என் மலர்
டென்னிஸ்
- காஸ்பர் ரூட், போர்ச்சுகீசிய வீரர் நுனோ போர்ஜஸ் உடன் மோதினார்.
- இந்த ஆட்டத்தில் நுனோ போர்ஜஸ் 2-6, 6-4, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஹங்கேரிய வீரர் ஃபேபியன் மரோஸ்ஸன் மோதினர். இந்த ஆட்டத்தில் 6-1, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நார்வேஜியன் வீரர் காஸ்பர் ரூட், போர்ச்சுகீசிய வீரர் நுனோ போர்ஜஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் நுனோ போர்ஜஸ் 2-6, 6-4, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையரில் கோகோ காப் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ஆஸ்திரேலியாவின் ஒலிவியா கடேகி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-2, 6-2 என்ற செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரோமானியாவின் அன்கா டுடோனியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் இரு செட்களை 7-5, 6-3 என நூரி வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-1 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை 5-7 என இழந்த மெத்வதேவ், நடப்பு தொடரில் இருந்து வெளியேறினார். இந்தப் போட்டி 3 மணி நேரம் 54 நிமிடங்கள் நடந்தது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சக்காரி, ஜபேர் தோல்வி அடைந்தனர்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, பிரான்சின் எல்சா ஜாக்யூமோட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எல்சா 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் போலந்தின் மக்டலேனா 7-6 (7-4), 6-0 என்ற செட் கணக்கில் துனீசியாவின் ஓன்ஸ் ஜபேரை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஜானிக் சின்னர் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அசரென்கா 6-0, 6-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் மற்றும் பிரெஞ்சு வீரர் ஆர்தர் ரிண்டர்க்னெக் ஆகியோர் மோதினர்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னர் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பெலரசைச் சேர்ந்த விக்டோரியா அசரென்கா மற்றும் பெல்ஜிய வீராங்கனை யானினா விக்மேயர் மோதினர். இந்த ஆட்டத்தில் அசரென்கா 6-0, 6-0 என்ற கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- கேஸ்பர் ரூட், ஆல்பர்ட் ராமோஸ் வினோலாஸ் உடன் மோதினார்.
- கேஸ்பர் ரூட் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வினோலாஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே), ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ்-வினோலாஸ் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேஸ்பர் ரூட் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஆல்பர்ட் ராமோஸ்-வினோலாஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பானிஷ் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலி வீரர் கியுலியோ செப்பியேரியுடன் மோதினர். இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரெபேக்கா ஸ்ராம்கோவாவுடன் ஸ்வியாடெக் மோதினார்.
- மற்றொரு ஆட்டத்தில் ராபின் மாண்ட்கோமெரி, டயான் பாரியுடன் மோதினார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இதில் இன்று பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்லோவாக் வீராங்கனை ரெபேக்கா ஸ்ராம்கோவாவுடன் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் மோதினார்.
இதில் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ராபின் மாண்ட்கோமெரி பிரெஞ்சு வீராங்கனை டயான் பாரியுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ராபின் மாண்ட்கோமெரி 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினர்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தாலி வீரர் முசெட்டி வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்று பிரெஞ்சு ஓபன் தொடராகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஜெர்மனியின் ஹான்மன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி 7-5, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபே 6-4, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ரோமன் சபியுலினை வென்றார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சபலென்கா வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்று பிரெஞ்சு ஓபன் தொடராகும்.
இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கி ஜூன் 8-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் கமிலா ரகிமோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
வரும் புதன்கிழமை நடைபெறும் 2வது சுற்றில் சபலென்கா, சுவிட்சர்லாந்தின் ஜில் டெக்மான் உடன் மோதுகிறார்.
- ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்றது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.
பாரீஸ்:
ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்போக் நகரில் நடைபெற்றது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷியாவின் சாம்சோனோவா உடன் மோதினார்.
ரிபாகினா முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சாம்சோனோவா 7-6 (7-2) என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரிபாகினா 6-1 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடந்தது.
- ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் இறுதிப்போட்டியில் தோற்றார்.
பெர்லின்:
ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது.
இதன் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் பிளாவியோ கோபோலி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோபோலி ஸ்வரேவை 6-2, 6-4 என எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
- ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் இறுதிப்போட்டியில் வென்றார்.
ஜெனீவா:
ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹுபர்ட்
ஹர்காக்ஸ் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 5-7 என இழந்த ஜோகோவிச் சுதாரித்துக் கொண்டு ஆடினார். அடுத்த இரு செட்களை 7-6 (7-2), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஜெனீவா ஓபன் தொடரில் பட்டம் வென்றது 100வது சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.






