என் மலர்
விளையாட்டு
நிலைத்து நின்று ஆடிய கேன் வில்லியம்சன்-ராஸ் டெய்லர் ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் பகீரத பிரயத்தனம் செய்தும் பலன் இல்லை.
சவுத்தம்டன்:
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன.
32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்த நிலையில், 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா, விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.
கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். புஜாரா 15 ரன்கள், ரகானே 15 ரன்கள், ஜடேஜா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷப் பண்ட், 41 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா 170 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

துவக்க வீரர்கள் டாம் லாதம் 9 ரன்களிலும், தேவன் கான்வாய் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், அதன்பின்னர் இணைந்த கேன்வில்லியம்சன்-ராஸ் டெய்லர் ஜோடி நிலைத்து நின்று ஆடினர். அவர்களை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் பகீரத பிரயத்தனம் செய்தும் பலன் இல்லை.
இறுதியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது. இதன்மூலம் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது. கேன் வில்லியம்சன் 52 ரன்களுடனும், ராஸ் டெய்லர் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கடைசி நாள் ஆட்டத்தின்போது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
சவுத்தம்டன்:
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன.
32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்த நிலையில், 5வது நாள் ஆட்டம் நிறைவடைந்தது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6வது நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்தியா, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 13 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். புஜாரா 15 ரன்கள், ரகானே 15 ரன்கள், ஜடேஜா 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் பொறுமையாக ஆடிய ரிஷாப் பண்ட், 41 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் 170 ரன்களில் முடிவுக்கு வந்தது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், ஜேமிசன் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
கடந்த காலங்களில், உலகப் போர்களின் காரணமாக 1916, 1940 மற்றும் 1944 ஆகிய மூன்று ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.
கிரேக்க நகரமான ஒலிம்பியாவில், கி.மு. 776-ம் ஆண்டு முதல் கி.மு. 393-ம் ஆண்டு வரை, ஜீயஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வந்தன. ரோமாபுரியைச் சேர்ந்த தியோடோஷயஸ் ஆட்சிக்கு வந்ததும், இந்த போட்டி தடைசெய்யப்பட்டது. இந்தப் போட்டியானது, 1894-ம் ஆண்டு ஜூன் 23-ந்தேதி நவீன வடிவம் பெற்று, ஒலிம்பிக் போட்டியாக மாறியது. இதனை ஒருங்கிணைத்தவர், பியரி டி கூபர்டின். இவரே ஒலிம்பிக் போட்டியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். முதன் முதலில் ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவரும் இவர்தான்.
முதல் நவீன மயமான ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டியானது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 1924-ம் ஆண்டு முதல் குளிர் கால ஒலிம்பிக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியானது, ‘கோடைகால ஒலிம்பிக் போட்டி’ என்று அழைக்கப்பட்டது. 1992-ம் ஆண்டு வரை கோடைகால ஒலிம்பிக் போட்டியும், குளிர்கால ஒலிம்பிக் போட்டியும் ஒரே ஆண்டில்தான் நடத்தப்பட்டன. அதன்பிறகான காலங்களில், இரண்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு போட்டிகளும் மாற்றியமைக்கப்பட்டன. அதாவது கோடைகால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும்.
இதுவரை 31 ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற நகரமாக லண்டன் விளங்குகிறது. 32-வது ஒலிம்பிக் போட்டி கடந்த 2020 ஆண்டு ஜப்பானில் நடைபெற்றிருக்க வேண்டியது. ஆனால் உலக அளவில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த விளையாட்டு போட்டி தள்ளிவைக்கப்பட்டது. தற்போது வருகிற ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் நடைபெற உள்ளது. கடந்த காலங்களில், உலகப் போர்களின் காரணமாக 1916, 1940 மற்றும் 1944 ஆகிய மூன்று ஆண்டுகள் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.
1948-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டபோது, ஒலிம்பிக் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள தகுதியான அனைவரும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை முன்னெடுத்துச் செல்லும் விதமாக இந்தத் தினம் அறிமுகம் செய்யப்பட்டது,
அதன்பின் ஒலிம்பிக் தினம் அன்று ஒலிம்பிக் ஓட்டம் கடந்த 20 ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது தேசிய ஒலிம்பிக் கமிட்டியில் இருந்து 45 நாடுகள் 1987-ல் பங்கேற்றன. தற்போது 205 நாடுகளில் ஒலிம்பிக் ஓட்டம் கடைபிடிக்கப்படுகிறது. தற்போது ஒலிம்பிக் தினம் அன்று விளையாட்டு, கலாச்சாரம், கல்வி போன்றவற்றை கற்றுக் கொடுக்க ஒலிம்பிக் கமிட்டி ஏற்பாடு செய்துள்ளது.
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாளில் நடத்தப்படும் கோலாகலமான விழா, 1908-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. ஒலிம்பிக் தீபம், முதன் முதலில் 1928-ம் ஆண்டு ஆம்ஸெடர்டம் என்பவரால் ஏற்றப்பட்டது. இந்த ஒலிம்பிக் தீபமானது, ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்படும். பின்னர் பல நாடுகளில் பல வீரர்களால் ஏந்திச் செல்லப்பட்டு, ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நாளன்று, ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைய அரங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஒலிம்பிக் கொடியில் மொத்தம் ஆறு வண்ணங்கள் இருக்கும். வெள்ளை நிறத்தைப் பின்புலமாகக் கொண்ட கொடியின் மீது ஊதா, மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய ஐந்து நிறங்களில் வளையங்கள் வரையப்பட்டிருக்கும் இந்த வளையங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து கண்டங்களைக் குறிக்கின்றன. இந்தக் கொடி 1920-ம் ஆண்டு தான் முதல் முதலாக பறக்கவிடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், நவீன ஒலிம்பிக் போட்டி உருவாக்கப்பட்ட நாளான ஜூன் 23-ந் தேதியை, ‘உலக ஒலிம்பிக் தினம்’ என்று அனைவரும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்ப்டன் நகரில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.
சவுத்தம்டன்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:
தற்போது நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிராவில் முடியும் என்றே தோன்றுகிறது. டிராவில் முடிந்தால் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். உலக போட்டியில் கோப்பை கூட்டாக பகிர்வது இதுவே முதல்முறையாக இருக்கும்.

கால்பந்து விளையாட்டில் ஆட்டம் சமனில் முடிந்தால் வெற்றியாளரை முடிவு செய்ய பெனால்டி முறை கடைபிடிக்கப்படுகிறது. டென்னிஸ் போட்டியில் 5 செட் மற்றும் டைபிரேக்கர் கொண்டு வரப்படுகிறது.
இதேபோல்,வருங்காலத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிரா ஆகும்போது, இவ்விரு அணிகளில் ஒன்றை வெற்றியாளராக அறிவிக்கும் வழிமுறையைக் கண்டறிய வேண்டும். ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி இது குறித்து சிந்தித்து முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சவுத்தம்டன்:
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
நான்காவது நாள் ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், 5-வது நாளான இன்றும் மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேன் வில்லியம்சன் 49 ரன்னும், சவுத்தி 30 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டும், இஷாந்த் 3 விக்கெட்டும், அஷ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர்.

சுப்மான் கில் 8 ரன்னில் சவுத்தியிடம் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடி வந்த ரோகித் சர்மா 30 ரன்னில் சவுத்தியிடம் வீழ்ந்தார்.
புஜாராவும், அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
ஐந்தாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
நியூசிலாந்து சார்பில் சவுத்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5-வது நாளான இன்றும் மழை குறுக்கிட்டதால், ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது.
சவுத்தம்டன்:
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நான்காவது நாள் ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
5-வது நாளான இன்றும் மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி உணவு இடைவேளை வரை, 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட, நியூசிலாந்து 82 ரன்கள் பின்தங்கி உள்ளது.

முன்னணி வீரர் ராஸ் டெய்லர் 11 ரன்களிலும், ஹென்றி நிக்கோல்ஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த விக்கெட்டுகளை முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் கைப்பற்றியதால், இந்தியாவின் கை ஓங்கி உள்ளது. கேன் வில்லியம்சன் 19 ரன்களுடனும், கிராண்ட்ஹோம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
போட்டி தொடங்குவற்கு சற்று முன் லேசான மழை பெய்ததால், 5-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.
போட்டி கடந்த 18-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. முதல்நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 2-வது நாள் போட்டி நடைபெற்றது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
நேற்றுமுன்தினம் 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தபோது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
நேற்று மதியம் 3 மணிக்கு 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்கப்படவில்லை. தொடர்ந்து மழை பெய்ததால், 4-வமு ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் நேற்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று மதியம் 3 மணிக்கு 5-வது நாள் ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. சவுத்தம்டனில் காலையில் மழை இல்லை. இதனால் போட்டி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டி தொடங்குவற்கு சற்று முன் மழை, லோசான தூறலாக பெய்தது, இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் சரியாக 4 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.
மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா, பராகுவே அணியை வீழ்த்தி காலிறுதிக்கானா இடத்தை உறுதி செய்துள்ளது.
47-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது.
இந்திய நேரப்படி இன்று காலை நடந்த ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- பராகுவே அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 10-வது நிமிடத்தில் பப்பு கோம்ஸ் கோல் அடித்தார்.
அர்ஜென்டினா பெற்ற 2-வது வெற்றியாகும். ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் உருகுவேயை வீழ்த்தி இருந்தது. சிலியுடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. இதன் மூலம் அர்ஜென்டினா கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் பொலிவியாவை 28-ந்தேதி எதிர்கொள்கிறது.
இதே பிரிவில் உருகுவே- சிலி அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
சிலி அணி ஒரு வெற்றி, 2 டிராவுடன் 5 புள்ளிகளை பெற்று கால் இறுதியை உறுதி செய்துள்ளது. ‘பி’ பிரிவில் இருந்து பிரேசில் 2 வெற்றியுடன் ஏற்கனவே கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம், டென்மார்க் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், கோல் அடிப்படையில் ரஷியா வெளியேறியது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. ‘பி’ பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்தது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம்- பின்லாந்து அணிகள் மோதின.
2-வது சுற்றுக்கு முன்னேறி இருந்த பெல்ஜியம் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. கோல் அடிக்கும் பல வாய்ப்புகளை பின்லாந்து வீரர்கள் தடுத்துவிட்டனர்.
74-வது நிமிடத்தில் ஓன்-கோல் மூலம் பெல்ஜியம் முன்னிலை பெற்றது. அந்த அணி வீரர் வெர்மலன் தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில்பட்டது. அதை பின்லாந்து கோல் கீப்பர் ஹரடேஸ்கி பிடிக்க முயன்று கோல் வலைக்குள் தள்ளிவிட்டார்.
81-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு 2-வது கோல் கிடைத்தது. புருனி தட்டிக் கொடுத்த பந்தை லூகாகு கோலாக்கினார்.
பின்லாந்து வீரர்களால் இறுதிவரை கோல் போட முடியவில்லை. முடிவில் பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெல்ஜியம் ஹாட்ரிக் வெற்றிபெற்றது. ரஷியாவை 3-0 என்ற கணக்கிலும், டென்மார்க்கை 2-1 என்ற கணக்கிலும் பெல்ஜியம் ஏற்கனவே வீழ்த்தி இருந்தது.
கோபன்ஹேகனில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க்- ரஷியா அணிகள் மோதின. இதில் டென்மார்க் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
டென்மார்க் அணியில் டேம்ஸ்கார்ட் (38-வது நிமிடம்), பவுல்சென் (59), கிறிஸ்டென்சென் (79), மெக்லே (82) ஆகியோர் கோல் அடித்தனர். ரஷிய அணியில் 70-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் சைபா கோல் அடித்தார்.
‘பி’ பிரிவில் பெல்ஜியம் 9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தது. டென்மார்க், பின்லாந்து, ரஷியா அணிகள் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் தலா 3 புள்ளிகள் பெற்றன. கோல்கள் அடிப்படையில் டென்மார்க் 2-வது இடத்தை பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 2-வது சுற்றில் வேல்சை சந்திக்கிறது.
பின்லாந்து 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிலைமை மற்ற பிரிவுகளில் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகளின் தர வரிசையை பொறுத்து இருக்கும்.
ரஷியா 4-வது இடத்தைப் பிடித்து போட்டியில் இருந்து வெளியேறியது. அந்த அணியின் கோல் வித்தியாசம் மிகவும் மோசமாக இருந்தது.
‘சி’ பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வடக்கு மாசிடோனியாவையும், ஆஸ்திரியா 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனையும் வீழ்த்தின.

இந்த பிரிவில் நெதர்லாந்து 3 வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், ஆஸ்திரியா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தையும் பிடித்தன. இந்த இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
உக்ரைன் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. மற்ற பிரிவில் 3 இடத்தை பிடிக்கும் அணிகளின் நிலையைப் பொறுத்து அடுத்த சுற்று வாய்ப்பு தெரியவரும். வடக்கு மாசிடோனியா தான் மோதிய 3 ஆட்டங்களிலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறாமல் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.
ஆஸ்திரியா இரண்டாவது சுற்றில் இத்தாலியுடன் மோதுகிறது.
முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆகி, ஸ்மித்திற்குப் பதிலாக மாற்று வீரராக களம் இறங்கி நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ள ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேனுக்கு இன்று பிறந்த நாள்.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேனுக்கு இன்று பிறந்த நாள். 27 வயதை நிறைவு செய்து 28-வது வயதிற்கு அடியெடுத்து வைக்கிறார்.
2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே சறுக்கல். முதல் இன்னிங்சில் ரன் கணக்கை துவக்காமல் டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் 13 ரன்னில் ஏமாற்றம்.
இதையும் படியுங்கள்... டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ரன் மெஷின் விராட் கோலி
சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 81 ரன்கள் எடுத்தார். அதே ஆண்டு இலங்கைக்கு எதிராக 6, 4 சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகம் அவர் மீது மிகப்பெரிய அளவில் நம்பிக்கை வைக்கவில்லை.
இருந்தாலும், 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் முதல் போட்டியில் களம் இறக்கப்படவில்லை.
2-வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு காயம் ஏற்பட்டு விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மார்னஸ் லபுஸ்சேனுக்கு மாற்று வீரராக களம் இறங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
இதையும் படியுங்கள்... வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியாவுக்கு 267 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 100 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா போட்டியை டிரா செய்ய முக்கிய பங்கு வகித்தார்.
இந்த இன்னிங்ஸ்தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. லீட்ஸ் டெஸ்டில் 74, 80, மான்செஸ்டர் டெஸ்டில் 67, 11, ஓவல் டெஸ்டில் 48, 14 என முத்திரை பதித்தார்.
அதன்பின் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் வரிசையில் 3-வது இடத்தை பிடித்து அசைக்க முடியாத வீரராக மாறினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 185, 162 இரண்டு சதங்களும், நியூசிலாந்துக்கு எதிராக 143, 215 என ரன்கள் குவித்தார். தொடர்ந்து மூன்று இன்னிங்சில் சதம் கண்ட வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

இந்தியாவுக்கு எதிராக சிட்னி டெஸ்டில் சதம் விளாசினார். தற்போது வரை 18 டெஸ்ட் போட்டியில் 31 இன்னிங்சில் 1885 ரன்கள் குவித்துள்ளார். இதில் 10 அரைசதம், 5 சதங்கள் அடங்கும். சராசரி 60.80 ஆகும். தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் இவர்தான்.
இதையும் படியுங்கள்... இதை சொல்வதற்கு எனக்கு வேதனையாக இருக்கிறது: பீட்டர்சன்
டக்அவுட்டில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி, மாற்று வீரராக களம் இறங்கி வாய்ப்பை கெட்டியாக பிடித்து, ஆஸ்திரேலியாவின் அடுத்த கேட்டனாகவும் அளவிற்கு உயர்ந்துள்ளார் மார்னஸ் லபுஸ்சேன்.
இந்திய கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார்.
புதுடெல்லி:
விராட்-கோலி 2011, ஜூன் 20-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் முதல் முறையாக களமிறங்கினார்.
அந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்சில் 15 ரன்களுக்கும் அவுட்டானார் விராட் கோலி
தற்போது நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 3-வது நாளில் தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் 10 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளில் விராட் கோலி கடந்து வந்த பாதை:
92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலி 61 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.
மொத்தம் 7,534 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 52.31 ஆக இருக்கிறது.

2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது டெஸ்டில் முதல் அரை சதம் அடித்தார்.
2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
இந்த 10 ஆண்டுகளில் 27 சதங்களை விளாசியுள்ளார். அதில் 14 சதங்கள் இந்தியாவுக்கு வெளியே அடித்தவை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 முறை இரட்டை சதங்களும், 25 அரை சதங்களும் விளாசியுள்ளார்.
2019-ம் ஆண்டில் புனேவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 254 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்சமாகும்.
2016-ம் ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் 1,215 ரன்களை குவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் இந்திய அணியில் அதிகபட்ச சராசரி வைத்திருக்கும் பேட்ஸ்மேன் இவர் மட்டுமே.
2018-ஆம் ஆண்டு ஐசிசியின் சிறந்த வீரர் விருதையும் பெற்றார்.
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக 2017, 2018, 2019 என தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக 2020-ம் ஆண்டு ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த பேட்ஸ்மேன் என அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு "சர் கேரிபீல்டு சோபர்ஸ்" விருது வழங்கி கவுரவித்தது ஐசிசி.
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.
ரியோடிஜெனீரோ:
தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் கோய்னியாவில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன்களான பெரு-கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. 17-வது நிமிடத்தில் பெரு அணி வீரர் செர்ஜியோ பெனா கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
பின்பாதியிலும் இரு அணியினரும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். 53-வது நிமிடத்தில் கொலம்பியா அணி பதிலடி கொடுத்தது. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் மிகுல் போர்ஜா கோல் போட்டார். 64-வது நிமிடத்தில் பெரு அணிக்கு மீண்டும் ஒரு கோல் கிட்டியது. கார்னர் வாய்ப்பில் பெரு அணி வீரர் கோலை நோக்கி அடித்த பந்தை கொலம்பியா அணியின் பின்கள வீரர் யெர்ரி மினா தடுக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவரது நெஞ்சில் பட்டு கோல் வலைக்குள் புகுந்து சுய கோலானது.
அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. பெரு அணி தனது முதல் ஆட்டத்தில் பிரேசிலிடம் சரண் அடைந்து இருந்தது. கொலம்பியா அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். தொடக்க லீக் ஆட்டத்தில் ஈகுவடாரை வீழ்த்தி இருந்த அந்த அணி அடுத்த ஆட்டத்தில் வெனிசுலாவுடன் டிரா கண்டு இருந்தது. 2011-ம் ஆண்டு கோபா அமெரிக்கா போட்டிக்கு பிறகு பெரு அணி கொலம்பியாவை தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும்.
இதேபிரிவில் ரியோடிஜெனீரோவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் வெனிசுலா-ஈகுவடார் அணிகள் மோதின. ஈகுவடார் அணியினரின் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் (69 சதவீதம்) வலம் வந்தாலும் வெனிசுலா அணியினர் எல்லா வகையிலும் எதிரணிக்கு கடும் சவால் அளித்தனர்.
39-வது நிமிடத்தில் ஈகுவடார் அணி வீரர் அர்டோன் பிரிசியாடோ கோல் அடித்தார். வெனிசுலா அணி 51-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் எட்சன் கேஸ்டிலோ இந்த கோலை அடித்தார். இதனை அடுத்து ஈகுவடார் அணியினர் தங்கள் ஆட்ட வேகத்தை அதிகப்படுத்தினர். இதன் பலனாக 71-வது நிமிடத்தில் ஈகுவடார் அணி வீரர் கோன்ஜாலோ பிளாட்டா அபாரமாக கோல் அடித்தார். ஈகுவடார் அணி வெற்றியை எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் வெனிசுலா வீரர் ரொனால்டு ஹெர்னாண்டஸ் தலையால் முட்டி கோல் அடித்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
முதலாவது லீக் ஆட்டத்தில் பிரேசிலிடம் தோல்வி கண்ட வெனிசுலா அணி, கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலின்றி டிரா செய்து இருந்தது. ஈகுவடார் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கொலம்பியாவிடம் தோற்று இருந்தது.
தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் கோய்னியாவில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன்களான பெரு-கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. 17-வது நிமிடத்தில் பெரு அணி வீரர் செர்ஜியோ பெனா கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
பின்பாதியிலும் இரு அணியினரும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். 53-வது நிமிடத்தில் கொலம்பியா அணி பதிலடி கொடுத்தது. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் மிகுல் போர்ஜா கோல் போட்டார். 64-வது நிமிடத்தில் பெரு அணிக்கு மீண்டும் ஒரு கோல் கிட்டியது. கார்னர் வாய்ப்பில் பெரு அணி வீரர் கோலை நோக்கி அடித்த பந்தை கொலம்பியா அணியின் பின்கள வீரர் யெர்ரி மினா தடுக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவரது நெஞ்சில் பட்டு கோல் வலைக்குள் புகுந்து சுய கோலானது.
அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. முடிவில் பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. பெரு அணி தனது முதல் ஆட்டத்தில் பிரேசிலிடம் சரண் அடைந்து இருந்தது. கொலம்பியா அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். தொடக்க லீக் ஆட்டத்தில் ஈகுவடாரை வீழ்த்தி இருந்த அந்த அணி அடுத்த ஆட்டத்தில் வெனிசுலாவுடன் டிரா கண்டு இருந்தது. 2011-ம் ஆண்டு கோபா அமெரிக்கா போட்டிக்கு பிறகு பெரு அணி கொலம்பியாவை தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும்.
இதேபிரிவில் ரியோடிஜெனீரோவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் வெனிசுலா-ஈகுவடார் அணிகள் மோதின. ஈகுவடார் அணியினரின் கட்டுப்பாட்டில் பந்து அதிக நேரம் (69 சதவீதம்) வலம் வந்தாலும் வெனிசுலா அணியினர் எல்லா வகையிலும் எதிரணிக்கு கடும் சவால் அளித்தனர்.
39-வது நிமிடத்தில் ஈகுவடார் அணி வீரர் அர்டோன் பிரிசியாடோ கோல் அடித்தார். வெனிசுலா அணி 51-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் எட்சன் கேஸ்டிலோ இந்த கோலை அடித்தார். இதனை அடுத்து ஈகுவடார் அணியினர் தங்கள் ஆட்ட வேகத்தை அதிகப்படுத்தினர். இதன் பலனாக 71-வது நிமிடத்தில் ஈகுவடார் அணி வீரர் கோன்ஜாலோ பிளாட்டா அபாரமாக கோல் அடித்தார். ஈகுவடார் அணி வெற்றியை எட்டிப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் வெனிசுலா வீரர் ரொனால்டு ஹெர்னாண்டஸ் தலையால் முட்டி கோல் அடித்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
முதலாவது லீக் ஆட்டத்தில் பிரேசிலிடம் தோல்வி கண்ட வெனிசுலா அணி, கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கோலின்றி டிரா செய்து இருந்தது. ஈகுவடார் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கொலம்பியாவிடம் தோற்று இருந்தது.






