என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    ஜெனீவா:

    ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் 6-4, 6-7 (6-8), 6-1 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதியில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆப்னரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று மாலை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், ஹர்காக்ஸ் ஆகியோர் மோதுகின்றனர்,

    • ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது.
    • இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் அரையிறுதியில் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது.

    இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 6-4 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் இறுதியில் இத்தாலியின் பிலேவியோ கோபாலி உடன் ரூப்லெவ் மோதுகிறார்.

    • ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது.
    • இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது.

    இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் லூசியானோ டர்டேரி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 3-6, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் ரூப்லெவ் மோதுகிறார்.

    • தகுதி சுற்று ஆட்டத்தின் முதல் சுற்றில் சுமித் நாகல் அமெரிக்க வீரரை எளிதில் வீழ்த்தினார்.
    • இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் ஆஸ்திரியா வீரரை சுமித் நாகல் எதிர் கொண்டார்.

    பாரீஸ்:

    'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 25-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகிறது.

    இதன் முதலாவது சுற்றில் உலக தரவரிசையில் 170-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் அமெரிக்காவின் மிட்செல் குருகரை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்னும் 2 வெற்றி பெற்றால் அவர் பிரதான சுற்றை எட்ட முடியும் என்ற நிலையில் இன்று ஜூரிச் ரோடியானோவை (ஆஸ்திரியா) எதிர் கொண்டார். இந்த ஆட்டத்தில் 2-6, 4-6 என்ற கணக்கில் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.

    • டென்னிஸ் தரவரிசையில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
    • ஸ்வியாடெக் தொடர் தோல்வி அடைந்து வருவதால் தரவரிசையில் பின்தங்கி உள்ளார்.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்நிலையில், டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை டபிள்யு.டி.ஏ. வெளியிட்டது.

    இதில் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் அரினா சபலென்கா நம்பர்-1 இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இத்தாலி ஓபன் பைனல் வரை சென்ற அமெரிக்காவின் கோகோ காப் 2வது இடம் பிடித்துள்ளார்.

    மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 3வது இடத்தையும், இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஜாஸ்மின் பவுலினி 4வது இடத்தையும் கைப்பற்றினார்.

    போலந்தின் இகா ஸ்வியாடெக் 2-வது இடத்தில் இருந்து நம்பர்-5 இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர் சமீபத்தில் முடிந்த இத்தாலி ஓபனில் 3வது சுற்றோடு திரும்பினார்.

    கடந்த ஆண்டில் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதற்கு பிறகு ஸ்வியாடெக் தொடர் தோல்வி அடைந்து வருவதால் தரவரிசையில் பின்தங்கி உள்ளார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
    • முதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல், அமெரிக்காவின் மிட்செல் க்ரூகர் உடன் மோதினார்.

    ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய சுமித் நாகல் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த தகுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை அடுத்த தகுதிச்சுற்றில் சுமித் நாகல், ஆஸ்திரியாவின் ஜூரிஜ் ரோடியோனோவுடன் மோதுகிறார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்றது.
    • இறுதிச்சுற்றில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, ஜெர்மனியின் எலைஸ் மெர்டன்ஸ்- ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவா ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய பவுலினி ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    ஏற்கனவே பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜாஸ்மின் பவுலினி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்றது.
    • இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்றது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    3 மாத தடைக்குப் பிறகு களமிறங்கிய முதல் தொடரிலேயே ஜானிக் சின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இறுதிச்சுற்றில் இத்தாலி வீராங்கனை பவுலினி வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.

    இதில் பவுலினி 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    40 ஆண்டுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதி சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய டாமி பால் முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சின்னர் 6-0 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை சின்னர் 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோத உள்ளார்.

    3 மாத தடைக்குப் பிறகு களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஜானிக் சின்னர் இறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதுகிறார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று இரவு நடந்த அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனும், 8-ம் நிலை வீராங்கனையுமான சீனாவின் கின் வென் ஜாங், அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொண்டார்.

    இதில் கோகோ காப் முதல் செட்டை 7-6 (7-3) என போராடி வென்றார். இரண்டாவது செட்டை கின் வென் ஜாங் 6-4 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை கோகோ காப் 7-6 (7-4) என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    இந்தப் போட்டி சுமார் 3 மணி நேரம் 39 நிமிடங்கள் நீடித்தது.

    நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் கோகோ காப், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியை எதிர்கொள்கிறார்.

    ×