என் மலர்
டென்னிஸ்
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிபோட்டியில் சிமோனா ஹாலெப், மியாவுடன் மோதினார்.
- இதில் சிமானோ ஹாலெப் வென்று கோப்பையை கைப்பற்றினார்.
டொரண்டோ:
கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் ரோமானியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், பிரேசில் வீராங்கனை பீட்ரிஸ் ஹடாத் மியாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முதல் செட்டை ஹாலெப் 6-3 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை மியா 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ஹாலெப் 6-3 என கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், சிமோனா ஹாலெப் 6-3, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் மியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
- சானியா மிர்சா, மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
- காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் முன்னணி ஜோடியை சானியா மிர்சா ஜோடி வீழ்த்தியது.
ஒட்டாவா:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடரான அமெரிக்க ஓபன் இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னதாக கனடா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
நேற்று முன்தினம் நடந்த முதல்சுற்றில் சானியா- மேடிசன் ஜோடி வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தனர். இந்த நிலையில் காலிறுதிக்கு முந்தய சுற்றில் இந்திய-அமெரிக்க ஜோடி, ரஷியாவின் முன்னணி வீராங்கனைகள் வெரோனிகா குடெர்மெடோவா மற்றும் எலிஸ் மெர்டென்சை இன்று எதிர்கொண்டனர். இந்த போட்டியில் சானியா- மேடிசன் ஜோடி 3-6, 6-4, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
- நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7வது முறையாக கோப்பை வென்றார்.
- இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசை ஜோகோவிச் தோற்கடித்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் ஆகியோர் மோதினர்.
இதில் முதல் செட்டை கிர்கியோஸ் 6-4 என கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதையடுத்து, விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக நோவக் ஜோகோவிச் கைப்பற்றினார்.
- இறுதி ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீரை எதிர்கொண்டார்.
- முதல் செட்டை இழந்த எலினா அடுத்த இரு செட்களை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் துனீசியாவின் ஒன்ஸ் ஜபீர், கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினாவுடன் மோதினார்.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3 என முதல் செட்டை ஒன்ஸ் ஜபீர் கைப்பற்றினார். அடுத்து சுதாரித்துக் கொண்ட எலினா ரிபாகினா 6-2,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இது எலினா ரிபாகினா வென்ற முதல் சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த போட்டியில் க்ராவ்சிக் மற்றும் ஸ்குப்ஸ்கி கடைசி நிமிடத்தில் ஜோடி சேர்த்து விளையாடினர்.
- இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் ஜோடி தோல்வி அடைந்தது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை டெசிரே க்ராவ்சிக் மற்றும் பிரிட்டன் வீரர் நீல் ஸ்குப்ஸ்கி ஜோடி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ எப்டன் மற்றும் சாம் ஸ்டோசர் ஜோடியை எதிர் கொண்டது.
மொத்தம் ஒரு மணி நேரம் 27 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 6-4, 6-3 என்ற நேர் செட்கணக்கில் க்ராவ்சிக்- ஸ்குப்ஸ்கி ஜோடி வெற்றி பெற்று பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்த போட்டியில் அமெரிக்கா வீராங்கனை டெசிரே க்ராவ்சிக்வும் பிரிட்டன் வீரர் நீல் ஸ்குப்ஸ்கியும் வேறு வேறு ஜோடிகளுடன் கலந்து கொள்ள இருந்த நிலையில், திடீர் மாற்றமாக கடைசி நிமிடத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து இறுதி போட்டியை எதிர்கொண்டனர். இதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை அவர்கள் தட்டிச் சென்றனர்.
- முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
- இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் ஜோகோவிச் மோதுகிறார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார்.
இதில் முதல் செட்டை கேமரூன் நுரி 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் 8-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் உலகின் 2-ம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோத இருந்தார். ஆனால், வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடால் அரையிறுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், நிக் கிர்கியோஸ் ஆகியோர் மோதுகின்றனர்.
- விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதி போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது.
- சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பதால் விலகியதாக நடால் தகவல்
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், 2ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), அமெரிக்காவின் டெய்லர் பிட்சை 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இந்த போட்டியின்போது நடாலுக்கு வயிற்றுப்பகுதியில் வலி ஏற்பட்டது. சிறிது நேர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு களமிறங்கி இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தார். இன்று நடைபெறவிருந்த அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் நடால் மோத இருந்தார்.
இந்த நிலையில், அரையிறுதி போட்டியில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் அறிவித்தார். வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அரையிறுதியில் விளையாட வில்லை என்று அறிவித்தார்.
போட்டி தொடங்கு வதற்கு முன்பாக நிருபர்களை சந்தித்த நடால் கூறும்போது, துரதிர்ஷ் வசமாக நான் போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது.
காலிறுதி ஆட்டத்தில் நான் வயிற்று வலியால் அவதிப்பட்டதை அனைவரும் பார்த்தனர். அடிவயிற்று தசைகளில் காயம் ஏற்பட்டு இருப்பது உறுதியானது. அரை இறுதியில் இருந்து விலகும் முடிவை பற்றி நாள் முழுவதும் யோசித்து எடுத்தேன். எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையில் பல முயற்சிகளை நான் தொடர்ந்து இருந்தாலும், தற்போது தொடர்ந்து விளையாடினால் காயம் மோசமாகிவிடும் என்பது வெளிப்படையானது. இதை சொல்வதில் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் என்னால் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற முடியாது. சரியான வேகத்தில் என்னால் சர்வீஸ் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்ல சாதாரண செயல்பாட்டையும் செய்ய முடியாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்தேன், என்றார் நடால்.
ரபேல் நடால், விலகியதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா)-கேமரூன் நோரி (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா)-ரைபதினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள். இருவரும் முதல் முறையாக கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த வீராங்கனை முதல் முறையாக தகுதி.
- இறுதிப் போட்டியில் விளையாட கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை தகுதி பெற்றார்.
லண்டன்:
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
முதல் அரை இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனை டட்யானா மரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இதன் மூலம் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதி சுற்றுக்கு எட்டுவது இதுவே முதல் முறையாகும்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானைச் சேர்ந்த எலினா ரைபகினா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியனான ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
இதன் மூலம் விம்பிள்டன் இறுதிப்போட்டிக்குக்குள் நுழைந்த முதல் கஜகஸ்தான் நாட்டு வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். நாளை நடைபெறம்விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜபீரை, எலினா எதிர்கொள்ள உள்ளார்.
- தனது தோல்விக்குப் பிறகு சானியா இன்ஸ்டாகிராமில் விம்பிள்டனில் இருந்து உணர்ச்சிவசப்பட்டு விடைபெற்றார்.
- நான் உன்னை இழக்கிறேன் ? மீண்டும் சந்திக்கும் வரை என சானியா பதிவிட்டுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக் - நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், தனது தோல்விக்குப் பிறகு சானியா இன்ஸ்டாகிராமில் விம்பிள்டனில் இருந்து விடைபெறுவதை உணர்ச்சிவசப்பட்டு பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து சானியா மிர்சா குறிப்பிட்டுள்ளதாவது:-
விளையாட்டு உங்களிடமிருந்து நிறைய எடுத்துக் கொள்கிறது.
மனரீதியாக, உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக..
வெற்றி தோல்விகள்.. மணிக்கணக்கான கடின உழைப்பு மற்றும் கடுமையான தோல்விகளுக்கு பிறகு தூக்கமில்லாத இரவுகள் ? ஆனால் பிற வேலைகள் கொடுக்க முடியாத பலனைத் இது உங்களுக்குத் தருகிறது. அதற்காக நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் ? கண்ணீர் மற்றும் மகிழ்ச்சி , சண்டை மற்றும் போராட்டம் .. நாம் செய்த உழைப்பு அனைத்தும் இறுதியில் மதிப்புக்குரியது .. இந்த முறை விம்பிள்டன் எனக்கானது இல்லை என்று நினைக்கவில்லை. கடந்த 20 வருடங்களாக இங்கு விளையாடி வெற்றி பெறுவது பெருமையாக உள்ளது ..
நான் உன்னை இழக்கிறேன் ?
மீண்டும் சந்திக்கும் வரை....
இவ்வாறு அவர்பதிவிட்டுள்ளார்.
- கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா முதல் முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ரிபாகினா அரையிறுதியில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப்பை எதிர்கொள்கிறார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப், அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார். இதில் ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் மோதினார். இதில் ரிபாகினா 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- விம்பிள்டன் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல்முதலாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- அரையிறுதியில் முதல் செட்டை கைப்பற்றிய சானியா ஜோடி அடுத்த இரு செட்டை இழந்து தோல்வி அடைந்தது.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக் - நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- முன்னணி வீரரான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலியா வீரர் நிக் கிர்கியோஸ் காலிறுதியில் சிலி வீரர் காரினை தோற்கடித்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், அமெரிக்காவின் டெய்லர் பிட்சுடன் மோதினார்.
ஆரம்பம் முதலே இருவரும் ஆக்ரோஷமாக ஆடினர். இதனால் முதல் மற்றும் 3வது செட்டை டெய்லரும், 2வது மற்றும் 4வது செட்டை நடாலும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை நடால் போராடி வென்றார்.
இறுதியில் 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ், சிலியின் காரினுடன் மோதினார். இதில் 6-4, 6-3, 7-6 என்ற நேர் செட்களில் கிர்கியோஸ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் கிர்கியோஸ் முன்னணி வீரரான ரபேல் நடாலை எதிர்கொள்கிறார்.






