என் மலர்
டென்னிஸ்

மியாமி ஒபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெகுலா- நாளை சபலென்காவுடன் மோதல்
- முதல் 2 செட்டை இருவரும் ஆளுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
- மியாமி ஓபன் இறுதிப் போட்டியில் சபலென்காவும் பெகுலாவும் நாளை மோதவுள்ளார்.
புளோரிடா:
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் அரையிறுதியில் அரினா சபலென்கா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார். இதில் சபலென்கா 6-2, 6-2 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் 19 வயதான பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஈலாவும் அமெரிக்கா வீராங்கனை ஜெசிகா பெகுலாவும் மோதினர்.
இந்த போட்டியின் முதல் செட்டை பெகுலா 7-6 (7-3), வென்றார். அடுத்த செட்டை ஈலா 7-5 என்ற கணக்கில் வீழ்த்தினார். பரபரப்பான இறுதி செட்டில் பெகுலா 6-3 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் இறுதிப் போட்டியில் சபலென்காவும் பெகுலாவும் நாளை மோதவுள்ளார்.
Next Story






