என் மலர்
விளையாட்டு

சண்டிகர்:
இந்தியாவில் முன்னாள் தடகள வீரர் மில்காசிங். 91 வயதான அவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்திகொண்டார்.
ஆனால் பாதிப்பு குறையாததால் மொகாலியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை சீராக இருந்ததால் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று கடந்த மே மாத இறுதியில் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மில்கா சிங்குக்கு திடீரென்று ஆக்சிஜன் அளவு குறைந்தது. உடனே அவரை சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுரும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மில்காசிங் ஆசிய விளையாட்டு போட்டியில் 4 முறை தங்க பதக்கங்களை வென்றுள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டியிலும், காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற ஒரே வீரர் ஆவார்.
1960-ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் 4-வது இடத்தை பிடித்து பதக்கத்தை தவற விட்டார். அவருக்கு 1959-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்கார் கூறியதாவது:-
இந்திய கிரிக்கெட் வாரியம் எப்போதும் ஐ.பி.எல். மீது தனது கவனத்தை தக்க வைத்து கொள்ள விரும்புகிறது. கிரிக்கெட் வாரியம் தனது மனதில் வைத்திருக்கும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் நிலை என்ன? தொற்று நோய் கால கட்டத்தால் பல திறமையான நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களது திறமையை வெளிப்படுத்தவும், தேசிய அணியில் உரிமை கோரவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தரமான வீரர்களை உள்ளூர் போட்டிகளில் இருந்துதான் பெறுவீர்கள்.இந்திய கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவதை தவிர வேறு எதை பற்றியும் சிந்திக்கவில்லை. இரானி கோப்பை மற்றும் துலீப் டிராபி போட்டியை உயிர் பாதுகாப்பான சூழலில் (கொரோனா காரணமாக) விளையாடுவது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. இப்போட்டிகளை கர்நாடகாவில் நடத்தலாம்.
கடந்த சீசனில் முஷடாக் அலி மற்றும் விஜ் ஹசாரே டிராபி மட்டுமே நடந்தது. ஆனால் டெஸ்ட் போட்டி டிராபி நடத்தவில்லை. தேசிய அணியில் ஒரு வீரர் காயமடைந்தால் அவருக்கு மாற்று வீரர் தேர்வு செய்ய வேண்டுமென்றால் அவரின் வடிவம் மற்றும் தகுதியை தீர்மானிக்க உங்கள் அளவு கோல் என்னவாக இருக்கும்? அதற்காக நீங்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சவுத்தம்டன்:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. அதன்பின் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
அதேபோல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து சென்று டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக மும்பையில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இரண்டு வார தனிமைப்படுத்துதல் முடிவடைந்ததையடுத்து இந்திய வீரர்கள், வீராங்கனைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு மும்பையில் இருந்து தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.
லண்டன் சென்றடைந்த இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் அங்கிருந்து சவுத்தம்டனுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மைதான வளாகத்தில் உள்ள ஓட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள், வீராங்கனைகள் ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களின் தனிமைப்படுத்துதல் காலம் தொடங்கி உள்ளது.
இதையடுத்து இந்திய அணியினர் ஓட்டலில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு பயிற்சியில் ஈடுபடுவார்கள்.
இந்திய ஆண்கள் அணி வருகிற 18-ந் தேதி சவுத்தம்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. பெண்கள் அணி 16-ந் தேதி பிரிஸ்டலில் தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பெண்கள் அணியுடன் மோதுகிறது.

Touchdown pic.twitter.com/3GGt0yoIiJ
— K L Rahul (@klrahul11) June 3, 2021
Hello Southampton! 🏏 pic.twitter.com/qSATFLZ3b0
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) June 3, 2021
We are in Southampton @RishabhPant17 😊 pic.twitter.com/9qebdWFFPO
— Rohit Sharma (@ImRo45) June 3, 2021
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து தகுதி பெற்று இருக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வரும் 25 வயதான பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
பேட்மிண்டனில் பெண்கள் பிரிவை பொறுத்தமட்டில் ‘டாப்-10’ வீராங்கனைகள் அனைவரும் ஒரே மாதிரியான தரத்தை உடையவர்கள். ஒரு வீராங்கனை (நடப்பு சாம்பியன் கரோலினா மரின் காயத்தால் விலகல்) விளையாடவில்லை என்பதற்காக அதனை எளிதாக எடுத்து கொள்ள முடியாது. மற்ற சிறந்த வீராங்கனைகளான தாய் ஜூ யிங், ராட்சனோக், நஜோமி ஒகுஹரா, அகானே யமாகுச்சி ஆகியோர் ஒலிம்பிக் களத்தில் உள்ளனர். எனவே நான் எந்த வகையிலும் மெத்தனமாக இருக்க முடியாது. அதுவும் ராட்சனோக் போன்று மிகவும் திறமையான, தந்திரமான ஒன்றிரண்டு வீராங்கனைகள் உள்ளனர். அவர்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
கொரோனா பாதிப்பால் கிடைத்த இடைவெளி என்னை பொறுத்தமட்டில் திறமையையும், ஆட்ட நுணுக்கத்தையும் மேம்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பாகும். வழக்கமாக தவறுகளை திருத்தி கொள்ளவும், புதிய திறன்களை கற்றுக்கொள்ளவும் நேரம் கிடைக்காது. ஏனெனில் அதற்கு அதிக நேரம் பிடிக்கும். எனவே கிடைத்து இருக்கும் இந்த நல்ல சமயத்தை புதிய நுணுக்கத்தையும், திறனையும் கற்றுக் கொள்வதற்கு பயன்படுத்தி வருகிறேன். ஒலிம்பிக் போட்டியில் எனது ஆட்டத்தில் நீங்கள் புதிய நுணுக்கங்களை பார்க்கலாம்.
இவ்வாறு சிந்துகூறினார்.






