என் மலர்
டென்னிஸ்
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் பிலிப் மிசோலிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-2, 7-6 (7-4) 6-1 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பிளாவியோ கோபோலியை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
- சின்னர் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
- மற்ற ஆட்டங்களில் ஜாக் டிராப்பர் (பிரிட்டிஷ்), டாலன் கிரீஸ்பூர் (டச்சு), ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் நாட்டின் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-0, 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் 4-வது சுற்றில் ரூப்லெவ் உடன் மோத உள்ளார்.
மற்ற ஆட்டங்களில் ஜாக் டிராப்பர் (பிரிட்டிஷ்), டாலன் கிரீஸ்பூர் (டச்சு), ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, செக் வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ரூசோவாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை இழந்த பெகுலா அடுத்த இரண்டு செட்டை கைப்பற்றினார். இதனால் 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டிகளில் அலெக்ஸாண்ட்ரோவா (ரஷ்யா), மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா), டாரியா கசட்கினா (ரஷ்யா), லோயிஸ் போய்சன் (பிரெஞ்சு) ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-செக் வீரர் ஆடம் பவ்லாசெக் ஜோடி,
பிரான்சின் சாடியோ டொம்பியா-பேபியன் ரீபோல் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி 6-7 (2-7), 7-6-(7-5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறியது.
ஏற்கனவே இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், போஸ்னியாவின் டாமிர் டூமுர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் முதல் இரு செட்களை 6-1, 6-3 என வென்றார். 3வது செட்டை டாமிர் 6-4 என கைப்பற்றினார். 4-வது செட்டை அல்காரஸ் 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி 4-6, 6-4, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் மரினோ நவோனேவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையரில் இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரொமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-4, 6-1 என்ற செட்கணக்கில் உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்சேவாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-அமெரிக்காவின் ராபர்ட் கலோவோ ஜோடி,
நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ்-குரோசியாவின் நிகோலா மெடிக் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-7 (4-7), 7-6-(7-4), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறியது.
- 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சபலென்கா, டானிலோவிச் ஆகியோர் மோதினர்.
- சபலென்கா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, செர்பியா வீராங்கனை டானிலோவிச் ஆகியோர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் அவர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் கோரண்டின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் 7-6 (7-1) 6-1, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- 2-வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜில் டீச்மேனை சந்தித்தார்.
- சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீராங்கனையான சபலென்கா (பெலாரஸ்) 2-வது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜில் டீச்மேனை சந்தித்தார்.
இதில் சபலென்கா 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 19 நிமிட நேரம் தேவைப்பட்டது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-அமெரிக்காவின் ராபர்ட் கலோவோ ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ்-ஜெர்மனியின் ஹென்ரிக் ஜெபென்ஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-7 (8-10), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரும், கிரீசை சேர்ந்தவருமான சிட்சிபாஸ், இத்தாலியின் மேட்டியோ கிகாண்டே உடன் மோதினார்.
முதல் செட்டை 6-4 என கிகாண்டே வென்றார். இரண்டாவது செட்டை சிட்சிபாஸ் 7-5 என வென்றார். இதனால் சுதாரித்த இத்தாலி வீரர் மேட்டியோ அடுத்த இரு செட்களை 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையரில் இகா ஸ்வியாடெக் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரிட்டனின் எம்மா ராடுகானு உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-3, 6-3 என்ற செட்கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிக்கை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.






