என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச வீரர் மெஹிதி ஹசன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்,
    ஹராரே:

    வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடந்தது.
     
    வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. லித்தன் தாஸ் 95 ரன், கேப்டன் மொமினுல் 70 ரன் எடுத்து அவுட்டாகினர். மக்முதுல்லா 150 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், டிரிபானோ, நியுவாச்சி தலா  2 விக்கெட் வீழ்த்தினர். 

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டெய்லர் 81 ரன்னிலும், கைடனோ 87 ரன்னிலும் அவுட்டாகினர்

    வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். 

    192 ரன் முன்னிலை பெற்ற வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. வங்காளதேசம் ஒரு விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. ஷட்மன் இஸ்லாம் 115 ரன்னும், ஷன்டோ 117 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    4 விக்கெட் வீழ்த்திய தஸ்கின் அகமது

    இதையடுத்து, 477 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் பிரெண்டன் டெய்லர் அதிரடியாக ஆடி 73 பந்தில் 92 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
    நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டொனால்டு டிரிபனோ மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார், கடைசி கட்டத்தில் முசாராபானி 30 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார். இறுதியில், ஜிம்பாப்வே அணி 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

    இதன்மூலம் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்டில் வங்காளதேசம் 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன், தஸ்கின் அகமது தலா 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். ஆட்ட நாயகன் விருது மக்முதுல்லாவுக்கு வழங்கப்பட்டது.
    யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிச்சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி.
    லண்டன்:

    16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.

    இன்று அதிகாலை நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, இங்கிலாந்து அணியுடன் மோதியது.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. 

    கோல் அடித்த லூக் ஷா

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி ஒரு கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

    இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.
    இங்கிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங், பீல்டிங், பவுலிங்கில் கலக்கிய இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக ஷபாலி வர்மா 48 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 31 ரன்களும், தீப்தி ஷர்மா 24 ரன்களும் எடுத்தனர்.

    48 ரன்கள் எடுத்த ஷபாலி வர்மா

    இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் 8 விக்கெட்டுக்கு 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பியூமெண்ட் மட்டும் அரை சதமடித்து 59 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஹீதர் நைட் 30 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் பூனம் ஷர்மா 2 விக்கெட்டும், அருந்ததி ரெட்டி, தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 1-1 என தொடர் சமனிலை அடைந்துள்ளது.
    விம்பிள்டன் வெற்றியின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் மற்றும் நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரும் செர்பியாவைச் சேர்ந்தவருமான ஜோகோவிச் 7-ஆம் நிலை வீரரும் இத்தாலியை சேர்ந்தவருமான பெரேட்டினியும் மோதினர்.

    3 மணி நேரம் 23 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், ஜோகோவிச் 6-7,6-4,6-4 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் ஆகியவற்றை தொடர்ந்து விம்பிள்டனிலும் ஜோகோவிச் வாகை சூடியுள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், இன்சமாம் உல் ஹக் விமர்சனம் செய்துள்ளார்.
    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    மழைக்காரணாக ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் 248 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடியது. 41 ஓவரில் 195 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்-அவுட் ஆனது.

    பாகிஸ்தான் வீரர்கள் டி20 கிரிக்கெட் போட்டி போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள் என முன்னாள் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக் விமர்சனம் செய்துள்ளார்.

    பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் டி20 கிரிக்கெட்டில் விளையாட முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் மிகப்பெரிய ஷாட்ஸ் அடிக்கிறார்கள். ஸ்ட்ரைக் மாற்றி விளையாடவில்லை.

    151 பந்துகளில் ரன்கள் அடிக்கவில்லை. 50 ஓவர்கள் வரை நிலைத்து நிற்கவில்லை. பஹர் ஜமான் 50 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆகவே, பந்து வீச்சாளர் உங்கள் மீது நெருக்கடியை உண்டாக்குகிறார்.

    ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் நான்கு பந்துகளில் ரன்கள் அடிக்காமல், அடுத்த பந்தை தூக்கி அடிக்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் ஸ்ரைக் மாற்றி, சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் 150 அல்லது 190 ரன்கள் மட்டுமே அடிக்க முடியும்.

    ஷகீல் சரியான வகையில் ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டை விளையாடி கொண்டிருக்கிறார். அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடிக்கவில்லை. ஆனால், நெருக்கடியான நிலையில் ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணிக்கு இது சிறந்த விசயம். அவர் அதில் கவனம் செலுத்தி ஆதிக்கம் செய்ய முடியும். ஆனால், அவருடைய நம்பிக்கை, டெக்னிக் சிறப்பாக உள்ளது’’ என்றார்.
    டோக்கியோ ஒலிம்பிக் பங்கேற்கும் இந்திய வீரர்கள் ஜப்பான் செல்ல இருக்கும் நிலையில், அவர்களுடன் பிரதமர் மோடி உரையாட இருக்கிறார்.
    ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுடன் பயிற்சியாளர்கள், ஸ்டாஃப்கள் ஜப்பான் செல்ல இருக்கின்றனர்.

    வீரர்களின் முதல் குழு வருகிற 17-ந்தேதி டோக்கியோ புறப்பட்டு செல்ல இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 13-ந்தேதி இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். காணொலி காட்சி மூலம் நடைபெறும் உரையாடலில் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், துணை மந்திரி நிசித் பிரமாணிக், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

    டோக்கியோவில் வீரர்களுக்கான வசதிகள் குறித்து ஏற்கனவே பிரதமர் மோடி ஆய்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    125 வருட ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சார்பில் ஒரு பெண் பாய்மர படகு போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
    பவானி தேவி

    தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். டோக்கியோ ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டியில் பவானி தேவி பங்கேற்கிறார். 27 வயதான இவர் 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். 2010 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற 2010 இண்டர்நேஷனல் ஓபன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் வெண்கல பதக்கம் வென்றார். 2014 ஆண்டு நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பவானி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். வாள் வீச்சு போட்டியில் உலக அளவிலான தரவரிசை பட்டியலில் பவானி தேவி 42-வது இடத்தில் உள்ளார். வாள் வீச்சு பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியர் பவானி தேவி என்பது குறிப்பிடத்தக்கது.        
     
    125 வருட ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சார்பில் ஒரு பெண் பாய்மர படகு போட்டியில் பங்கேற்ற தேர்வாகியுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை 9 இந்தியர்கள் தான் பாய்மர போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண்கள்.

    இந்தியா சார்பில் பாய்மர படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆகும். சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

    23 வயதான நேத்ரா குமணம் 1997 ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்தார். ஆனால், 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாய்மர படகு போட்டி சங்கம் நடத்திய பயிற்சி வகுப்புகளில் இருந்து தனது 12 வயதில் நேத்ராவின் பயணம் தொடங்கியது.

    பாய்மர படகுப்போட்டி தவிர டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளிலும், பரதநாட்டியத்திலும் நேத்ரா கைதேர்ந்தவராக உள்ளது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் கல்வி பயின்றபோதே பாய்மர படகு போட்டியில் நேத்ரா இரண்டு முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

    நேத்ராவின் தம்பி நவீனும் பாய்மர படகு போட்டி வீரராக உள்ளார். தனது சகோதரனுக்கு பயிற்சி அளித்து தேசிய அளவிலான வீரராக நேத்ரா உருவாக்கியுள்ளார். ஓமன் நாட்டில் நடைபெற்ற முசானா பாய்மர படகு போட்டியில் லேசர் டேடியல் பிரிவில் பங்கேற்ற நேத்ரா 2-வது இடத்தை கைப்பற்றினார்.

    இந்த வெற்றிதான் நேத்ராவுக்கு ஒலிம்பிக் வரை கொண்டு சென்றுள்ளது. ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ம் தேதி தொடங்குகிறது. நேத்ராவின் பாய்மர படகு போட்டி ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது.

    மேலும், ஒரு சாதனை என்னவென்றால் இந்தியாவில் இருந்து பாய்மர படகு போட்டியில் 3 பிரிவுகளிலும் பங்கேற்கும் முதல் வீராங்கணை ஆவார். லேசர் ரேடியல், லேசர் ஸ்டேண்டர், 49 இ ஆர் என மூன்று விதமான போட்டிகளிலும் நேத்ரா பங்கேற்கிறார்.

    அதேபோல், 2020 ஜனவரியில் மியாமியில் நடைபெற்ற ஹெம்பல் உலக கோப்பை போட்டியின் மூலம் நேத்ரா உலக அளவில் புகழ்பெற்றார். அந்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நேத்ரா இந்தியாவிலும் பாய்மர படகு போட்டியாளர்கள் இருக்கிறோம் என்று கூறினார்.

    பின்னர் ஸ்பெயின் நாட்டிலேயே தங்கி ஹங்கேரி நாட்டின் வீரர் தாமஸ் இடம் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார். இவரிடம் பயிற்சிக்கு சென்ற பின்னர் நேத்ராவின் விளையாட்டு யுக்திகள் வெகுவாக மாறியுள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர்.

    விஷ்ணு சரவணன்

    விஷ்ணு சரவணன்

    தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்ணு சரவணன் ராணுவ வீரர் ஆவார். இவர் பாய்மர படகுப்போட்டியில் லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு யூத் தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹாங்காங் சீரிஸ் போட்டியில் விஷ்ணு சரவணன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக படகுப்போட்டியில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான லேசர் யூத் பிரிவில் விஷ்ணு சரவணன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.  

    கே.சி. கணபதி

    கேசி கணபதி தமிழ்நாட்டை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த கணபதி 1995 நவம்பர் 18-ம் தேதி பிறந்தார். 25 வயதான கணபதி ஆண்கள் இரட்டையர் ஸ்கீப் 49இஆர் படகுப்போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். கேசி கணபதிக்கு ஜோடியாக வருண் தாக்கரும் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். கேசி.கணபதி மற்றும் வருண் தாக்கர் ஜோடி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் ஸ்கீப் 49இ ஆர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.

    வருண் தக்கர்

    வருண் தக்கர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இரட்டையர் ஸ்கீப் 49இஆர் படகுப்போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். கேசி கணபதிக்கு ஜோடியாக வருண் தாக்கர் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். கேசி.கணபதி மற்றும் வருண் தாக்கர் ஜோடி 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் ஸ்கீப் 49இ ஆர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர். 

    சரத்கமல்

    சரத்கமல் தமிழ்நாட்டை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த சரத் 1982 ஆம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிறந்தார். இவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இவர் பங்கேற்கிறார். இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஒற்றையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் சரத்கமல் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சரத்கமல் தங்கம் வென்றார்.  
     
    சத்தியன் குணசேகரன்

    சென்னையை சேர்ந்த சத்தியன் குணசேகரன் 1993 ஜனவரி 8-ம் தேதி பிறந்தார். 28 வயதனான சத்தியன் குணசேகரன் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 2016, 2017 ஆண்டுகளில் நடைபெற்ற சர்வதேச டேபிள் பெடரேஷன் சேலஞ் போட்டிகளில் சத்தியன் குணசேகரன் தங்கம் (மொத்தம் 2) வென்றார். 2018 காமன்வெல்த் போட்டியில் சத்தியன் தங்கம் வென்றார். 

    இளவேனில் வாலறிவன்

    இளவேனில் வாலறிவன் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் பிறந்தார். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்த இவர் தனது இரண்டாவது வயதில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதிக்கு குடி பெயர்ந்தார். இவர் 2012 ஆம் ஆண்டு தனது 12-வது வயதில் முதல் முறையாக துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். டோக்கியோ ஒலிம்பிக்கின் துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் இளவேனில் பங்கேற்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச்சூடுதல் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.    

    ஆரோக்கிய ராஜீவ்

    ஆரோக்கிய ராஜீவ் தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவர். இவர் 1999 மே 22-ம் தேதி பிறந்தார். 30 வயதான ராஜீவ்  ஒலிம்பிக்கில் ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 2017 ஆசியன் சாம்பியன்ஷிப் மற்றும் 2018 ஆசியன் விளையாட்டில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் ஆரோக்கிய ராஜீவ் உடன் அமோஜ் ஜேக்கப், முகமது அனாஸ் யாஹியா, நோஹா நிர்மல் டாம்  ஆகியோர் பங்கேற்கின்றனர்.      
    17 வயதில் அர்ஜென்டினா அணிக்காக ஆடத் தொடங்கிய மெஸ்சியால் தனது 34-வது வயதில் தான் முக்கிய கோப்பயையை வெல்ல முடிந்தது.

    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த அவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

    பார்சிலோனா கிளப்பை பல போட்டிகளில் வெற்றி பெறச்செய்து பட்டங்களை கைப்பற்றி மெஸ்சி சாதித்தார். உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பலமுறை கைப்பற்றிய அவரால் தனது நாட்டுக்காக முக்கிய போட்டிகளில் கோப்பை எதையும் பெற்றுக்கொடுக்க முடியாதது ஏக்கமாகவே இருந்தது. 

    மெஸ்சி ஆடிய கோபா அமெரிக்க கோப்பை இறுதிப் போட்டியில் 3 முறை அர்ஜென்டினா தோல்வியை தழுவியது. 2007-ல் பிரேசிலிடம் 0-3 என்ற கோல் கணக்கிலும், 2015 மற்றும் 2016-ல் பெனால்டி ஷூட்டில் சிலியிடமும் தோற்று கோப்பையை இழந்தது.

    2014 உலக கோப்பை இறுதிப்போட்டியில் அவரது தலைமையிலான அணி ஜெர்மனியிடம் தோற்றது. இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தது. 
    இந்த நிலையில் தான் மெஸ்சி தனது நாட்டுக்காக கோபா அமெரிக்க கோப்பையை பெற்றுக்கொடுத்து சாதித்துள்ளார். அர்ஜென்டினாவுக்காக முதல்முறையாக கோப்பையை பெற்றுக் கொடுத்ததால் அவரது கனவு நனவானது. 

    இதனால் அவர் போட்டி முடிவின் போது ஆனந்த கண்ணீர் வடித்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா கோபா அமெரிக்க கோப்பையை வெல்ல காரணமாக இருந்த கேப்டன் மெஸ்சியை சக வீரர்கள் அனைவரும் தூக்கி  மகிழ்ந்து வெற்றியை கொண்டாடினார்கள்.
     
    இந்த போட்டித்தொடரில் சிறந்த வீரர் விருதையும், அதிக கோல் அடித்த வீரர் விருதையும் மெஸ்சி கைப்பற்றினார். அவரும், கொலம்பிய வீரர் லூயிஸ் டியாசும் தலா 4 கோல் அடித்துள்ளனர். மேலும் மெஸ்சி அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடிக்க உதவியுள்ளார்.

    17 வயதில் அர்ஜென்டினா அணிக்காக ஆடத் தொடங்கிய மெஸ்சியால் தனது 34-வது வயதில் தான் முக்கிய கோப்பயையை வெல்ல முடிந்தது. அவரது 6 வயதில் அர்ஜென்டினா கால்பந்தில் முக்கிய பட்டத்தை கைப்பற்றியது. அதன்பிறகு அர்ஜென்டினாவில் தற்போதுதான் சாதிக்க முடிந்துள்ளது. 

    இந்த போட்டி முதலில் அர்ஜென்டினாவில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக பிரேசிலுக்கு மாற்றப்பட்டது. இறுதிப்போட்டிக்கு மட்டும் குறைந்த அளவில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதால் அர்ஜென்டினா வீரர்கள் குதூகலம் அடைந்தனர். மைதானத்தில் அவர்கள் தங்களது வெற்றியை மிகவும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

    தென்அமெரிக்க கண்டத்தை பொறுத்தவரை கால்பந்தில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் பரம்பரை எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ் கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
    லண்டன்:

    கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 6-7 (4-7), 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ் கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

    ஆஸ்லே பார்டி

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இதில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஏழாவது வரிசையில் உள்ள பெரேட்டினி (இத்தாலி) மோதுகிறார்கள்.

    ஜோகோவிச் இதுவரை 19 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று 2-வது இடத்தில் உள்ளார். இன்று வெற்றி பெற்றால் அதிக கிரண்ட்சிலாம் வென்று அதாவது 20 பட்டத்தை கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) சாதனையை சமன் செய்வார்.

    அவர் புதிய சாதனையை படைப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை 5 முறை கைப்பற்றி இருக்கிறார்.

    கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர்.

    கால்பந்தின் ஜாம்பவான் மரடோனா. அவரது தலைமையில் அர்ஜென் டினா 1986&ல் உலக கோப்பையை கைப்பற்றியது. மரடோனா வழியில் தான் மெஸ்சி உலகின் சிறந்த கால் பந்து வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். 

    கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா

    இந்த நிலையில் கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்-நடிகை கீதா பாஸ்ரா தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதால் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரார் ஹர்பஜன் சிங். கடந்த 1998-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது அறிமுகமான ஹர்பஜன்சிங், தொடர்ந்து இந்தியாவிற்காக டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 20-20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    சிறந்த சுழற்பந்து வீச்சாளராகத் திகழும் ஹர்பஜன்சிங் டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளையும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 269 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.
     
    பிரபல பாலிவுட் நடிகையான கீதா பஸ்ராவை திருமணம் செய்துகொண்டார். தற்போது திரைத்துறையின் பக்கம் கவனத்தை செலுத்தி வரும் ஹர்பஜன்சிங், தமிழில் டிக்கிலோனா மற்றும் பிரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவீட் செய்து தமிழக ரசிகர்களின் கவனத்தையும் ஹர்பஜன் சிங் ஈர்த்து வருகிறார் 

    இந்நிலையில் ஹர்பஜன்சிங்-நடிகை கீதா பாஸ்ரா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இதனை ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும்நிலையில், தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதால் ஹர்பஜன் சிங்- கீதா பஸ்ரா தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது டி20 போட்டி இன்று காலை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹெட்மயர் 61 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹசில்வுட், மிட்செல் மார்ஸ், அகர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் ஓவரின் 2 பந்திலேயே முதல் விக்கெட்டை விட்டு கொடுத்தது.

    முதலில் இருந்து திணறிய ஆஸ்திரேலியா அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 101 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 113 ரன்கள் எடுப்பதற்குள் அடுத்த 3 விக்கெட்டுகளை இழந்தது. 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஹெட்மயர் தேர்வு செய்யப்பட்டார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வால்ஷ் 3 விக்கெட், காட்ரெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    ×