search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல் அடித்த மகிழ்ச்சியில் சுவீடன் வீரர்கள்
    X
    கோல் அடித்த மகிழ்ச்சியில் சுவீடன் வீரர்கள்

    யூரோ கோப்பை - சுலோவாகியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது சுவீடன்

    யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுவீடன், செக் குடியரசு மற்றும் இங்கிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
    செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்த ‘இ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் சுவீடன்-சுலோவாகியா அணிகள் சந்தித்தன.

    முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனிலையில் இருந்தது.

    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சுவீடன் வீரர் எமில்ஸ் போர்ஸ் பெர்க் கோலாக்கினார். இறுதியில், சுவீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாகியாவை வீழ்த்தியது.

    இரவில் கிளாஸ்கோவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா அணி, செக் குடியரசை (டி பிரிவு) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. எனினும், செக் குடியரசு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

    இன்று அதிகாலை நடந்த மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    இறுதியில், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0 - 0 என சமனில் முடிந்தது. ஆனாலும் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுவாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
    Next Story
    ×