என் மலர்
விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படுதோல்வி அடைந்த நிலையில், இன்று ஸ்பெயின் அணியை 3-0 என வீழ்த்தி இந்திய ஆண்கள் அணி 2-வது வெற்றியை பெற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொண்டது.
ஆட்டம் தொடங்கியதில் இருந்து இந்திய வீரர்கள் ஆக்ரோசமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த நிமிடத்தில் ருபிந்தர்பால் சிங் கோல் அடித்தார். இதனால் முதல் கால்பகுதி ஆட்டத்தில் இந்தியா 2-0 என முதலிடம் முன்னிலை பெற்றது.
2-வது மற்றும் 3-வது காலிறுதி பகுதி ஆட்டங்களில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 4-வது காலிறுதி ஆட்டத்தில் ருபிந்தர் பால் சிங் (51) மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-0 என ஸ்பெயினை வீழ்த்தியது.
இந்திய ஹாக்கி அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்திய அணி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டி இன்று காலை நடைபெற்றது.
இந்தியா சார்பில் மானு பாகெர், சவுரப் சவுத்ரி கலந்து கொண்டனர்.
முதல் சுற்றில் இந்த ஜோடி வென்றது.
இந்நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு பாகெர், சவுரப் சவுத்ரி ஜோடி 2-வது சுற்றில் தோல்வி அடைந்து இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்தியாவின் யஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா ஜோடி தோல்வி அடைந்தது.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.
இந்தியா சார்பில் மானு பாகெர், சவுரப் சவுத்ரி மற்றும் யஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் மானு பாகெர் - சவுரப் சவுத்ரி ஜோடி அபாரமாக ஆடி 582 புள்ளிகள் பெற்றது. இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு கலப்பு இரட்டையர் பிரிவில் யஷாஸ்வினி தேஸ்வால் - அபிஷேக் வர்மா ஜோடி தோல்வி அடைந்தது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.
கொழும்பு:
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டத்தில் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் 164 ரன்கள் சேர்த்த இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் (50 ரன்), கேப்டன் ஷிகர் தவான் (46 ரன்) ஆகியோரின் பேட்டிங் நேர்த்தியாக இருந்தது. இதே போல் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தி கலக்கினார். ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங் இந்த தொடரில் பெரிய அளவில் இல்லை. அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும்.
தொடக்க வீரர் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் அவர்கள் விரைவில் இங்கிலாந்துக்கு கிளம்ப இருக்கிறார்கள். எனவே இன்றைய ஆட்டத்தில் விளையாடி விட்டு கடைசி ஆட்டத்தில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்து வீச்சை பொறுத்தவரை 20 ஓவர் உலக கோப்பை அணிக்கான இடத்துக்கு குறி வைத்துள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதில் தீவிரம் காட்டுவார்கள்.

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியில் அனுபவ வீரர்கள் குறைவு. தொடக்க ஆட்டத்தில் கடைசி 15 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 126 ரன்னில் சுருண்டது. சாரித் அசலங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ தவிர அந்த அணியில் மற்றவர்களின் பேட்டிங் எடுபடவில்லை. ஏற்கனவே ஒரு நாள் தொடரை பறிகொடுத்துவிட்ட இலங்கை அணி 20 ஓவர் தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். டாப்-3 பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் நிலைத்து ஆடினால் இந்தியாவுக்கு சவால் அளிக்கலாம். இல்லாவிட்டால் திண்டாட்டம் தான்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: பிரித்வி ஷா, தவான் (கேப்டன்), சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், குருணல் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி.
இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, அசலங்கா அல்லது சமரவிக்ரமா, அஷென் பண்டாரா, ஷனகா, (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, உதனா, சமீரா, அகிலா தனஞ்ஜெயா.
இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெல்லை அணியின் பாபா அபராஜித் சிறப்பாக பந்து வீசி 1.5 ஓவரில் 9 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
சென்னை:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த நெல்லை அணி 19.5 ஓவரில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் சூர்யபிரகாஷ் 43 ரன்னும், அர்ஜுன் மூர்த்தி 35 ரன்னும் எடுத்தனர்.
திருப்பூர் அணி சார்பில் ராஜ்குமார், மொகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சித்தார்த் 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மான் பாப்னா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். முதலில் நிதானமாக ஆடிய மான் பாப்னா கடைசியில் அதிரடியில் மிரட்டினார்.
இறுதியில், திருப்பூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மான் பாப்னா 51 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஒலிம்பிக் ஹாக்கி லீக் ஆட்டத்தில் ஜெர்மனி மகளிர் அணி இந்திய அணியின் கோல் முயற்சியை தொடர்ந்து முறியடித்தது.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்திய பெண்கள் ஹாக்கி அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் 5-1 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்திருந்தது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்திய பெண்கள் ஹாக்கி அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் 5-1 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்திருந்தது.
இந்நிலையில், 2வது லீக் ஆட்டத்தில் இன்று ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி அணி முதல் பாதியில் ஒரு கோல் அடித்தது. இந்திய அணியின் கோல் முயற்சியையும் தொடர்ந்து முறியடித்தது.
2வது பாதியில் ஜெர்மனி மேலும் ஒரு கோல் அடித்து, 2-0 என வெற்றி பெற்றது. கேப்டன் லாரன்ஸ் நைக், ஸ்கார்டர் ஆன் கேத்ரினா ஆகியோர் கோல் அடித்தனர். இந்தியா அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டியில் ரஷியா தங்கப் பதக்கம் வென்றது.
டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில் அணிகள் பிரிவில் நிகிதா நகோர்னி தலைமையிலான ரஷிய அணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதன் மூலம் 1996-க்கு பிறகு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
முதல் இடத்தை பிடித்த ரஷியா 262.500 புள்ளிகள் பெற்றிருந்தது. இரண்டாவதாக ஜப்பான் 262.397 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றது. 261.397 புள்ளிகள் பெற்ற சீனாவுக்கு வெண்கலம் வென்றது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நெல்லை அணிக்கெதிராக திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் திருப்பூர் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
திருப்பூர் அணி வீரர்கள்:-
சித்தார்த், முகமது ஆசிக், அரவிந்த், மான் பஃனா, பிரான்சிஸ், துஸ்கர், முகமது, ராஜ்குமார், அஸ்வின், மோகன் பிரசாத், கெளவுதம் தாமரை கண்ணன்.
நெல்லை அணி வீரர்கள்;-
பாபா அப்ரஜித், சூர்ய பிரகாஷ், பிரதோஷ் ரஞ்சன், பாபா இந்திரஜித், சஞ்சய் யாதவ், ஹரிஸ், மோகன் அபினவ், அர்ஜூன் மூர்த்தி, சரண் குமார், அஜித் குமார், அதிசயராஜ் டேவிட்சன்

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 55 கிலோ பளுதூக்குதல் போட்டியில் கஜகஸ்தான் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 55 கிலோ பளுதூக்குதல் போட்டியில் பிலிப்பைன் தங்கப் பதக்கம் வென்றது.
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 55 கிலோ பளுதூக்குதல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில், மொத்தம் 9 பேர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில், பிலிப்பைன் நாட்டை சேர்ந்தவர் 224 கிலோ எடையைத் தூக்கி தங்க பதக்கத்தை வென்றது மட்டுமல்லாமல், ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார். சீனாவைச் சேர்ந்தவர் 223 கிலோ எடையைத் தூக்கி இரண்டாவது பிடித்து வெள்ளி வென்றார் . கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் 213 கிலோ எடையைத் தூக்கி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலத்தை வென்றுள்ளார்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் அரசு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்க உள்ளது.
இம்பால்:

இந்நிலையில், ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு காவல் துறையில் ஏ.எஸ்.பி. பதவி வழங்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு, பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
ஒலிம்பிக் பதக்கத்துடன் ஜப்பானில் இருந்து இன்று நாடு திரும்பிய மீராபாய்க்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு காவல் துறையில் ஏ.எஸ்.பி. பதவி வழங்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
மீராபாய் சானுவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்க மாநில அரசு முடிவு செய்திருப்பதாக முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஆண்கள் கலப்பு டைவிங் போட்டியில் பிரிட்டன் தங்க பதக்கம்
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
புதுடெல்லி:
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், ஜப்பானில் இருந்து புறப்பட்ட மீராபாய் சானு இன்று டெல்லி வந்து சேர்ந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அவருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஆட்டத்திலேயே நேர்த்தியாக பந்து வீசினார் என இந்திய அணியின் கேப்டன் தவான் கூறியுள்ளார்.
கொழும்பு:
இலங்கைக்கு எதிரான முதல் 20 ஒவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த இந்தப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது.
சூர்யகுமார் யாதவ் 34 பந்தில் 50 ரன்னும் (5பவுண்டரி, 2சிக்சர்), கேப்டன் ஷிகர் தவான் 36 பந்தில் 46 ரன்னும் (4 பவுண்டரி, 1சிக்சர்) எடுத்தனர். சமீரா, ஹசரன்கா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய இலங்கை 18.3 ஓவர்களில் 126 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 38 ரன்னில் அபார வெற்றி பெற்றது. அசலன்கா அதிகபட்சமாக 26 பந்தில் 44 ரன் ( 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். புவனேஸ்வர் குமார் 22 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சாஹர் 2 விக்கெட்டும், குர்ணால் பாண்ட்யா, வருண் சக்கரவர்த்தி, சாஹல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் தவான் கூறியதாவது:-
10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டதாக முதலில் கருதினேன். பின்னர் ஆடுகளத்தை கணித்து பார்த்த போது இது நல்ல ஸ்கோர் என்பதை உணர்ந்தேன்.
புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது. வருண் தனது முதல் ஆட்டத்திலேயே நேர்த்தியாக பந்து வீசினார். சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. பிரித்விஷா சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர் அடுத்த ஆட்டத்தில் நல்ல நிலைக்கு திரும்புவார்.
இவ்வாறு தவான் கூறி உள்ளார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது.