என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோவ்லினா போர்கோஹைன்
    X
    லோவ்லினா போர்கோஹைன்

    குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு முன்னேற்றம்

    குத்துச்சண்டை பெண்கள் 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் 3-2 என ஜெர்மனி வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் ஜெர்மனியின் நடின் அபேட்ஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் 28-29, 29-28, 30-27, 30-27, 27-30 என புள்ளிகள் பெற்று 3-2 என வெற்றி பெற்றார். இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் சீன தைஃபேயின் என்சி சென்-ஐ எதிர்கொள்கிறார். இந்த போட்டி 30-ந்தேதி நடைபெறுகிறது. 
    Next Story
    ×