என் மலர்
விளையாட்டு
விம்பிள்டன் டென்னிஸில் இரண்டு ஆட்டங்களின் முடிவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால், சூதாட்டம் நடந்திருக்க வாய்ப்பு என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டி லண்டனில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டியும் (ஆஸ்திரேலியா) பட்டம் வென்றனர்.
இதற்கிடையே விம்பிள்டன் போட்டியின் இரண்டு ஆட்டங்களில் சூதாட்டம் (மேட்ச் பிக்சிங்) நடந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த இரண்டு ஆட்டங்களிலும் மிகப்பெரிய அளவில் பெட்டிங் நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒற்றையர் போட்டியில் ஜெர்மனி வீரர் விளையாடிய முதல் சுற்று ஆட்டத்திலும், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றிலும் முடிவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது.
இதனால் இந்த இரண்டு ஆட்டங்களிலும் சூதாட்டம் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு அமைப்பு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.
தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
டப்ளின்:
தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஆன்ட்ரூ பால்பிர்னி சிறப்பாக ஆடி சதமடித்து 102 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹாரி டெக்டார் 79 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிராம் பொறுப்புடன் ஆடி 84 ரன்கள் எடுத்தார். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வான் டெர் டுசன் 49 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைக்கவில்லை.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 48.3 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் அயர்லாந்து அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என அயர்லாந்து முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது ஆன்ட்ரூ பால்பிர்னிக்கு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி போட்டி 16-ம் தேதி நடக்கிறது.
இதையும் படியுங்கள்... பாபர் அசாம் சதம் வீண் - பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து
பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் வின்ஸ், லூயிஸ் கிரிகோரி ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தனர்.
பிர்மிங்காம்:
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் வென்று இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கான மூன்றாவது ஒருநாள் போட்டி பிர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி 158 ரன்கள் எடுத்தார்.
தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 56 ரன்களும், விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 74 ரன்களும் சேர்த்தனர்.

இங்கிலாந்து சார்பில் பிரிடன் கார்ஸ் 5 விக்கெட்டும், சாஹிப் மகமுது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. ஆறுதல் வெற்றி பெறலாம் என நினைத்த பாகிஸ்தானுக்கு ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டம் சோதனையாக அமைந்தது. அவருக்கு லூயிஸ் கிரிகோரி நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இதனால் இங்கிலாந்து அணி 48 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜேம்ஸ் வின்ஸ் 102 ரன்னும், கிரிகோரி 77 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராப் 4 விக்கெட்டும், ஷதாப் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது ஜேம்ஸ் வின்சுக்கும், தொடர் நாயகன் விருது சாகிப் மக்முதுக்கும் வழங்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் உள்பட பல்வேறு வீரர், வீராங்கனைகள் விலகியுள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டித் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பல்வேறு வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கப் போவது இல்லை என அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பெடரர் கூறுகையில், முழங்கால் காயத்தால் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுகிறேன். ஒலிம்பிக் தொடரில் இருந்து விலகுவது தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் அதிரடியாக ஆடி தனது அணியை வெற்றி பெறச் செய்தார்.
செயிண்ட் லூசியா:
வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. ஹென்ரிக்ஸ் 33 ரன்னும், பின்ச் 30 ரன்னும், டர்னர் 24 ரன்னும், வேட் 23 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய கிறிஸ் கெயில் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 7 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிகோலஸ் பூரன் பொறுப்புடன் ஆடி 32 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியுள்ளது. ஆட்ட நாயகன் விருது கிறிஸ் கெயிலுக்கு வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன், டோக்கியோ செல்கிறார் என்று அவரது அலுவலகம் அதிகாரிப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜப்பான் டோக்கியோ நகரில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க தகுதி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டோக்கியோ செல்ல தயாராகி வருகின்றனர்.
ஜூலை 23-ந்தேதி தொடக்க விழா நடைபெறும். இந்த விழாவில் வீரர்- வீராங்கனைகள் தங்களுடைய நாட்டின் கொடிகளை ஏந்தி அணிவகுத்துச் செல்வார்கள். முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவியியும், அமெரிக்காவின் முதல் பெண்மணி என அழைக்கப்படுபவருமான ஜில் பைடன், டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் செல்வார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாரிஸில் உங்களுடைய சாதனைக்குப் பிறகு, நாடே உங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது என்று பாரத பிரதமர் மோடி, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியை புகழ்ந்து பேசினார்.
ஜப்பான் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக 100-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் ஜப்பான் செல்கின்றனர். வருகிற 17-ந்தேதியில் இருந்து இந்தியாவில் இருந்து புறப்பட்டுச் செல்வார்கள்.
இந்த நிலையில் இன்று வீரர்- வீராங்கனைகளுடன் பாரத பிரதமர் மோடி உரையாடினார். அப்போது வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியிடம் பிரதமர் மோடி ‘‘பாரிஸில் உங்களுடைய சாதனைக்குப் பிறகு, நாடே உங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உள்ளீர்கள். உங்களுடைய பயணம் சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.
தீபிகா குமாரி ‘‘தொடக்கத்தில் இருந்து எனது பயணம் சிறப்பாக சிறப்பாக உள்ளது. மூங்கிலில் அம்பு செய்து தொடங்கினேன். அதன்பின் படிப்படியாக நவீன அம்புக்கு மாறினேன்’’ என்றார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில் ‘‘இங்குள்ள பயிற்சியாளர் ஸ்டாஃப்கள், சப்போர்ட் ஸ்டாப்ஃகள் உள்ள அதிகாரிகளுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நமது வீரர்களுடன் அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். வீரர்களுக்கு உதவி செய்வதில் இருந்து ஒருபோதும் அரசு தவறாது. சிறப்பு திட்டம் உள்பட பல உதவிகள் செய்துள்ளோம்’’ என்றார்.
கிரிக்கெட்டிற்குப் பிறகு வர்ணனையாளர், தேர்வுக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் வகித்த முன்னாள் வீரர் யஷ்பால் சர்மா இன்று காலமானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யஷ்பால் சர்மா. பஞ்சாப்பை சேர்ந்த இவர் டெல்லியில் வசித்து வந்தார். இந்த நிலையில் 66 வயதான யஷ்பால் சர்மா திடீர் மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான யஷ்பால் சர்மா 1978-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். 37 டெஸ்டில் விளையாடி 1606 ரன்களும், 42 ஒருநாள் போட்டியில் விளையாடி 883 ரன்களும் எடுத்துள்ளார்.
1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் யஷ்பால் சர்மா இடம்பெற்று இருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 61 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 89 ரன்கள் எடுத்தார். இவர் அந்த உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த 2-வது இந்திய வீரர் ஆவார். யஷ்பால் சர்மா முதல் தர போட்டியில் 21 சதம், 46 அரை சதம் உள்பட 8933 ரன் எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் பயிற்சியாளர், வர்ணனையாளர், நிர்வாகம் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.
இந்திய அணியை தேர்வு செய்யும் தேர்வு குழுவில் 2 முறை இடம்பெற்று இருந்தார். 2004 முதல் 2005 வரையிலும், 2008 முதல் 2011 வரையிலும் தேர்வு குழு உறுப்பினராக யஷ்பால் சர்மா பணியாற்றினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் தகுதி பெற்றுள்ளார்.
ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம்
எம்.பி. ஜபீர்
கேரளாவை சேர்ந்த எம்.பி. ஜபீர் 1996 ஜூன் 8-ம் தேதி பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டம் பிரிவில் பங்கேற்கிறார். 400 மீட்டர் தடை ஓட்டம் ஆண்கள் பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் எம்.பி. ஜபீர் ஆவார். 25 வயதான ஜபீர் இந்திய கடற்படையில் பணியாற்றியுள்ளார். 2017 மற்றும் 2019 ஆண்டு நடைபெற்ற ஆசியன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டம் பிரிவில் ஜபீர் 2 முறை வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்கள் 4x400 மீ தொடர் ஓட்டம்
முகமது அனாஸ் யாஹியா
கேரளாவை சேர்ந்த முகமது அனாஸ் யாஹியா 1994 செப்டம்பர் 17-ல் பிறந்தார். 26 வயதான முகமது அனாஸ் யாஹியா ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் அனாஸ் 3 வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 400 மீட்டர் ஓட்டம், 4x400 மீட்டர் ஆண்கள் தொடர் ஓட்டம், 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டம் ஆகிய மூன்று பிரிவுகளில் வெற்றிபெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் முகமது அனாஸ் யாஹியாவுடன் இணைந்து நோஹா நிர்மல் டாம், அமோஜ் ஜேக்கப் மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர்
பங்கேற்கின்றனர்.
நோஹா நிர்மல் டாம்
நோஹா நிர்மல் டாம் கேரளாவை சேர்ந்தவர். இவர் 1994 நவம்பர் 13 ஆம் தேதி பிறந்தார். 26 வயதான நோஹா நிர்மல் டாம் ஒலிம்பிக்கில் ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் பங்கேற்கிறார். இவருடன் முகமது அனாஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப் மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
அமோஜ் ஜேக்கப்
அமோஜ் ஜேக்கப் 1998 மே 2 ஆம் தேதி பிறந்தார். 23 வயதான ஜேக்கப் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் 4x400 மீட்டர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். டெல்லியை சேர்ந்த ஜேக்கப் ஒலிம்பிக்கில் ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் பங்கேற்கிறார். இவருடன் முகமது அனாஸ் யாஹியா, நோஹா நிர்மல் டாம் மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஆரோக்கிய ராஜீவ்
ஆரோக்கிய ராஜீவ் தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவர். இவர் 1999 மே 22-ம் தேதி பிறந்தார். 30 வயதான ராஜீவ் ஒலிம்பிக்கில் ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 2017 ஆசியன் சாம்பியன்ஷிப் மற்றும் 2018 ஆசியன் விளையாட்டில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் ஆரோக்கிய ராஜீவ் உடன் அமோஜ் ஜேக்கப், முகமது அனாஸ் யாஹியா, நோஹா நிர்மல் டாம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் 20 கிலோ மீட்டர் நடை ஓட்டம்
ராகுல் ரோஹிலா
ராகுல் ரோஹிலா அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 24 வயதான ராகுல் ரோஹிலா தேசிய ஓபன் நடை ஓட்டம் (20 கிலோ மீட்டர்) போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். தேசிய ஓபன் நடை ஓட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்ததன் மூலம் ராகுல் ரோஹிலா டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் 20 கிலோ மீட்டர் நடை ஓட்டம் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஜூன் மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் நியூசிலாந்தின் டேவன் கான்வே மற்றும் கைல் ஜாமிசன், தென் ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக் இடம் பெற்றனர்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஐ.சி.சி.யால் பரிந்துரை செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் பட்டியலில் இருந்து தலா ஒருவர் ரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி.யின் வாக்கு அகாடமியின் வாக்கெடுப்பு மூலம் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கிடையே, கடந்த மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்து இருந்த நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன், தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முந்தைய மாதத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அறிமுக டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததுடன், அதனை அடுத்து நடந்த 2 டெஸ்டுகளில் இரண்டு அரைசதம் அடித்ததன் மூலம் அவருக்கு இந்த விருது கிட்டி இருக்கிறது.
சிறந்த வீராங்கனை விருதுக்கு இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு வீராங்கனை சோபி எக்லெஸ்டோன் தேர்வாகி இருக்கிறார். கடந்த மாதம் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு டெஸ்டில் 8 விக்கெட்டுகள் மற்றும் அதனை தொடர்ந்து நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது, 2-வது ஒரு நாள் போட்டியில் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அவர் இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா, சினே ராணா ஆகியோரை முந்தி இந்த விருதை பெறுகிறார்.
கொரோனா அச்சுறுத்தலால் டோக்கியோ ஒலிம்பிக்கில் ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் உள்பட பலர் விலகியுள்ளனர்.
கனடா:
ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23-ம் தேதி ஜப்பானில் தொடங்குகிறது. டோக்கியோவில் நடக்கும் இந்த ஒலிம்பிக்கிற்காக உலகம் முழுதும் உள்ள தடகள வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் பல வீரர், வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து பிரபல டென்னிஸ் வீராங்கனை கனடாவை சேர்ந்த பியான்கா ஆன்ட்ரீஸ்கு விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில், இந்த கோடையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்காதது மிகவும் கடினமான முடிவு. நான் சிறுமியாக இருந்தபோதே ஒலிம்பிக்கில் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என் கனவாக இருந்தது. ஆனால் தொற்றுநோயுடன் தொடர்புடைய அனைத்து சவால்களும் என் இதயத்தில் ஆழமாக இருப்பதை நான் அறிவேன். இது எனக்கு நானே எடுக்கும் சரியான முடிவு. எதிர்கால ஃபெட் கோப்பை போட்டிகளில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தவும், பாரிசில் நடைபெறும் 2024 ஒலிம்பிக்கில் போட்டியிடுவதையும் நான் எதிர்நோக்கி உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான ஜோகோவிச் 6-7 (4-7), 6-4, 6-4,6-3 என்ற செட் கணக்கில் 7-வது வரிசையில் உள்ள பெரிட்டினியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்தது.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. இதில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான ஜோகோவிச் (செர்பியா) 6--7 (4--7), 6--4, 6--4,6-3 என்ற செட் கணக்கில் 7-வது வரிசையில் உள்ள பெரிட்டினியை (இத்தாலி) வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
இதன் மூலம் ஜோகோவிச் புதிய சாதனை படைத்தார். 34 வயதான அவர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். தற்போது இந்த 3 வீரர்களும் 20 கிராண்ட்சிலாம் பட்டத்தோடு முதல் இடத்தில் உள்ளனர்.
ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை 6-வது முறையாக கைப்பற்றியுள்ளார். விம்பிள்டனை அதிக தடவை வென்ற வீரர்களில் அவர் தற்போது 4-வது இடத்தில் உள்ளார். ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரெஞ்ச் ஓபனை 2 தடவையும், அமெரிக்க ஓபனை 3 முறையும் வென்றுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை நடந்த 3 கிராண்ட்சிலாம் பட்டத்தையும் அவர்தான் கைப்பற்றினார். இதே மாதிரி 2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் ஜோகோவிச் 3 கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று இருந்தார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாமான அமெரிக்க ஓபன் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 12 வரை நியூயார்க்கில் நடக்கிறது.






