4) என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் முதல்நிலை வீரரான இத்தாலியின் சின்னர் ஆஸ்திரேலியாவின் அலேக்ஸ் டி மினாரை எதிர்கொண்டார். மினார் சொந்த மண்ணில் விளையாடினாலும் முதல் நிலை வீரரான சின்னரின் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    இதனால் சின்னர் 6-3, 6-2, 6-1 என நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளைதமறுதினம் நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் சின்னர்- ஷெல்டர், ஜோகோவிச்- ஸ்வெரேவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    ஷெல்டனை எளிதாக வீழ்த்தி சின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால் ஜோகோவிச்- ஸ்வெரேவ் இடையிலான ஆட்டம் பரபரப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் தோல்வி அடைந்தார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 3 வீரரும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 7 வீரரும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ஜோகோவிச் 4-6 என இழந்தார். இதையடுத்து சுதாரித்து கொண்ட ஜோகோவிச் அடுத்த 3 சுற்றுகளை 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் தோல்வி அடைந்தார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை அனஸ்டசியா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-2, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசவை எதிர்கொள்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன.

    இதில் ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஒலிவியா ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 6-2 என வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 4-6, 9-11 என இழந்து தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.
    • நோவாக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் மோதுகின்றனர்.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டியில் உலகின் முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் மோதுகின்றனர்.

    பத்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர வீரர் அல்காரஸ்-ஐ எதிர்த்து மோதும், இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. எட்டாவது முறையாக அல்காரஸ்-ஐ எதிர்கொள்கிறார். மறுபுறம் அல்காரஸ் இளம் வயதில் அனைத்து விதமான டென்னிஸ் போட்டிகளிலும் வெற்றி பெற்ற வீரர் என்ற பெருமையை பெற போட்டியிடுகிறார்.

    விம்பில்டென், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்களில் அல்காரஸ் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் மட்டும் அல்காரஸ் இதுவரை சாம்பியன் பட்டம் பெறாமல் இருக்கிறார்.

    • கோகோ கவூப்- ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பவுலா படோசா மோதினர்.
    • முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையும், அமெரிக்காவை சேர்ந்த கோகோ கவூப்- ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பவுலா படோசா மோதினர்.

    இந்த போட்டியில் கவூப் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். 11-வது வரிசையில் உள்ள படோசா 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கவூப்பை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 43 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    27 வயதான பவுலா படோசா முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு இவர் காலிறுதி வரை முன்னேறி இருக்கிறார். அரையிறுதி சுற்றில் படோசா சபலெங்கா அல்லது பாவ்லிசென்கோவாவுடன் மோதுவார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பொர்னில் நடந்து வருகின்றன. தற்போது 4வது சுற்று போட்டி நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் ஹ்யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-1 என கைப்பற்றிய ஸ்வரேவ் இரண்டாவது செட்டை 2-6 என இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா 6-1, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் செர்பிய வீராங்கனை ஒல்காவை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் வென்றார்.

    சிட்னி:

    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, ரஷியாவின் மிரா ஆண்ட்ரிவா உடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் மோதினார். இதில் முதல் செட்டை 5-7 என இழந்த கோகோ காப் அடுத்த இரு செட்களை 6-2, 6-1 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    ×