என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி, துவக்கத்தில் இருந்தே இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, துவக்கத்தில் இருந்தே இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. துவக்க வீரர் ஷிகர் தவான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கெய்க்வாட் 14 ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 36 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன.

    ஷிகர் தவான் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் சமீரா

    கடும் நெருக்கடிக்கு மத்தியில் சற்று தாக்குப்பிடித்து ஆடிய குல்தீப் யாதவ் 23 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    இலங்கை தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தசுன் ஷனகா 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே இந்தியாவுக்கு சாதகமாக திரும்பும்.

    இந்திய அணியில் சந்தீப் வாரியர் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். இலங்கை அணியில் காயமடைந்த உதனாவுக்கு பதில் நிசங்காவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று தொடங்கியது.

    போட்டிக்கான டாஸ் 7.30 மணியளவில் சுண்டப்பட்டது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் சந்தீப் வாரியர் ஆகியோர் அறிமுகமாகிறார். இலங்கை அணியில் காயமடைந்த உதனாவுக்கு பதில் நிசங்காவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய அணி வீரர்கள்: 1.ஷிகர் தவான் (கேப்டன்), 2.ருதுராஜ் கெய்க்வாட், 3.தேவதத் படிக்கல், 4.சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 5.நிதீஷ் ராணா, 6.புவனேஷ்வர் குமார், 7.சந்தீப் வாரியர், 8.சேத்தன் சாகரியா, 9.குல்தீப் யாதவ், 10.வருண் சக்ரவர்த்தி, 11.ராகுல் சாஹர்.

    இலங்கை அணி வீரர்கள்: 1.அவிஷ்கா பெர்னாண்டோ, 2.மினோட் பனுகா (விக்கெட் கீப்பர்), 3.சதீரா சமரவிக்ரமா, 4.தனஞ்செய டி சில்வா, 5.பாதும் நிசங்கா, 6.ரமேஷ் மெண்டிஸ், 7.தசுன் ஷனகா (கேப்டன்), 8.வனிந்து ஹசரங்கா, 9.சமிகா கருணாரத்ன, 10.துஷ்மந்தா சமீரா, 11.அகிலா தனஞ்செயா.
    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றனர்.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

    திருச்சி அணி 4 புள்ளிகள் பெற்று 2-வது இடத்திலும் திருப்பூர் அணி 3 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திலும் உள்ளது. இந்த 2 அணிகளுக்கு இடையேயான போட்டியின் டாஸ் சுண்டப்பட்டத்தில் திருச்சி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    திருச்சி அணி வீரர்கள்:-

    1. முகமது(கேப்டன்), 2. அஸ்வின், 3. ராஜ்குமார், 4. மான் கே பவ்னா, 5. மதன் பிரசாந்த், 6. தினேஷ், 7. பிரான்சிஸ், 8. சித்தார்த், 9. அரவிந்த், 10. ரமேஷ், 11. கெளதம்

    திருப்பூர் அணி வீரர்கள்:-

    1. ரஹில் ஷா (கேப்டன்), 2. முகுந்த், 3. அமித் சத்விக், 4. கணேஷ், 5. ராஜ கோபால், 6. முகமது அடன் கான், 7. அந்தோனி தாஸ், 8. ஆகாஷ், 9. சரணவன குமார், 10. மதிவண்ணன், 11. பொய்யாமொழி
    டோக்கியோ ஒலிம்பிக்கில் உறுதியாக பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேரி கோம், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் பெண்களுக்கான குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பூஜா ராணி, லவ்லினா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    இதற்கிடையே இன்று  நடைபெற்ற பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் கொலம்பியா வீராங்கனை விக்டோரியா வேலன்சியாவை எதிர்கொண்டார். இதில் இந்தியாவின் மேரி கோமை 3-க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி கொலம்பியாவின் விக்டோரியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

    விக்டோரியா

    2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மேரி கோம், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
    இந்திய அணிக்காக வருண்குமார் 43-வது நிமிடத்திலும், விவேக் சாகர் பிரசாத், 58-வது நிமிடத்திலும், ஹர்மன் பிளீசிங் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    டோக்கியோ:

    டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

    8 முறை சாம்பியனான இந்திய அணி ஏ”பிரிவில் இடம் பெற்றுள்ளது. கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் பெற்ற அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் ஜப்பான், நியூசிலாந்து, ஸ்பெயின் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    “பி” பிரிவில் கடந்த முறை வெள்ளிப் பதக்கம் பெற்ற பெல்ஜியம், வெண்கலப் பதக்கம் வென்ற ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் 2 பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 1-7 என்ற கோல் கணக்கில் மோசமாக தோற்றது. 3-வது ஆட்டத்தில் ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

    இந்திய அணி 4-வது ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் அர்ஜென்டினாவை இன்று எதிர்கொண்டது.

    இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    இந்திய அணிக்காக வருண்குமார் 43-வது நிமிடத்திலும், விவேக் சாகர் பிரசாத், 58-வது நிமிடத்திலும், ஹர்மன் பிளீசிங் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் பகுதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை. ஆட்டத்தின் கடைசி 2 நிமிடங்களில் இந்தியா 2- கோல் அடித்து முத்திரை பதித்தது.

    அர்ஜென்டினா அணிக்காக கேசிலா 48-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த பதில் கோலால் 1-1 என்ற சமநிலை நீண்ட நேரமாக இருந்தது.கடைசி நிமிட கோல்களால்தான் வெற்றி கிடைத்தது.

    இந்திய அணி பெற்ற 3-வது வெற்றியாகும். இதன் மூலம் கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 4 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இந்த பிரிவில் ஆஸ்திரேலியாவும் 4 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி கடைசி இறுதி ஆட்டத்தில் ஜப்பானை நாளை எதிர்கொள்கிறது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கவிருக்கும் ஆட்டத்தில் திருச்சி அணியும் திருப்பூர் அணியும் மோதுகின்றனர்.

    சென்னை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய சேலம் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்னை எடுக்க முடிந்தது. கேப்டன் டேரில் பெராரியோ அதிகபட்சமாக 22 பந்தில் 39 ரன் (ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். சோனுயாதவ் 3 விக்கெட்டும், ஹரிஷ் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் விளையாடிய சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து 4 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் 40 பந்தில் 52 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), சசிதேவ் 30 பந்தில் 42 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி திருப்பூர் தமிழன்சுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. அடுத்து நெல்லை ராயல் கிங்சிடம் தோற்றது. அதே நேரத்தில் சேலம் அணி முதல் தோல்வியை தழுவியது.

    நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 19 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.

    முதலில் ஆடிய கோவை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய மதுரை அணி 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திருச்சி அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. திருப்பூர் அணி ஒரு வெற்றி, ஒரு முடிவு இல்லை, ஒரு தோல்வியுடன் 3 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. 


    குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்கா வீரரை 4-1 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
    குத்துச்சண்டை சூப்பர் ஹெவி வெயிட் (91 கிலோ எடைக்கு மேல் உள்ள வீரர்கள்) பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன.

    ஒரு போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் ஜமைக்காவின் ரிகார்டோ பிரௌன்-ஐ எதிர்கொண்டார். இதில் 4:1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். சதீஷ் குமார் 30-27, 30-27, 28-29, 30-27, 30-26.

    முதல் ரவுண்டில் ஐந்து நடுவர்களிடமும் தலா 10 புள்ளிகள் பெற்றார். 2-வது சுற்று மற்றும் 3-வது சுற்றில் 3-வது நடுவர் தலா 9 புள்ளிகள் வழங்கினார்.

    ஆகஸ்ட் 1-ந்தேதி நடைபெறும் காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜாலோலோவ்-ஐ எதிர்கொள்கிறார்.
    சீன தைஃபே, தென்கொரியா வீரர்களை வீழ்த்தி வில்வித்தை ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    வில்வித்தை பிரிவில் இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் அதானு தாஸ் முதல் சுற்றில் சீன தைஃபே-யின் யு-செங் டெங்கை 6-4 என எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    2-வது சுற்றில் தென்கொரியாவின் ஜின்யெக் ஓ-வை எதிர்கொண்டார். ஐந்து செட்கள் முடிவில் இருவரும் தலா ஐந்து செட் பாயிண்ட் பெற்று சமநிலை பெற்றனர். இதனால் ஷூட் ஆஃப் பாயிண்ட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அதானு தாஸ் 10 புள்ளிகள் பெற்றார். தென்கொரிய வீரர் 9 புள்ளிகள் பெற்றார்.

    இதனால் 6-5 என்ற செட் பாயிண்ட் கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்றார். 31-ந்தேதி நடைபெறும் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த டி. ஃப்ருகாவாவை எதிர்கொள்கிறார்.
    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 13-ம் நிலை வீராங்கனையை எந்தவித கடினமின்றி 2-0 என வீழ்த்தி இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு நாக்அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து (தரநிலை 6) டென்மார்க்கின் மியா பிலிசெல்ட்-ஐ (தரநிலை 13) எதிர்கொண்டார்.

    இதில் பி.வி. சிந்து 21-15, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதியில் கொரியாவின் 12-ம் நிலை வீராங்கனை அல்லது ஜப்பானின் 4-ம் நிலை வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார்.
    இந்திய அணிக்கெதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
    கொழும்பு:

    இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசசை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் தவான் - ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அறிமுக போட்டியில் களமிறங்கிய கெய்க்வாட் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனர்.

    இதனையடுத்து மற்றோரு அறிமுக வீரர் படிக்கல் களமிறங்கினார். கேப்டன் தவான் ஆட்டம் மந்தமாகவே இருந்தது. அவர் 42 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் தனஜெயா பந்தில் போல்ட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அவிக்சா 11, சமராவிக்ரமா 8, சனகா 3, மெண்டீஸ் 2, மினோட் பனகா 36, ஹசரங்கா என வீரர்கள் அடுத்தடுத்த வெளியேறினர்.

    17.2 ஓவரில் 105 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்து இருந்தது. இந்நிலையில் தனஜெயா-கருரத்னே ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். அந்த ஜோடி புவனேஸ்வர் குமார் வீசிய 19-வது ஓவரில் 12 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அறிமுக பந்து வீச்சாளர் சக்காரியா அந்த ஓவரை வீசினார். கடைசி 2 பந்துகள் மீதம் உள்ள நிலையில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
    இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்கள் சேர்த்தார்.
    கொழும்பு:

    இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சகாரியா மற்றும் ராணா ஆகியோர் அறிமுகமாகினர்.

    டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 40 ரன்கள் சேர்த்தார். தேவ்தத் படிக்கல் 29 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 21 ரன்களும் சேர்த்தனர்.

    இலங்கை தரப்பில் அகிலா தனஞ்செயா 2 விக்கெட் எடுத்தார். துஷ்மந்தா சமீரா, வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 133 ரனகள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
    இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சகாரியா மற்றும் ராணா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.
    கொழும்பு:

    இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட  டி 20 தொடரில்  இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இரண்டாவது ஆட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் குருணால் பாண்ட்யாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சகாரியா மற்றும் ராணா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.

    இந்திய அணி வீரர்கள்: 1. ஷிகர் தவான் (கேப்டன்), 2. ருதுராஜ் கெய்க்வாட், 3. தேவ்தத் படிக்கல், 4. சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), 5.நிதீஷ் ராணா, 6.புவனேஷ்வர் குமார், 7. குல்தீப் யாதவ், 8. ராகுல் சாஹர், 9. நவ்தீப் சைனி, 10 சேத்தன் சகாரியா. 11.வருண் சக்கரவர்த்தி.

    இலங்கை அணி வீரர்கள்: 1. அவிஷ்கா பெர்னாண்டோ, 2. மினோட் பனுகா (விக்கெட் கீப்பர்), 3. சதீரா சமரவிக்ரமா, 4. தனஞ்சய டி சில்வா, 5. ரமேஷ் மெண்டிஸ், 6. தசுன் ஷனகா (கேப்டன்), 7. வனிந்து ஹசரங்கா, 8. சமிகா கருணாரத்ன, 9. இசுரு உதனா, 10. துஷ்மந்தா, 11.அகிலா தனஞ்செயா.
    ×