என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஒலிம்பிக் ஹாக்கி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி இந்திய அணியின் கோல் முயற்சியை தொடர்ந்து முறியடித்தது.
    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய பெண்கள் ஹாக்கி அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் 5-1 என்ற கோல்கணக்கிலும், ஜெர்மனியிடம் 2-0 என்ற கோல் கணக்கிலும் தோல்வி அடைந்தது.
     
    இந்நிலையில், 3-வது லீக் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இப்போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி முதல் கால்பகுதியில் ஒரு கோல் அடித்தது. இந்திய அணியின் கோல் முயற்சியையும் தொடர்ந்து முறியடித்தது.

    2வது கால்பகுதியில் இங்கிலாந்தும், இந்தியாவும் ஒரு கோல் அடித்தது. இதனால் 2-1 என இருந்தது. 3வது கால்பகுதியில் இங்கிலாந்து மேலும் ஒரு கோல் அடித்து 3-1 என முன்னிலை பெற்றது. 4வது கால்பகுதியில் இங்கிலாந்து மேலும் ஒரு கோல் அடித்தது. இறுதியில் இங்கிலாந்து 4-1 என்ற கணக்கில் இந்தியாவை வென்றது. 

    இந்தியா அடுத்தடுத்து 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.
    டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராஜகோபால் 45 ரன்னும், மொகமது கான் 26 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த் 26 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    விக்கெட் வீழ்த்திய பொய்யாமொழி

    மோகித் ஹரிஹரன் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மோகித் ஹரிஹரன் 41 ரன்னும், சுவாமிநாதன் 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
    146 ரன்கள் என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி விளையாடி வருகிறது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 11வது ஆட்டத்தில்  திருச்சி வாரியர்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.

    பேட்டிங்கை தேர்வு செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிதீஷ் ராஜகோபால் 45 ரன்கள் எடுத்தார். முகமத் கான் 26 ரன்களும் சுமத் ஜெயின் 22 ரன்களும் எடுத்துள்ளார்கள்.

    இதை அடுத்து 146 ரன்கள் என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணிக்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 11வது ஆட்டத்தில்  திருச்சி வாரியர்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. 

    திருச்சி அணி: அமித் சாத்விக், சுமந்த் ஜெயின், முகுமது அட்னன் கான், நிதிஷ் ராஜகோபால், அந்தோணி தாஸ், சுனில் சாம், ஆதித்ய கணேஷ் (கீப்பர்), மதிவண்ணன், ரகில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, சரவண குமார்.

    திண்டுக்கல் அணி வீரர்கள்;- அருண், நிஷாந்த், மணிபாரதி, மோஹித், விவேக், விக்னேஷ், லோகேஷ்வர், குர்ஜப்நீத், சுதீஷ், சுவாமிநாதன், சிலம்பரசன்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடரை இழந்த நிலையில், ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று ஆறுதல் அடைந்துள்ளது.
    ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டி20 தொடரை 4-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. அதன்பின் நடைபெற்று வந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. 

    3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 152 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் லீவிஸ் அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் ஹசில்வுட், அஷ்டோன் அகர், ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அலேக்ஸ் கேரி 35 ரன்களும், மேத்யூ வடே ஆட்டமிழக்காமல் 51 ரன்களும் விளாச ஆஸ்திரேலியா 30.3 ஓவரிலேயே 4 விக்கெட்டை இழந்து இலக்கை எட்டியது. இதனால் 3-வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 2-1 எனவும் கைப்பற்றியது.
    இந்திய அணியின் ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்ட்யாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட  டி 20 தொடரில்  இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில் இன்று நடக்கவிருந்த இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்

    இந்திய அணியின் ஆல் ரவுண்டர் க்ருனால் பாண்ட்யாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இன்று நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 59 கிலோ குரூப் ‘ஏ’ பளுதூக்குதல் போட்டியில் சீன வீராங்கனை தங்கம் வென்றுள்ளது.
    டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 59 கிலோ குரூப் ‘ஏ’ பளுதூக்குதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில், மொத்தம் 8 பேர் கலந்து கொண்டனர்.  இப்போட்டியில், சீன வீராங்கனை ஸ்னாட்ச் பிரிவில் 103 கிலோ மற்றும்  கிளீன்   அண்டு ஜெர்க் பிரிவில் 133 கிலோ என மொத்தம்  236 கிலோ எடையை தூக்கி தங்க பதக்கத்தை வென்றது மட்டுமல்லாமல், ஒலிம்பிக் சாதனையையும் படைத்தார்.

    துர்க்மெனிஸ்தான் நாட்டை சேர்ந்த வீராங்கனை  ஸ்னாட்ச் பிரிவில் 96 கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 121 கிலோ என மொத்தம் 217 எடையைத் தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி வென்றார்.

    ஜப்பான் வீராங்கனை ஸ்னாட்ச் பிரிவில் 94 கிலோ மற்றும்  கிளீன்  அண்டு ஜெர்க் பிரிவில் 120 கிலோ என மொத்தம் 214 எடையைத் தூக்கி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலத்தை வென்றுள்ளார்.
    பெண்களுக்கான செய்லிங் பிரிவில் தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் இதுவரை 6 ரேஸில் கலந்து கொண்டுள்ளார்.
    ஒலிம்பிக்கில்  செய்லிங் போட்டியில் பெண்களுக்கான லேசர் ரேடியல் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் கலந்து கொண்டுள்ளார். மொத்தம் 10 ரேஸ் அடங்கும்

    ஏற்கனவே நான்கு ரேஸ்கள் முடிந்த நிலையில் இன்று இரண்டு ரேஸ் நடைபெற்றது. 5-வது ரேஸில்  (32+310) என்ற புள்ளியுடன் 32-வது இடத்தை பிடித்தார். 6-வது ரேஸில் (39+4:39) என்ற புள்ளிகளுடன் 38-வது இடத்தை பிடித்தார்.

    இதுவரை ஆறு ரேஸ்களிலும் 134 புள்ளிகள் பெற்றுள்ளார்.
    திருச்சி வாரியர்ஸ் 3 ஆட்டத்தில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி நெல்லை ராயல்சை 74 ரன்னிலும், மதுரை பாந்தர்சை 3 விக்கெட்டிலும் வென்றது. கோவையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    சென்னை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சை தோற்கடித்தது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திருச்சி வாரியர்ஸ் 3 ஆட்டத்தில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி நெல்லை ராயல்சை 74 ரன்னிலும், மதுரை பாந்தர்சை 3 விக்கெட்டிலும் வென்றது. கோவையிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    திண்டுக்கலை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் திருச்சி அணி உள்ளது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி மதுரையிடம் 6 விக்கெட்டில் தோற்றது. கோவையை 5 விக்கெட்டில் வீழ்த்தியது.

    திருச்சியை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் திண்டுக்கல் அணி உள்ளது.

    ஒலிம்பிக் பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் டைவிங் இறுதி சுற்றில் அமெரிக்கா வெள்ளி, மெக்சிகோ வெண்கல பதக்கம் வென்றன.
    ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதில், கலந்து கொண்ட பல்வேறு நாடுகளும் அற்புதமாக விளையாடி அசத்தி வருகின்றன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான  டைவிங் போட்டியில் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவு இறுதி சுற்றில் 8 அணிகள் கலந்து கொண்டது. இரண்டு பேர் இணைந்து பங்கெடுத்த இந்த போட்டியில் மொத்தம்  6 சுற்றுகள் நடைபெற்றன. இதில் சீன ஜோடி 363.78 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து  தங்கப்பதக்கத்தை வென்றது.

    310.80 புள்ளிகள் கணக்கில் அமெரிக்கா இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி வென்றது. 299.70 புள்ளிகள் கணக்கில் மெக்சிகோ மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றது.
    குத்துச்சண்டை பெண்கள் 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் 3-2 என ஜெர்மனி வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் ஜெர்மனியின் நடின் அபேட்ஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் 28-29, 29-28, 30-27, 30-27, 27-30 என புள்ளிகள் பெற்று 3-2 என வெற்றி பெற்றார். இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் சீன தைஃபேயின் என்சி சென்-ஐ எதிர்கொள்கிறார். இந்த போட்டி 30-ந்தேதி நடைபெறுகிறது. 
    பலம் வாய்ந்த சீன வீரரிடம் 1-4 என வீழ்ந்த சரத் கமல், ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸில் இருந்து வெளியேறினார்.
    டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல் இன்று 3-வது சுற்றில் உலகத்தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீனாவின் லாங் மா-வை எதிர்கொண்டார்.

    பலம் வாய்ந்த சீன வீரருக்கு சவால் கொடுக்கும் வகையில் சரத் கமல் விளையாடினார். என்றாலும் முதல் கேம்-ஐ சரத் கமல் 7-11 என இழந்தார். ஆனால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடி, அதை 11-8 எனக் கைப்பற்றினார். 3-வது கேம்-ல் கடும் நெருக்கடி கொடுத்தார். என்றாலும் 11-13 என அந்த கேம்-ஐ இழக்க நேரிட்டது.

    4-வது கேம்-ஐ 4-11 எனவும், 5-வது கேம்-ஐ 4-11 எனவும் இழந்து, இறுதியில் 1-4 எனத் தோல்வியடைந்து ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இருந்து வெளியேறினார்.
    ×