என் மலர்
விளையாட்டு
சவுத்தம்டன்:
இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
நேற்றைய 2-வது நாள் ஆட்டம் மழை பாதிப்பு இல்லாமல் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து இருந்தது.
கேப்டன் விராட் கோலி 44 ரன்னும், ரகானே 29 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ரோகித் சர்மா 34 ரன்னில் ஜேமிசன் பந்திலும், சுப்மன்கில் 28 ரன்னில் வாக்னர் பந்திலும், புஜாரா 8 ரன்னில் போல்ட் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.
போதிய வெளிச்சம் இல்லாததால் நேற்றைய ஆட்டம் பாதிக்கப்பட்டது. 64.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இன்றைய 3-வது நாள் ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
நேற்றைய டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் பொறுப்பு வகித்ததன் மூலம் விராட் கோலி புதிய சாதனை படைத்தார். அதிக டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருந்த இந்தியர் என்ற வரலாற்றை படைத்தார். அவர் டோனி சாதனையை முறியடித்தார்.
டோனி 60 டெஸ்டில் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 27 டெஸ்டில் வெற்றி கிடைத்தது. 18-ல் தோல்வி ஏற்பட்டது. 15 டெஸ்டு டிரா ஆனது. அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். டெஸ்டில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
விராட் கோலி 61 டெஸ்டுக்கு கேப்டனாக பணியாற்றி உள்ளார். சர்வதேச அளவில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரேமி சுமித் ஒருவரே 100 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அவர் 109 போட்டிக்கு கேப்டன் பொறுப்பு வகித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலன் பார்டர் 93 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் 10 ரன்னை தொட்ட போது விராட் கோலி 7,500 ரன்னை எடுத்தார். 154-வது இன்னிங்சில் அவர் இந்த ரன்னை தொட்டார். கவாஸ்கரும் இதே இன்னிங்சில் தான் 7,500 ரன்னை எடுத்து இருந்தார். தெண்டுல்கர் 144-வது இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்து இருந்தார்.
சர்வதேச அளவில் 7,500 ரன்கள் என்ற மைல் கல்லை அதிவேகத்தில் எட்டிய வீரர்களில் விராட் கோலி 9-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் அவருக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது.



லண்டன்:
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டும் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 11 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
‘இ’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில சுவீடன் 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது. போர்ஸ்பெர்க் 77-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் இந்த கோலை அடித்தார். சுவீடன் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி 4 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. சுலோவாக்கியா முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி 3 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது.
செக்குடியரசு- குரோஷியா அணிகள் (‘டி’ பிரிவு) மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. 37-வது நிமிடத்தில் பேட்ரிக்ஸ்கிக் (செக் குடியரசு) பெனால்டி மூலம் கோல் அடித்தார். 47-வது நிமிடத்தில் குரோஷியா அணிக்காக இவான் பெர்சிச் கோல் அடித்தார்.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து ( ‘டி’ பிரிவு ) மோதின.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2 -வது சுற்றுக்கு முன்னேறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டி கோல் எதுவுமின்றி டிரா ஆனது. இதனால் இங்கிலாந்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தது.
இந்தப் பிரிவில் செக் குடியரசு, இங்கிலாந்து அணிகள் ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளன. குரோஷியா, ஸ்காட்லாந்து அணிகள் ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 1 புள்ளிகள் பெற்றுள்ளன.
இன்று மாலை 6.30 மணிக்கு ‘எப்’ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் பிரான்ஸ்-அங்கேரி மோதுகின்றன. பிரான்ஸ் வெற்றி பெற்றால் 2-வது சுற்றுக்கு முன்னேறும்.
இதேபிரிவில் 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. ஜெர்மனி அணிக்கு இந்த ஆட்டம் முக்கியமானது. முதல் ஆட்டத்தில் பிரான்சிடம் தோற்றதால் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
போர்ச்சுக்கல் தொடக்க ஆட்டத்தில் அங்கேரியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. இதனால் ஜெர்மனியை வீழ்த்தினால் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயின்-போலந்து (‘இ’ பிரிவு) மோதுகின்றன. ஸ்பெயின் அணி தொடக்க ஆட்டத்தில் சுவீடனுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 2-வது சுற்றுக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி பெற வேண்டும்.
பிரேசில்லா:
47-வது கோபா கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா- உருகுவே (‘ஏ’ பிரிவு) அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் ரோட்ரிக்ஸ் அர்ஜென்டினா அணிக்காக இந்த கோலை அடித்தார். 2-வது கோலை அடிக்க அந்த அணி கடுமையாக போராடியது. ஆனால் முடியவில்லை. இதேபோல உருகுவே அணியும் பதில் கோல் அடித்து சமன் செய்ய முயன்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
அர்ஜென்டினா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் சிலியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அந்த அணி 3-வது ஆட்டத்தில் பராகுவேயை எதிர்கொள்கிறது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சிலி 1-0 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை தோற்கடித்தது. சிலி அணிக்காக 10-வது நிமிடத்தில் பிரர்டென் கோல் அடித்தார். சிலி அணியும் முதல் வெற்றியை பெற்றது. பொலிவியா 2-வது தோல்வியை தழுவியது. சிலி அணி 3-வது போட்டியில் உருகுவேவை எதிர்கொள்கிறது.
சவுத்தம்டன்:
விராட் கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் நேற்று தொடங்குவதாக இருந்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முதல்முறையாக நடத்தும் இந்த போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் நாள் ஆட்டத்திலேயே மழை விளையாடி விட்டது. மழை காரணமாக ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த போட்டிக்கான விதிமுறைகள் குறித்து ஐ.சி.சி. ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்படும்போது மாற்று நாளில் போட்டியை நடத்தலாம் என்று தெரிவித்தது. 23-ந் தேதியை அதாவது 6-வது நாளை மாற்று நாளாக அறிவித்தது. இதுகுறித்து போட்டி நடுவர் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது.
முதல் நாளில் 6 மணி நேர இழப்பு ஏற்பட்டு விட்டதால் மாற்று நாளில் இந்த போட்டி நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் 6-வது நாளில் இந்த டெஸ்ட் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து போட்டி நடுவர் 5-வது நாள் ஆட்டத்தின்போதுதான் தனது முடிவை அறிவிப்பார்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது. வானிலை அறிவிப்புபடி அங்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
உலகின் 2-ம் நிலை டென்னிஸ் வீராங்கனையும், 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நவோமி ஒசாகா (ஜப்பான்) சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனில் முதலாவது சுற்றில் வெற்றி பெற்றதுடன் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். வழக்கமான செய்தியாளர் சந்திப்பு நடைமுறையை தவிர்த்ததால் அபராதத்திற்கு உள்ளான ஒசாகா, தான் மிகுந்த மன அழுத்தத்திற்கும், பதற்றத்திற்கும் உள்ளாகி இருப்பதாகவும், அதில் இருந்து மீள்வதற்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் அப்போது கூறினார்.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சுவீடன் வீரர் எமில்ஸ் போர்ஸ் பெர்க் கோலாக்கினார். இறுதியில், சுவீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாகியாவை வீழ்த்தியது.
இரவில் கிளாஸ்கோவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா அணி, செக் குடியரசை (டி பிரிவு) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. எனினும், செக் குடியரசு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
இன்று அதிகாலை நடந்த மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0 - 0 என சமனில் முடிந்தது. ஆனாலும் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுவாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.







