search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோரி பேர்ன்ஸ் - ஜோ ரூட்
    X
    ரோரி பேர்ன்ஸ் - ஜோ ரூட்

    லார்ட்ஸ் டெஸ்ட் 2-வது நாள் முடிவில் இங்கிலாந்து 111-2: ஜோ ரூட் முன்னிலை பெற வைப்பாரா?

    டேவன் கோவன் இரட்டை சதம் அடிக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.
    இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் இரட்டை சதம் விளாசினார்.

    அதன்பின் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிப்லியை ரன்ஏதும் எடுக்க விடாமல் கைல் ஜேமிசன் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேற்றினார். அடுத்து வந்த ஜாக் கிராவ்லி 2 ரன்னில் டிம் சவுத்தி பந்தில் வெளியேறினார்.

    இதனால் இங்கிலாந்து 18 ரன்னுக்குள் 2-வது விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ரோரி பேர்ன்ஸ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ரோரி பேர்ன்ஸ் 90 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

    இந்த ஜோடி நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 43 ஓவர்கள் விளையாடி 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.

    ரோரி பேர்ன்ஸ் 59 ரன்களுடனும், ஜோ ரூட் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இங்கிலாந்து 267 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    இந்த ஜோடி இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் குறைந்தது உணவு இடைவேளை வரையாவது தாக்குப்பிடித்து விளையாட வேண்டும். அதன்பின் ஜோ ரூட் பெரிய இன்னிங்ஸ் விளையாடி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை முன்னிலைப் பெற வைத்தால், இங்கிலாந்து இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    ஒருவேளை முதல் இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் குறைவாக பெற்றால், தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
    Next Story
    ×