என் மலர்
டென்னிஸ்
- முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை வீழ்த்தினார்
- 3-வது தரவரிசையில் உள்ள மரியா ஷகாரி சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
நியூயார்க்:
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் , 23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த இரண்டாம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டா வெயிட்டை எதிர்கொண்டார். இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அனெட் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
செரீனா வில்லியம்ஸ் 7-6 ( 7-2 ), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் 12வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை கோகோ கவூப் 6-2 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் எலீனா கேப்ரியலாவை (ருமேனியா) வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் 20 வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) , 5-ம் நிலை வீராங்கனையான ஜபேவுர் (துனிசியா ) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
3-வது வரிசையில் உள்ள மரியா ஷகாரி (கிரீஸ் ) 6-3 , 5-7 , 5-7 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
இதே போல 14-வது இடத்தில் உள்ள லைலா பெர்னாண்டஸ் (கனடா), 23-ம் நிலை வீராங்கனையான பார்பரா கிரெச் கோவா (செக் குடியரசு) ஆகியோரும் அதிர்ச்சிகரமாக 2-வது சுற்றில் வெளியேறினார்கள்.
முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை எதிர்கொண்டார். இதில் முர்ரே 5-7, 6-3, 6-1, 6-0 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தார்.
மற்ற ஆட்டங்களில் 13-வது வரிசையில் இருக்கும் பெரிடினி (இத்தாலி), 23-ம் நிலை வீரர் ஷர்ஜியாஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். 21-ம் நிலை வீரரான போடிக் வான்டே (நெதர்லாந்து) அதிர்ச்சிகரமாக தோற்றார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2வது ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.
- ஆண்டி முர்ரே அமெரிக்க வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, அமெரிக்காவின் எமிலோ நாவாவைச் சந்தித்தார். முதல் செட்டை கோட்டை விட்ட ஆண்டி முர்ரே அடுத்த மூன்று செட்டையும் தனதாக்கினார்.
இறுதியில், ஆண்டி முர்ரே 5-7 6-3 6-1 6-0 என்ற கணக்கில் வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினி, பிரான்சைச் சேர்ந்த ஹியூகோ கிரெய்னியரைச் சந்தித்தார்.
இதில், 2-6, 6-1, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்ற பெரெட்டினி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
- நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.
- எம்மா ரடுகானு முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் இரண்டாம் நிலை வீரரும், 22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிங்கி ஹிஜிகடாவை எதிர்கொண்டார்.
'வைல்டு கார்டு' வீரரான ரிங்கி முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் பின்னர் நடால் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களையும் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 4-6, 6-2, 6-3, 6-3
நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.
செபாஸ்டியனுக்கு (அர்ஜென்டினா) எதிரான ஆட்டத்தில் 3-வது வரிசை யில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 7-5, 7-5, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.அப்போது செபாஸ்டியன் காயத்தால் வெளியேறினார். இதனால் அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மற்ற ஆட்டங்களில் ஜான் இஸ்னெர் (அமெரிக்கா), சின்னெர் (இத்தாலி), டிமிட்ரோவ் (பல்கேரியா) போன்ற முன்னணி வீரர்கள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கோல் பிக்கை எதிர்கொண்டார்.
இதில் பெகுலா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்டெப் ஹென்ஸ் (அமெரிக்கா), யுலியா புதின் சேவா (ரஷியா) ஜூலி நெய்மா (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
11-வது வரிசையில் உள்ள எம்மா ரடுகானு (இங்கிலாந்து), முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார். பிரான்சை சேர்ந்த அலிசியா தோர்னெட் 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ரடுகானுவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதே போல 16-வது வரிசையில் உள்ள ஜெலீனா ஒஸ்டாபென்கோ (லாத்வியா), 24-ம் நிலை வீராங்கனையான அமண்டா அனிஷ்மோவா (அமெரிக்கா), 25-வது வரிசையில் உள்ள எலீனா ரைபகினா (கஜகஸ்தான்), 32-வது இடத்தில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் முதல் சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- சிட்சிபாஸ் 0 - 6, 1 - 6, 6 - 3, 5- 7 என்ற கணக்கில் கொலம்பிய வீரரிடம் தோற்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. உலகின் 5-ம் நிலை வீரரான கிரீசைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், கொலம்பியா வீரரான காலனைச் சந்தித்தார்.
முதல் 2 செட்களை கோட்டை விட்ட சிட்சிபாஸ், மூன்றாம் செட்டை தனதாக்கினார். ஆனால் காலன் போராடி நான்காம் செட்டை கைப்பற்றினார்.
இறுதியில், சிட்சிபாஸ் 0 - 6, 1 - 6, 6 - 3, 5- 7 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.
- முதல் சுற்றில் ஜார்ஜியா வீரரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.
- 1959 ஆண்டு சீன வீரர் மெய் ஃபூ சி, விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.
நியூயார்க்:
நடப்பாண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் 31வது நிலை வீரரான ஜார்ஜியாவைச் சேர்ந்த நிகோலோஸ் பசிலாஷ்விலியை, சீன வீரர் வூ யிபிங் எதிர்கொண்டார்.
22 வயதான வூ, முதல் சுற்றில் 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். கடந்த 1959 ஆண்டு விம்பிள்டன் போட்டியில் சீன வீரர் மெய் ஃபூ சி, ஒரு போட்டியில் வென்றிருந்தார்.
அதன் பின்னர் சீன வீரர்கள் யாரும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சீன வீரர வூ யிபிங் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
- சிமோனா ஹாலெப் 2- 6, 6- 0, 4- 6 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனையிடம் தோற்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
உலகின் 7-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், உக்ரைன் வீராங்கனை டரியா ஸ்னைகுரை சந்தித்தார்.
முதல் செட்டை கைவிட்ட ஹாலெப், இரண்டாம் செட்டை தனதாக்கினார். ஆனால் டரியா அதிரடியாக ஆடி மூன்றாம் செட்டை கைப்பற்றினார்.
இறுதியில், சிமோனா ஹாலெப் 2- 6, 6- 0, 4- 6 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.
- ஆண்டி முர்ரே முதல் சுற்றில் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தினார்.
- ரஷியாவின் மெத்வதேவ் அமெரிக்க வீரர் ஸ்டீபன் கோஸ்லோவை வீழ்த்தினார்.
நியூயார்க்:
ஆண்டுதோறும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் போட்டிகள் முடிந்துவிட்டன. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவுடன் மோதினார்.
இதில், முர்ரே 7-5, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதேபோல், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் ஸ்டீபன் கோஸ்லோவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-2, 6- 4, 6- 0 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.
- இப்போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி நிறைவடைகிறது.
நியூயார்க்:
செர்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (35). உலக தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், வருகிற திங்கட்கிழமை தொடங்க இருக்கிற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜோகோவிச் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அமெரிக்க ஓபனில் விளையாட இந்த முறை என்னால் நியூயார்க்குக்கு பயணிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது.
- இந்தப் போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி நிறைவடைகிறது.
புதுடெல்லி:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக இந்தியாவின் முன்னணி வீராங்கனை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சானியா மிர்சா கூறுகையில், கனடாவில் இரு வாரங்களுக்கு முன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினேன். அப்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அதனால் சில வாரங்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே யு.எஸ். ஓபன் தொடரில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.
சானியா மிர்சா 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். இரட்டையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இறுதி போட்டியில் கிரீசின் சிட்சிபாஸ்-குரோஷிய வீரர் போர்னா கோரிச் பலப்பரீட்சை நடத்தினர்.
- பெண்கள் பிரிவில் கார்சியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த இறுதி போட்டியில் 4-ம் நிலை வீரரான கிரீசின் சிட்சிபாஸ்-குரோஷிய வீரர் போர்னா கோரிச் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் கோரிச் 7-6 (7-0), 6-2 என்ற நேர்செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். தரவரிசையில் 152-வது இடம் வகிக்கும் கோரிச் முன்னணி வீரர் சிட்சிபாசுக்கு அதிர்ச்சி அளித்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்)-பெட்ரா கிவிடோவா (செக் குடியரசு) மோதினர். இதில் கார்சியா 6-2, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.
கார்சியா தகுதி சுற்றில் விளையாடி பிரதான சுற்றை அடைந்து தற்போது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சிட்சிபாஸ் வென்று இறுதிக்கு முன்னேறினார்.
- முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ரஷிய வீரர் டேனில் மெதவதேவுடன் மோதினார்.
இந்த போட்டியில் சிட்சிபாஸ் 7-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிபோட்டியில் பாப்லோ புஸ்டா, ஹல்க்ராசுடன் மோதினார்.
- இதில் பாப்லோ புஸ்டா வெற்றி பெற்றுக் கோப்பையை கைப்பற்றினார்.
டொரண்டோ:
கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் ஸ்பெயின் வீரர் பாப்லோ புஸ்டா, போலந்து வீரர் ஹுபர்ட் ஹல்க்ராசை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முதல் செட்டை ஹல்க்ராஸ் 6-3 என கைப்பற்றினார். அடுத்து சுதாரித்துக் கொண்ட பாப்லோ புஸ்டோ அடுத்த இரு செட்களை கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், புஸ்டா 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஹல்கிராசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.






