search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் ஆட்டம் நிறுத்தம்
    X
    மழையால் ஆட்டம் நிறுத்தம்

    மழையால் ஆட்டம் பாதிப்பு: ஐசிசி மீது முன்னாள் வீரர்கள் அதிருப்தி

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் அனைத்து நாட்கள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 18-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை போட்டி நடைபெறுவது என்பது அட்டவணை. ஒருவேளை மழை குறுக்கிட்டால், ‘ரிசர்வ் டே’ கடைபிடிக்கப்படும் என ஐசிசி தெரிவித்திருந்தது.

    ஆனால் இன்றைய 4-வது நாள் ஆட்டம் வரை எடுத்துக்கொண்டால், நான்கு நாட்களிலும் மழை குறுக்கிட்டுள்ளது. இதனால் ரிசர்வ் டே நாளான 6-வது நாளிலும் போட்டி முடிவடையுமா? என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் ஒருநாள் ‘ரிசர்வ் டே’  போதாது. ஒரு நாளைக்கு 90 ஓவர்கள் வீசப்படும் என்பதால், ஐந்து நாட்களை கணக்கிட்டு 450 ஓவர்கள் வீசப்படும் வரைக்கும் போட்டியை அனுமதிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    இதுகுறித்து விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறுகையில் ‘‘ரசிகர்களுக்கு இது மிகவும் கவலை அளிக்கக்கூடியது. ஐசிசி சரியான விதிமுறையை கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன். அனைவரும் சொல்வது நீங்கள் சாம்பியன் என்றுதான். ஐந்து நாட்களுக்கு 90 ஓவர்கள் வீதம் 450 ஓவர்களை முடிக்க வேண்டும். நான் இதை ஐசிசி-யிடம் எதிர்பார்க்கிறேன். ரிசர்வ் டே இருப்பதால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், மழை தொடர்ந்து பெய்தால் அதற்குள் போட்டி முடிவடையுமா? என்று என்னால் உறுதியாக கூற இயலாது’’  என்றார்.

    மைதானத்தை ஆய்வு செய்யும் நடுவர்கள்

    நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் கூறுகையில் ‘‘இரண்டு அணிகளும் வெற்றிக்காக விளையாட வேண்டும் என விரும்புவார்கள். ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக ஒத்துழைக்கிறது. மூன்று அல்லது நாட்கள் நாட்கள் விளையாடினால் கூட, நாம் போட்டியின் முடிவை கண்டிருக்கலாம்.

    கண்டிசன் இப்படியே நீண்டு கொண்டே சென்று, மழை நின்ற பிறகு நியூசிலாந்து சிறப்பாக பேட்டிங் செய்தால், நியூசிலாந்து வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஆனால், எத்தனை நாட்கள் சென்றாலும் 450 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என்பதில் நான் லக்‌ஷ்மண் கருத்துடன் ஒத்துப்போகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×