என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த முடியாத நிலையில், அஸ்வின் தொடக்க ஜோடியை பிரித்தார்.
    இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் திகழ்ந்து வருகிறார். இருந்தாலும் வெளிநாட்டு மண்ணில் அவர் சிறப்பாக பந்து வீசவில்லை, வெற்றியை தேடிக்கொடுக்கவில்லை என்ற விமர்சனம் சிலரால் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அதையெல்லாம் கவனித்தில் எடுத்துக் கொள்ளாமல் அஸ்வின் பந்து வீச்சில் கவனம் செலுத்தி வருகிறார்.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி ஆகியோரால் தொடக்க ஜோடியை பிரிக்க முடியவில்லை. அஸ்வின்தான் தொடக்க ஜோடியை பிரித்தார். டாம் லாதம் 104 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்ததார்.

    இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என பும்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.

    அஸ்வின் குறித்து பும்ரா கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், அவருடைய சாதனையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அது அவரைப் பற்றி பேசும். பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். 400 விக்கெட்டிற்கு மேல் வீழ்த்தியுள்ளார். அது வாய்ப்புகள் மற்றும் தற்செயலாக வரவில்லை’’ என்றார்.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் முதல் நாள் ஆட்டமும், இன்றைய 4-வது நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.

    போட்டி கடந்த 18-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. முதல்நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 2-வது நாள் போட்டி நடைபெற்றது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி முன்னதாகவே நிறுத்தப்பட்டது.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தபோது நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    ரசிகர்கள்

    இன்று மதியம் 3 மணிக்கு 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்கப்படவில்லை. தொடர்ந்து மழை பெய்ததால், இன்றைய ஆட்டமும் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

    இதனால் இன்றைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெறுவது யார்? என்பதை தெரிந்து கொள்ள இங்கிலாந்து சீதோஷ்ணநிலை தடையாக உள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடி வருகின்றன. இங்கிலாந்து சவுத்தம்டன் இரண்டு அணிகளுக்கும் பொதுவான இடம் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என கருதப்பட்டது.

    ஆனால் முதல் நாள் மற்றும் இன்றைய 4-வது நாள் ஆட்டம் என இரண்டு நாட்கள் ஆட்டம் மழைக்காரணாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளன. ஒரு நாள் மட்டுமே ரிசர்வ் டே-ஆக உள்ளது. தற்போதைய நிலையில் போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார்.

    அதில் ‘‘இதை சொல்வதற்கு எனக்கு வேதனை இருக்கிறது. நம்ப முடியாத முக்கியமான போட்டி இங்கிலாந்தில் நடத்தக் கூடாது.

    என்னை பொறுத்தவரைக்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி போன்ற ஒரேயொரு முக்கியமான போட்டி துபாயில் நடத்தப்பட வேண்டும். பொதுவான இடம், நட்சத்திர மைதானம், உறுதியான சீதோஷ்ண நிலை, அட்டகாசமான பயிற்சி வசதிகள், விமான பயணத்தின் மையம். மைதானத்திற்கு அடுத்ததாக ஐசிசி-யின் மையம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் அனைத்து நாட்கள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 18-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை போட்டி நடைபெறுவது என்பது அட்டவணை. ஒருவேளை மழை குறுக்கிட்டால், ‘ரிசர்வ் டே’ கடைபிடிக்கப்படும் என ஐசிசி தெரிவித்திருந்தது.

    ஆனால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் வரை எடுத்துக்கொண்டால், நான்கு நாட்களிலும் மழை குறுக்கிட்டுள்ளது. இதனால் ரிசர்வ் டே நாளான 6-வது நாளிலும் போட்டி முடிவடையுமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் ஒருநாள் ‘ரிசர்வ் டே’  போதாது. ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் வீசப்படும் என்பதால், ஐந்து நாட்களை கணக்கிட்டு 450 ஓவர்கள் வீசப்படும் வரைக்கும் போட்டியை அனுமதிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    இதுகுறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறுகையில் ‘‘ரசிகர்களுக்கு இது மிகவும் கவலை அளிக்கக்கூடியது. ஐசிசி சரியான விதிமுறையை கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன். அனைவரும் சொல்வது நீங்கள் சாம்பியன் என்றுதான். ஐந்து நாட்களுக்கு 90 ஓவர்கள் வீதம் 450 ஓவர்களை முடிக்க வேண்டும். நான் இதை ஐசிசி-யிடம் எதிர்பார்க்கிறேன். ரிசர்வ் டே இருப்பதால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், மழை தொடர்ந்து பெய்தால் அதற்குள் போட்டி முடிவடையுமா? என்று என்னால் உறுதியாக கூற இயலாது’’  என்றார்.

    மைதானத்தை ஆய்வு செய்யும் நடுவர்கள்

    நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் கூறுகையில் ‘‘இரண்டு அணிகளும் வெற்றிக்காக விளையாட வேண்டும் என விரும்புவார்கள். ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக ஒத்துழைக்கிறது. மூன்று அல்லது நாட்கள் நாட்கள் விளையாடினால் கூட, நாம் போட்டியின் முடிவை கண்டிருக்கலாம்.

    கண்டிசன் இப்படியே நீண்டு கொண்டே சென்று, மழை நின்ற பிறகு நியூசிலாந்து சிறப்பாக பேட்டிங் செய்தால், நியூசிலாந்து வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால், எத்தனை நாட்கள் சென்றாலும் 450 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என்பதில் நான் லக்‌ஷ்மண் கருத்துடன் ஒத்துப்போகிறேன்’’ என்றார்.
    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை சச்சின் தெண்டுல்கரும், அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை முத்தையா முரளீதரனும் படைத்துள்ளனர்.
     21-ம் நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்து வீச்சாளர் யார்? என்பதை அறிவிக்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒரு போட்டி நடத்தியது. இந்த போட்டியில் விவிஎஸ் லட்சுமண், இர்பான் பதான், இயன் பிஷப், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், ஸ்காட் ஸ்டைரிஸ், கவுதம் காம்பிர், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள், விளையாட்டு பத்திரிகையாளர்கள் என 50 பேர் வாக்களித்து சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்தனர்.

    இவர்கள் சச்சின் தெண்டுல்கரை 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும், முத்தையா முரளீதரனை சிறந்த பந்து வீச்சாளர்களாகவும் தேர்வு செய்துள்ளனர்.

    பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஸ்டெயின் 2-வது இடத்தையும், ஷேன் வார்னே 3-வது இடத்தையும், மெக்ராத் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    சச்சின் தெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 51 சதம், 68 அரைசதங்களுடன் 15,921 ரன்கள் அடித்துள்ளார். 463 ஒருநாள் போட்டிகளில் 49 சதம், 96 அரைசதங்களுடன் 18,426 ரன்கள் அடித்துள்ளார்.

    முத்தையா முரளீதரன் 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.
    இந்தியாவை முதல் இன்னிங்சில் 217 ரன்னில் ஆல்அவுட் ஆக முக்கிய காரணமாக இருந்த கைல் ஜாமிசன், எதிர்கால சூப்பர் ஸ்டார் என நசீர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகள் உலக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. மழையால் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. 2-வது நாள் 64.4 ஓவர்கள் வீசப்பட்டது, நேற்று 76.3 ஓவர்கள் வீசப்பட்டன. மூன்று நாட்கள் முடிவில் 141.1 ஓவர்கள் மட்டுமே விசப்பட்டுள்ளன.

    இன்றைய 4-வது நாள் ஆட்டமும் மழையால் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்னில் சுருண்டது. இதற்கு முக்கிய காரணம் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன்தான். அவர் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். 12 மெய்டன் ஓவர்கள் வீசினார்.

    கைல் ஜாமிசன் இதுவரை 8 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 8-வது போட்டியிலேயே ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்துள்ளார்.

    தலைசிறந்த அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசிய கைல் ஜாமிசன் எதிர்கால சூப்பர் ஸ்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நசீர் ஹுசைன் பாராட்டியுள்ளார்.

    நசீர் ஹுசைன், கைல் ஜாமிசன்

    கைல் ஜாமிசன் குறித்து நசீர் ஹுசைன் கூறுகையில் ‘‘சர்வதேச கிரிக்கெட்டில் கைல் ஜாமிசனின் தாக்கம், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மிகப்பெரியது. அவர் 8 போட்டியில்தான் விளையாடியுள்ளார். அதற்குள் ஐந்து முறை ஐந்து விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இதுபோன்ற உடனடி தாக்கம் மிகப்பெரியது.

    இங்கிலாந்துக்கு வந்த அவர் புல்லர் பந்து வீச்சு (bowl fuller) குறித்து கற்றுக் கொண்டார். இந்தியாவுக்கு எதிராக பந்து வீசும் கோணத்தை (angles) மாற்றிக் கொண்ட விதம், அவர் உடனடியாக கற்றுக்கொண்டார் என்பதை காண்பிக்கிறது. மிகப்பெரிய போட்டியில், சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார். அவர் எதிர்காலத்தின் சூப்பர் ஸ்டார் என்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்’’ என்றார்.
    முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டு, 2-வது நாள் 64.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், இன்றைய 4-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.

    போட்டி கடந்த 18-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. முதல்நாள் ஆட்டம் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டது. 2-வது நாள் போட்டி நடைபெற்றது. நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா 64.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி முன்னதாகவே நிறுத்தப்பட்டது.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 92.1 ஓவரில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தபோது நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இன்று மதியம் 3 மணிக்கு 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை பெய்து வருவதால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று முழுவதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த உகாண்டா அணியில் 9 பேர் ஜப்பான் சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க இப்போதே ஒவ்வொரு அணிகளாக ஜப்பான் செல்ல தொடங்கி விட்டன.

    ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த உகாண்டா அணியில் 9 பேர் ஜப்பான் சென்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது. இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். ஜப்பான் கிளம்புவதற்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவே வந்துள்ளது.

    தொற்றுக்குள்ளான நபரை தவிர மற்றவர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்னில் சுருண்டது.
    செயிண்ட் லூசியா:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயிண்ட் லுசியாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதனபடி, முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 298 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.
    குயின்டன் டிகாக் 96 ரன்னும், கேப்டன் எல்கர் 77 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், கைல் மேயர்ஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை ஆடியது. தென் ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சால் அந்த அணி திணறியது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ஓவர்களில் 149 ரன்களில் சுருண்டது.
    அதிகபட்சமாக பிளாக்வுட் 49 ரன்னும், ‌ஷகிஹோப் 43 ரன்னும் எடுத்தனர். 

    தென் ஆப்பிரிக்கா சார்பில் முலாடர் 3 விக்கெட்டும், ரபாடா, நிகிடி, கேசவ் மகராஜ் தலா 2 விக்கெட்டும், நூர்ஜே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    149 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இம்முறை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அபாரமாக பந்து வீசினர்.
     
    4 விக்கெட் வீழ்த்திய கீமர் ரோச்

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தென் ஆப்பிரிக்கா அணியின் வான் டெர் டுசன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ரபாடா ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடியால் தென் ஆப்பிரிக்கா அணி 150 ரன்களை கடந்தது.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 53 ஓவரில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வான் டெர் டுசன் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரபாடா 40 ரன்னில் அவுட்டானார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 4 விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது  இன்னிங்சை ஆடி வருகிறது.
    இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கான்வே அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.
    சவுத்தாம்ப்டன்:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

    மழை புகுந்து விளையாடியதால் முதல் நாள் ஆட்டம் டாஸ் போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 64.4 ஓவர்களில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்து.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம்  இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அஸ்வினும் 22 ரன்களில் வெளியேறினார். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.

    இறுதியில், இந்திய அணி 92.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 49 ரன்கள் அடித்தார்.  

    நியூசிலாந்து அணி சார்பில் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. டாம் லாதம், டிவான் கான்வே தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    லாதம் விக்கெட் வீழ்த்திய அஷ்வின்

    அணியின் எண்ணிக்கை 70 ஆக இருக்கும்போது லாதம் 30 ரன்னில் அஸ்வினிடம் வீழ்ந்தார். தொடர்ந்து ஆடிய கான்வே அரை சதம் கடந்தார். அவருக்கு கேப்டன் வில்லியம்சன் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

    கான்வே 54 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மாவிடம் அவுட்டானார். அதன்பின் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் அஷ்வின், இஷாந்த் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.
    நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
    சவுத்தாம்ப்டன்:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலகடெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை புகுந்து விளையாடியதால் முதல் நாள் ஆட்டம் ‘டாஸ்’ கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று பந்து வீச்சை நியூசிலாந்து தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 64.4 ஓவர்களில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்து.

    3-ஆம் நாள் ஆட்டம்  இன்று காலை துவங்கியது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அஸ்வினும் 22 ரன்களில் வெளியேறினார்.

    நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், 200-ரன்களை எட்டவே இந்திய அணி கடும் பாடுபட்டது. 92.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 49 ரன்கள் அடித்தார்.  

    ஜடேஜா


    நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் பேட் செய்கிறது.
    பவானி தேவி தற்போது ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாள்வீச்சு வீராங்கனை செல்வி பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி, தமிழகத்தின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார். அவரின் ஊக்கத்தினையும், விடா முயற்சியினையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் "விளையாட்டு அலுவலர்" பதவி வழங்கப்பட்டுள்ளது.

    பவானி தேவி தற்போது ஐப்பான் நாட்டின், டோக்கியோ மாநகரில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

     

    வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி

    இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவர் தேவையான பயிற்சிகள் பெற அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

    அவர் தற்போது இப்போட்டிக்காக இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். மேலும் சில பயிற்சிகள் பெற பவானி தேவி தமிழ்நாடு அரசிடம் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி கோரியிருந்தார்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பவானி தேவியின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அவரை ஊக்குவிக்கும் வகையில், இன்று (20.6.2021) சென்னை, அண்ணாசாலை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தாயாரிடம் வழங்கினார்.

    இந்நிகழ்வின்போது, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×