என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இன்றைய ஆட்டத்தில் 52 ரன்கள் குவித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் ஜெகதீசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சோனு யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டும், ஹரிஷ் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
     
    இதையடுத்து 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் கவுசிக் காந்தி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

    ஹரிஷ் குமார்

    மறுமுனையில் சுஜய் (10), ராதாகிருஷ்ணன் (0), ராஜகோபால் சதீஷ் (1) ஆகிய விக்கெட்டுகள் சரிந்தபோதும், நிலைத்து நின்று ஆடிய ஜெகதீசன் அரை சதம் கடந்தார். அவருக்கு துணையாக சசிதேவ் அதிரடியாக ஆடினார். ஜெகதீசன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 103.

    அதன்பின்னர் உதிரசாமி சசிதேவ், ஹரிஷ் குமார் இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சசிதேவ் 30 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

    சேலம் பந்துவீச்சை துவம்சம் செய்த ஹரிஷ் குமார் 14 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 27 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி  7 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. 

    6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் குவித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 
    கோபிநாத், விஜய் சங்கர், டேரில் பெராரியோ ஓரளவிற்கு ரன்கள் சேர்க்க, சேலம் அணி 143 ரன்கள் என்ற இலக்கை சேப்பாக் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20-யில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் அபிஷேக் 10 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ரவி கார்த்திக்கேயன் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

    தொடக்க வீரர் கோபிநாத் 24 பந்தில் 33 ரன்களும், விஜய் சங்கர் 28 பந்தில் 32 ரன்களும், கேப்டன் டேரில் பெராரியோ 22 பந்தில் 39 ரன்களும் சேர்த்தனர். இதனால் சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சோனு யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டும், ஹரிஷ் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய போட்டியில் சேலம் அணியை வீழ்த்தினால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் வெற்றியை ருசிக்கும்.
    பேட்மிண்டன் குரூப் சுற்றில் நெதர்லாந்து, இஸ்ரேல் வீரர்களுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியடைந்த சாய் பிரனீத் ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.
    பேட்மிண்டன் குரூப் சுற்று போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் ‘டி’ பிரிவில் இடம் பிடித்திருந்தார். இதே அணியில் இஸ்ரேலை சேர்ந்த மிஷா ஜில்பெர்மன், நெதர்லாந்தின் மார்க் கால்ஜோவ் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

    சாய் பிரீனத் கடந்த 24-ந்தேதி, அவரது முதல் ஆட்டத்தில்  இஸ்ரேலைச் சேர்ந்த மிஷா ஜில்பெர்மன்-ஐ எதிர்கொண்டார். இதில் 17-21, 15-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். இன்று நெதர்லாந்தை சேர்ந்த மார்க் கால்ஜோவை எதிர்கொண்டார். 

    இந்த போட்டியிலும் 14-21, 14-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஒற்றையர் பிரிவில் இருந்து வெளியேறினார்.
    பூடான் மற்றும் அமெரிக்க வீராங்கனைகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
    வில்வித்தை போட்டியில் இன்று ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமார் பூடானின் கர்மாவை  எதிர்கொண்டார். இதில் தீபிகா குமாரி ஒரு செட் பாயிண்ட்-ஐ கூட விட்டுக்கொடுக்காமல் 6-0 என எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    2-வது சுற்றில் அமெரிக்காவின் ஜெனிபர் முனிசோ-பெர்னாண்டஸை எதிர்கொண்டார். இதில் 6-4 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா்ர. 

    தீபிகா குமாரி முதல் செட்டை 25-26 என இழந்தார். ஆனால் 2-வதுசெட்டை 28-25 எனக் கைப்பற்றினார். 3-வது செட்டையும் 27-25 எனக் கைப்பற்றினார். 4-வது செட்டை 24-25 என இழந்த நிலையில், 5-வது செட்டை 26-25 என கைப்பற்றி 6-4 என செட் பாயிண்ட் பெற்று வெற்றி பெற்றார்.
    பெண்களுக்கான மிடில் வெயிட் (69-75 கிலோ) குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    பெண்களுக்கான மிடில் (69-75 கிலோ) வெயிட் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்ஜீரியாவின் இச்ரக் செய்ப்-ஐ எதிர்கொண்டார். இதில் பூஜா ராணி 30-26, 30-27, 30-27, 30-27, 30-27 (5-0) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    பூஜா ராணி 31-ந்தேதி நடைபெறும் காலிறுதியில் அயர்லாந்து அல்லது சீன வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார். காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினால் வெண்கல பதக்கம் உறுதி செய்யப்படும். 
    சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- சேலம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கவுசிக் காந்தி, ஜெகதீசன், சுஜய், ராஜகோபால் சதீஷ், உதிரசாமி சசிதேவ், சோனு யாதவ், ராதாகிருஷ்ணன், ஹரிஷ் குமார், ஜெகனாத் ஸ்ரீனிவாஸ், மணிமாறன் சித்தார்த், அலேக்ஸாண்டர்.

    சேலம்- அபிஷேக், கோபிநாத், அக்சய் ஸ்ரீனிவாசன், விஜய் சங்கர், டேரில் பெர்ராரியோ, முருகன் அஸ்வின், ரவி கார்த்திக்கேயன், உமாசங்கர் சுஷில், பிரானேஷ், கணேஷ் மூர்த்தி, ஜி. பெரியசாமி
    சேலம் அணி கோவையுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் அந்த அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தியது.

    சென்னை:-

    5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்சை தோற்கடித்தது. திண்டுக்கல் அணி பெற்ற 2-வது வெற்றியாகும். திருச்சி 2-வது தோல்வியை தழுவியது.

    10-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திருப்பூர் தமிழன்சுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சிடம் தோற்றது. இன்றைய ஆட்டத்தில் சேலம் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் உள்ளது.

    சேலம் அணி கோவையுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் அந்த அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தியது.

    இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கோவை அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 3 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    மதுரை அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    முதல் சுற்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள வீரருக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், 2-வது சுற்றில் ஒரு செட் பாயிண்ட் கூட பெற முடியாமல் பிரவீன் ஜாதவ் தோல்வியடைந்தார்.
    வில்வித்தை ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் முதல் சுற்றில் ரஷ்யாவின் கால்சனை எதிர்கொண்டார். உலகத்தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கால்சனுக்கு எதிராக பிரவீன் ஜாதவ் சிறப்பான வகையில் அம்புகளை எய்தார். இதனால் 6-0 என்ற செட் பாயிண்ட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்று முன்னேறினார்.

    2-வது சுற்றில் அமெரிக்காவின் பிரேடி எல்லிசனை எதிர்கொண்டார். இந்த முறை பிரவீன் ஜாதவால் திறம்பட அம்புகளை தொடுக்க முடியவில்லை இதனால் 0-6 எனத் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
    கொரோனா அச்சுறுத்தலுக்கிடையே ஒலிம்பிக்கில் பங்கேற்று வந்த நிலையில், மனஅழுத்தம் காரணமாக சிமோன் பைல்ஸ் இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒருபக்கம் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மறுபக்கம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

    அமெரிக்காவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். இவர் பெண்களுக்கான ஆல்-ரவுண்ட் பிரிவில் சக வீராங்கனைகள் மூன்று பேருடன் தகுதிச்சுற்றில் கலந்து கொண்டார்.

    அமெரிக்க அணி தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அணியில் இடம் பிடித்திருந்த சிமோன் பைல்ஸ் திடீரென இறுதிப்போட்டியில் பங்கேற்கமாட்டேன் எனத்தெரிவித்துள்ளார்.

    மனஅழுத்தம் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அசோசியேசன் சிமோன் முடிவை உறுதி செய்துள்ளது. தகுதிச்சுற்றில் தனிப்பட்ட முறையில் முதல் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டியில் நிதானத்தை இழந்த மொராக்கோ வீரர், நியூசிலாந்து வீரரின் காதை கடிக்க முயன்ற சம்பவம் ஒலிம்பிக்கில் நடைபெற்றது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் நியூசிலாந்தின் டேவிட் நிகா- மொராக்கோவின் யூனெஸ் பால்லா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

    போட்டி தொடங்கியதில் இருந்து நியூசிலாந்து வீரர் டேவிட் மோராக்கோ வீரருக்கு பஞ்ச் கொடுத்துக் கொண்டே இருந்தார். இதனால் யூனெஸ் போட்டியில் தொடர்ந்து பின்தங்கி கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் 0-3 என பின்தங்கியதால் யூனெஸ் நிதானம் இழந்து டேவிட்டின் காதை கடிக்க முயன்றார்.

    நியூசிலாந்து- மொராக்கோ வீரர்கள்

    உடனடியாக சுதாரித்துக்கொண்ட டேவிட், யூனெஸ்-ஐ தள்ளிவிட்டு காதை காப்பாற்றிக்கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் டேவிட் 5-0 என வெற்றி பெற்றார்.

    இந்த சம்பவம் மைக்டைசன் ஹொலிபீல்டு காதை கடித்தது ஞாபகத்திற்கு வந்தது.
    அமெரிக்கா 29 பதக்கங்கள் பெற்றிருந்தாலும், தங்கப்பதக்கம் ஜப்பானைவிட குறைவாக இருப்பதால், 20 பதக்கங்களுடன் ஜப்பான் முதலிடம் வகிக்கிறது.
    டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியை நடத்தும் ஜப்பான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீன நாடுகளுக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது.

    இன்று காலை 10.30 நிலவரப்படி ஜப்பான் 11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா 10 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 2-வது இடம் பிடித்துள்ளது. சீனா 10 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 3-வது இடம் பிடித்துள்ளது.

    ரஷ்யா 7 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 6 தங்கம், 1 வெள்ளி, 8 வெண்கலத்துடன் 15 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

    இந்தியா ஒரு வெள்ளியுடன் 41-வது இடத்தில் உள்ளது.



    முதல் சுற்றில் உக்ரைன் வீரரை 6-4 என வீழ்த்திய தருண்தீப் ராய், 2-வது சுற்றில் ஷுட் ஆஃப் பாயிண்ட்-ல் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
    வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டிகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் தருண்தீப் ராய் முதல் சுற்றில் உக்ரைன் வீரர் ஒலெக்சீ ஹன்பின்-ஐ எதிர்கொண்டார். இதில் 1-1 (25-25), 1-3 (27-28), 2-4 (27-27), 4-4(26-24), 6-4 (28-25) என 6-4 செட் பாயிண்ட்-ல் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    2-வது சுற்றில் இஸ்ரேலை சேர்ந்த இட்டே ஷன்னியை எதிர்கொண்டார். தருண்தீப் ராய்க்கு இஸ்ரேல் வீரர் இட்டே கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை இட்டே 28-24 என கைப்பற்றினார். 2-வது செட்டை தருண்தீப் ராய் 27-26 என கைப்பற்றினார்.

    3-வது செட்டில் (27-27) இருவரும் சமமான புள்ளி பெற்று 1 பாயிண்ட் பெற்றனர். 4-வது செட்டை தருண்தீப் சாய் (28-27) என கைப்பற்றினார். இதனால் தருண்தீப் ராய் 5-3 என முன்னிலை பெற்றிருந்தார். 5-வது மற்றும் கடைசி செட்டை டிரா செய்தாலே 6-4 என செட் பாயிண்ட் பெற்று  வெற்றி பெற்றுவிடலாம் என தருண்தீப் ராய் நினைத்த நிலையில், 5-வது செட்டை 27-28 என இழந்தார்.

    இதனால் ஐந்து செட்கள் முடிவில் இருவரும் 5-5 என செட் பாயிண்ட்கள் பெற்று சமம் அடைந்தனர். இதனால் ஷூட்-ஆஃப் பாயிண்ட் முறை கடைபிடிக்கப்பட்டது. இஸ்ரேல் வீரர் ஷன்னி  முதல் அம்மை எய்து 10 புள்ளிகள் பெற்றார். ஆனால் தருண்தீப் ராயால் 9 புள்ளிகளே பெற முடிந்தது. இதனால் தருண்தீப் ராய் 5-6 என தோல்வியடைந்து வெளியேறினார்.
    ×