என் மலர்
விளையாட்டு
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.
இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 15-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
அந்த அணியில் ஹரி நிஷாந்த், அருண், மணிபாரதி, விவேக், விக்னேஷ், சுவாமி நாதன், சிலம்பரசன் போன்ற வீரர்கள் உள்ளனர்.
சேலம் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. அந்த அணி 2-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது.
அந்த அணியில் அபிஷேக், கோபிநாத், விஜய்சங்கர், முருகன் அஸ்வின், ஜி.பெரியசாமி போன்ற வீரர்கள் உள்ளனர்.
நேற்று நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் திருச்சி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 110 ரன் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் தினேஷ் 26 ரன் எடுத்தார். திருச்சி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், சரவணகுமார் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய திருச்சி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து வெற்றிபெற்றது. ராஜகோபால் 47 ரன்னும், ஆதித்ய கணேஷ் 43 ரன்னும் எடுத்தனர். திருச்சி அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.திருப்பூர் அணி 2-வது தோல்வியை சந்தித்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பேட்மிட்டன் காலிறுதி தகுதிச் சுற்றில் 21-15, 21-13 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து டென்மார்க்கின் மியா பிளிச்பெல்ட்டை வென்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.
இன்று இந்தியா வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சியை இடையேயான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது.
இந்த போட்டியில் யமகுச்சியை 21-13, 22-20 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் ஒற்றையர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பி.வி.சிந்து சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதி சுற்றில் சீனாவின் சென்யூபையை உடன் மோதுகிறார்.
டோக்கியோ:
32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
இதன் வில்வித்தை பந்தயத்தில் இந்தியா சார்பில் அதானு தாஸ் , பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய் ஆகிய 3 வீரர்கள், ஒரே ஒரு வீராங்கனையான தீபிகா குமாரி ஆகிய நான்கு பேர் பங்கேற்றனர்.
இதன் ஆண்கள் அணிகள் பிரிவிலும், கலப்பு அணிகள் பிரிவிலும் இந்திய அணி ஏற்கனவே தோல்வி அடைந்தது. தனிநபர் பிரிவில் பிரவீன் ஜாதவும், தருண் தீப் ராயும் தோல்வி அடைந்தனர். இருவரும் முதல் சுற்றில் வென்று இரண்டாவது சுற்றில் தோற்று வாய்ப்பை இழந்தனர்.
கணவன்-மனைவியான அதானு தாசும் , தீபிகா குமாரியும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
தீபிகா குமாரி இன்று காலை நடந்த கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் செனியா பெரோவாவை (ரஷிய ஒலிம்பிக் கமிட்டி) எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் தீபிகா குமாரி 6-5 என்ற கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
முதல் செட்டை தீபிகா 28-25 என்ற கணக்கில் கைப்பற்றினார். செட்டை (3 முறை அம்பு எறிய வேண்டும்) வெல்பவர் 2 புள்ளி பெறுவார். சமநிலையில் முடிந்தால் தலா ஒரு புள்ளி கிடைக்கும். அதன்படி அவர் 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றார். 2-வது செட்டை பெரோவா 27-26 என்ற கணக்கில் வென்றார். இதனால் 2-2 என்ற சம நிலை ஏற்பட்டது.
3-வது செட்டை தீபிகா குமாரி 28-27 என்ற கணக்கில் வென்றதால் 4-2 என்ற முன்னிலையை பெற்றார். 4-வது செட்டில் சமநிலை ( 26-26 ) ஏற்பட்டது. இதனால் அவர் 5-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.
6-வது மற்றும் கடைசி செட்டை செனியா பெரோவா 28-25 என்ற கணக்கில் வென்றார். இதனால் 5-5 என்ற சம நிலை ஏற்பட்டு உருவாகி ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எனவே ஆட்டத்தை நிர்ணயிக்க “சூட்-அவுட்” கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது இருவருக்கும் ஒரே ஒருமுறை அம்பு எறியும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பெரோவா இதில் 7 பாயிண்ட் பெற்றார். தீபிகா குமாரி மிகவும் சிறப்பாக செயல்பட்டு 10 பாயிண்டுகளை பெற்று வெற்றி பெற்றார். ஸ்கோர்: 28-25, 26-27, 28-27, 26-26, 25-28, 10-7.இந்தப் போட்டியில் அவர் 4 தடவை 10 பாயிண்டுகளை பெற்று சாதித்தார்.
தீபிகா குமாரி கால் இறுதியில் தென் கொரியாவை சேர்ந்த ஆன்சானை சந்தித்தார். ஆன்சானின் குறிபார்த்து அம்பு எறிதலுக்கு முன்பு தீபிகா குமாரியால் சமாளிக்க முடியவில்லை. அவர் 3 செட்டையும் தோற்று போட்டியில் இருந்து வெளியேறினார். அதே நேரத்தில் தீபிகா குமாரியின் செயல்பாடும் கால் இறுதியில் மோசமாக இருந்தது.
முதல் செட்டை 27-30 என்ற கணக்கிலும், 2-வது செட்டை 24-26 என்ற கணக்கிலும் 3-வது செட்டை 24-26 என்ற கணக்கிலும் அவர் இழந்தார். ஆன்சான் 6-0 என்ற கணக்கில் தீபிகா குமாரியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பெண்களுக்கான 51 கிலோ எடைபிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மேரிகோம் போராடி தோல்வி அடைந்தார். அவர் கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியாவிடம் 3-2 என்ற கணக்கில் வீழ்ந்தார்.
கடைசி ரவுண்டில் இருவரும் சரமாரியாக குத்துகளை விட்டனர். ஆனால் நடுவர்களின் முடிவின்படி வலென்சியா வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நடுவர்களின் தீர்ப்பால் மேரிகோம் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நடுவர்களின் தீர்ப்பு மோசமாக இருந்தது இதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் மேரி கோம் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
போட்டிக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக எனது உடை நிறத்தை மாற்ற அறிவுறுத்தப்பட்டேன். ஏன் உடை நிறத்தை மாற்ற வற்புறுத்தப்பட்டேன் என்பது குறித்து யாராவது விளக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
போட்டியின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது. கடந்த 24-ந்தேதி பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார். 26 வயதான மணிப்பூரை சேர்ந்த அவர் 49 கிலோ உடல் எடை பிரிவில் 202 கிலோ (ஸ்னாட்ச் 87+கிளீன் அண்ட் ஜெர்க் 115) தூக்கி 2-வது இடத்தை பிடித்தார்.
21 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று மீராபாய் சாதித்தார். அதன்பிறகு கடந்த 5 நாட்களாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு எந்த பதக்கமும் கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. குத்துச்சண்டை போட்டி மூலம் 2-வது பதக்கம் உறுதியாகி இருக்கிறது.

லவ்லினாவின் அபாரமான தாக்குதல் ஆட்டத்திற்கு சீன தைபே வீராங்கனையால் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் லவ்லினா 4-1 என்ற புள்ளி கணக்கில் (30-27, 29-28, 28-29, 30-27, 30-27) என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
குத்துச்சண்டை போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றாலே வெண்கலப் பதக்கம் கிடைத்துவிடும். அதன்படி அவர் தற்போது வரை வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.
குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் கிடைக்கிறது.
23 வயதான அசாமை சேர்ந்த லவ்லினா தனது முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே மிகவும் சிறப்பாக செயல்பட்டு அரை இறுதிக்கு முன்னேறி சாதித்து உள்ளார். அவர் கடந்த ஆண்டு கொரோனாவால் லேசாக பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் ஐரோப்பா சென்று அவரால் பயிற்சி பெற முடியவில்லை. அப்படி இருந்தும் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது.
லவ்லினா அரை இறுதியில் துருக்கியை சேர்ந்த பூசன்நாஸ் சுர்மெனிலியை சந்திக்கிறார். இந்த ஆட்டம் வருகிற 4-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் லவ்லினா வெற்றி பெற்றால் வெள்ளி பதக்கம் உறுதி ஆகிவிடும். தோல்வி அடைந்தால் வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.
குத்துசண்டை போட்டி யில் இன்று பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் (லைட் வெயிட் பிரிவு) 2-வது சுற்றில் தோல்வியை தழுவினார். அவர் 0-5 என்ற கணக்கில் தாய்லாந்தை சேர்ந்த சுதாபோர்ன் சீசன்டியிடம் தோற்றார்.
ஏற்கனவே குத்துச்சண்டையில் மனீஷ்கவுசிக், விகாஸ் கிருஷ்ணன், ஆசிஸ் குமார், மேரிகோம் ஆகியோர் தோல்வியை தழுவி இருந்தனர். சதீஷ்குமார், பூஜா ராணி ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர். அமித் பங்கல் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடுகிறார்.






